நட்பு பெரிதா? நாடு பெரிதா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,170 
 

துரோணரும் துருபதனும்…

துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளிநட்பு பெரிதா1யாகப் புகழ் பெறக் காரணமானவர். இவரின் குருகுலத் தோழன் இளவரசன் துருபதன். குருகுலத்தில் துரோணரும் துருபதனும் நண்பர்கள்.

ஒரு நாள் துருபதன், ‘‘துரோணா, நான் அரசனாகும்போது எனது நாட்டில் பாதியை உனக்குத் தந்து உன்னையும் அரசனாக்குவேன்!’’ என்றான். தன் நண்பனின் நட்பை எண்ணி மகிழ்ந்தார் துரோணர்.

குருகுல வாசம் முடிந்ததும் இருவரும் தத்தமது நாடுகளுக்குத் திரும்பினர். துரோணர் ஆச்சார்யரானார். துருபதன் அரசனானான்.

துரோணருக்குத் திருமணம் முடிந்தது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. துரோணரின் குடும்பம் வறுமையில் வாடியது. உண்ண உணவு இல்லை; குழந்தைக்குப் பால் இல்லை. இந்த நிலையில் துரோணரின் மனைவி அவரிடம், ‘‘பிரபு! தங்கள் நண்பர் துருபதன், தான் அரசனானதும் தனது நாட்டின் பாதியைத் தருவதாக வாக்களித்தாரே… அவரிடம் சென்று குழந்தையின் பால் தேவைக்கு ஒரு பசு மாட்டையாவது வாங்கி வாருங்கள்!’’ என்றாள்.

துரோணர் அன்றே புறப்பட்டு துருபதனது அரண்மனையை அடைந்தார். வாயிற்காவலன், துருபதனிடம் துரோணரின் வருகையை அறிவித்தான்.

ஆனால், துருபதன் அதிர்ந்தான். ‘நாட்டில் பாதியைக் கேட்டு வந்திருக்கிறானோ?’ என்று பயந்தான். எனவே, துரோணரை அவமதித்து அனுப்ப முடிவு செய்தான்.

அவரை உள்ளே அழைத்து வருமாறு கட்டளையிட்டான். அவர் வந்ததும், ‘‘என்ன துரோணா… என்னிடம் பிச்சை பெற வந்தாயா? ஏற்றத்தாழ்வைப் புரிந்து நடந்து கொள். மன்னனான என்னை உன் நண்பன் என்று சொல்வதில் நீ பெருமை அடையலாம். ஆனால், அதில் எனக்கு எந்த விதப் பெருமையும் இல்லை. எனவே, வந்த விஷயத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பு!’’ என்றான்.

துரோணர் அவமானத்தால் குன்றிப் போனார். அந்த அவலமான நிலையிலும், ‘‘நண்பா… நான் யாசகம் பெற வரவில்லை. உன்னைப் பார்த்துச் செல்ல வந்தேன். பார்த்து விட்டேன். வருகிறேன்!’’ என்று அவனிடம் எந்த வித உதவியும் கேட்காமல் திரும்பினார் துரோணர்.

துருபதன் இந்தச் சம்பவத்தை மறந்து போனான். ஆனால், துரோணரின் மனதில் இது ஆழப் பதிந்து விட்டது. சந்தர்ப்பம் வரும்போது துருபதனுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க துரோணர் முடிவு செய்தார்.

காலம் உருண்டோடியது. ஒரு நாள் திருதராஷ்டிரனைக் காணச் சென்றார் துரோணர். வழியில் ஓரிடத்தில் பாண் டவர்கள் ஐவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

மூத்தவனான தருமன், தாங்கள் விளை யாடிக் கொண்டிருந்த பந்தை கை தவறி கிணற்றில் போட்டு விட்டான். கிணற்றிலிருந்து பந்தை எடுக்க முயன்றபோது துரதிர்ஷ்டவசமாக கையிலிருந்த மோதிரமும் கிணற்றுக் குள் விழுந்து விட்டது. ஐவரும் செய்வதறியாது கிணற்றருகே நின்று கொண்டிருந்தனர். இதை கவனித்த துரோணர் அவர்கள் அருகே வந்து விசாரித்தார். தருமன் நடந்ததை விவரித்தான்.

நட்பு பெரிதா2உடனே துரோணர், ‘‘சிறுவர்களே… கிணற்றில் விழுந்த பொருளை, கிணற்றுக்குள் இறங்காமல் எடுக்கும் வித்தையை உங்கள் குரு சொல்லித் தரவில்லையா?’’ எனக் கேட்டார்.

‘‘கிணற்றுக்குள் இறங்காமல், உள்ளே விழுந்த பொருளை எப்படி எடுக்க முடியும்?’’ என்று எதிர்க் கேள்வி கேட்டான் தருமன்.

‘‘முடியும். அதற்கென்று ஒரு மந்திரம் உண்டு. அதை பிரயோகித்து பந்தையும் மோதிரத்தையும் நான் எடுத்துத் தருகிறேன், பாருங்கள்!’’ என்றார் துரோணர்.

பிறகு தரையில் கிடந்த சுள்ளிக் குச்சிகளை சேகரித்தார். அவற்றை ஏதோ மந்திரம் உச்சரித்து ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் போட்டார். அந்தக் குச்சிகள் ஒரு சங்கிலித் தொடர் போல் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டன.

பின்னர் துரோணர் வேறொரு மந்திரத்தை உச்சரிக்க… சங்கிலித் தொடரின் அடி முனையில் பந்தும், மோதிரமும் சிக்கிக் கொண்டன. துரோணர் அவற்றை மெள்ள வெளியே எடுத்தார். சிறுவர்கள் ஐவரும் மகிழ்ச்சியில் கூத்தாடினர்.

பிறகு துரோணரிடம், ‘‘நீங்கள் யார்? எந்த ஊர்?’’ என்று விசாரித்த னர். அவர் தன்னைப் பற்றிக் கூறினார். ஐவரும் அவரை தங்கள் பாட்டனார் பீஷ்மரிடம் அழைத்துச் சென்றனர்.

பீஷ்மர் பெரிய தீர்க்கதரிசி. துரோணரிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்பதை அறிந்தார். எனவே, பாண்டவர்கள் ஐவருடன் கௌரவர்கள் நூறு பேருக்கும் வில் வித்தை கற்பிக்குமாறு துரோ ணரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

பயிற்சி தொடங்கியது. பாண்டவர்கள் நன்கு கற்றுத் தேர்ந்தனர். ஆனால், கௌரவர்களுக்கு வில்வித்தையில் ஆர்வமில்லை. வித்தையைக் கற்ற பாண்டவர்கள் குருவின் பாதம் பணிந்து வணங்கினர். குருதட்சணை தர முன் வந்தனர். குரு தட்சணையாக பணம்& பொருள் ஆகியவற்றை பெற மறுத்த துரோணர், அதற்கு பதிலாக துருபதனை போரில் வென்று, தன் முன்னால் கொண்டு வந்து நிறுத்துமாறு பாண்டவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதை ஒப்புக் கொண்ட பாண்டவர்கள், துருபதனுடன் போரிட்டு வென்று, அவனைக் கைது செய்து துரோணர் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

துரோணரைக் கண்ட துருபதன் திடுக்கிட்டான். துரோணர் அவனிடம், ‘‘துருபதா… அன்று என்னை உன் நண்பனாகச் சொல்லிக் கொள்ளத் தகுதியில்லாதவன் என்று அவமானப்படுத்தினாய். அதனால்தான் என் சீடர்கள் மூலம் உன்னை கைதியாக்கிக் கொண்டு வந்தேன். இப்போது நீ உட்பட உனது நாடும் எனக்கு அடிமை. உனது நாட்டில் பங்கு கேட்பேன் என்று பயந்து என்னை நீ அவமானப்படுத்தினாய். ஆனால், இன்று அதே நாட்டில் பாதியை நான் உனக்குத் தருகிறேன். இப்போது நான் உன்னைவிட அதிகத் தகுதியுள்ளவன்!’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட துருபதன் நாட்டுக்கு ஆசைப் பட்டு நட்பை இழந்த, தனது கீழ்த்தரமான செயலுக் காக பெரிதும் வருந்தினான். தலை குனிந்து அவமானத்துடன் நாடு திரும்பினான். அதன் பிறகே துரோணரின் மனம் ஆறுதலடைந்தது

– ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 – பெப்ரவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *