கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 36,578 
 

பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன், “யாரப்பா அது இந்த நேரத்தில் வந்து இப்படி கதவைத் தட்டுவது?” என்று கோபமாகக் கேட்டான்.

மலாக்கி ஒரு திராட்சைத் தோட்டக் காரன். அவன் குத்தகை நிலத்திலே திராட்சைத் தொட்டாதை உண்டாக்கி அதனைப் பராமரித்து வந்தான். விளைச்சலில் நிலச் சொந்தக்காரனுக்கு உண்டான பாகத்தைச் சரியாகச் செலுத்தி விடுவான். இராயனுக்குச் செலுத்த வேண்டிய வரியையும் சரியாகச் செலுதிவிடுவான். இவ்வளவு இருந்தும் அவனிடத்தில் ஒரு குறை இருந்தது. அது அவனிடத்தில் இருந்த தாழ்வு மனப்பான்மை.

மலாக்கி திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவன். அவன் முகத்திலிருந்த ஒரு பெரிய தழும்பு அவனுக்கு அவமானமாய் இருந்தது. அவன் சிறுவனாய் இருக்கும்போது அவன் இருந்த வீடு தீப்பிடித்து எரிந்ததாம். வெளியில் வேலையை இருந்த அவன் தாய் தன குக்ழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீட்டிற்குள் பாய்ந்து ஓடினாள். குழந்தையைத் தூக்கி அரவணைத்தபடி வெளியே ஓடிவந்தாள். அதற்குள் அவள் அடியில் தீப் பிடித்துக்கொண்டது. அவள் கேசம் முழுவதும் பொசுங்கியது. பலத்த தீக்காயம் அடைந்து விட்டவள், தன குழந்தையைக் காப்பாற்றிய சந்தோஷத்துடன் உயிரை விட்டாள். அந்த விபத்தில் மலாக்கியின் முகத்தின் ஒரு பக்காம் தீயினால் பொசுங்கி விட்டது. அதன் காரணமாக ஒரு பெரிய தழும்பு முகத்தில் ஏற்பட்டு விட்டது. மலாக்கி தன தாழ்வு மனப்பான்மையின் காரணமாக யாருடனும் அதிகமாகப் பழக மாட்டான். அவனுக்கு இருந்த ஒரே நண்பன், உயிர் நண்பன் மனாசே தான்.

“யாரப்பா அது?” என்று மலாக்கி மீண்டும் குரல் எழுப்பினான்.

“மலாக்கி, சீக்கிரம் கதவைத் திற. நான் தான் மனாசே”. குரலில் பதற்றம் தெரிந்தது.

கதவு கிறீசிட்டபடி திறந்தது.

“என்னப்பாஇது மனாசே, இந்த நேரத்தில்… வாக்கியம் பாதியில் நின்று போனது. மனாசேயின் முகத்தில் பதட்டமும் கவலையும் சோர்வும் ஒரு சேரக் காணப்பட்டது.

“உள்ளே வா மனாசே!என்ன ஆயிற்று உனக்கு? ஏன் உன் முகம் இப்படி வெளிறிப் போய் இருக்கு?”

விஷயம் தெரியுமா உனக்கு? அந்த இயேசுவைப் பிரதான ஆசாரியருடைய வேலையாட்கள் கைது செய்துட்டாங்களாம் “.

“என்னது? இயேசுவைக் கைது செய்துட்டாங்களா? எங்கே? எப்போது? விவரமாகச் சொல்லேன்.”

“இன்று மாலை நகரிலுள்ள ஒரு வீட்டின் பெரிய மேல் அறையில் அவருடைய சீடர்களுக்குப் பாஸ்கா விருந்தளித்தாராம். அதற்குப் பிறகு ஒலிவ மலைக்குப் போய் அங்கே கெதரோன் ஆற்றுக்கு அப்புறம் இருக்கும் கெத்செமேனே தோட்டத்திலே தனியாக ஜெபம் பண்ணிக்கிட்டு இருந்தாராம். அப்போ அவரோடவே இருந்த யூதாஸ் பிரதான ஆசாரியரையும் தேவாலயத்துச் சேனைத் தலைவர்களையும் கனத்தின் மூப்பர்களையும் கூட்டிக்கிட்டுப் போய் அவரைப் பிடித்துக் கொடுதிட்டானம்.”

“அப்படியா? சமீபத்தில் அந்த மனுஷன் எருசலேமிற்குள் நுழைந்த போது என்ன அமர்க்களம் படுத்தினார்கள். ஒரு கழுதைக் குட்டியின் மேலே அவரை உட்கார வைத்து வழியெல்லாம் மக்கள் தங்கள் ஆடைகளையும், இலைகளையும் தழைகளையும் பரப்பிக் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவரைத் தாவீதின் குமாரன்! தேவகுமாரன்! அப்படி இப்படி என்று புகழ்ந்தார்களே!”

“ஆமாம்! மக்களெல்லாம் அவர் பின்னாடி போயிடராங்களேன்னு பிரதான ஆசாரியர்களுக்கெல்லாம் கோபம். மக்கள் நம்மை மதிக்க மாட்டாங்களேன்னு ஒரு பயம். அதனாலே தான் சூழ்ச்சி செய்து அவரைப் பிடிச்சிட்டாங்க”.

ஏன் மனாசே! அந்த மனுஷன் தான் தினமும் ஜனங்களுக்கு நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக்கிட்டு இருப்பாரே. அப்பவே அவரைக் கைது பண்ணியிருக்கலாமே.”

முட்டாள்தனமாய்ப் பேசாதே மலாக்கி! அப்படி அவர்கள் செய்திருந்தால் ஜனங்களின் மத்தியில் பெரிய கலவரம் மூண்டிருக்கு. அதுவுமில்லாமல் அவரைக் குற்றப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை”.

“ஆமாம்! ஆமாம்! பிரதான ஆசாரியரின் வேஷக்காரர்கள் அவரிடத்திலே குற்றம் கண்டுபிடிக்கவென்றே அவரிடம் போய் ‘ராயனுக்கு வரி செலுத்துகிறது நியாயமா? இல்லையா?’ என்று கேட்டார்களாம். அவர் ஒரு பணத்தை என்னிடம் காட்டுங்கள் என்று கேட்டு, அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கி அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்து விட்டு இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் இராயனுடையது என்று சொல்ல, இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் அப்படின்னு சொல்லியிருக்கிறார், என்ன சாமர்த்தியமான பதில் பார்த்தாயா! சரி! இப்போ மட்டும் எந்த முகாந்திரத்தினாலே அவரைக் கைது செய்தார்களாம்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை. அவரைப் பிராதான ஆசாரியன் காய்பாவின் அரண்மனைக்குத் தான் கொண்டு போய் இருக்கிறார்கள். நான் அங்கே போய் நடப்பதைப் பார்க்கப் போகிறேன். நீயம் வா மலாக்கி “.

மலாக்கிக்கு எப்பொழுதும் போல அவன் தாழ்வு மனப்பான்மை மேலோங்கியது. மனாசே ஒரு முறை அவனிடத்தில் “நீ போய் அந்த நசரேயனாகி இயேசுவைப் பாரேன்! அவர் உன்னைக் குணமாக்கலாம் அல்லவா? என்று கேட்டிருக்கிறான். ஆனால் மலாக்கி அதற்க்கு மறுப்பு தெரிவித்து விட்டான்.

அந்த இயேசு ஏதோ மந்திரவாதி போல செயல் படுகிறார். எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லை” என்று கூறிவிட்டான்.

இப்போதும் மலாக்கி வர மருத்துவிடத்தான் நினைத்தான். இருப்பினும் மனாசேயின் பேச்சில் தொனித்த அந்த வருத்தமும் வேதனையும் அவனைக் கலக்கமுறச் செய்திருந்தன. சிறிது நேரம் யோசித்து விட்டு, “சரி வருகிறேன்” என்றான்.

பிரதான ஆசாரியன் வீட்டின் முன் திரளான ஜனம் கூடியிருந்தது. அவ்வப்ப்போது மூப்பரில் சிலர் வந்து உங்களில் யாரேனும் அந்த மனுஷனுக்கு எதிராய் சாட்சி சொல்ல முடியுமா? என்று கேட்டுகொண்டிருந்தனர். அநேகர் போய் பொய் சாட்சி கூறியும் எதுவும் எடுபடவில்லை.

அப்போது கூட்டத்திலிருந்த ஒருவன்< தேவனுடைய ஆலயத்தை இடித்துப் போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னானே”, என்றான்

மலாகி திரும்பி மனாசேவைப் பார்த்தான். இது உண்மையா? என்பது போல் அவன் பார்வை இருந்தது.

“இருக்காது மலாக்கி! அப்படியே அவர் சொல்லி இருந்தாலும் அதற்கு வேறேதும் அர்த்தம் இருக்கவே செய்யும்,” என்றான்.

அதற்குள் உள்ளே இருந்து “தேவ தூஷணம், தேவ தூஷணம்,” என்ற கூக்குரல் கேட்டது. ஆடைகள் கிழிபடும் சத்தமும் கேட்டது. உள்ளே இருந்து ஒருவன் வேகமாய் வெளியே வந்தான். மனாசே அவனிடம் ‘உள்ளே என்ன நடக்கிறது? அவர்கள் ஏன் அப்படி கூச்சலிடுகிரார்கள்?’ என்றான்.

“அந்த மனுஷன் தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லிக்கொள்கிறான்,” என்று கூறிக்கொண்டே அவன் அங்கிருந்து வெளியேறினான்.

மனாசே உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே ஒருவன் அவர் முகத்திலே துப்பி அவரைக் குட்டுவதும், மற்றொருவன் அவர் கன்னத்தில் அறைவதையும் காணமுடிந்தது. அவர்கள் ஏதேதோ சொல்லிச் சிரித்துக் கொள்வதைக் கேட்க முடிந்தது. மனாசேக்குத் தொண்டையில் எதோ அடைப்பது போல் இருந்தது. அவன் கண்கள் கலங்கி இருந்தன. மலாக்கி அவன் முகத்தைப் பார்த்துச் சற்று அதிர்ச்சி அடைந்தான்.

வா! மனாசே! இனியும் நீ இங்கே இருந்தால் நடப்பவற்றை உன்னால் தாங்கிக்க முடியாது,” என்றான். அவன் குரல் மிகவும் கனிவுடன்

தொனித்தது. ஆனால் மனாசே மறுத்துவிட்டான்.

“அவர் எந்தப் பாவமும் அறியாதவர். அவர் நிச்சயம் விடுதலை ஆகிவிடுவார்,” என்றான்.

மலாக்கியின் பார்வை அப்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கித் திரும்பியது.

“மனாசே, அதோ பார் அவன் யாரென்று தெரிகிறதா?” மனாசேயால் அந்த இருட்டில் அந்த ஆளை அடையாளம் காண முடியவில்லை. இருவரும் சற்று அவனை நோக்கி நடந்து சென்றனர். அந்த மனிதன் அவர்களைக் கண்டு சற்று கலவரம் அடைந்தான்.

“மனாசே! நிச்சயம் அவன் அவரோடு இருந்தவன். இவன் கலிலேயன். இவன் கலிலேயா கடலில் மீன் பிடித்துகொண்டிருந்தவன்”, என்று கூறிக்கொண்டே அம மலாக்கி அந்த மனிதனை நெருங்கினான். “நீயும் அவர்களில் ஒருவன் தானே”, என்றான். அம மனிதன் அவசரமாகத் தலையை அசைத்து மறுத்தான்.

“நீ சொல்லுகிற அந்த மனுஷனை எனக்குத் தெரியாது. எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”, என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நழுவினான்.

“பார்த்தாயா மனாசே! அவன் பேர் சீமோன். இவனை எனக்கு நன்றாகத் தெரியும். அவரோடு இருந்தவனே அவரை மறுதலிக்கிறான் பார்”, என்றான். அப்பொழுது எங்கிருந்தோ சேவல் கூவும் சத்தம் கேட்டது.

விடிகிற வேளை நெருங்கி விட்டதே! இனி அவர்கள் அவரை என்ன செய்வார்கள்?” என்றான் மனாசே.

“அவரைத் தேசாதிபதி பிலாத்துவிடம் கொண்டு போகிறார்களாம்”, என்றான் அங்கிருந்த ஒருவன்.

“சரி! நாம் அங்கே போவோம் வா!”, என்றான் மனாசே. மலாக்கி மறுப்பேதும் சொல்லவில்லை. இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.

*****

பிலாத்துவின் அரண்மனையின் முன்பும் கூட்டம் அதிகமாய் இருந்தது. ஆங்காங்கே இருந்து பல குரல்கள் எழும்பின.

“இவன் தன்னைக் கிறிஸ்து என்னபட்ட ராஜா என்று சொல்லுகிறான்”.

“இவன் யூதருக்கும் ராஜாவாம்.”

இராயனுக்கு வரி செலுத்தக்கூடாது என்கிறான்”.

“இல்லை! அவர் அப்படி சொல்லவில்லையே”.

பிலாத்து தன கைகளை உயர்த்தி அவர்களை அமைதிப் படுத்தினான்.

‘நீ யூதருக்கு ராஜாவா?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான்.

“நீர் சொல்லுகிறபடி தான்”, என்று அவர் பதிலுரைத்தார். பிலாத்து பிராதான ஆசாரியர்களைத் திரும்பிப் பார்த்தான்.

“இந்த மனுஷனிடம் நான் எந்தக் குற்றமும் காணவில்லையே”, என்றான்.

பிரதான ஆசாரியன் காய்பா வேகமாய் முன்னேறி வந்து நின்றான்.

இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம் வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் பண்ணி ஜனங்களைக் கலகப்படுத்துகிறான்”, என்று உரக்கக் கூறினான். அக்குரல் வைராக்கியமாய்த் தொனித்தது.

பிலாத்து இதைக் கேட்டதும் “இந்ந்த மனுஷன் கலிலேயனா? என்றான். ஆம் என்று பதில் வந்தது.

அப்படியானால் இவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர். இவரை அவனிடமே அழைத்துச் செல்லுங்கள்”, என்றான்.

“என்ன இது மலாக்கி! இவர்கள் ஏன் இவரை இப்படி அலைக்கழிக்கிறார்கள்?”

“பிலாத்து இவரைத் தண்டிக்கப் பயப்படுகிறான். ஒன்று கவனித்தாயா மனாசே! நேற்று வரைக்கும் ஒருவருக்கொருவர் பகைவராய் இருந்த பிலாத்துவும் ஏரோதும் இன்றைக்குச் சிநேகிதர்களாகிறார்கள்”.

“இப்போது என்ன செய்யலாம் மலாக்கி? ஓதின் அரண்மனைக்குச் செல்லலாமா?”

இதற்க்கு மேலும் என்னைத் தொந்தரவு செய்யாதே மனாசே. இப்பவே ரொம்ப சோர்ந்து போய்விட்டேன். ஏரோது அவரைத் தண்டிக்க மாட்டன். எப்படியும் அவரைப் பிலாத்துவிடம் தான் அனுப்பி வைப்பான். நாம் இங்கேயே இருப்போம். நீயும் கூட சோர்ந்து தான் போய் இருக்கிறாய். உனக்கும் ஓய்வு தேவை”.

“ஆம் ஐயா! அவர் சொல்வதும் சரி தான். நானும் அதையே தான் நினைத்தேன்.”, என்று அருகிலிருந்த ஒருவன் கூறினான். மனாசேயால் மறுப்பேதும் கூற முடியவில்லை. மலாக்கி அதற்குள் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.

***

விடிந்து நல்ல வெளிச்சம் வந்துவிட்டிருந்த வேளையில் திடீரெனப் பெருங்கூச்சல் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த மலாக்கி விழித்துக்கொண்டான்.

“என்ன மனாசே! இங்கே என்ன நடக்கிறது? என்றான்.

“ஏரோது அவரிடம் எந்தக் குற்றமும் காணவில்லை என்று பிலாத்துவிடமே அனுப்பிவிட்டானாம்”.

அப்போது பிலாத்துவின் குரல் ஓங்கி ஒலித்தது.

“ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டி விடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டு வந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது இவன் மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் இவனிடத்தில் காணவில்லை. இவனை ஏரோதின் இடத்திற்கும் அனுப்பினேன். அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை. மரணத்திற்கு எதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன்.”

கூக்குரல் அதிகரித்தது. கொலை செய்யும்! கொலை செய்யும்! என்று பல குரல்கள் ஒலித்தன.பிலாத்து சேவகர்களின் பக்கம் திரும்பினான்.

‘இவனை இழுத்துச் சென்று வாரினால் அடியுங்கள்’, என்றான்

அவர் அணிந்திருந்த வஸ்திரத்தைக் கழட்டினார்கள். இரு கைகளையும் தூணில் வைத்துக் கட்டினார்கள். அவரின் வேற்று முதுகில் சவுக்கடிகள் விழுந்தன. ஒவ்வொரு முனையிலும் கூர்மையான முட்கம்பிகளும் இரும்புக் குண்டுகளும் கட்டபட்டிருந்தன. அவர் சதைகள் கிழிபடுவதைக் காண முடித்தது. மனாசே நிலத்தில் முகங்குப்புற விழுந்து அழுதுகொண்டிருந்தான்.

மலாக்கி முண்டியடித்துக்கொண்டு மின்னே சென்றான். இயேசுவின் சதைகள் கிழிபட்டு இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. இப்போது மலாக்கி அவருக்கு மிகவும் அருகாமையில் இருந்தான். அவன் முகத்தில் ஏதோ தெறித்ததை உணர்ந்து முகத்தைத் துடைத்தான். தெறித்தது இரத்தம்! இயேசுவின் இரத்தம்!!

மீண்டும் அவரைப் பிலாத்துவின் முன் நிறுத்தினார்கள். அவன் “இதோ உங்கள் ராஜா”, என்றான்.

“இவனை அகற்றும்! சிலுவையில் அறையும்!” என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் குரல்கள் ஒலித்தன.

பண்டிகைதோறும் உங்களுக்கு ஒருவனை விடுதலையாக்குவது வழக்கமல்லவா? அவ்வாறு இவனை விடுதலை ஆக்குவேன்”, என்று பிலாத்து கூறினான்.

அப்போது, ” பரபாசை விடுதலை செய்யும்! இவனைச் சிலுவையில் அறையும்”, என்று பல குரல்கள் எழுந்தன.

“பரபாஸ் கலகக்காரன் அல்லவா?” என்றான் பிலாத்து. அப்போது ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. ‘இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்குச் சிநேகிதன் அல்ல. தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி”.

குரல் வந்த திசையைப் பிலாத்து வெறித்துப் பார்த்தான். அவன் முக நாடி மாறியிருந்தது. அவன் முகத்தில் பயம் தெரிந்தது.

மீண்டும் அவன் “உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா? என்றான்.

பிரதான ஆசாரியர்கள் இப்பொழுது முன்னே வந்தார்கள். “இராயனே அன்றி எங்களுக்கு வேறே ராஜா இல்லை”[, என்றார்கள்,

இராயனின் பெயரை அடிக்கடி உபயோகித்தது அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கழகம் அதிமாவதை அவன் உணர்ந்து, தண்ணீரை அள்ளி மக்களுக்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவினான்.

“இந்த நீதிமானின் இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்”,, என்றான்.

“இவனுடைய இரத்தப் அப்ழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக”, ,என்று கூட்டத்தில் இருந்து குரல்கள் எழுந்தன.

பிலாத்து அவசரமாய் மாளிகைக்குள் நுழைந்தான்; பரபாசை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான உத்தரவுகளை எழுதினான். பின்னர் வெளியே வந்து, அதனைப் போர்ச்சேவகர்களுக்கு நேராக வீசியெறிந்தான்.

தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவருடைய ஆடைகளைக் கழற்றி சிவாப்பான ஓர் அங்கியினை அவருக்கு உடுத்தினார்கள். முட்களினால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையின் மேல் வைத்தார்கள். ஒருவன் அவர் தலையின் மேல் தடியைக்க் கொண்டு அடிக்க அம்முள் முடி அவர் தலையில் ஆழமாக இறங்கியது.. அவர் நெற்றியில் இரத்தம் பெருகி வழிந்தது.

“ராஜாவே வாழ்க!”, என்று கூறியபடி அவரை அவன் கன்னத்தில் அறைந்தான். அவர் மேல் பாரமான சிலுவையைச் சுமத்தினார்கள். திரளான மகள் அவருக்குப் பின்னாக நடந்து சென்றார்கள். பெண்களும் அழுது புலம்பியபடி அவர் பின்னே சென்றார்கள். மனாசேயின் கண்களில் அருவியாக நீர் வழிந்துகொண்டிருந்தது. மலாக்கி அவனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு அவர்களோடு நடந்தான். இயேசு அப்போது அவர்கள் பக்கமாகத் திரும்பினார்.

“எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்… உங்களுக்காகவும் …உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ … மலடிகள் பாக்கியவதிகள் என்றும் … பிள்ளை பெறாத கர்ப்பங்களும் … பால் கொடாத முலைகளும் பாக்கியமுடையவைகள் என்றும்… சொல்லப்படும் நாட்கள் வரும்… அப்போது மலைகளை நோக்கி எங்கள் மேல் விழுங்கள் என்றும் குன்றுகளை நோக்கி எங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லத் தொடங்குவார்கள்.அச்சை மரத்துக்கு இதை இவைகளைச் செய்தால், … பட்ட மரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள்”, என்று கூறியவைகளைக் கேட்டு இந்த நிலையிலும் எப்படி இவரால் இவ்வாறு பேச முடிகிறது? என்று ஆச்சரியப்பட்டான், மல்லக்கி. மனித மண்டையோட்டை ஒத்த வடிவத்தில் இருந்த கொல்கொதா என்கிற இடத்தை அவர்கள் வந்தடைந்திருந்தார்கள்.

ரோமப் போர்ச்சேவகர்கள் அவரைச் சிலுவையின் மேல் கிடத்தி அவர் கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தார்கள். மலாக்கியால் அக்காட்சியைக் காண முடியவில்லை. அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். அவரோடு கூட மேலும் இருவர் அன்று சிலுவையில் அறையப்பட்டார்கள். கயிறுகளைக் கொண்டு அவருடைய சிலுவையை உயர எழுப்பி அதனைப் பள்ளத்தில் இறக்கியபோது அவர் உடல் குலுங்கியது. அவர் முகத்தில் தோன்றிய வேதனையையும் வலியையும் கண்ட மலாக்கியின் உள்ளம் வ்ச்தனையால் துடித்தது. மணாசேயோ ஏறக்குறைய மூர்ச்சை அடையும் நிலையில் இருந்தான்.

மலாக்கிக்கு அவர் ஏதோ பேச முயற்சிப்பது போல் தோன்றியது. அவர் முகத்தையே கூர்ந்து கவனித்தான்.

அப்பொழுது இயேசு : “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்வது இன்னெதென்று அறியாதிருக்கிறார்களே “, என்றார்.

மலாக்கி பிரம்மித்துப் பொய் நின்றான். இப்படியும் ஒருவரால் இருக்க முடுயுமா? என்று வியந்து நின்றான். வாரினாலே தன முதுகைக் கிழித்தவர்கள், முகத்திலே அறைந்தவர்கள், உமிழ்ந்தவர்கள், முள் முடி சூட்டியவர்கள் இன்னும் கைகளிலும் கால்களிலும் ஆணி அறைந்தவர்கள் இவர்களை எல்லாம் சபிக்காமல் மாறாக இவர்களுக்காக மன்னிப்பு கேட்கிறாரே. இவர் நிச்சயம் மனிதரே அல்ல. உண்மையில் இவர் தேவகுமாரன் தான் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

கடைசியாக அவன் கூறியது மனாசேயின் காதில் விழுந்தது. அவனும் ” ஆம்! இவர் தேவகுமாரன் தான்”, என்றான். இருவரும் சற்று தொலைவில் போய் அமர்ந்தார்கள். ஒன்பதாம் மணிவேளை வரை அந்த இடத்தை இருள் சூழ்ந்தது. மக்கள் கூட்டத்தினர் அச்சத்தினால் சிதறி ஓடினார்கள். மலாக்கியும் மணாசெயுமோ செய்வதறியாது உட்கார்ந்தபடியே இருந்தனர்.

இயேசு: பிதாவே… உம்முடைய கைகளில்…. என் ஆவியை… ஒப்புவிக்கிறேன்”, என்று மகா சத்தமிட்டுக் கூறியதை அவர்கள் கேட்டார்கள்; அவரருகே ஓடிவந்து பார்த்தார்கள்; அவர் தலை சரிந்திருந்தது; அவர் உயிர் பிரிந்திருந்தது.

மிகுந்த துக்கத்தோடே அவர்கள் நடந்து வந்தார்கள். இருவருக்கும் நா வறண்டுபோய் இருந்தது. அருகே ஒரு குளம் இருக்கக் கண்டு நீர் அருந்த அதில் இறங்கினார்கள். மனாசே திடீரென்று மலாக்கியின் முகத்தைப்பிடித்துத் திருப்பினான்.

“மலாக்கி! அந்த தழும்பு … உன் முகத்தழும்பு ….”

“அதற்கென்ன இப்போது! அது தான் சிறுவயதில் இருந்தே என் முகத்தில் இருந்து வருகிறதே”, என்றான் வெறுப்பாக.

” அது இல்லை…”

‘பின் வேறென்ன?”

“அது இல்லை… இப்போது உன் முகத்தில் அது இல்லை”.

“மனாசே! என்ன உளறுகிறாய்?, என்றவன் எதேச்சையாகத் தன பிம்பத்தைத் தண்ணீரில் பார்த்து அதிர்ந்து போனான். இயேசுவின் இரத்தத்துளிகள் அவன் முகத்தில் தெறித்தது அவன் நினைவுக்கு வந்தது. என்ன அதிசயம்!@ அப்படியானால் அவர் எவ்வளவு வல்லைமையுள்ளவர்! என் அவரின் குணமாக்கும் அன்பு!!

“மனாசே! ஒரு மனிதன் இயேசுவுக்கு விரோதமாய் சாட்சி சொன்னானே! நினைவிருக்கிறதா? இந்தத் தேவாளையத்தை இடித்துப் போடுங்கள். மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்ட என்னாலே ஆகும்”.

“ஆம் மலாக்கி! அதற்கென்ன?”

“அதன் பொருள் எனக்குப் புரிந்து விட்டது .அவர் குறிப்பிட்டது எருசலேம் தேவாலயத்தை அல்ல. .. அவர் சரீரத்தை… அப்படியானால்… ஆம் மனாசே! இன்னும் மூன்று நாட்களில் அவர் உயிர்த்தெழுந்து விடுவார்,” என்றான்.

அவர்களின் முகங்களில் நம்பிக்கையின் ஒளி படர்ந்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “குணமாக்கும் அன்பு

  1. Unmaiyagavae en karthar. En yesu. En kirusthu endrum jeevikkirar. Avarudai anbu endrum maaradha anbu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *