கதையாசிரியர் தொகுப்பு: தெளிவத்தை ஜோசப்

14 கதைகள் கிடைத்துள்ளன.

பொட்டு

 

 (1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பொட்டு வச்சிக்கிட்டு வாங்க….?’ ஷேவ் செய்து கொண்டிருக்கிறேன். குரலுடன் வந்த காற்று, ஒரு காதுக்குள் நுழைந்து மறுகாதால் வெளியேறியது. ‘பொட்டு வச்சிக்கிடட்டுமா….. வேண்டாமா……?’ இரண்டாவது தடவை வேகமாக வந்து வேகமாக நுழைந்து, வேகமாக வெளியேறியது. ஷேவ் செய்யும் உத்தியில் கன்னத்துத் தோலை மேலேயும் கீழேயுமாக இழுத்துக் கொண்டிருந்தால் காதின் துவாரம் சற்றே பெரிதாகி, குரலுடன் வந்த காற்றை விரைவாக உள்ளிழுத்து விரைவாக வெளியேற்றிவிட்டதாக


பந்து

 

 அந்த சின்னஞ் சிறிய சந்துக்குள்தான் இவர்கள் பந்தடிக்கின்றார்கள். இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று வாழைச்சீப்புப் போல் வரி வரியாக வீடுகள். வீட்டுக்கு முன்னால் வேலியேதும் இல்லாத திறந்த வெளிகள், செடி வளர்த்து மறைப்புக்கள், முட்கம்பி வேலிகள், மூங்கில் பிளாச் சடிப்புகள், காம்பவுண்ட் சுவரும் கேட்டுகளுமாக தரத்திற்கேற்ப பாதுகாப்புகள். எல்லா வீட்டுக்காரர்களுமே அந்தச் சந்துக்குள்ளாகத்தான் நடக்க வேண்டும். வெளியே றோட்டுக்குப் போவதென்றாலும்… உள்ளே வீட்டுக்கு வருவதென்றாலும்! சந்தடிமிக்கதான அந்தச் சந்துக்குள்தான் இவர்கள் பந்தடிக்கின்றார்கள். தாங்கள் ஏதோ அர்ஜுனா


இறுமாப்பு

 

 பூந்தோட்டத்தில் நிற்கின்றேன். பூஞ்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டு. இதைப் பூந்தோட்டம் என்று குறிக்கலாமா? என்னும் நினைவு என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. றோட்டுக்கும் வீட்டுக்கும் இடையிலான இந்தச் சிறிய நிலப் பரப்பில், வீட்டுச் சுவரோரங்களைச் சுற்றி, கிளை பரப்பி நிற்கும் ஒரு மாமரம், வேப்பமரத்தினடிகளில் வகை வகையான பூஞ்செடிகள்… பூஞ்செடிகள்… பூஞ்செடிகள்..! சின்னதான இந்த நிலத்துண்டில் பூஞ்செடிகள் வளர்க்கின்றோம் என்பதற்காக, இதைப் பூந்தோட்டம் என்று கூறலாமா என்னும் சந்தே கம் என்னுள் அடிக்கடி எழுகின்றது. மாதத்துக்கு இவ்வளவு என்று


மந்திரகோல்

 

 “சீட் இருக்குதா….” பஸ் நிற்கும் முன்பே அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறும் கூட்டத் திலிருந்து சற்றே விலகி நின்றபடி சிங்களத்தில் வினவுகின்றாள் அவள். கேட்ட மொழி சிங்களம் என்றாலும் கேட்டவர் சிங்களம் இல்லை என்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல. அது கண்டக்ரருக்கும் விளங்கும். ஆடையால் கூற முடியாவிட்டாலும் உரையாடலால் கூறிவிடலாம். தமிழா? முஸ்லிமா? என்று. ஒடிந்து தொங்கும் மரக்கிளை போல் பஸ் வாசலில் உள்ளேயும் வெளியேயுமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த பஸ் கண்டக்டர் “எய் நெத்தே ஓணதரங்


வேடிக்கை மனிதர்கள் அல்லர்

 

 ஆஸ்பத்திரிச் சந்தியில் பஸ் வேகம் குறைத்து திரும்பியபோது டக்’ கென்று குதித்திறங்கி பஸ்ஸுடன் சற்றே முன்னாலோடி நிதானித்து நின்று கொண்டேன். ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்திறங்குவது கூடாது தான். அபாயகர மானது தான். என்றாலும் எனது அவசரம் அந்த அபாயத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கிறது. மணி அந்தா இந்தா என்று ஐந்து ஆகிக் கொண்டிருக்கிறது. கேட்டை மூடிக் கொண்டான் என்றால் அவனிடம் தலை சொரிய வேண்டும். மூடிய கைக்குள் குறைந்த பட்சம் நூறு ரூபாய் தாளாவது நீட்டிக் கொண்டிருக்க


சுவர்

 

 இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது? வீட்டில் இருந்த எங்கள் எல்லோரது மனதுக்குள்ளும் தூண்டி லில் செருகிய புழுவாய் துடித்து நெளிந்து கொண்டிருந்தது இந்த ஒரே கேள்விதான். இந்த நேரம் யார்… இப்படித் தட்டுவது…! போலீஸ் ரிப்போர்ட், அடையாள அட்டை இத்தியாதிகளை மனம் நினைவுபடுத்திக் கொள்கின்றது. இரவு பத்துப் பதினொரு மணிக்கு மேல், இப்படி ஒரு அதிகாரத் துடன் கேட் ஆட்டப்படுகிறது என்றால் யாராக இருக்க முடியும். ஆர்மியாக இருக்கும். அல்லது போலீசாக இருக்கும். அல்லது ஆர்மியும்


சிலுவை

 

 அந்த நாற்பது காம்பிரா லயத்தில் நாலாவது காம்பிரா மட்டும் மஞ்சள் குளித்த பெண்போல் தனியாகத் தெரிகிறது. எல்லாச் சுவர்களுமே புகைமண்டிப்போயும், சாணிப் பூச்சில் வெடிப்பு கண்டும் இருக்கையில், நாலாவது காம்பிராவின் அரைச் சுவர் மட்டும் புது மெருகுடன் வெள்ளை மண் பூசப் பட்டு சுண்ணாம்படித்த சுவர் போல் காட்சியளிக்கிறது. கிளாக்கரய்யா பங்களாவுக்கு வெள்ளையடிக்கத் தள்ளப் பட்டபோதே நைசாகக் கண்டக்டரய்யாவிடம் சிலுவை கேட் டான், ‘ஏவுட்டு காம்பிராவுக்கும் ஒரு ஓட்டு ஓட்டிக்கிடங்களா’ என்று . ‘மூச்! காட்டப்படாது’ என்றுட்டார்


அம்மா

 

 இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று பட்டது அவனுக்கு. எலும்பைக் குடையும் நுவரெலியா குளிருக்கு. இந்த ஒரு சூரியன் போதாதுதான். டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார், உளசு;சோர்வோ உடற்சோர்வோ உள்ளவர்களுக்கு இது ஒரு மெக்கா என்று வர்ணித்த அதே நுவரெலியாதான். இவனுக்கு இரண்டு சோர்வுமே சேர்ந்தாற்போல் வந்திருக்கின்றன. நிற்க முடியவில்லை@ வெடவெடக்கிறது. நடக்க முடியவில்லை@ நடுங்குகிறது. உட்கார முடியவில்லை@ ஊசியாய் குத்துகிறது!…… இப்படியும் ஒரு குளிரா! இப்படியும் ஒரு ஊரா! காற்றின்


மீன்கள்

 

  தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான். மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான். வெலவெலத்துப் போய் குனிற்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்துவிட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத்தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை


கத்தியின்றி ரத்தமின்றி

 

  அந்த மலைகள் மிகவும் பயங்கரமாக எழுந்து நின்றன. மக்களின் உரிமை உடைமை இத்தியாதிகளை சங்காரம் செய்த தென்னாபிரிக்க வெள்ளைக்காரக் கொடுமைகளை விடக் கோரமானதாகத் தலை விரித்துக் கொண்டு நிற்கின்றன. உள்ளே எது நடந்தாலும் அதை வெளியுலகுக்குக் காட்டுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் அவை அந்தத் தேயிலைத் தோட்டத்தை அரண் செய்து நிற்கின்றன. அந்த மலைகளின் ராட்சத உடலில் பட்டி பிடித்தாற்போல் மலைகளைச் சுற்றி வரும் செம்மண் பாதையில் கைப்பிரம்பைச் சுழற்றியபடி நடந்து கொண்டிருக்கிறார் தோட்டத்து