கதையாசிரியர் தொகுப்பு: சல்மா

2 கதைகள் கிடைத்துள்ளன.

பொறி

 

 தூங்கி நீண்ட நேரத்திற்குப் பின் அறைக்கதவு தட்டப்படுகிறது, மிருதுவாக, திடுக்கிட்டு விழிக்கிறேன். யார் என்ற கேள்வியும் பதற்றமும் சட்டெனப் பற்றுகிறது. எழுந்திருக்கத் தயங்கி உட்கார்ந்தே இருக்கிறேன். யாராக இருந்தாலும் தட்டிவிட்டுப் போய்விட மாட்டார்களா என ஏக்கம் படர்கிறது. கதவு தட்டும் ஒலி படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெகு தொலைவிலிருப்பது போன்று பாவனை செய்து கொள்கிறேன். நொடிக்கு நொடி. தட்டுதல்கள் என்னை நெருங்கி வருகின்றன. தடதடவென்று தாறுமாறாய் இருள் நிறைந்த அறையெங்கும் ஓசைபெருகி நிரம்பிக் கொண்டிருக்கிறது. திறக்க வேண்டுமென்கிற


இருள்

 

 இருள் கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக்கலாம் என்னும் யோசனை வந்தது. தோசையா சப்பாத்தியா என்று ஆலோசித்துச் சப்பாத்தி என முடிவெடுத்தாள். அப்போதுதான் மஃரிபு தொழுகை முடித்தாள். ஆடு யாசின் ஓதிவிட்டுக் கையோடு கிஷாவும் தொழுதுவிடலாமா என யோசித்தாள். இப்போது மாவு பிசைந்து வைத்துவிட்டால் தொழுதுவிட்டுச் சுடுவதற்குச் சரியாக இருக்கும். மாமியார் பசிக்கிறது என்று சத்தம் போட்டால் கஷ்டம். ‘சரி இப்படியே மாவு பிசைஞ்சுடலாம்’ எனத் தனக்குள்ளேயே முணுமுணுத்தவள் கையிலிருந்த யாசீன் கிதாபைப் பீப்பாயின் மீது