கதையாசிரியர் தொகுப்பு: தாமரை

1 கதை கிடைத்துள்ளன.

சவிதா – வயது பதினொன்று

 

 சவிதா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். அருகிலேயே வைத்திருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள். நான்கரைக்கு இன்னும் மூன்று நிமிடம் தான் இருந்தது. தினம் எழுந்து கொள்ளும் நேரம். அதனால் சரியாக இந்த நேரத்துக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அலாரமே தேவையில்லை இப்போதெல்லாம். இருந்தாலும் எங்கே தூங்கிப் போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தினம் தவறாமல் இரவு ப்ரேயர் முடிந்ததும் ஞாபகமாக அலாரத்தில் சாவி கொடுத்து விடுவாள். எதிர்ப்படுக்கையைப் பார்த்தாள். இவளுக்குப் படுக்கை இடது ஓரம். வலப்பக்கப் படுக்கையில்