கதைத்தொகுப்பு: சமுகநீதி

4012 கதைகள் கிடைத்துள்ளன.

கலியன் மதவு

 

 அத்தியாயம் 7 – 8 | அத்தியாயம் 9 – 10 அத்தியாயம் – 9 “குடலைப் பிரட்டும் துர்நாற்றம். பொறுத்துக் கொள்ள முடியாமல் மூக்கைத் துணியால் மூடிக்கொண்டு பிரேதம் சுமந்தனர். வழக்கமான திக்கில்தான் இறுதியாத்திரை நகர்ந்தது. கண்ணில் விளக்கெண்ணை கொட்டிக்கொண்டு கூர்ந்து கவனித்துக்கொண்டே முன்னே போனார் மாதய்யா. முத்தனூர் எல்லையில் ஜனக்கூட்டம் சற்றே அதிகமாய் இருப்பதாக உணர்ந்தார் மாதய்யா. பிரேதத்தை முன்னே விட்டுப் பின்னே சென்றார். அந்தனூர் எல்லை முடிந்து , முத்தனூர் எல்லைத் தொடக்கத்தில்


நடுச்சாமத்தில் ஆட்டோ

 

 தபால்காரர் கூப்பிடுவது கூட தெரியாமல் திண்ணையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் வீதியையே பார்த்துக்கொண்டிருந்தான் ரவி. “தம்பி ரவி…” பலமுறை கூப்பிட்டதற்கு பிறகு சிந்தனை தெளிந்தவனாய் “வாங்க சார்! உங்களத்தான்…” சொல்லி முடிப்பதற்குள் “பட்ட பகல்லேயே கனவா இந்தாப்பா லெட்ரு கொடுத்ததும் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு புறப்பட்டார்”. ஆவலோடு பிரித்தான். “எங்க ஊர் திருவிழா வருகிற 18, 19 தேதியில் அவசியம் பதினேழாந்தேதியே வந்துரு.” தன் நண்பன் சோலையனிடமிருந்து. இது தொலைபேசி வசதி குறைவாக இருந்த காலம்… “நண்பனோட ஊருக்கு


சொல்லப்படாத கதை

 

 நெடுநாட்களாகச் சொல்லப்படாத கதையொன்று நினைவின் புதர்களுக்குள் சிக்கிக்கிடந்தது. கதைசொல்லி பதவிக்கு ஆசைப்பட்ட ஒருவன் அப்புதர்களுக்குள் கைகள் விட்டுத் துழாவியபடி அக்கதையைத் தேடிக்கொண்டேயிருந்தான். கைகளில் நினைவுப்புதரின் இழைகள் சிக்கிக் கொண்டனவேயன்றி சொல்லப்படாத கதையின் நுனி அகப்படவேயில்லை. ஆனமட்டும் முயன்று பார்த்தபின், நினைவின் இழைளை அறுத்து அதற்குள் சிக்கிக்கிடந்த கதையைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு கிளம்பினான். எண்ணற்றவர் பயணம் போன பாதை இவன் செல்லும் போது மட்டும் ஆளரவமின்றி இருந்தது. துணைக்கு யாருமில்லாதிருப்பினும், வழிகாட்ட எவரும் கூட வராதிருப்பினும் கூட, அந்தப்


அழகு!

 

 ‘சக மனிதர்களை பணம்,உடல் அழகு,பதவி,படிப்பு போன்றவற்றை வைத்து மதிக்காமல் குணத்தை வைத்து மதிக்க வேண்டும்’ என நினைப்பான் அழகு. அழகு என்ற பெயருக்கேற்ப குணத்தால் அழகானவன். உடல் அழகு குறைவு தான். உடலிலும் ஒரு கால் நடக்க முடியாதது ஒரு குறைதான்! சிலருக்கு கோடீஸ்வரன் என பெயரிருக்கும். வறுமையில் வாடுவர். பெயரிலாவது அழகு இருக்கட்டும் என்ற அதீத ஆசையால் அம்மா வைத்த பெயராக இருக்கலாம் என நினைப்பான். நினைவு தெரிவதற்க்குள் அம்மா மறைந்து விட,அப்பா மறுமணம் செய்து


கண்ணாடியின் பின் பக்கம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனித வர்க்கம் பரபரப்பான வாழ்க் கையை மேற்கொண்டு விட்டது. இதுவே கலியுகத்தின் முடிவு போலத் தோன்றுகிறது. அடிப்படைப் பண்புகள், அடிப்படை நியாயங்கள் எல்லாம் தொட்டுக்கொள், துடைத்துக்கொள் என்றாகிவிட்டன. தாய்மை தன் பரிபூரண ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதே குறைந்து விட்டது. கற்பு, அடக்கம். இவையெல்லாம் இலக்கியங்களோடு நின்றுவிட்டன. ஹோட்டல்களிலும், தெருக்களிலும் ஆண்களும் பெண்களும் இனத் தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வாகனங்களின் புகை


மலைப்பாதை

 

 மலை உச்சியில் அமைந்திருக்கும் ஒரு நகருக்கு செல்லும் மலைப் பாதையில் ஒரு இடத்தில் மலையை சுற்றி வரும் பாதையை அதன் அருகில் இருக்கும் ஊரின் வழியாக குறுக்கு பாதை போட்டால் மலையை சுற்றி செல்லும் தொல்லை இருக்காது, தூரமும் குறையும், எரிபொருளும் மிச்சமாகும் என்று முடிவு செய்த “சாலை போக்குவரத்து துறை” அந்த குறுக்கு பாதை போடும் இடத்தை அளப்பதற்கு அவர்கள் துறையை சேர்ந்த சில அதிகாரிகளை அனுப்பி வைத்தது. அந்த இடம் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டது,


கலியன் மதவு

 

 அத்தியாயம் 5 – 6 | அத்தியாயம் 7 – 8 அத்தியாயம் – 7 “நெடிய உருவம். இரட்டை நாடி. தொப்புளுக்குக் கீழ் மடித்துக் கட்டிய லுங்கி… லுங்கியை இடுப்போடு அழுத்திப் பிடித்துக் கொள்ளவும், காசு பணம் வைத்துக் கொள்ளவும் வசதியாகத் துருத்திக்கொண்டுள்ள, பர்ஸ்ஸுடன் கூடிய, சாயம் போன பச்சை கலர் பெல்ட். கழுத்தில் மாலை போலத் தொங்கும் கலர் கலராய்க் கட்டமிட்டத் துண்டு… அய்யனார் சிலை போல வஜ்ரமாய் இறுகிய அகலமான மார்பு… வயிற்றை


அவள்

 

 தான் ஊற்றிக்கொண்டு வந்த இஞ்சித் தேநீரை சுவைத்துப் பருகியபடி நல்லா இருக்கா? நான் ஊத்தின பிளேன் ரீ ? என்று தன்னுடைய பாணியில் கேட்ட தாரகையின் முன்னே வெற்றுத் தேநீர்க் கோப்பையை வைத்தேன். ஓம் நல்லா இருந்திச்சு. இந்த பிளேன் ரீய தந்த கரங்களுக்கு பரிசா நீங்க கேட்ட கதைய சொல்லலாம் எண்டு இருக்கிறன். பதில் சொல்லியபடி தாரகையின் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாட்களாகக் கதைகேட்டுத் தொல்லைப்டுத்திய தாரகையின் முகம் பிரகாசமாகியது. சரி அப்ப சொல்லுங்க பிளீஸ்


கலியன் மதவு

 

 அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6 அத்தியாயம் – 5 “மாதய்யாவை விட குந்தலாம்பாள் அரை அடி உயரக் குறைவு… உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு. மாநிறம். மஞ்சள் பூசிப் பூசிக் கலை பொருந்திய முகம். நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் அளவாக இட்டுக் கொண்டிருக்கும் அரக்குக் கலர் குங்குமம். காதுகளில் கச்சிதமாக ஜொலிக்கும் கல் தோடு. மூக்கில் மின்னும் எட்டுக் கல் பேசரி. உழைத்து உழைத்து உரமேறிய புஜங்கள். பேச்சில் பிசிர்


நெகிழ்ந்து போன வைகை எக்ஸ்பிரஸ்

 

 (2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழி அனுப்ப வந்தவர்களின் கூச்சல் அடங்கி அப்போது தான் வைகை எக்ஸ்பிரஸ் கொஞ்சம் அமைதியாகி வேகம் பிடித்தது. பயணிகள் தங்களைச் சுற்றி உள்ள முகங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு நேரம் இருந்த புழுக்கம் போய் முகத்தில் பட்ட காற்றை உணர்ந்து கொஞ்சம் புன்சிரிப்பை செலவு செய்தார்கள். நாலாவது பெட்டியில் நாப்பத்து ஐந்தாம் இருக்கையில் இருந்த இளவயசுக்காரன் காலை நன்றாக அகட்டியவாறு