கதையாசிரியர் தொகுப்பு: என்.எஸ்.எம்.ராமையா

1 கதை கிடைத்துள்ளன.

தீக்குளிப்பு

 

 (1963 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரஞ்சிதம் சோர்வாக நடந்து கொண்டிருந்தாள். ஏறிக் கொண்டு வரும் வெப்பத்தால் முகம் கன்றிப் போயிருந்தது. நெற்றியில் கசிந்து, பரவியிருந்த வியர்வையில், தலைத்துண்டையும் தாண்டி இரண்டொரு மயிர்க்கற்றைகள் சப்’ பென்று ஒட்டிப் போயிருந்தன. அவளுக்குப் பின்னால், இனிப்பு விழுந்த இடத்தில் மொய்த்துப் பிரியும் எறும்புக் கூட்டம்போல் கொழுந்து நிறுக்கும் இடத்தில் கூட்டம் திமுதிமுத்துக் கொண்டிருந்தது. அங்கு போனதையோ போய்த் திரும்பியதையோ உணரும் சொரணையற்று ரஞ்சிதம்