கதையாசிரியர் தொகுப்பு: ஊடகம்

1 கதை கிடைத்துள்ளன.

பெருவிரல்

 

 பேருந்து கிளம்ப இன்னும் அரைமணி நேரமிருக்க ஜன்னலோரத்தில் உட்காந்து பிளாட்பாரக் கடைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்தன், அவன் பயணத்துக்காக கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டிருந்த அப்பாவின் மீது அவன் கண்கள் உணர்ச்சியின்றிக் குத்தி நின்றுகொண்டிருந்தது. பேருந்து நிலையங்களுக்கே உரித்தான இரசிக்கமுடியாத இரைச்சல்கள் அவன் காதுகளை ஆக்கிரமித்திருந்தது. கண்களும் காதுகளும் திறந்திருந்தாலும் இரண்டோடும் தொடர்பின்றி மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது, “இங்கே இன்னும் கொஞ்ச நேரத்துல அடைமழை ஸ்டார்ட் ஆகப்போவுது…” பின்சீட்டில் உட்காந்து இருந்தவர் யாருடனோ செல்பேசியில்