கதைத்தொகுப்பு: சிறப்பு கதை

1296 கதைகள் கிடைத்துள்ளன.

கலியன் மதவு

 

 அத்தியாயம் 7 – 8 | அத்தியாயம் 9 – 10 அத்தியாயம் – 9 “குடலைப் பிரட்டும் துர்நாற்றம். பொறுத்துக் கொள்ள முடியாமல் மூக்கைத் துணியால் மூடிக்கொண்டு பிரேதம் சுமந்தனர். வழக்கமான திக்கில்தான் இறுதியாத்திரை நகர்ந்தது. கண்ணில் விளக்கெண்ணை கொட்டிக்கொண்டு கூர்ந்து கவனித்துக்கொண்டே முன்னே போனார் மாதய்யா. முத்தனூர் எல்லையில் ஜனக்கூட்டம் சற்றே அதிகமாய் இருப்பதாக உணர்ந்தார் மாதய்யா. பிரேதத்தை முன்னே விட்டுப் பின்னே சென்றார். அந்தனூர் எல்லை முடிந்து , முத்தனூர் எல்லைத் தொடக்கத்தில்


பாப்ஜி

 

 (2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யாருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே! – திருமலை அமெரிக்கா சென்றிருந்தபோது 1999இல் பெர்க்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கையைத் துவக்கிவைத்துப் பேசச் சொன்னார்கள். ஜார்ஜ் ஹார்ட் போன்ற அறிஞர்களும் பல அமெரிக்கத் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் வந்திருந்தனர். தேநீர் இடைவெளியின்போது ஒருவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். என் வயசுதான் இருக்கும். ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேளே…’ என்று என் அத்தனை நியுரான்களிலும் தேடினேன். அவரே


கலியன் மதவு

 

 அத்தியாயம் 5 – 6 | அத்தியாயம் 7 – 8 அத்தியாயம் – 7 “நெடிய உருவம். இரட்டை நாடி. தொப்புளுக்குக் கீழ் மடித்துக் கட்டிய லுங்கி… லுங்கியை இடுப்போடு அழுத்திப் பிடித்துக் கொள்ளவும், காசு பணம் வைத்துக் கொள்ளவும் வசதியாகத் துருத்திக்கொண்டுள்ள, பர்ஸ்ஸுடன் கூடிய, சாயம் போன பச்சை கலர் பெல்ட். கழுத்தில் மாலை போலத் தொங்கும் கலர் கலராய்க் கட்டமிட்டத் துண்டு… அய்யனார் சிலை போல வஜ்ரமாய் இறுகிய அகலமான மார்பு… வயிற்றை


கலியன் மதவு

 

 அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம் – 5 “மாதய்யாவை விட குந்தலாம்பாள் அரை அடி உயரக் குறைவு… உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு. மாநிறம். மஞ்சள் பூசிப் பூசிக் கலை பொருந்திய முகம். நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் அளவாக இட்டுக் கொண்டிருக்கும் அரக்குக் கலர் குங்குமம். காதுகளில் கச்சிதமாக ஜொலிக்கும் கல் தோடு. மூக்கில் மின்னும் எட்டுக் கல் பேசரி. உழைத்து உழைத்து உரமேறிய புஜங்கள். பேச்சில் பிசிர்


கங்கையில் நெருப்பு

 

 (1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கங்கா ஸ்டீல் ஃபாக்டரியின் ‘மெயின் கேட்டை’ வாட்ச்மேன் ஓடிவந்து திறந்து சல்யூட் அடித்து நின்றான். ஒரு வெள்ளை நிற ஃபாரின் கார் அன்னம் போல் உள்ளே நுழைந்து ஃபாக்டரியின் ‘மானேஜிங் டைரக்டர்’ அறை வாசலில் ஒரு குலுங்குக் குலுங்கி நின்றது. காரிலிருந்து கங்கா இறங்கினாள். வயது முப்பதிலிருந்து நாற்பதுவரை எடை போட முடியாத தோற்றம், முகத்திலே உணர்ச்சிகள் பிரதிபலிக்காத ஒரு இருக்கம். கங்கா


கலியன் மதவு

 

 அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம் 3 “அய்யா, அனாவசியமா அரை ஏக்கர் தெடல் சும்மாத்தானே கெடக்கு, ஒரு காளவா போட்டுத் தெடலைக் கரைச்சிட்டமுன்னா, எடமும் வெளைச்சலுக்கு வந்துரும்… காளவாயில போடற காசு ரெண்டு பங்கா திரும்பிரும்…! வேண்டாம்’னு மட்டும் சொல்லிராதீங்கய்யா…?” என்று ஆத்மார்த்தமாகக் கேட்டான் தொப்ளான். “காளவா போட, ராசி வேணும்னு சொல்லுவாங்களே… ஜோசியரய்யாவைக் கலந்துக்கிட்டு அப்பறம் யோசிக்கலாமேன்னேன்…” “அய்யா… அதல்லாம்


கலியன் மதவு

 

 அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் 1 ‘பாதை வகுத்தாச்சு பயணம் அவர் பாடு… கோதை எடுத்தாச்சு புளிக்குழம்பு அவர் பாடு… சாதம் வடிச்சாச்சு சாப்பிடுவதினி அவர் பாடு… ஏதும் எனக்கில்லை எனச்சொல்லிப் போனீரோ……… வைகரையின் ரம்யமான அமைதியை கீறிக் கிழித்துக்கொண்டு பிசிர் இல்லாமல் ஒலித்துப் பரவியது அகிலாண்டக் கிழவியின் ஒப்பாரி. ‘கிளவி ஒப்பாரி பாடுதே…!’ ‘நோவு நொடீல படுத்தக் கிளங்கட்டைங்கக் கூட தெருவுல யாருமேயில்லையே…!’ ‘பாம்பு கீம்பு கடிச்சி யாரும்… …!’ ‘திடீர்னு யாரு


திட்டம்

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “திட்டம் தீட்டாமல் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் கூறுவது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையல்ல. அது வேறு, இது வேறு, இல்லற வாழ்க்கை இனிது நடை பெற வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண் மகனும் பெண் மகளும் தத்தம் திருமணத்திற்கு முன்னர், இந்தத் திட்டத்தை வகுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், குடும்பம் நடத்தும்போது அதனை அமல் படுத்த வேண்டும். “நான் திட்டம் தீட்டித்தான்


ஜன்மம்

 

 பெரும்பாலான தற்கொலை முயற்சிகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன” என்கிறார் உளவியல் வல்லுநர் ஒருவர். சின்ன சின்ன பிரச்னைகளுக்கும் “இனிமேல் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாது’ ‘நான் எதுக்காக இனியும் வாழணும்? ” என்று நினைப்பவர் உண்டு. உளர்றான் அந்த உளவியல் வல்லுனன்! எனக்கிருக்கும் பிரச்சனைகள் யாருக்கும் கிடையாது என்பதில் எனக்கு ஒரு ஐயமும் இல்லை. வீட்டில் மனைவிக்கு உடல்நல பிரச்னை, மகன் மன நல பிரச்னை, எனக்கு நோய் நொடி பிரச்னை, இதை விட பிரச்னைகள்


பகுத்தறிவின் சிறப்பு – ஒரு பக்க கதை

 

 ‘அம்மா… எங்க கிளம்பிக் கிட்டு இருக்கீங்க’ என்று நறுமுகை கேட்க, ‘மாலதி அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்கு பார்க்கப் போறேன்’ என்றார் அம்மா. ‘சரி, சீக்கிரமா வந்துருங்க..’. ‘வந்தர்றேன் ஹீட்டர் போட்டு வை வந்ததும் குளிக்கணும்’. ‘குழந்தையைத் தான பார்க்கப் போறீங்க அதுக்கு எதுக்கு வந்து குளிக்கவேண்டும்..?’ என்று கேள்வி கேட்டாள் நறுமுகை. ‘அதெல்லாம் தீட்டு.., உனக்குப் புரியாது.’ என்றார் அம்மா. நறுமுகை சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். ‘ம்மா… முறையாகப் பார்த்தால் குழந்தையைப் பார்க்கப் போறவங்க