கதையாசிரியர் தொகுப்பு: சிவனேசு

2 கதைகள் கிடைத்துள்ளன.

மலைக்காட்டு மர்மம்

 

 இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான இடம். உயர்ந்த மலைகளைப் பற்றிப் படர்ந்த பசுமையான காடு, காட்டை நிறைத்திருந்தன பல நூறு வருடங்களைத் தாண்டிய பல பெரிய பெரிய இராட்சத மரங்கள். இருகைகளால் இணைத்துப் பிடிக்க முடியாத அகன்ற தண்டுகளுடன், அதன் கிளைகளோ பாசிபடிந்து ஒட்டுன்னிக‌ளின் உறைவிடமாய் பூமியை தொட்டுக் கொன்டிருந்தன. அந்த மலைக்காட்டில் அமைந்திருந்தது இயற்கையின் எழில் நடனமாய் காணும் போதே குளிர்ச்சியூட்டும் ஓர் அழகான நீர்வீழ்ச்சி..! உயர்ந்த மலையிலிருந்து பொங்கிப் பெருகி நுரைகள் பளீரிட பாலைப்போல


கண்ண‌ன் வருகின்ற நேரம்…!

 

 பாதை பார்த்து தன் வயோதிகக் கண்களில் நீர் துளிர்க்கக் காத்திருந்தாள் பாஞ்சாலை, ஒரு வாரமாக இதே நினைவோடும் எதிர்பார்ப்போடும் அடிக்கொருதரம் வாசல் பார்ப்பதும், வருவோர் போவோரை பார்த்து ஏங்குவதுமாக கழிந்தன‌ அவள் பொழுதுகள்…, இன்றோ நேற்றோ உண்டான ஏக்கமல்ல, பல‌ வருடங்களாக உள்ளத்தில் அணைகட்டி வைத்திருந்த அவள் அன்பின் வெளிப்பாடுகள் அவை..! அவள் உயிராய் நேசித்த அவளின் உயிரின் வருகைக்காக உயிரைக் கையில் பிடித்துக்கொன்டு ஊன், உறக்கமின்றி உவகையுடன் காத்திருந்தாள் பாஞ்சாலை..! யாருக்காக இத்தனை ஏக்கம் ?