கதையாசிரியர் தொகுப்பு: சு.யுவ‌ராஜ‌ன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

சிறகு

 

 சைக்கிள் கொளத்து பாசாவை அடைந்திருந்தபோது, பின்சீட்டில் அமர்ந்திருந்த தம்பி காலியாயிருந்த முன் சீட்டை வேகமாகத் தட்டி சைக்கிளை நிறுத்தச் சொன்னான். இடப்பக்கம் ஒரு கலன் டின்னில் அம்பாட் செகி ரொட்டி மற்றும் கோப்பி ஓ-வும், மறுப்பக்கத்தில் கட்டிப்பால் சாக்கு சொருகப்பட்ட மூன்று கலன் வாளியும், பின்சீட்டில் தம்பியுமாக தள்ளி வந்த சைக்கிளை லேசான செம்மண் புழுதிப் பறக்க நிறுத்தினாள் அக்கா. தன்னை இறக்கிவிடுமாறு கைகளை அக்காவை நோக்கி விரித்தப்படியே கெஞ்சினான் தம்பி. மெலிதாகத் தலையை அசைத்துக் கொண்டே


அழைப்பு

 

 தொலைதூர அருவியின் மெல்லியச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே விமலனுக்கு விழிப்புத் தட்டி விட்டது. கட்டிலைத் தடவியவாறே தலையணையின் கீழிருந்த அலைபேசியை எடுத்து மணி பார்த்துக் கொண்டான். சரியாக 7.45. மின்விசிறி அவனுக்கு நேராக இயங்கி கொண்டிருந்தாலும் காலை குளிரையும் மீறி குளித்து துவட்டியதுப் போல் உடல் வேர்த்திருந்தது. அப்படியே கண்கள் மூடி படுத்திருந்தான். கண்களை திறக்க முடியாதது எரிச்சலாக இருந்தது. லட்சுமி குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் இப்போது வேகமாகவே கேட்கத் தொடங்கியது. காலை நான்கு மணிக்குதான் கண்ணயர்ந்தான்.


கருப்பண்ணன்

 

 நெத்திவெள்ளை முன்னே நடக்க ஆரம்பித்திருந்த போது சூரிய ஒளிக்கதிர்கள் இரப்பர் இலைகளை மெல்ல ஊடுருவ தொடங்கியிருந்தது. இதமான வெப்ப ஒளிக்கதிர்கள் காலைக் குளிரில் சுருங்கியிருந்த கருப்பண்ணனின் தோலுக்கு மேலும் இதமாக இருந்தது. எல்லா கொட்டகைகளையும் திறந்து மாடுகள் அத்தனையும் நோக்காலம்மன் கோவிலருகே கூட்டமாக நிறுத்தினார். கருப்பண்ணனின் நாயான மைக்கல் தன் பங்குக்கு நான்கு முறை குரைத்து கூட்டத்தை மேலும் ஒழுங்குப்படுத்தியது. வேறொருவராக இருந்தால் இன்னேரம் வேர்த்து விறுவிறுத்திருக்கும். கருப்பண்ணனின் உடல் இப்போதுதான் குளித்து துவட்டியது போலிருந்தது. கடைசியாக


அல்ட்ராமேன்

 

 ‘குமாரு… குமாரு…’ பெயரைக் கூப்பிடும் ஓசை சன்னமாகக் கேட்டபோது குமாரின் கண்கள் திறந்து கொண்டன. தலை அசைக்க முடியாத அளவிற்குக் கனத்தது. கண்கள் எரிந்தன. இப்போது குரலோசை இன்னும் வேகமாகக் கேட்டது. குரலோடு கதவு தட்டப்படும் ஒசையும் சேர்ந்து கொண்டது. மெதுவாக எழுந்து பாயில் உட்கார்ந்தான் குமார். தம்பி கால்களைக் குமாரின் தொடைகளில் போட்டபடி படுத்திருந்தான். தம்பியின் வலதுக்கை குமாரின் இடுப்பைச் சுற்றியிருந்தது. அன்னம்மா பாட்டி கதவை உடைத்து விடுவார் என பயந்து ‘வரேன் பாட்டி’ எனக்குரல்


அறுவை சிகிச்சை

 

 மியா உடைகளைக் களைத்தாள். இரு கைகளாலும் மெத்தையைப் பற்றியவாறே இளனை நோக்கி மந்த காசமாகப் புன்னகைத்தாள். அறையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஜம்பு பழத்தின் வடிவத்திலும் பலா பழத்தின் உருவத்திலும் திணறி தொங்கியிருந்தன மார்புகள். ஏற்கனவே போதையில் தேங்கியிருந்த கண்களில் காமமும் வழியத் தொடங்கியிருந்தது. மார்புகளை இருகைகளாலும் பற்றியவாறே உதடுகளில் அழுத்தமாய் முத்தம் பதிக்கத் தொடங்கினான். கனவிலிருந்து விழித்தவன்போல் எழுந்தான் இளன்.கைத்தொலைபேசியில் அலாரம் அடித்துக் கொண்டே இருந்தது. கண்ணை மூடிக் கொண்டே மெத்தை முழுவதும் கைகளால்