கதையாசிரியர் தொகுப்பு: இந்திரா செளந்தர்ராஜன்
வதம்
வழக்கம்போல பத்து மணிக்கே பரபரப்பாக தொடங்கி விட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள். ஜெர்மானிய ரோஸ்ட் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த குட்டி குட்டி அறைகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் எல்லாம் மெயில்கள் பிரிக்கப்பட்டு பார்க்கப்படவும் தொடங்கின. அங்கே ஒரு சராசரி பட்டதாரி கூட இல்லை. எல்லோருமே போஸ்ட்கிராஜூவேட்கள் படிக்கும்போதே லட்சங்களில் சம்பளக் கனவு கண்டவர்கள். ஒருவர் கூட புடவையில் இல்லை. அனேகர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தனர். கர்ப்பப்பை சூடேறி பிள்ளை பேற்றின் போது அது சவலைப்பிள்ளையாக உருவாகி பிறக்கும் ஆபத்து
ஸ்வப்னப்பரியா
ஸ்வப்னப்பரியா பார்ப்பதற்கு ஜில்லென்று இருந்தாள். அசலான நாமகரணப் பெயர் விஜய கனகம்மா நாகலா தேவி என்பது தான். சினிமாவுக்கு தான் இந்த மாதிரி ரயில் நீளப்பெயர்கள் ஆகாதவை ஆயிற்றே? அதிலும் இது சரியான காரமான அந்திய பெயர். அதை அடித்து திருத்தி ஸ்வப்னப்ரியா என்று ஆக்கியவன் பலப்பல வருடங்களாக ஹீரோவாகவே ஆட்டமாடி கொண்டிருக்கும் சதா சிவராஜாவாக இருந்து பின் சினிமாவுக்காக ஸ்ரீராஜ் ஆன மக்களின் இதயநாயகன் தான். இத்த வருஷத்தில் எவ்வளவோ ஹீரோயின்களை பார்த்து விட்டான். அவனோடு
பாகீரதி… பாகீரதி…
‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா. ‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று ‘மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது. சரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட! இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர்
ஆயிரம் அர்த்தங்கள்!
வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார் ராகவன். அதன் பொருட்டு வேஷ்டியை அகர்றிவிட்டு பேண்ட் போட முனைந்த போது மிகவே சிரமப்பட்டார். அவ்வளவு பெரிய தொந்தி! மேலே சட்டையைப் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்றபின் தலையை வாரிக் கொண்டபோது சீப்பின் பற்கள் அவர் தலை வழுக்கையில் கீறலிட்டு லேசாக வலி எடுத்தது. வெளியே சென்றவர் காத்திருந்த பைக்கை எடுத்து சிரமப்பட்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார். உதைக்கத் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட்! அதுவும் சீரிக் கொண்டு கிளம்பியது. பார்த்துக்