கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1257 கதைகள் கிடைத்துள்ளன.

பிணங்கள் விற்பனைக்கு…

 

 இழவு வீட்டு தட்டிப் பந்தலின் கீழ் கிடந்த அந்த குறைக் கொள்ளி எரிந்து முடியும் தறுவாயில் கிடந்தது. பனிப் புகாரை ஊடறுத்து விடியலின் கிரகணங்கள் பாய்ந்து கொண்டிருந்தன. “டேய்! தம்பியரே….. விடுஞ்சு வருகுது. எழும்புங்கோடா.” நெருப்புக் கொள்ளியில் தனது குறை கோடாச் சுருட்டை பற்ற வைத்து விட்டு ஒரு சத்தம் போட்டு வைத்தாள் சீராள அம்மாச்சி. போர்வையை இறுக்கிப் போர்த்தபடி சில விடலைகள் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டனர். இருந்தாலும் இப்போது எல்லோருக்குமே விடிந்து விட்டது. தெய்வானைக்கு மட்டுமே


ஜலசமாதி

 

 மதியச் சாப்பாட்டின் பின்னர் வழக்கம்போல கண்ண யர்ந்தேன். மாசி மாதப் பின்பனிக் காலம் ஆரம்பித்து விட்டாலும் இன்னமும் வாடைக்காற்று ஓயவில்லை. வாடைக் கூதல் மத்தியான வேளையையும் இதமாக்கிக் கொண்டிருந்தது. சுக நித்திரையில் இருந்த என் காதுகளில் கனவிற் கேட்பதுபோல பல குரல்கள் கேட்கவே எழுந்து உட்கார்ந்தேன். ‘லோஞ்ச் கடலில் தாண்டு போச்சாம்’ என்ற பல அவலக் குரல்கள். நான் படுக்கையை விட்டு எழுந்து வீதிக்கு ஓடினேன். இதுவரையிலும் என் சீவிய காலத்தில் லோஞ்சோ வத்தையோ கடலில் அமிழ்ந்ததாக


நெஞ்சாங்கூட்டு நினைவுகள்!

 

 நான் அறிந்த நாளிலிருந்தே நடுவிலம்மான் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும் அவரது சொந்தப் பெயர் மண்டலாய் என ஐந்தாம் வகுப்புப் படித்த போதே எனக்குத் தெரிய வந்தது. அதுவும் ஒரு நாள் ஆறுமுகப்பாவின் கடைக்கு கூப்பன் எடுக்க அம்மாவுடன் அவவின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி சென்ற போது, “மண்டலாய் இப்போது மாடு மேய்க்க மாவில் பக்கம் வாறதில்லையோ?” என்று கூப்பனை வெட்டியவாறே அவர் கேட்க “நடுவிலம்மான் இப்ப கிளைப்பனையடிப் பக்கமாப் போறார் போலை” என அம்மா சொன்னபோதுதான் அவரது


நீக்கல்கள்

 

 அவனுடைய வீட்டிலிருந்து ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு பஸ்ஸை நம்பிப் புண்ணியமில்லை. அது சமயத்தைப் பொறுத்தது. சில வேளைகளில், ஆலடிச் சந்திக்குப் போன கையோடேயே பஸ் கிடைத்து, அரைமணித்தியாலத்திற்குள் ஆளைப் பட்டணத்தில் கொண்டுபோயும் விட்டுவிடும். இன்னுஞ் சில வேளைகளில் – அப்படித்தான் அதிகம் நேர்கிறது. – பஸ்ஸைக் கண்ணாற் காண்பதே பெரிய பாடாகிவிடும். அப்படியான வேளைகளில், பட்டணம் போய்ச் சேர இரண்டல்ல – மூன்று மணித்தியாலமுமாகும். சைக்கிள்தான் நம்பிக்கை. ஆகக்கூடியது, முக்கால் மணித் தியாலத்திற்குள் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால்


கம்பி மேல் நடக்கிறார்கள்

 

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பளீர், பளீர், பளீர், ஒவ்வொரு பளீருக்கும் ஒரு முக்கல். வலது கையை இடது கையில் வைத்து அழுத்திக் கொண்டு உடம்பை ஒற்றைச் சுழி கொம்பு போல் வளைத்தபடி சண்முகம் அவன் நாற்காலியில் வந்து உட்கார்ந்தான். ஒரு நொடி, என்னைப் பார்த்துவிட்டு மேசையில் கவிழ்ந்து கொண்டான். மேசைக்குக் கீழ் வலது கையை இடது கையால் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். கண்களைப் போலவே கையும் சிவந்திருந்தது.


மழைக்கு வெளியே

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக்கதை, இன்றைய இளைய தலைமுறையினரின் தவறான அல்லது தாறுமாறான முந்துரிமைகளைப் (misplaced priorities) பற்றித் தெளிவாகப் பேசுகிறது. ஒரு மூன்று வயதுக் குழந்தையின் மெல்லிய உணர்வுகளை, ஏக்கங்களைப் புரிந்துகொள்ள இயலாத இளம் தாய், அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு தலை முறைக்கு முந்திய பாட்டியின் பக்கத்தில் வைத்துப் பேசப்படுவது (juxtaposed) கதையின் சிறப்பு. இரண்டு வெவ்வேறு காலத்தை, பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் அருகில் வைத்துப்


அங்கீகாரம்

 

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக் கதை, மலேசியாவில், எவ்வாறு ஒரு காலத்தில் அனைத்து இனத்தவரும் மனதில் கல்மிஷம் இல்லாமல் ஓரினத்தவராக வாழ்ந்தோம் என்பதையும், இன்று “ஒரே மலேசியா” என்று பிரதமர் கூப்பாடு போட்டும் மனங்கள் ஒட்ட வில்லை என்பதையும் பின்னணியாகக் கொண்டு கால பிரக்ஞையோடு எழுதப்பட்டக் கதை. அந்தக் காலத்தில் மற்ற இனத்தவரோடு பழகியவர்களுக்கு, இந்தக் கதை, அந்த இனிமையான நாட்களுக்கான நாட்டத்தை (nostalgia) தராமல் இருக்காது.


விசுவரூபம்..!

 

 வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் உற்சவம் நடைபெறும் ஒரே இடம் சீரங்கம் அரங்கநாதன் கோவில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்… இன்றைக்கு மாசி மகம் திருவிழா ஆரம்பித்து நாலாம் நாள்…ஊரே அரங்கனின் வீதி உலாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது… ”பாமா…என்னடி மசமசன்னு இத்தன நாழி பண்ணிண்டு…நாலு புள்ளி வச்சோமா , இரண்டு இழுப்பு இழுத்தோமான்னு இல்லாம…இன்னும் தளி பண்ணி முடியல..வடைக்கு அரச்சுத்தறேன்னு சொல்லிட்டு…திருக்கண்ணமுதுக்கு பால் போறாது..வாங்கிண்டு வாடான்னா இந்த ரங்குடு எங்க போய் தொலஞ்சான்…? எல்லாமே கடைசியில என் தலைலதான்


நிலாச் சோறு

 

 ‘எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, பட்டை வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்’, மீண்டும் ஒருமுறை சமையல் குறிப்பை மனதில் பதிவேற்றிக் கொண்டேன். ‘இன்னைக்கு மட்டும் இந்தக் குழம்பு ருசியா வரலேன்னா … அப்புறம் கமலாவோட வாரிசுன்னு சொல்றதுல அர்த்தமில்லை..’ சூடான எண்ணைக்குள் சிலிர்த்து விரியும் பட்டையைப்போல மனம் அம்மாவின் நினைவுகளினால் விரிந்தது. சமையலறைதான் அம்மாவின் கலைக்கூடம். தேர்ந்த ஓவியரின் கைகளுக்குள் விளையாடும் தூரிகையைப்போல் தான் அம்மா சமையலறையில் கத்தியையும் கரண்டியையும் கையாளுவார். ஓவியத்தின் வண்ணக்


பாட்டி

 

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விழிப்புக்கும் எழுச்சிக்கும் வித்திட்ட தேசிய தினத்தை வரவேற்க நாடு தயாராகிக் கொண்டிருந்தது. அன்று ஆகஸ்ட் மூன்றாம் நாள். கெப்பல் உயர்நிலைப்பள்ளியிலும் அலங்கரிப்பு வேலை மும்முரமாக நடந்தது. கொடிகள் கட்டுவதிலும், பூத்தொட்டிகளை ஒழுங்குபடுத்துவதிலும், வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டுவதிலும் மற்றும் பலவகைப்பணிகளிலும் மாணவ மாணவியர் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர். கருநீலமும் வெள்ளையும் கலந்த சீருடையில் தேனீக்கள் போல ஓடி ஆடி உழைக்கும் அவர்களோடு ஆசிரியர்களோடு பங்கேற்றிருந்தார்கள். தலைமை