கதையாசிரியர் தொகுப்பு: சாந்தன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நீக்கல்கள்

 

 அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால்


என் நண்பன் பெயர் நாணயக்கார…

 

 (1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொட்டாஞ்சேனையிலிருந்து, நாணயக்காரவும் நானும் கோட்டைக்கு “வந்தோம். ‘யாழ்தேவியில் ராஜநாயகம் வருவதாகக் கடிதம் போட்டிருந்தான். வண்டி வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரத்திற்கு மேலிருந்தது. “என்னடா செய்யலாம்?” என்றான் நாணா. எனக்கும் புரியவில்லை. இனி, எங்கள் அறைக்கு – பம்பலப்பிட்டிக்குப் போய் விட்டுத் திரும்பி வருவது முடியாத காரியம். “ஸ்ரேஷனடியிலை பேசிக்கொண்டிருக்கலாம்; வா, சாப்பிட்டு வருவோம்” என்றேன். சாப்பிட்டுவிட்டுத் திரும்பி ‘ஸ்ரேஷ’னின் முன்னால் ‘ஒல்கொட்’