கதையாசிரியர் தொகுப்பு: தி.ஜ.ர

4 கதைகள் கிடைத்துள்ளன.

மரத்தடிக் கடவுள்

 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வா மகனே, இப்படி வா! அடடா! இந்த மழையிலே இப்படித் தவிக்கிறாயே! பாவம்! ஆமாம், இதுதான் என்ன உக்கிரமான மழை!) நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது? ஜல தாரையை ஒளித்து நவநாகரிக நகரத்தை நிர்மாணிக்கிறான் மனிதன். மனிதன் ஒளித்ததை இந்த மழை அம்பலமாக்கிவிடுகிறதே! அடேயப்பா! இந்த மழையின் சர வீச்சிலே வேதனை தாளாத மண்ணாந்தை மாதிரி கட்டிடங் களெல்லாந்தான் எப்படி நெளிகின்றன!


பெட்டி வண்டி

 

 இதோ இந்தப் புளியமரத்தின் கீழே, ஆரங்கள் போன மூளிக் கால்கள், விரிந்து பிளந்த மூக்கணை, கிழிந்த கூண்டு இந்த லட்சணங்களோடு சீந்துவாரற்றுக் கிடக்கிறதே, இந்த வண்டிதான் என்ன என்ன சம்பவங்களையெல்லாம் ரெத்தினசாமிக்கு நினைவூட்டுகிறது! இந்தப் பெட்டி வண்டி- ஆம், இது பெட்டி வண்டி தான்; வில் வண்டி; ‘மைனர் வண்டி. ‘மைனர்’ என்றால், ‘வயசாகாத குட்டி’ என்று அர்த்தம் அல்ல. குஷியான பணக்கார வாலிபர்களை ‘மைனர்’ என்பார்கள் இல்லையா? அந்த மாதிரி மைனர்களுக்குரிய ஒரு வண்டியாகத் தான்


விசை வாத்து

 

 என் அத்தானைப் புத்திசாலி என்று கொண்டாடாதவர் இல்லை. அப்படி ஊரெல்லாம் கொண்டாட என்ன என்ன வேண்டுமோ அந்தப் பாக்கியங்கள் அனைத்தும் அவனிடம் இருக்கின்றன. ஸ்வீகார அம்மா வைத்த பெரும் பணம் இருக்கிறது; அலங்காரமான வீடு இருக்கிறது; கிளி மாதிரி மனைவி இருக்கிறாள். ஒன்று மாத்திரம் அவ்வளவாக இல்லை. இந்த விஷயம் கொஞ்சம் சுமார்தான். அது ஒன்றும் அப்படிப் பெரிய விஷயம் அல்ல. எதைச் சொல்லுகிறேன் என்றால், அதைத்தான் மண்டைக்குள்ளே மூளை என்று சொல்லுவார்களே; அந்தச் சங்கதியை. இதற்காக


மூட்டைப்பூச்சியும் கடவுளும்

 

 எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர? ‘படி படி’ என்று பாட்டியும் அம்மாவும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். ‘படிக்காவிட்டால் காபி இல்லை; சாப்பாடு இல்லை’ என்பார்கள். காபிக்காகக் கொஞ்சம் சாப்பாட்டுக்காகக் கொஞ்சம் படிப்பான். என்ன படிப்பான்? தமிழுக்குக் கோனார் நோட்ஸ்; இங்கிலீஷ¤க்கு ஏதோ நோட்ஸ்; பாடங்களை மட்டும் படிக்கவே மாட்டான். பரீட்சையில் சுழிதான். ஆனாலும் என்னவோ ‘பாஸ்’ செய்து விடுவான். அது என்ன