கதைத்தொகுப்பு: சரித்திர கதை

143 கதைகள் கிடைத்துள்ளன.

காக்கையைப் பாடின பெண்

 

 நல்லதங்கை என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? பழைய காலத்தில் அப்படி ஒரு நாடகம் நடக்கும். நல்லதம்பி, நல்லண்ணன் என்ற பெயர்களேப்போல நல்ல என்ற சிறப்போடு கூடிய பெயர் நல்லதங்கை. மிகவும் பழங்காலத்திலும் நல்ல தங்கை என்ற பெயர் இருcதுவந்தது. அதே பெயர் இல்லா விட்டாலும் அந்த அர்த்தத்தை உடைய பெயர் இருந்தது. செள்ளை என்பது தங்கைக்குப் பெயர். இப்போது அது தமிழில் மறைந்து போய்விட்டது. செல்லலு என்று தங்கையைக் குறிக்கத் தெலுங்கில் ஒரு சொல் வழங்குகிறது. நச்செள்ளை


அரைகுறைக் கதைகள்-1

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிநேகிதன் பலராமன் : அரை குறைக் கதைகளா? யாருக்கு என்ன உபயோகம் ? கொனஷ்டை : இப்பொழுது அரைகுறையாய் இல்லை. புராணங்களில் சரியாய் விவரிக்காமலும் முடிக்காமலும் விட்டுவிட்டார்கள். அவைகளை – பலராமன் : அவைகளை நீ புராணத்திற்குச் சமா னமாகப் பூர்த்தி செய்துவிட்டாய் போலும்! கொனஷ்டை : போயும் போயும் புராணத்திற் குச் சமானமாய்த்தானா இருக்கவேண்டும்? அதற்கு மேலாகவே- பலராமன் : என்ன


கபிலர்

 

 இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரான் மலை என்று ஒரு மலை இருக்கிறது. அதற்கு மிகப் பழைய காலத்தில் பறம்பு மலை என்று பேர். அங்கே பாரி என்ற சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். இப்போது ஜமீன்தார் என்று சொல்லுகிறோமே, அவர்களைப் போன்றவர்களே அந்தச் சிற்றரசர்கள். அந்தக் காலத்தில் அவர்களை வேளிர் என்று சொல்வார்கள். மகள் என்றால் ஒருத்தியையும் மகளிர் என்றால் பலரையும் குறிக்கும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? அந்த மாதிரியான பெயர்களே வேள், வேளிர் என்பவையும். பாரி


ராஜேந்திரன் கனவு

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று மாலை. சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன், தன் புதிய தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்து அரண் மனையின் உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பக்கத்தில் அவருடைய சகோதரி வேங்கிநாட்டு அரசி, குத்தவை, உட்கார்ந்து கொண்டு சக்கரவர்த்தியின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜேந்திர சோழனுக்கு அப்பொழுது வயது சுமார் ஐம்பத்தைந் திருக்கும். குந்தவைக்கு நாற்பதிருக்கலாம். மன்னன், ராஜ்ய விவகாரங் களை இளவரசன்


தாயின் பிரார்த்தனை

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அவன் மனித இயல்புடையவன் தானே ? மனிதர்களுக்குள்ள குறை பாடுகளும் அவனுக்கு உண்டு. கட்டிளங்காளை ; செல்வத்தாலும் பிற பொருள்களாலும் குறைவற்றவன். எல்லாவற்றுக்கும் மேலாக் அவனுக்கு அன்பே உருவாகிய காதலி கிடைத்திருக்கிறாள். வேறு என்ன வேண்டும்? இவ்வளவு வளம் இருந்தும், நித்தம் பாலுணவை உண்பவன் ஒருவன் இடையிலே சிறிது காடியை விரும்பினது போலாயிற்று அச்செயல். அவனுக்கு ஒரு கூட்டாளி


ஊர்வசியின் சாபம்

 

 (1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) [இந்தச் சம்பவத்தைக் குறித்து மற்றவர்களுக்குத் தெரியக் கிடைக்காத சில விவரங்கள் எனக்கு எங் ஙனம் கிடைத்தன என்று தெரிவிக்க க எனக்கு அதி காரம் இல்லை. ஆனால் இதற்கு முன் வெளியிடப்பட்ட ''ஊர்வசி" என்கிற சரித்திரத்தைப் படித்தவர்கள் அதிலிருந்து தங்கள் இஷ்டம்போல ஊகித்துக்கொள்வதில் எனக்கு ஆக்ஷேபம் இல்லை. கொனஷ்டை.] முதற் காட்சி காலம்:- பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருக்கையில், கௌரவர்களுடன் இனிச் செய்யவேண்டிய யுத்தத்திற்காக


உழுபடையும் பொருபடையும்

 

 (1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அரசன் மிகவும் நல்லவன். ஆனால் அமைச்சர்கள் நாட்டு நலனைக் கருதுபவர்களாக இல்லை. அவனுடைய அருள் உள்ளத்தை நாமெல்லாம் நன்கு அறிந்திருக்கிறோம். பஞ்சம் வந்த காலத்தில் அரச பண்டாரத்தில் பொன் கடன் பெற்ருேம். நம்முடைய நிலங்களை வளப்படுத்தும் பொருட்டே அப்படிப் பெற்றோம். அந்தப் பஞ்சத்தின் விளைவு இன்னும் முற்றும் நீங்கினபாடில்லை. கடனைக் கொடுப்பதென்ருல் நிலத்தையே கொடுத்துவிட வேண்டியதுதான்” என்று குடிகள் தம்முள் பேசிக்கொண்டார்கள். “அரசன்


வீழ்ச்சி

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவராகச் சரண் புகுந்த அந்தக் காடு அவருக்கு ஒரு கூடாகப் போய் விட்டது. பிரதாப்சிங் கூட்டில் அடைபட்ட சிங்கம்போல அதில் இங்கும் அங்குமாக இடைவிடாமல் நடந்துகொண்டிருந்தார். வெறி பிடித்தது போன்ற அந்த நடையே அவர் மனம் முற்றும் வேறு எதிலோ ஆழ்ந் திருந்ததென்பதை விளக்கிற்று. இருட்டிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. ஜகமே வாயடைபட்டது போல திடீரென்று மௌனமாகிவிட்டது. சுவர்க்கோழிகள் மட்டும்தான் இடைவிடாமல் கத்திக்


தமிழ் மங்கை

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பூசுந்தரி, தென்னவன் தேவியாகிய நீயா அந்தப் பெண்ணைப் பார்க்க வில்லிப்புத்தூர் போவது?’ ‘மன்னவன் மதுருதனன் தேவியைப் பார்க்கப் போவது உமது தோரணைக்குக் குறைவா?’ ‘அவள் யார்? அப்படி நீ போய்ப் பார்க்கும்படி அவளிடம் என்ன விசேஷம்?’ ‘வேந்தே,நீங்களே இப்படிக் கேட்கலாமா? வைணவத்தை உமக்குப் போதித்து தத்துவார்த்தத்தை விளக்கிய விஷ்ணு சித்தன் கண்டெடுத்து வளர்க்கும் கன்னி கோதை. அவள் மற்றவர் போன்ற பிறவி அல்ல.


அனார்கலி

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அக்பர் பாதுஷாவின் மகனாகப் பிறந்த பிறகு நீ உன் இஷ்டப்படி நடப்பதற்கு இடமில்லை.’ ‘சக்கரவர்த்தியின் மகன் என்றால் எனக்கு உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா?. ‘ராஜாங்கத்தின் நிபந்தனைகளுக்குட்பட்டுதான் அந்த உணர்ச்சி களுக்கு இடமுண்டு.’ ‘ராஜகுமாரனாகப் பிறந்ததற்காக நான் மனிதன் என்ற சுதந்திரத்தை இழக்க முடியுமா?’ ‘ஸலீம், நீ விஷயத்தை ஆலோசனை செய்து பார்க்காமல் பேசுகிறாய். ஒரு சாம்ராஜ்யத்திற்குப் பலமான அஸ்திவாரம் போட்டுக் கட்டடம் ஏற்றிவரும்