கதைத்தொகுப்பு: ஒரு பக்க கதை

557 கதைகள் கிடைத்துள்ளன.

நடத்துனர் – ஒரு பக்க கதை

 

 (2013 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேருந்து நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. படிகட்டுகளில் பயணிகள் தொங்கிக் கொண்டிருந்தனர். நடத்துனரின் வேலை மிகப் பரிதாபமாக இருந்தது. எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு சரியான சில்லரை தந்து எந்த ஒரு நிறுத்தத்திலும் விடாமல் வண்டியை நிறுத்தி ஏறி இறங்குகிறவர்களுக்கு வசதி செய்து கொடுக்கிறார். அவ்வப்பொழுது மக்களிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள். செக்கிங் வந்தால் மாட்டிக் கொள்வீர்கள் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.


சமயோஜித புத்திக்காரி – ஒரு பக்க கதை

 

 தாமரையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் இன்று வருவதாக தரகரிடமிருந்து காமாட்சிக்கு தகவல் வந்தது. அதோடு பிள்ளை வீட்டில் பரம்பரையாக ஒரு பழக்கம் இருப்பதைப் பற்றியும் அவர் சொன்னார். தங்கள் வீட்டிற்கு வாழ வரப்போகும் பெண்ணின் கைமணத்தை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ருசிப்பார்த்த பின்பே மற்ற பேச்சுகளை ஆரம்பிப்பார்கள் என்று தரகர் சொல்லியிருந்தார். ‘ஏய் பூங்கோதை இன்னைக்கு வீட்டுக்கு விருந்தாளிங்க வராங்க சந்தைக்குப் போய் மீனு வாங்கிட்டு வாடி’. பூங்கோதைக்கும் காமாட்சியின் மகள் தாமரைக்கும் ஒரே வயதுதான். பூங்கோதைக்கு


பகுத்தறிவின் சிறப்பு – ஒரு பக்க கதை

 

 ‘அம்மா… எங்க கிளம்பிக் கிட்டு இருக்கீங்க’ என்று நறுமுகை கேட்க, ‘மாலதி அக்காவுக்குக் குழந்தை பிறந்திருக்கு பார்க்கப் போறேன்’ என்றார் அம்மா. ‘சரி, சீக்கிரமா வந்துருங்க..’. ‘வந்தர்றேன் ஹீட்டர் போட்டு வை வந்ததும் குளிக்கணும்’. ‘குழந்தையைத் தான பார்க்கப் போறீங்க அதுக்கு எதுக்கு வந்து குளிக்கவேண்டும்..?’ என்று கேள்வி கேட்டாள் நறுமுகை. ‘அதெல்லாம் தீட்டு.., உனக்குப் புரியாது.’ என்றார் அம்மா. நறுமுகை சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். ‘ம்மா… முறையாகப் பார்த்தால் குழந்தையைப் பார்க்கப் போறவங்க


இதுதான் சரி – ஒரு பக்க கதை

 

 (2016 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என் பையன் ஒன்பதாவது படிக்கறான் இல்லே… முழுப் பரீட்சை அவன் சரியா செய்யலே. அந்த ஹெட்மாஸ்டர் உனக்கு ரொம்ப தெரிஞ்சவர் தானே. கொஞ்சம் பாஸ் போட்ற சொல்லுப்பா.” என் நண்பன் ரவி என்னிடம் கேட்டான். “அது சரி… நீ வீட்டிலே அவனை கவனிக்கிறதில்லையா?… டியூஷன் எல்லாம் வச்சிருக்கக் கூடாது?” “எல்லாம். வச்சேன். திருட்டுப் பய… ஊர் சுத்தறான். ஒழுங்கா படிச்சாத்தானே!” “அதை கவனிக்காம


மனைவி – ஒரு பக்க கதை

 

 அந்த முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்துகொண்டிருந்தார். எனது டூவீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. “என்னங்க ஆச்சு..?” – கேட்டேன். “வேகமா வந்த ஆட்டோ சக்கரம் கால்ல ஏறிடுச்சு தம்பி…” “வாங்க… எனக்குத் தெரிஞ்ச டாக்டர் பக்கத்துலதான் இருக்கார். கட்டு போட்டு ரத்தம் கசியறதை முதல்ல நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்ஷனும் போட்டுக்கலாம்!” – என்றேன். வேண்டாம் என்று விலகியவரை விடாப்பிடியாக அழைத்துப் போனேன். எல்லாம்


கன்ஸர்வேடிவ் – ஒரு பக்க கதை

 

 ‘இந்த அல்ட்ரா மாடர்ன் பெண் யாரு?’ அலுவலகத்தில் தன் முன் மிடுக்காக நின்றவளைப் பார்த்துக் குழம்பினான் சத்யம். “சார்.. ஐம் ரேணுகா….” என்று ஆன் செய்த ‘டாப்’பை அவனிடம் கொடுத்தாள். கல்யாணத்தரகர் வாட்ஸ்ஸப்பிய அதே புகைப்படம். சத்யம் மேலும் குழம்பினான். “உங்க விருப்பப்படி பட்டுச்சேலை, க்ளோஸ்டு ஜாக்கெட், பின்னிய கூந்தல், மல்லிகைச்சரம், தோடு, மூக்குத்தி, வளையல்னு. போட்டோஷாப் செய்த என் போட்டோதான்..” சத்யம் அதிர்ந்தான். “மிஸ்டர் சத்யம்.. பெண்பார்க்க வரும்போது இந்த போட்டோஷாப் பெண்ணா நான் மாறணுமாம்..அம்மாவோட


கவலை – ஒரு பக்க கதை

 

 “ஏண்டீ வைஷ்ணவீ சோகமா இருக்கே…?” கேட்டாள் தோழி உரிமையுடன். வைஷ்ணவியின் கண்கள் கலங்கின. “சொல்லுடீ..! பிரச்சனையைச் சொன்னாத்தானே தீர்க்கலாம்..?”. “என் புருஷன் விக்னேஷ் கோபிச்சிக்கிட்டு எங்கேயோ போயிட்டாருடீ…?”- கண்ணீர் பெருகியது. “கவலையை விடு..!” என்ற தோழி, அரும்பாடு பட்டு, துப்பறிந்து நேரில் சந்தித்து விக்னேஷைச் சமாதானப் படுத்தி மீண்டும் வைஷ்ணவியோடு சேர்த்து வைத்தாள். மறுநாள்… விக்னேஷ் போர்டிகோ ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்தான். வீட்டினுள் சோகமே உருவெடுத்த நிலையில் வைஷ்ணவி. “பிரிஞ்சி போன புருஷன்தான் திரும்பி வந்தாச்சே இப்ப


மாற்றம் – ஒரு பக்க கதை

 

 மகாத்மா காந்தி சிலை கம்பீரமாக நின்றது. சிலைக்கு எதிரே ஒரு கடை உதயமானது. திறப்பு விழா அன்றுதான் தெரிந்தது அது ஒரு மதுக்கடை என்று. மது அருந்திவிட்டு மகாத்மா காந்தி முன் களித்தனர் மதுப் பிரியர்கள். முகம் சுழித்தனர் ஊரார். கலெக்டருக்கு மனு போட்டார்கள். அரசியல் செல்வாக்கு கலெக்டரின் கைகளைக் கட்டிப் போட்டது. மதுக் கடையை அகற்ற முடியாது என்பதை உணர்ந்தார் கலெக்டர். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகாத்மா காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றினார். ஏதோ


அன்புள்ள அப்பா – ஒரு பக்க கதை

 

 திருவிழாவில் ஜேஜே என்ற திரளான கூட்டம். திரும்பிய இடமெல்லாம் மனித தலைகள். அம்மா,நான்,தங்கச்சி உட்டட எல்லாரையும் அரவணைத்து கூட்டிக்கொண்டு வந்தார் அப்பா. பாத்து சூதானமா என்னையே ஃபாலோ பண்ணிட்டே வாங்க. கூட்டத்தில மிஸ் ஆயிடுவீங்க. பின்னாடி திரும்பி பாத்து பாத்து போய்கொண்டே இருந்தார். கூட்டம் குறைவாக இருந்த ஒரு இடத்தில் எங்களை நிற்க வைத்துவிட்டு திரும்பிய சமயம், அங்கு ஒரு இளைஞன் வம்பு செய்தான் தங்கையிடம். அவ்வளவுதான் அந்த இளைஞனை துவம்சம் செய்தார் அப்பா. அப்படி பார்த்ததில்லை


அலட்சியம் – ஒரு பக்க கதை

 

 சுந்தரேசன் tvs50 யை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றார். இவருக்கு முன்னால் பத்து பேர். என்ன பெரியவரே இந்த வயசான காலத்துல நேர்ல வந்துதான் கரன்ட் பில் கட்டணுமா? EB க்குன்னு ஒரு App இருக்கு, அதுல கட்லாமில்ல எனக் கேட்டார் ஒரு இளைஞர். நானும் wife உம் தான். Pension credit ஆன உடனே வழக்கமா வந்து கட்டிட்டு போயிடுவேன். இப்பெல்லாம் எங்க போனாலும் digital payment தான். கைல பணம் கொண்டு போறதே இல்ல. ஈசியா