கதைத்தொகுப்பு: சுட்டி கதைகள்

1329 கதைகள் கிடைத்துள்ளன.

முட்டாள் கிழட்டு சிங்கம்

 

 அடர்ந்த காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்டதால் முன்பு போல் சிங்கத்திற்கு வேட்டையாட முடியவில்லை. பசியோடு தன் குகைக்குள்ளயே சிங்கம் அடைந்துக் கிடந்தது. சிங்கத்தின் நிலைமை ஒரு தந்திரக்கார நரியின் காதுக்கு எட்டியது. அந்த தந்தரகார நரி ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அந்த வயதான சிங்கத்தின் குகைக்கு சென்றது. நரி குகைக்குள் அடியெடுத்து வைத்ததும் பசியோடு இருந்த சிங்கம் நரியின் மீது பாய முடியற்சித்தது. அப்போது நரி, ‘சற்றுப் பொறு நண்பா” நான்


தேரை தீங்கு விளைவிக்குமா?

 

 (1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நம்பி வாழை மரத்தில் கால்வைத்தான். “ஜாக்கிரதை அண்ணா. வழுக்கப் போகிறது. கீழே, மரத்தைச் சுத்தித் தண்ணி, மண்ணு கொள கொளன்னு இருக்கு” என்றாள் திவ்யா. காலை அகட்டி வைத்து, சறுக்கி விழுந்து விடாமல் உறுதியாக நின்று கொண்ட நம்பி, “கத்தியைக் கொடு” என்று கையை நீட்டினான். திவ்யா கத்தியைக் கொடுத்தாள். அம்மா, பூதொடுக்க நார் கேட்டாள். அதற்காகவே அண்ணனும் தங்கையும் தோட்டத்திற்கு வந்திருந்தனர்.


மயில் அரசன்

 

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர்‌ ஊரில்‌ ஓர்‌ அரசனும்‌ அரசியும்‌ இருந்தனர்‌. அரண்மனையில்‌ குழந்தை பிறந்தால்‌ உடனே வனதேவதைகளை வரவழைத்துக்‌ குழந்தையால்‌ நன்மை ஏற்படுமா அல்லது தீமை உண்டாகுமா என்று கேட்பது வழக்கம்‌. அரசிக்கு இரண்டு ஆண்‌ குழந்தைகள்‌ இருந்தன. மூன்றாவது பெண்‌ குழந்தை பிறந்தது. அரசி வனதேவதைகளை வரவழைத்‌தாள்‌. குழந்தை அழகாக இருந்துது. அம்மாவின்‌ மடியில்‌ படுத்து உறங்கிக்‌ கொண்டு இருந்தது. வனதேவதைகள்‌ வந்து சோர்ந்தன.


மைதானத்தில் ஒரு நரிக்குட்டி!

 

 பள்ளி நேரம் முடிந்ததும் அம்முவும் அவள் தோழிகளும் மைதானத்தில் கால்பந்து ஆடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார்கள். பந்து மைதானத்துக்கு வெளியே சென்றுவிட்டது. அங்கே ஒரு புதர் இருந்தது. அதற்குள் பந்து விழுந்து கிடந்தது. அதை எடுக்க அம்மு உள்ளே சென்றாள். அங்கே ஒரு நரிக்குட்டி ‘கீச்… கீச்…’ என்று கத்தியபடி தனியாக இருந்தது. பந்தைத் தூக்கி மைதானத்துக்குள் வீசிவிட்டு அதன் அருகில் சென்றாள் அம்மு. ‘‘ஏய் யார் நீ? இங்கே என்ன பண்றே?” என்று அந்த நரிக்குட்டியிடம்


சங்கரனும் கங்கையும்

 

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்‌ ஒரு காலத்தில்‌ ஓர்‌ அரசனும்‌ அரசியும்‌ இருந்தனர்‌. தங்களுக்குக குழந்தை இல்லையே என்று அவர்கள்‌ கவலைப்பட்டனர்‌. ஒரு வனதேதேவதையிடம்‌ சென்று பிள்ளைவரம்‌ கேட்டனர். ‘குழந்தை எதற்கு? குழந்தைகளால்‌ என்ன பயன்‌? குழந்தைகளால்‌ உஙகளுக்குத்‌ தொல்லைதான்‌ ஏற்படும்‌’ என்று வனதேவதை கூறிற்று. அரசி கெஞ்சிக்‌ கெஞ்சிக்‌ கேட்டாள்‌. அரசன்‌ குழந்தைகளின்‌ அருமையைப்‌ பற்றி அந்தத்‌ தேவதையிடம்‌ எடுத்துக்‌ கூறினான்‌. அந்த முரட்டுத்தேவதைக்கு எரிச்சல்‌


தோப்புக்கரணம் போட்ட தலைவன்!

 

 ஒரு காடு… அந்தக் காட்டுக்குத் தலைவனாக யானை இருந்தது. அது செல்லும் வழியில் எதிர்ப்படும் விலங்குகள் மரியாதையுடன் வணங்கும். புன்னைகையுடன் பேசும். இதையெல்லாம் பார்த்த நரி, ‘நான் காட்டுத் தலைவராக இருந்தால் எனக்கும் இப்படி வணக்கம் செய்வார்கள். தலைவராவது எப்படி?’ எனச் சிந்திக்கத் தொடங்கியது. சீக்கிரமே ஒரு திட்டம் உதித்தது. காட்டு விலங்குகளைத் தனித்தனியே சந்தித்து, தன்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தால், இதைச் செய்வேன். அதைச் செய்வேன் எனச் சொன்னது. நம்பிய விலங்குகளும் நரியின் பின்னால் அணிவகுத்தன. நரியின்


உதவாத டெலிபோன்

 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த வட்டாரத்திலே கார்த்திகேயர்தான் பெரிய பணக்காரர். அவருடைய மாளிகை மிக மிகப் பெரிதாயிருக்கும். ஏராளமான செலவில் அவர் அதைக் கட்டி வைத்திருந்தார். அதன் உள்ளே எல்லாவிதமான வசதிகளும் இருந்தன. டெலி விஷன், ரேடியோ, டெலிபோன், பனிப்பெட்டி, மெத்தை போட்ட நாற்காலிகள், மின்சார விசிறிகள், அலங்காரப் பொம்மைகள் யாவும் இருந்தன. அவருடைய மாளிகையில் இவ்வளவெல்லாம் இருந்தும் அவருடைய நெஞ்சிலே கொஞ்சமேனும் ஈரம் இல்லை .


பருந்தும் குருவியும்

 

 குழந்தைகளே! தீபாவளி வந்தாச்சு. கொண்டாட்டம் தானே! ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று வசித்து வந்தது. அங்கும் இங்குமாய்ச் சிறகடித்துப் பறந்த அதற்கு இன்னும் உயரமாய்ப் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆகவே மெல்ல மேலெழும்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் பறந்திருக்கும். அவ்வளவு தான், சூரியனின் வெப்பத்தை அந்தக் குருவியால் தாங்க முடியவில்லை. மேலும் அதன் எடையும் சிறிய சிறகுகளும் அது உயரே பறப்பதற்குத் தடையாக இருந்தன. சோர்ந்து


செய்தி சொன்ன கானமயில்

 

 பரந்த பாலை நிலப் பகுதியில் உதித்த சூரியனின் இளஞ்சூட்டை உள்வாங்கிக்கொண்டே, கேர் பழங்களைப் பறிக்க, தன் தோழியோடு கிளம்பினாள் சல்மா. அவள் பாட்டி, அந்தப் பழங்களைக் காயவைத்து ஊறுகாய் செய்துகொடுப்பார். ஒட்டகக்குட்டியுடன் எதிரே ஜோகா வருவதைப் பார்த்து, “ஜோகா, குட்டிதான் வருது. அம்மா எங்கே?” என்று கேட்டாள். “பின்னாடி அப்பாவோடு வருது. எங்கே போறே?” “கேர் பழங்களைப் பறிக்க. நீயும் வர்றியா? ஜட்டா லாலையும் காட்டுக்குள் கொஞ்ச தூரம் கூட்டிட்டுப் போலாம். உன் அப்பாகிட்ட நான் கேட்கறேன்.


குடியே பாவத்தின் வித்து

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில்