சங்கரனும் கங்கையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 4,103 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்‌ ஒரு காலத்தில்‌ ஓர்‌ அரசனும்‌ அரசியும்‌ இருந்தனர்‌. தங்களுக்குக குழந்தை இல்லையே என்று அவர்கள்‌ கவலைப்பட்டனர்‌. ஒரு வனதேதேவதையிடம்‌ சென்று பிள்ளைவரம்‌ கேட்டனர்.

‘குழந்தை எதற்கு? குழந்தைகளால்‌ என்ன பயன்‌? குழந்தைகளால்‌ உஙகளுக்குத்‌ தொல்லைதான்‌ ஏற்படும்‌’ என்று வனதேவதை கூறிற்று.

அரசி கெஞ்சிக்‌ கெஞ்சிக்‌ கேட்டாள்‌. அரசன்‌ குழந்தைகளின்‌ அருமையைப்‌ பற்றி அந்தத்‌ தேவதையிடம்‌ எடுத்துக்‌ கூறினான்‌. அந்த முரட்டுத்தேவதைக்கு எரிச்சல்‌ உண்டாயிற்று. ஓரே நாளில்‌ ஏழு ஆண்‌ குழந்தைகளைக்‌ கொண்டு வந்து அரண்மனையில்‌ சேர்த்தது.

‘நமக்கு இத்தனை குழந்தைகள்‌ வேண்டுமா?’ என்று அரசி சற்றுத் தயங்கினாள்‌.

தேவதைக்குக்‌ கோபம்‌ வந்தது, ‘நீதானே குழந்தைகள்‌ வேண்டும்‌ என்றாய்‌. குழந்தைகள்‌ வந்துவிட்டன. வேண்டுமானால்‌ அதை இரண்டுமடங்கு ஆக்கிவிடுகிறேன்‌’ என்றாள்‌. இன்னும்‌ ஏழு ஆண்‌ குழந்தைகள்‌ வந்து சேர்‌ந்தன.

குழந்தைகள்‌ எல்லாம்‌ சேர்ந்து குதிஆட்டம்‌ போட்டன. ஓர கூச்சல்‌. அரசியால்‌ பதினான்கு குழந்தைகளையும்‌ ஒன்றாக வைத்துப்‌ பார்த்துக்கொள்ள முடியவில்லை. அவளுக்குப்‌ போதும்‌ போதும்‌ என்று ஆகிவிட்டது.

குழந்கைகள்‌ வளர்ந்து ஓடி விளையாடின. அவர்களை அடக்கி வைக்க அரசியால்‌ முடியவில்லை. அரண்மனை வாசலுக்கு அப்பாலும்‌ சென்று. விளையாடத் தொடங்கின. அரண்மனையிலிருக்கும்‌ குழந்தைகள்‌ குடிசையில்‌ இருக்கும்‌ குழந்தைகளுடன்‌ போய் விளையாடிக்‌ கொண்டு இருந்தன.

கடைசி இளவரசனுடைய பெயர்‌ சங்கரன்‌. அரண்மனையின்‌ அருகில்‌ ஓர்‌ ஏழைக்‌ குடியானவன்‌ வசித்து வந்தான்‌. குடியானவனுடைய மகள்‌ கங்கை மிகவும்‌ அழகாக இருந்தாள்‌. சங்கரன்‌ கங்கையுடன்‌ விளையாடுவது வழக்கம்‌.

குடியானவனுக்கு வயதாகி விட்‌டது. மகளுக்குத்‌ திருமணம்‌ செய்து விடவேண்டும்‌ என்று முடிவு செய்தான்‌. ஒருநாள்‌ அவனிடம்‌ ஒரு நல்ல தேவதை வந்தது.

“ஏன்‌ வருத்தமாக இருக்‌கிறாய்‌?’ என்று கேட்டது.

‘எனக்கு வயதாகிவிட்டது. உடம்‌பும்‌ சரி இல்லை. நான்‌ இறந்து போய்‌ விட்டால்‌ என்‌ மகளுக்கு யாரும்‌ துணை இல்லை. என்ன செய்வது?’ என்று வருந்‌தினான்‌.

“என்னிடம்‌ ஓப்பித்து விடு, நான்‌ பார்த்துக்கொள்கிறேன்‌’ என்று தேவதை கூறிற்று.

மறுநாள் குடியானவன்‌ கங்கைக்‌ குப்‌ புதிய பாவாடை சட்டை வாங்கிக்‌ கொடுத்தான். அவளைத் தேவதையிடம்‌ அழைத்துச்‌ சென்றான்‌.

தேவதை கங்கையை அன்புடன்‌ வரவேற்றது. கங்கை தேவதையின்‌ வீட்டில்‌ வளர்ந்து வந்தாள்‌. மிகவும்‌ இன்பமாகக்‌ காலம்‌ கழித்து வந்தாள்‌. சில நாட்களில்‌ அவளுடைய தந்தையும்‌: இறந்து விட்டார்‌. கங்கை வளர்ந்து பெரிய பெண்‌ ஆனாள்‌.

அரண்மனயிலிருந்த இளவரசர்கள்‌ பெரியவாகள்‌ ஆனபிறகு ஓவ்வொருவராக அரண்மனையை விட்டு வெளியேறினர்‌. சிலர்‌ பணம்‌ தேடுவதற்குக்‌ கடல்‌ கடந்து சென்றனர்‌. இன்னும்‌ சிலர் சிறிய ஊர்களைப்பிடித்து அரசாட்சி செய்தனர்‌. மற்றும்‌ சிலர் அயல்‌ நாடுகளுக்குச்‌ சென்று அங்குள்ள இளவரசிகளை மணம்‌ செய்து கொண்‌டனர்‌. கடைசி மகன்‌ சங்கரன்‌ மட்டும்‌ அரண்மனையிலேயே இருந்தான்‌.

ஓருநாள்‌ கெட்ட தேவதை ஒன்று அரண்மனைக்கு வந்தது. அரசனும்‌ அரசியும்‌ சங்கரனிடம்‌ கொஞ்சி விளையாடிக்கொண்டு இருந்தனர்‌.

‘இன்னுமா கொஞ்ச வேண்டும்‌. அவன்‌ சிறிய குழந்தையா? ஊரெல் லாம்‌ சுற்றிப்பார்த்தால்‌ அவனுக்குக்‌ கொஞ்சம்‌ அறிவு வளரும்‌’ என்று தேவதை சொல்லிற்று.

‘அவனை எப்படித்‌ தனியாக அனுப்‌புவது? அவனுக்குப்‌ பழக்கம்‌ இல்லையே’ என்று அரசி கேட்டாள்‌.

‘எல்லாம்‌ உங்களுடைய தவறு, வீண்பெருமை. அவனை ஒரு சோம்பேறி யாக மாற்றிவிட்டீர்கள்‌’, என்று தேவதை கூறிற்று, சங்கரனுக்குச்‌ சிரிப்பு வந்துவிட்டது. கையினால்‌ வாயை மூடிக்‌ கொண்டான்‌.

‘நான்‌ வெளியூருக்குப்‌ போக முடியாது. இந்தத்‌ தேவதைக்கு வேறு வேலை கிடையாது போலிருக்கிறது’ என்று சங்கரன்‌ சொன்னான்‌.

‘போதும்‌; வாயை மூடிக்கொள்‌’ என்று அந்தப்‌ பொல்லாத தேவதை கூறிற்று. ‘உன்னைப்‌ பேசமுடியாமல்‌ ஆக்கிவிடுகிறேன்‌’ என்று மந்திரக்‌ கோலால்‌ அவனைக்‌ தீண்டிற்று. உடனே சங்கரன்‌ ஒரு குருவியாக மாறிவிட்டான்‌.

அரசனும்‌ அரசியும்‌ மிகவும்‌ வருத்தமடைந்தனர்‌. குருவியை எடுத்து முத்தம்‌ கொடுத்தனர்‌. தேவதைக்கு அது கூடப்‌ பிடிக்கவில்லை.

‘பறநது ஓடிப் போய்விடு, நீ எங்கே வேண்டுமானாலும்‌ போகலாம்‌’ என்றாள்‌.

நல்லதேவதை அரண்மனை வாசலில்‌ எட்டிப்‌ பார்த்தது. அந்தக குருவியைப்‌ பிடித்துக்‌ கூட்டில்‌ அடைத்து கங்கை இருக்கும்‌ இடத்திற்கு எடுத்துச்‌ சென்றது.

‘இந்தக்‌ குருவியை நன்றாகப்‌ பார்ததுக்‌ கொள்ள வேண்டும்‌. கூண்டைக்‌ திறந்தால்‌ பறந்து ஓடி விடும்‌. ஏமாந்து விடாதே’ என்று எச்சரிக்கை செய்தது.

சங்கரன்‌ குருவியாக மாறியதால்‌ வருத்தமுற்றான்‌. ஆனால்‌ கங்கையுடன்‌ வந்து சேர்ந்ததால்‌ பெருமகிழ்ச்சி அடைந்தான்‌.

குருவி கூண்டைவிட்டு வெளியில்‌ வருவதற்கு முயற்சி செய்தது. இறக்‌கைகளை அடித்துக்கொண்டது. கங்கையின்‌ அருகில்‌ போகவேண்டும்‌ என்று ஆசைப்பட்டது. கங்கைக்கும்‌ குருவியின்‌ மேல்‌ ஆசைதான்‌. ஆனால்‌ தன்‌ விளையாட்டுத்‌ தோழன்‌ குருவியாக மாறினது அவளுக்குத்‌ தெரியாது.

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்‌’ என்று அதனிடம்‌ கொஞ்சினாள்‌. தீனி போடலாம்‌ என்று எடுத்துக்‌ கொண்டு வந்தாள்‌. அதற்குள்‌ குருவி உறங்கி விட்டது.

நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது. அதை எழுப்புவதற்குக்‌ கூண்டைத்‌ தட்டினாள்‌. கூண்டின்‌ கதவைத்‌ திறந்து பார்த்தாள்‌. குருவி உறஙகிக்‌ கொண்டே இருநதது. மறுபடியும்‌ கதவை அடைத்து விட்டாள்‌.

‘உறங்கிக்‌ கொண்டிருக்கும்‌ பறவை எப்படி ஓடும்‌!’ என்று கதவைத்‌ திறந்து அதைக்‌ கையில்‌ எடுத்தாள்‌. உறங்குகிறதா அல்லது இறந்து விட்டதா என்று பார்த்தாள்‌. குருவி உடனே அவள் கையிலிருந்து பறந்து போயிற்று. நாறகாலியின்மேல்‌ அமர்ந்து கங்கையை அன்புடன்‌ பார்த்தது. அதைப்‌ பிடித்து விடலாம்‌ என்று கங்கை ஓடிவந்தாள்‌. குருவி தோட்டத்தின்‌ பக்கம்‌ பறந்து சென்றது. கீச்சுக்‌ கீச்சென்று கத்திக்‌ கொண்டு சுற்றிச்‌ சுற்றி வந்தது. ‘எங்கே என்னைப்‌ பிடி பார்க்கலாம்‌, பிடிபார்க்கலாம்‌’ என்று அமைப்பது போல்‌ இருந்தது.

கங்கை தோட்டத்திற்கு ஓடி வந்தாள்‌. குருவியை நல்ல வார்த்தை சொல்லித்‌ தந்திரமாக அழைத்துப்‌ பார்த்தாள்‌. அது வரவில்லை. தோட்‌டத்திற்கு வெளியில்‌ மெதுவாகப்‌ பறந்து போயிற்று. கங்கையும்‌ அதன்‌ பின்னால்‌ ஓடினாள்‌.

குருவி ஒரு காட்டிற்குள்‌ சென்றது. கங்கையும்‌ காட்டிற்குள்‌ புகுந்தாள்‌. குருவி ஓரு மரக்களைமேல்‌ உட்கார்ந்தது. உடனே அதன்‌  உருவம்‌ மாறியது.

குருவிக்குப்ப பதிலாக ஓர் அழகிய இளவரசன்‌ மரக்கிளையில்‌ அமர்ந்திருந்தான்‌. இளம்‌ வயதில்‌ தன்னுடன்‌ விளையாடிய சங்கரனே அங்கு வந்திருப்பது அவளுக்குத்‌ தெரிந்தது.

‘உண்மையில்‌ நீ சங்கரன்‌ தானா, ஏன்‌ என்னை விட்டுப்‌ பறந்து போகின்றாய்‌’ என்று அவனைக்‌ கேட்‌ டாள்‌.

‘ஏதோ சாபத்தினால்‌ நமக்குக்‌ கெடுதல்‌ ஏற்பட்டிருக்கிறது’ என்று சங்கான்‌ மரத்தை விட்டு இறங்கி வந்தான்‌.

இருவரும்‌ உல்லாசமாக நடந்து சென்றனர்‌. காட்டில்‌ கிடைத்த காய்‌ கனிகளைப்‌ பறித்துத்‌ தின்றனர்‌. தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைப்பற்றிப்‌ பேசிக்‌ கொண்டே நடந்தனர்‌.

இரவு வந்தது. ‘எங்கே போவது? வழிகூடத் தெரியவில்லையே’ என்று கங்கை புலம்பினாள்‌.

சற்றுத்‌ தூரத்தில்‌ விளக்கு வெளிச்‌சம்‌ தெரிந்தது. ‘மரத்தடியில்‌ உட்‌கார்ந்து இரு. நான்‌ போய்ப்‌ பார்த்து விட்டு வருகிறேன்‌’ என்று சங்கரன்‌ வெளிச்சம்‌ வரும்‌ திசையை நோக்கிச்‌ சென்றான்‌.

அங்கே ஓரு சிறிய வீடு இருந்துது. வாசற்படியில்‌. ஒரு கிழவி நின்று கொண்டிருந்‌தாள்‌.

‘நானும்‌ பக்கத்து வீட்டுப்‌ பெண்‌ ணும்‌ வந்திருக்கிறோம்‌. இரவில்‌ தங்குவதற்குக்‌ கொஞ்சம்‌ இடம்‌ வேண்டும்‌’ என்றான்‌.

கிழவி மேலும்‌ கீழும்‌ பார்த்தாள்‌. ‘சோம்பேறிப்‌ பையன்‌. வீட்டில்‌ சொல்‌லாமல்‌ வந்து விட்டாயா?’ என்று கேட்டாள்‌.

‘இல்லை இல்லை. வழிதப்பி வந்து விட்டோம்‌; காலையில்‌ வீடடிற்குப்‌ போய்விடுவோம்‌’ என்றான்‌. கங்கையின் அழுகுரல்‌ கேட்டது. உடனே சங்கரன்‌ அவள்‌ இருந்த இடத்திற்கு ஓடினான்‌. அகுற்குள்‌ நிலவும்‌ வந்துவிட்டது. யாரோ ஓருவன்‌ கங்கையைக்‌ தூக்கிக்‌ குதிரை மேல்‌ வைத்துக்‌ கொண்டு வேக மாய்ப்‌ போய்விட்டான்‌. சங்கரன்‌ துரத்திக்‌ கொண்டு ஓடினான்‌. குதிரை பாய்ந்து சென்று காட்டில்‌ மறைநது விட்டது.

சங்கரனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கங்கைக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று கவலைப்‌ பட்டான்‌. அவன்‌ எதிரில்‌ ஒரு தேவதை வந்து நின்றது. சிவப்பு ஆடை அணிந்திருந்தது.

‘இளவரசனே, எழுந்திரு. மனம்‌ கலங்கவேண்டா. இந்தப்‌ பாத்திரத்தை வைத்துக்கொள்‌. இதில்‌ உணவு எப்‌பொழுதும்‌ நிறைந்திருக்கும்‌. எடுக்க எடுக்கக்‌ குறையாது. இந்தச்‌ செம்பில்‌ எப்பொழுதும்‌ தண்ணீர்‌ நிறைந்‌திருக்கும்‌. இந்த மந்திரக்‌ கோலையும்‌ எடுததுச்‌ செல்‌. இதைக்‌ கீழே தட்டினால்‌ உடனே நான்‌ வந்து விடுவேன்‌. இந்து நாய்‌ உனக்கு உதவியாக இருக்கும்‌. அதை விட்டுப்‌ பிரியாதே’ என்று சொல்லித்‌ தேவதை மறைந்து விட்டது.

சங்கரன்‌ பொழுது விடியும்‌ வரையில்‌ காத்திருந்தான்‌. விடியற்காலையில்‌ எழுந்து கங்கையைத்‌ தேடிச்‌ சென்றான்‌.

பகல்‌ முழுவதும்‌ நடந்து மாலையில ஒரு பட்டினத்திறகு வந்து சேர்ந்தான்‌. அந்து ஊரை ஆண்டு வந்தவன்‌ ஓர்‌ அரக்கன்‌. அவன்‌ ஓரு பெண்ணைச்‌ தேடி வந்திருப்பதாக ஊரில்‌ உள்ளவர்கள்‌ பேசிக்கொண்டனர்‌.

அவள்‌ உயிரோடு இருக்கிறாள்‌ என்பது கேட்டு மகழ்ச்சி அடைந்தான்‌. அவளை எப்படி மீட்பது என்று எண்ணிப்‌ பார்த்தான்‌. அரக்கமன்னனிடம்‌ வேலைக்காரனாக அமர்ந்தான்‌. கங்கையைக்‌ காண்பதற்கு வழி ஓன்றும்‌ தோன்‌றவில்லை. மந்திரக்கோலை எடுத்துத்‌ கரையில்‌ தட்டினான்‌. வனதேவதை அவன்‌ எதிரில்‌ தோன்றியது.

‘கங்கையை நான்‌ உயிருடன்‌ காண்பேனா?’ என்று கேட்டான்‌.

‘அவள்‌ சுகமாக இருக்கிறாள்‌. அரக்க மன்னனை மணம்‌ செய்ய மறுத்து விட்டாள்‌. அவளை ஒரு கோட்டையில்‌ சிறை செய்து வைத்திருக்கிறான்‌’, என்று தேவதை சொல்லிற்று.

‘அந்தக்‌ கோட்டை எங்கே இருக்‌கின்றது?’ என்று கேட்டான்‌.

‘உன்னுடைய நாய்‌ வழிகாட்டும்‌. உனக்கு வெற்றி உண்டாகும்‌’, என்று சொல்லிவிட்டு மறைந்தது.

நாய்‌ முன்னால்‌ சென்று அவனுக்கு வழிகாட்டியது. அரக்கனுடைய கோட்டை. ஓரு மலைமேல்‌ இருநதது. அதைச்‌ சுற்றிலும்‌ வீரர்கள்‌ காவல்‌ புரிந்தனர்.

சங்கரன்‌ தேவதையை அழைத்துக்‌ கேட்டான்‌.

‘என்னைக்‌ குருவியாக மாற்றி விடு; நான்‌ அவளிடம்‌ பறந்து செல்கிறேன்‌’ என்றான்‌.

‘இரண்டு முறை குருவியாக முடியாது. உன்னைக்‌ காற்றாடி ஆக்க விடுகிறேன்‌. நீ அங்கே போய்ப்‌ பறக்‌கலாம்‌’ என்று தேவதை அவனைக்‌ காற்றாடியாக மாற்றிவிட்ட து.

நாய்‌ கயிற்றை வாயில்‌ பிடித்துக்‌ கொண்டது. சங்கரன்‌ காற்றாடியாகப்‌ பறந்து சென்று கங்கையுடன்‌ பேசினான்‌.

அரக்க மன்னன்‌ நாய்‌ காற்றாடி விடுவதைக்‌ கண்டான்‌. அவன்‌ அருகில்‌ வந்தவுடன்‌ நாய்‌ வாயில்‌ பிடித்திருந்த கயிற்றை விட்டுவிட்டது. காற்றாடி மலையின்‌ மேல்‌ மிதந்து சென்றது. நாய் ஓட்டம்‌ பிடித்தது. அரக்கன்‌ ஒரு பெரிய சேனையை அனுப்பிக்‌ கோட்‌டைக்குக்‌ காவல்‌ வைத்தான்‌.

காற்றாடி, தரையில்‌ வந்து விழுந்தது. சங்கரனுக்கு மனித உருவம்‌ வந்தது. தேவதையை மீண்டும்‌ வரவழைத்தான்‌. அரக்கனுடன்‌ போர்‌ செய்வதற்கு ஒரு பெரிய சேனை வேண்டும்‌ என்றான்‌. ஓரு பெரிய. மூங்கிலும்‌ ஒரு கோணிப்பை நிறைய இலந்தைப்‌ பழமும்‌ தேவதை கொடுத்தது! ‘நீ, போருக்குச்‌ ‘ செல்லலாம்‌” என்று சொல்லி மறைந்து விட்டது.

‘மூங்கிலையும்‌ பழத்தையும்‌ வைத்துக்‌ கொண்டு ஒரு பெரிய சேனையை எப்படி. எதிர்ப்பது?’ என்று தயக்கமூற்றுன்‌. ‘இதுவும்‌ ஒரு நன்மைக்காகவே தேவதை அளித்திருக்கும்‌. எனககு ஓனறும்‌ விளங்கவில்லை,” என்று வீரர்களின்‌ பக்கத்தில்‌ சென்றான்‌. போர்‌ வீரர்கள்‌ எல்லாம்‌ குறுகிப்போய்ச்‌ சிறுவர்களாக மாறிவிட்டனர்‌. நான்கு அல்லது ஐந்து வயதுடைய குழந்தைகளாகக்‌ காட்சி அளித்தனர்‌. அவனுக்குத்‌ தன்‌ கண்‌களையே நம்ப முடியவில்லை.

சிரிப்பை அடக்கிக்‌ கொண்டான்‌. கடுகடுத்த முகத்துடன்‌ ‘சரண்‌ அடைகிறீர்களா, இநத மூங்கிலால்‌, அடித்து நொறுக்கட்டுமா?’ என்று கேட்டான்‌.

சிறுவர்கள்‌ எல்லரம்‌ அழுது கொண்டு ஓடத்தொடங்கினர்‌. சங்கரன்‌ அவர்களை ஓடவேண்டாம்‌ என்று இலந்தைப்பழங்களா வாரி இறைத்‌தான்‌. குழந்தைகள்‌ எல்லாம்‌ அழுவதை நிறுத்திவிட்டு இலந்தைப்‌ பழங்களைப்‌ பொறுக்கித்‌ தின்றனர்‌.

ஒரு மூட்டை. இலந்தைப்‌ பழங்களையும்‌ தின்றுவிட்டுக்‌ குழக்தைகள்‌ எல்லாம்‌ சங்கரனைச்‌ சூழ்ந்துகொண்டன, ‘நாங்கள்‌ எல்லோரும்‌ உனக்குக்‌ துணையாக வருகிறோம்‌. யார்‌ வந்தாலும்‌ சரி, ஒரு கை பாரககலாம்‌’ என்று சிறுவர்கள்‌ கூறினர்‌.

உடனே சிறுவர்கள்‌ பழையபடி பெரிய வீரர்கள்‌ ஆகிவிட்டனர்‌. சங்கரனுடன்‌ சேர்ந்து போருக்கு ஆயத்தமாக இருந்தனர்‌. அரக்க மன்னனுக்கு ஓர் ஆள்கூட கிடையாது. அரக்கன்‌ ஊரை விட்டு ஒட்டம்‌ பிடித்தான்‌.

சங்கரன்‌ கங்கையைச்‌ சிறையி லிருந்து விடுவித்தான்‌. அந்து ஊருக்கு அவனே அரசன்‌ ஆனான்‌. கங்கையை மணந்துகொண்டான்‌. புதிய அரண்‌ மனை ஒன்று கட்டினான்‌. புது வீட்டில்‌ பெண்ணும்‌ மாப்பிள்ளையும்‌ இன்ப மூடன்‌ வாழ்ந்து வந்தனர்‌. வன தேவதை அவர்களைப்‌ பாதுகாத்து வந்தது.

– அயல்நாட்டுக்‌ கதைக்கொத்து (ஆறு புத்தகங்கள்‌), முதற் பதிப்பு: மார்ச் 1964, திருநெல்வேலித்‌ தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகம்‌, லிமிடெட்‌, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *