கதையாசிரியர் தொகுப்பு: தஞ்சாவூர்க் கவிராயர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பாட்டும் பதவியும்!

 

 காட்டு அரசனாக வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று, வயதாகி, இறந்துவிட்டது. அந்தக் காட்டில் வேறு சிங்கமே இல்லை. காட்டிலிருந்த விலங்குகள் எல்லாம் ஒன்று கூடிப் புதிய அரசனைத் தேர்ந்தெடுக்கக் கூட்டம் போட்டன. “”ஆந்தையாருக்குதான் கண்ணு ரெண்டும் பெரிசா இருக்கு! ஆந்தையாரையே நம் அரசனாக நியமித்து விடலாம்!” என்று கூட்டத்திலிருந்து ஒரு விலங்கு கூறியது. “”ஆந்தையாருக்குக் கண்கள் பெரிசா இருந்து என்ன பிரயோசனம்? அவருக்குப் பகலில் கண் தெரியாதே!” என்று அந்த யோசனையை, கூட்டம் நிராகரித்துவிட்டது. “”விலங்குகளிலேயே சுறுசுறுப்பானது


ரயில் பெஞ்சு

 

 கோபால்ராவ் ரயில் பெஞ்சில் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகார முள்ளை மாலை 5 மணிக்கு திருப்பிவைத்துக் கொள்ளலாம். ரயில் பெஞ்சுக்கு சரியாக 5 மணிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அவர் ஒரு ரிட்டயர்டு முனிசிபல் கமிஷனர். அவருடைய ரயில்பெஞ்சு நண்பர்களில் மிகவும் தாமதமாக வருகிறவர்களை “”ஏன் லேட்டு?” என்று கேட்காமல் இருக்கமாட்டார். அவர் அதிகாரியாக இருந்தபோது கீழே வேலை பார்த்தவர்களை இப்படிக் கேட்டுக் கேட்டு அந்தப் பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டுவிட்டது. அவர்