கதையாசிரியர் தொகுப்பு: கோகுலக்கண்ணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நடனம்

 

 வின்சென்ட் கொடுத்த ஆடைகளை அணிந்து ஹென்றி படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி இரவு தன் வலையைப் பின்னியது. படுக்கையின் மென்மை உடலுக்கு அன்னியமாக இருந்தது. உடம்பு படுக்கையிலிருந்து வழுக்கிக்கொண்டு போய்விடும் என்று பயந்தான். நேற்றைய முன் தினம் யூட்டா மாநிலத்தில் ஏதோவொரு நகரத்தில் ஒரு நெடுஞ் சாலைப் பாலத்திற்கு அடியில் குளிர் உடலைப் புரட்டியெடுக்கப் படுத்திருந்தான். அவனுடைய பத்தாண்டுக் கால அலைச்சலில் பல கந்தல் துணிகளைச் சேகரித்துவைத்திருந்தான். அத்தனையும் உடல் மேல் போர்த்தி அதற்கும் மேலே ஒரு


கனம்

 

 ரத்தம். தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் நிஜமான ரத்தம். படுக்கை விரிப்பின் வெள¤ர்நீல வண்ணம் செக்கச்செவேலென்று மாறியிருக்கிறது. டேவிட் உற்றுப்பார்த்தான். லிஸா ரத்தத்தின் கண்போல் படுக்கையில் சுருண்டிருக்கிறாள். அவள் நெஞ்சிலிருந்து ஊற்றுக்கண் போல் ரத்தம் பொங்குகிறது. டேவிட்டுக்குத் தலைவலி நெற்றிப்பொட்டில் மின்னல் வரிகளாய்ப் பெருகுகிறது. ரத்தத்திற்கு வாசனை உண்டா. மூச்சுக் காற்றைச் சிறைப்படுத்தி நாசியை வலுவாகத் தாக்குகிறது ஒரு வாசனை. காலடியில் நிலம் நகரக் கண்ணை மூடி உட்கார்ந்தால் சற்று ஆறுதல் கிடைக்கும்போலிருக்கிறது. கண்ணுக்குள் புதைமணலாய்க் குழையும்