கதையாசிரியர் தொகுப்பு: எழில் வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

பச்சைப் புறா

 

 அப்பாவுக்கு நான்கு வாய் சாப்பாடு ஊட்டுவதற்குள் போதும் என்றிருந்தது. அப்பாவின் வாயைத் துடைத்து, மாத்திரையும், குடிக்க தண்ணீரும் கொடுத்து, படுக்க வைத்து, போர்வை போர்த்தி விட்டு நிமிர்ந்தபோது, எனக்கே நோய் கண்டவள் போன்ற அசதி உண்டானது. ஏழு மாதங்களாக அம்மாவும், நானும் இப்படித்தான் அப்பாவுக்கு கையாகவும், காலாகவும் இயங்குகிறோம்! அயர்ந்து நாற்காலியில் சரிந்தபோது, போன் அழைத்தது. “அம்மணீ! பச்சப் புறா வேணும்னு கேட்டீங்களே! கொண்டாந்திருக்கேன். வீடு எங்க இருக்கு?” பேசியது அஞ்செட்டி வேட்டைக்காரர். அப்பாவுக்கு மருந்துக்காக பச்சைப்


பிள்ளையார் பிடிக்க.. குரங்கா முடிஞ்சது..டும்..டும்..டும்

 

 இடது கன்னத்தில் குலோப் ஜாமூன் ஒன்றை மறைத்து வைத்திருப்பது போன்ற முகத் தோற்றமுள்ள ஒருத்தி என்னிடம் ‘‘பல் டாக்டர் பரமேஸ்வரன் வீடு எங்கிருக்கிறது?” என்று கேட்டாள். பரிதாபப்பட்ட நான் ‘‘ஐயோ, பாவத்தே!’’ என்று மட்டுமே சொன்னேன். ‘பல் டாக்டர் பரமேஸ்வரன் வீடு மட்டுமல்ல.. பல் என்ற ஒரு உறுப்பையே நான் முன்னே பின்னே பார்த்ததில்லை’ என்று சொல்லி விட்டேன். பல் டாக்டர் பரமேஸ்வரன் எனக்கு சித்தப்பா மகன். ‘விலாசமில்லாத குட்டி நாய்க்கும் ரொட்டி போட்டு உதவுகிற பெரிய


‘சுள்’ளுனு ஒரு ஜோடி

 

  ‘மண்டை உடைத்துக்கொண்டு சண்டை போடுகிறவர்கள்தான் அன்பான தம்பதிகள்’ என்று ஆண்டவனே சொன்னாலும், அவன் வாயில் தெர்மாமீட்டர் வைத்து காய்ச்சல் எவ்வளவு என்று பார்க்கத் தோன்றும். அப்படி யிருக்க, சண்டையில் மண்டை உடைத்துக் கொண்ட ஒரு ஜோடியை அன்பான ஜோடி என்று ‘பாபா நகர் வெல்ஃபேர் அசோசியேஷன்’ தேர்ந்தெடுத்து விழா நடத்தியிருக்கிறது. அசோசியேஷனில் இருப்பது ஒருவேளை கிறுக்கு மாக்கியான்கள் கூட்டமா? பாபா நகருக்காக குள்ளப்பன் என்பவரிடம்தான் தரிசு நிலத்தை வாங்கியது. நிலத்தை வாங்கி, வீட்டைக் கட்டி வந்து


கொம்புள்ள குதிரை!

 

 உலகத்தில் அதிசயமும் ஆச்சர்யமு மான உயிரினங்கள் பல இருக்கின்றன.. அவற்றில் ஒன்று ஒற்றைக் கொம்புள்ள குதிரை என்று அடிக்கடி என் மாமியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். கொம்புள்ள குதிரைகள் இப்பொழுதும் மனிதர்களுக்கு மத்தியில், அழகிய உடை உடுத்தி, மிடுக்கான பேச்சு பேசி, ஒய்யாரமாக குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றன. கொம்புள்ள குதிரையை கண்டுபிடிப்பது மிக எளிது. தனக்கு எதிரில் உள்ளவர்கள் எல்லாம் பச்சைக் குழந்தைகள் என்று நினைத்துக் கொண்டு, காதில் பெரிய அண்டாவை கவிழ்த்து, அறிவுக் கொழுந்தை ஊற்றுபவர்கள்தான் கொம்புள்ள


பொய்

 

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என் முதுகெலும்பின் நடுவில் நாய் கடிப்பது போன்ற வலி. நிமிஷா பதறி ஓடி வந்தாள். “ஐயோ மாமா! ஈஸி சேரைத் திருப்பிப் போட்டுக்கிட்டு ஏன் தலைகீழா நிக்கிறீங்க?” என்று ஏழு வயதுச் சிறுமி அப்பாவியாகக் கேட்டதும்தான், நான் எத்தனை அலங்கோலமாக, விபரீதமாக விழுந்திருக்கிறேன் என்பது புரிந்தது. பிரசவத்துக்குப் பிறகு வாக்கிங் போகிற ஒட்டகச் சிவிங்கிபோல எழுந்து நின்றவனிடம்,


ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!

 

 துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல் கொய்யாப் பழமாக வேண்டும் என்பதுதான் அவன் வேண்டுதல். சாமி கும்பிடும்போதே சைக்கிளுக்குக் குறுக்காக வந்து, அவனைக் குப்புறத் தள்ளப்பார்த்த குருட்டு நாயைக் கெட்ட சகுனமாக நினைக்கவில்லை அவன். குடித்துவிட்டு வந்திருந்த தன் அப்பன் குப்பைக் குழியில் விழுந்திருந்ததைப் பாதி வழியில் பார்த்ததும்தான் பதறினான். போகிற காரியம் நாசமாகத்தான் போகும் என்று அப்போதே அவனுக்குத் தெரிந்துபோனது. பள்ளிக்கூடத்து


ஒரு ஜூஸ் பாட்டிலும் ஏழு வாய்களும்

 

 ஆகாஷ், தூக்க மாத்திரை நான்கு போட்டுக்கொண்டான். தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகமாக வைத்தான். கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டான். சொறி நாய் போல சிரித்துப் பார்த்தான். பாதியில் நிறுத்தி, அழ முயற்சித் தான். விளக்கை அணைத்துவிட்டு, பறக்கிற கொசுக்கள் எத்தனை என்று எண்ணினான். என்ன கோணங்கித்தனம் செய்தாலும், அவனுக்குத் தூக்கம் வரவில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஒன்று அவனைப் பாடாய்ப்படுத்தியது. ‘குடும்பம் என்பதற்கு அர்த்தம் என்ன?’ இந்தக் கேள்விக்கு அவனால் அதிகபட்சமாக டி.வி. ரிமோட்டைச் சுவரில் அடித்து உடைக்கத்தான்


ஒரு ஜோடி செருப்பு தேடி…

 

 காலில் முள் குத்தியிருக்கிறது, கல் குத்தியிருக்கிறது, துருப்பிடித்த ஆணி, குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. பிறந்ததில் இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப் பனுக்கு, அவையெல்லாம் ஒருபொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்று, மனுஷனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிட ஒரு எருமையாகப் பிறந்திருந்தால், குறைந்தபட்சம் செருப்பு வாங்கும் தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்குமே என்று நினைத்தான். பாட்டப்பன் ஒரு கல்யாணத்துக்காக அவசரமாகப் போய்க்கொண்டு இருந்தான். எந்தக் கல்யாண மண்டபம் என்று சரியாகத் தெரியவில்லை. ஊரில் இருப்பதே மூன்று மண்டபங்கள்தான்.


ஓடிய நதிக்கரையின் பூக்கள்!

 

 நான் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியனாக வேலை செய்து, ஒரு வருடத்துக்கு முன் ஓய்வுபெற்றவன். தாமதக் கல்யாணம் செய்து, ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கும் கல்யாணம் செய்துவைத்தேன். பெயர் தர்ஷணா. இப்போது புருஷனோடு சந்தோஷமாக இருக்கிறாள். எனக்கென்று இனி ஒரு கடமையும் கவலையும் வாழ்க்கையில் கிடையாது. ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வில்லாமல் உழைப்பதால், மகள் வீட்டுக்குப் போய் ஒரு பத்து நாள் ஓய்வு எடுக்கலாம் என நானும் என் மனைவியும்பயணப்பட்டோம். மகள் வீடு


வைத்தியனின் கடைசி எருமை

 

 ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் நின்று, கோரைப்பல் நடுவே ரத்த நிற நாக்கு வெளித்தள்ள, ஆயுதங் களுடன் விழி உருட்டி நின்ற ஓங்காளியம்மன், சின்ன கண்ணாடிச் சட்டத்துக்குள் அழகாக நின்றாள். ஓங்காளியம்மன் முன் மண்டியிட்டு வேண்டிக் கொண்டு இருந்த கறுத்த நிறத்துக்காரனின் பெயர் ஓங்காளியப்பன். அவனுடைய பாட்டி பெயரும் ஓங்காளியம்மாதான். இப்படி ஒரு குலதெய்வத்தின் கொடித் தடமாக வேரோடிக்கிடந்த ஓங்காளியப்பனுக்கு ஓங்காளியம்மா மேல் (பாட்டி ஓங்காளியம்மா இல்லை; சாமி ஓங்காளியம்மா) அப்படி ஒரு நம்பிக்கை! ஓங்காளியப்பன் வேண்டிக்கொண் டான்…