கதையாசிரியர் தொகுப்பு: எல்.ஜி.முருகேஸ்வரி

5 கதைகள் கிடைத்துள்ளன.

யாருக்கு சொந்தம்?

 

 ராஜ்ஜியபுரம் நாட்டை சங்கமித்திரன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அந்நாட்டில் சேனாபதி என்றொரு செல்வந்தான் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பத்து பெண் பிள்ளைகள் இருந்தனர். அந்த பத்து பெண் பிள்ளைகளுக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் தான் தேர்ந்தெடுத்த மணமகன்களுக்கு திருமணம் முடித்து கொடுக்க ஏற்பாடு செய்தான். விடிந்தாள் திருமணம். முதலில் பிறந்த ஐந்து பெண்கள் திருமணத்தை நினைத்தும், தங்களை கைப்பிடிக்க இருக்கும் மணமகன்களை நினைத்து பார்த்தும் சந்தோஷ கடலில் மூழ்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு


துலாபாரம் தோற்காதோ!

 

 பனிக்குடம் உடைந்தும் கூட நந்தினிக்கு பிரசவ வலி வராததால், இடுப்பு வலியை வரவழைப்பதற்கு அவளுக்கு ஊசிப் போடப்பட்டது. நந்தினி என்னவோ மிகவும் தைரியத்தோடும் நம்பிக்கையோடும்தான் இருந்தாள். ஆனால் அவளது கணவன் அர்ஜீன்தான் ரொம்ப பயந்துப் போயிருந்தான். தன் கையை இறுகப் பற்றிக் கொண்டு தன்னருகிலேயே உட்கார்ந்திருந்தவனை பார்த்த நந்தினிக்கு ஒருபுறம் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தாலும் மறுபுறம் அவன் மீது பரிதாபம் உண்டான அதே சமயத்தில் தன்னைத் தானே வெறுத்தும் கொண்டாள். என்னங்க எங்க வீட்டுக்கு போன் பண்ணி


கொன்றால் பாவம் தின்றால் போகும்

 

 ஒரு நாள் சேரா என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாட போனான். அப்போது அங்குள்ள முள்புதரில் அழகான வெள்ளை முயல் ஒன்று தவித்துக் கொண்டிருப்பதை அந்த வேடன் பார்த்தான். முள்புதர் அருகே சென்ற சேரா முட்களையெல்லாம் விலக்கிவிட்டு அந்த முயல் குட்டியை பத்திரமாக மீட்டெடுத்தான். ‘ஏனோ சேராவுக்கு அந்த முயல்குட்டியின் மீது பரிதாபம் உண்டானது.’ மலையடிவாரத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு முயலை வேடன் கொண்டு போனான். வேட்டைக்கு சென்ற கணவன் கையில் முயலோடு வருவதைக் கண்ட வேடனின் மனைவி


காதலும் கடந்து போகும்

 

 கண்டதும் காதல் எல்லாம் இல்லை. ஆனாலும் எனக்கு அவளை பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் அவளுடைய தரிசனம் எனக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. அவளிடம் பேசி பழக வேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்டாலும் அப்படி ஒரு சம்பவம் நான் எதிர்ப்பார்த்தவரையில் கைகூடவே இல்லை. நானே எதிர்ப்பார்க்காத ஒரு நாளில் அவளே என்னிடம் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. பேசினால் என்று சொல்வதைவிட நிறைய வசைப்பாடினால் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். தெருக்கோடில இருக்குற தொந்தி கணபதிக்கு


ஒரு குளத்தில் மூன்று கொக்குகள்

 

 ஒரு நாள் பெரிய கொக்கு, சிறிய கொக்கு என்ற இரண்டு கொக்குகள் இரைத் தேடி குளத்திற்கு சென்றன. குளத்துக்குள் இறங்கிய இரண்டு கொக்குகளும் ரொம்ப நேரமாக காத்துக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு மீன்கூட கிடைக்கவே இல்லை. அப்போது பார்த்து நொண்டி கொக்கு ஒன்று அந்த இரண்டு கொக்குகளுக்கு அருகே வந்து நின்றது. ‘அடடா உங்களுக்கு ஒரு மீன்கூட சிக்கவில்லையா”? எப்படி சிக்கும் இதோ என் வயிற்றைப் பாருங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கிறதென்று இந்த குளத்தில் இருந்த அனைத்து மீன்களையும்