கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 6,087 
 

Ambulimama_Tamil_1996_03_0036-picமுருகனும், செந்திலும் மணலூரில் இருக்கும் இரு நண்பர்கள். அவர்கள் அவ்வூரில் எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு எப்படியோ வாழ்ந்து வந்தார்கள். ஒருமுறை வறட்சியால் அப்பகுதி வாடவே நண்பர்களிருவரும் பட்டணத்திற்குப் போய் பணம் சம்பாதிக்க நினைத்து தம் ஊரைவிட்டுக் கிளம்பிச்சென்றார்கள்.

பட்டணத்தில் இருவருக்கும் நல்ல வேலைகள் கிடைத்தன. இருவரும் நிறையச் சம்பாதித்துச் சேர்த்தும் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செந்தில் தன் நண்பனிடம் “நம் ஊருக்குப் போய் நம் அந்தஸ்து உயர்ந்ததைக் காட்டவேண்டும்” என்றான். முருகனும் ‘சரி போகலாம். ஆனால் வெறும் கையுடன் போகாமல் என் நண்பர்களுக்கும் பரிசுப் பொருள்களை வாங்கிச்செல்ல நினைக்கிறேன்” என்றான்.

செந்தில் பதில் எதுவும் கூறவில்லை. முருகன் தன் பத்து நண்பர்களுக்குக் கொடுக்க நூறு ரூபாய்க்குள் சில பொருள்களை வாங்கி வந்தான். செந்தில் அதைப் பார்த்து விட்டு “பட்டணத்தில் நம் அந்தஸ்து என்ன என்று நம் ஊராருக்குக் காட்ட மிக விலையுயர்ந்த பகட்டான பொருள் ஒன்றை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றான்.

முருகனோ “நான் என் அந்தஸ்திற்குத் தக்கபடி பொருள்களை வாங்கி இருக்கிறேன். இதைவிட அதிகப் பணம் என்னால் செலவு செய்ய முடியாது” என்றான். செந்தில் முருகனை அழைத்துக் கொண்டு விலையுயர்ந்த பொருளாக வாங்கக் கடைத்தெருவுக்குச் சென்றான்.

அப்போது ஒரு துணி வியாபாரி “இவ்வளவு பெரிய ஊரில் என் விலையுயர்ந்த நல்ல சரக்கை வாங்குவோரே இல்லையா?” என்று கூவிக் கொண்டிருந்தான். செந்தில் அவனருகே போய் அவனது சரக்கைக் காட்டும்படிக் கேட்டான். அந்த வியாபாரியும் ஒருபட்டுச் சட்டையை எடுத்துக் காட்டி “இதில் தங்க சரிகைகளும் வெள்ளி இழைகளும் உள்ளன. விலையுயர்ந்த முத்துக கள் வைத்துக் தைக்கப்பட்டுள்ளன. இதற்கு தாராளமாய் பத்தாயிரம் ரூபாய் மதிப்புப் போடலாம். ஆனால் ஆயிரம் ரூபாய்க்குக் கொடுக்கிறேன்” என்றான்.

Ambulimama_Tamil_1996_03_0037-picமுருகன் “அடேயப்பா ! ஒரு சட்டைக்கு விலை ஆயிரம் ரூபாயா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டான். ஆனால் செந்திலோ “நான் வாங்கிக் கொள்கிறேன். விலையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்” என்றான். வியாபாரியோ ஒரு பைசாக்கூடக் குறைக்க முடியாது எனக் கறாராகக் கூறவே செந்தில் தன்னிடமிருந்த தொள்ளாயிரம் ரூபாயை எடுத்து முருகனிடம் நூறு ரூபாயைக் கடன் வாங்கி மொத்தம் ஆயிரம் ரூபாயை வியாபாரியிடம் கொடுத்து விட்டு அந்தச் சட்டையை வாங்கிக் கொண்டான்.

முருகனும் “இதை யாருக்குப் பரிசாகக் கொடுக்கப் போகிறாய்?” என்று கேட்கவே செந்திலும் “யாருக்கோ கொடுக்கவா இதை இவ்வளவு விலைக் கொடுத்து வாங்கினேன்? இதை நானே அணிந்து கொண்டு நம் ஊர் தெருக்களில் போவேன். அப்போது ஊரார் என் அந்தஸ்து உயர்ந்ததைக் கண்டு என்னை மதிப்பார்கள்” என்றான்.

முருகனோ “என்னவோ! உன் மதிப்பு உயருவது பற்றித் தெரியாது. முடிவில் இதை நீ இவ்வளவு விலை கொடுத்து வாங்கியதற்காக நீயே வருத்தப்படபோகிறாய்” என்றான். செந்திலோ முருகா பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு சுகம் அனுபவிக்கத் தெரியாத நீ என்னதான் பரிசுக்களைப் பிறருக்குக் கொடுத்தாலும் அவற்றால் அவர்கள் திருப்தி அடையப்போவதில்லை. உன்னையும் அவர்கள் மதிக்க மாட்டார்கள். நீ என்னைப் போல உனக்கே ஆடம்பரப் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டாலே உனக்கு மதிப்பு. இதைத் தெரிந்து கொள்” என்று உபதேசம் செய்வது போலக் கூறினான்.

நண்பர்கள் இருவரும் மணலூருக்கு வந்தார்கள் ஆனால் செந்தில் ஊர் எல்லையிலேயே இருந்து “நான் இந்தக் குளத்தில் குளித்து விட்டு புதுச்சட்டையை அணிந்து கொண்டு ஊருக்குள் வருகிறேன். நீ முன்னதாகப் போ” என்று முருகனிடம் கூறினான். முருகனும் ஊருக்குள் போய் தன் நண்பர் களைக் கண்டு அவர்களுக்குத் தான் கொண்டு வந்த பரிசுகளை அளித்து நலம் விசாரித்தான். அவர்களும் மகிழ்ந்து “செந்தில் வரவில்லையா?” என்று கேட்டார்கள்.

முருகனும் “Ambulimama_Tamil_1996_03_0038-picபின்னாலேயே வந்து கொண்டிருக்கிறான். அவன் ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து ஒரு சட்டையை வாங்கி இருக்கிறான்” என்றான். செந்தில் வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி கேட்டு ஒருசிலர் அவனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனும் குளித்துவிட்டு ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய புதுச்சட்யை அணிந்து கொண்டு தான் வந்தான்.

அவர்கள் அவனைச் சூழ்ந்துக் கொண்டு “நீ ஏதோ நிறைய விலை கொடுத்து ஒரு புதுச்சட்டை வாங்கி இருப்பதாக முருகன் சொன்னானே எங்கே அதைக் காட்டு பார்க்கலாம்” என்றார்கள். செந்திலும் “பார்த்தாலே தெரியவில்லையா? நான் அணிந்திருப்பது அந்தச் சட்டைதான்” என்றான். எல்லோரும் அதைப் பார்க்கையில் அவர்களில் ஒருவன் “இதுவா அது? ஏதோ பகல் வேஷக்காரன் போட்டுக் கொண்டு வரும் சட்டை போல அல்லவா இருக்கிறது! இதற்கா ஆயிரம் ரூபாய் கொடுத்தாய்?” என்று கேட்டான் இன்னொருவனோ “இவனை யாரோ நன்றாக ஏமாற்றி விட்டான்! இவன் ஏமாந்து போய் இதை வாங்கி விட்டான்” எனக் கூறினான்.

செந்தில் அந்த சட்டை விலை உயர்ந்ததே எவ்வளவு புகழ்ந்து கூறியும் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை. அப்போது செந்தில் “இந்த சட்டையை நான் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியபோது முருகனும் என் பக்கத்தில்தான் இருந்தான். அவனையே கேட்டுப் பாருங்கள்” என்று அழாத குறையாகக் கூறினான்.

அவர்களும் முருகனிடம் “நீ கூட செந்தில் இந்தச் சட்டையை வாங்கும் போது அவனோடு இருந்தாயாமே!” என்று கேட்க முருகனும் ஆமாம் என்று ஒப்புக் கொண்டான். அதைக் கேட்ட அவர்கள் “என்ன முருகாAmbulimama_Tamil_1996_03_0039-pic! நம் ஊர்க்காரன் ஒருவன் பட்டணத்துக்காரன் ஒருவனிடம் ஏமாந்து போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருந்தாய்? இப்படியா உன் நண்பனை ஏமாற விட்டு விடுவது?” என்று கேட்டார்கள்.

அப்போது செந்தில் “இதில் முருகனின் தப்பு எதுவுமில்லை. நான்தான் இந்தச் சட்டை எனக்கு வேண்டும் என்று சொல்லி வாங்கிக் கொண்டேன். முருகன் முதலில் வந்து நான் வாங்கியது மிக விலையுயர்ந்த சட்டை என்று கூறியதால் நீங்கள் இது பற்றி என்னென்னவோ நினைத்துக் கொண்டு எதிர்பார்த்தீர்கள். அப்படி அவன் சொல்லாமல் இருந்திருந்தால் இதைப்பார்த்ததும் ஆச்சரியம் பட்டுப் போயிருப்பீர்கள்” என்றான்.

அதன் பிறகு செந்தில் அந்தச் சட்டையோடு ஊர்த்தெருக்களில் சுற்றி வந்தான். எல்லோரும் அவன் நலமாயிருக்கிறானா என்று கேட்டார்கள் யாரும் அந்தச் சட்டைப்பற்றி ஒரு கேள்விக் கூட கேட்கவில்லை. அது கண்டு மனமொடிந்து போய் அவனே ஒரு சிலரிடம் “இந்தச்சட்டை எப்படி இருக்கிறது?” என்று கேட்டான். அவர்களும் பரவாயில்லை. சுமாராக இருக்கிறது என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டார்கள்.

மணலூரில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு நண்பர்கள் இருவரும் பட்டணத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் புறப்படுமுன் ஊரார் முருகனிடம் “நீ செந்திலை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்” என்று கூறியதோடு செந்திலிடம் “நீ முருகன் சொல்வதைக் கேட்டு நல்ல விதமாக நடந்துகொள்” என்றும் அறிவுரை கூறி அனுப்பினார்கள்.

வழியில் செந்தில் “மணலூர்க்காரர்கள் சுயநலக்காரர்கள். நீ அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்தாய் என்பதற்காக உனக்கு மதிப்பு கொடுத்தார்கள். நான் எனக்காக இந்த சட்டையை வாங்கியதால் அவர்கள் தமக்கு என்னிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றே மதிக்கவில்லை. இனிமேல் அந்த ஊருக்குள் அடி எடுத்துக்கூட வைக்க மாட்டேன்” என்றான்.

Ambulimama_Tamil_1996_03_0040-picமுருகனும் “செந்தில்! நீ முதலில் உன்னைப் பற்றி தெரிந்து கொள்ளா மல் ஊராரை இகழ்கிறாயே. நீ உன்னைப் பிறர் புகழ வேண்டும் என்பதற்காகத்தானே ஆயிரம் ரூபாய் கொடுத்து சட்டையை வாங்கினாய்? அதனால் உனக்கு இப்போது மகிழ்ச்சி யும் இல்லை. பாராட்டும் கிடைக்க வில்லை. பிறர்பாராட்ட இப்படி ஆயிரம் ரூபாய் செலவு செய்ததற்கு பதிலாக நீபத்து ரூபாய்க்குப் பரிசுகள் வாங்கி அவர்களுக்குக் கொடுத்திருந் தால் அவர்கள் மகிழ்ந்து பாராட்டி இருப்பார்கள். பத்து ரூபாய் செலவில் உன் மதிப்பும் உயர்ந்திருக்கும். பிற ருக்கு எதுவும் கொடாமல் நீயே எதை யும் வைத்துக் கொண்டு விட்டு அவர் களை சுயநலக்காரர்கள் என்று இகழ் வது சரியல்ல” என்றான்.

செந்திலுக்குத் தன் தவறு புரிந்தது. அப்போதிருந்து ஆடம்பரத்தைக் கை விட்டு அவன் தன் நண்பர்களுக்குக் கொடுத்து மகிழவும் கற்றுக் கொண்டான்.

– மார்ச் 1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *