புலிக்குப் பிறந்தது!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 80

வீட்டில் செடி செத்தைகள் பெய்த மழையால் புதராய் வளர்ந்திருக்க, அவ்வப்போது பாம்புகள் கண்ணில் தென்பட்டன.
என்ன செய்வது? பாம்புகளை ஒரேஅறையில் தலைகுப்புற விழ வைக்கிற பூனை ஒன்றை வளர்த்தால் என்ன..?
மனசுக்குள் தோன்ற, மயில்சாமி மார்க்கெட்டில் ஒரு பூனை வாங்கி வந்தான்.
பாவம்! அவன் ரொம்ப பயந்த ஸ்வாபம் உள்ளவன். பூனை பார்க்க, புலி மாதிரி இருந்தது. அதன் நடையும் பார்வையும் அச்சுறுத்தின.
வீடு முழுக்க அலைய விட்டான்.
என்றாவது எங்காவது ஒருநாள்.. ஒரு பாம்பை ஒரே அறையில் பளீரென அறைந்து கொன்றுவிடாதா? எதிர் பார்த்துக் காத்திருக்க,
அந்த நாளும் வந்தது.
பாம்புநெருங்க, பளீரென அறையும் என்று பார்த்தால் படீரென பதறிக் குதித்துத் தாவி, மயில்சாமி மடியில் அலறி அமர்ந்து பூனை.
புலிக்கே பிறந்திருந்தாலும் பூனை…வளர்கிற இடம் வனமல்ல, மயில்சாமி மனம்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
