கானகத்திலே காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 18,923 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் பாகம் | இரண்டாம் பாகம்

1. சதிகாரர்கள்

உல்லாசவனத்திலே ஜமீந்தார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் அருகே அடியார் சிவப்பழமும் அமர்ந்திருந்தார். ஜமீந்தார் முகத்தில் கோபம் கொதித்துக்கொண்டிருந்தது. சிவப்பழம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். ஜமீந்தாரின் அந்தரங்க ஆலோசனை யாளர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

அடர்ந்து வளர்ந்த செடிகளின் பசுமையும், அவற்றின் இளம் இலைகளின் தலையை வருடி, மலர்ந்த மலர்களை அணிந்து, குறு குறுவென்று வந்து வீசும் நறுமணத் தென்றலும், நல்ல நிலவின் அழகிய ஒளி யும் எதுவுமே ஜமீந்தாரின் கோபத்தை ஆற்றக் கூடிய தாக இல்லை. எதுவுமே சிவப்பழத்தின் சிந்தனையை மாற்றக்கூடியதாகவும் இல்லை.

இளைய ஜமீந்தாரை யாரோ ஊர்பேர் தெரியாத கூட்டத்தினர் கவர்ந்து சென்றனர் என்றதுமே சிவப் பழத்தின் தலையில் சிந்தை வந்து புகுந்துகொண்டது. அவர் இன்னும் இளைஞர். இளமையின் குருட்டு வெறி யிலே சிவனடியாரானவர். ஆசாபாங்களின் அவல நினைவுகளை ஒழிக்க முயன்று முயன்று அதிலே அடைந்த பயங்கரத் தோல்விகளால் அவர் நைந்து போயிருந்தார். பாவம்! இளைய ஜமீந்தார் சிறைப் பட்டார் என்றவுடனே ” ஐயோ அப்படியா……நான் போய் இளவரசின் மனைவி இந்திராணியைப் பார்த்துத் தேறுதல் கூறுகிறேன்,” என்று சொல்லிவிட்டுப் புறப் படத் துடித்தார். ஆனால் ஜமீந்தாரின் கோபத் தீயைக் கிளறக்கூடிய செய்திகள் அந்த வேளையில் வந்துசேர வேண்டும்.

கமலகிரிக் கோட்டையை முதல்நாள் அந்தக் கொடியவர்கள் தாக்கினர். அன்று பட்டப் பகலில் சமதிபுரம் கிராமத்திற்குத் தீயிட்டுவிட்டனர். இதற் கிடையிலே ஜமீந்தாரிடமிருந்து அரசருக்கு ஓலை கொண்டுபோன தூதுவர்களை வேறு நன்றாக உதை உதை என்று உதைத்து ஓலையையும்பறித்துக்கொண்டு துரத்தியிருக்கின்றனர்.

இந்தக் காரியங்களை யார் செய்திருக்கக்கூடும் என்பது தான் அவருக்குப் புரியாத மர்மமாக இருந்தது இதுவரை யாருமே மகாவல்லமை நிறைந்த ராஜாதி ராஜ ரணசிங்க பூபதியை இவ்வளவு கட்டுப்பாடாக, பயங்கரமாக எதிர்த்தது கிடையாது. இந்தப் பொடிப் பயல்கள் எங்கே இருந்து முளைத்திருக்கிறார்கள் என் பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பூலோகத்திலேயே அவருக்கிருந்த ஒரே எதிரி கருணாகர பூபதி, அவர்தான் எல்லா விதங்களிலும் அவருக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே வந்தார், அரசாங்கத்தைக் கைப்பற்ற அவர் செய்து வந்த சதியைப்பற்றி அம்பலப்படுத்தக்கூட முயன்றுவிட் டார். அந்தச் சதிகாரனைத்தான் கூண்டோடு கைலா சம் அனுப்பியாயிற்று. வேறுயார்தான் இப்போது திடுதிப்பென்று இப்படி முளைத்திருக்கிறார்கள்…?

இந்த எதிர்ப்புகளைப் பற்றிச் சிறிதுக்கூட கவலைப் படுபவர் அல்ல ஜமீந்தார். இதுவரை எத்தனை எதிர்ப்பு களை அவர் முளையோடு கிள்ளி எறிந்திருக்கிறார். இதற்கு மாத்திரம் பயந்துவிடவா போகிறார்.ஆனால்…

சட்டென்று அவர் மனசில் வேறொரு சந்தேகம் தோன்றியது. கருணாகரரின் படையைச் சேர்ந்த ஆட் கள் தான் இப்படி மறைந்து நின்று தம்மைத் தாங்கு கின்றார்களோ என்று நினைத்தார். அவ்வளவு தான்

கோபம் அவருடைய உச்சந்தலைக்கு ஏறிவிட்டது… “விட்டேனா பார்…துரோகிகளை…இந்த ரணசிங்கன் எதிரிகளின் சிறு குஞ்சைக்கூட மிஞ்சவிடமாட்டான்.” என்று கத்திக்கொண்டு எழுந்தார். –

“எங்கே புறப்பட்டுவிட்டீர்கள்……?” என்று கேட்டுக்கொண்டே கூடவே எழுந்தார் சிவப்பழம். –

“ஆமாம்…… இப்போதே புறப்பட்டால் தான் என்ன …….?”

“ஜமீந்தார்…இப்போது வேண்டாம். காலையில் வைத்துக்கொள்வோம், எதையும் கவனித்து நிதான மாகச் செய்வது தான் அறிவுடையோருக்கழகு…”

ஜமீந்தார் ஒருகணம் யோசித்தார். ” உம்ம்……. நீங்கள் அரசரின் ஆலோசகர் என்பதற்காவது உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும். ஆனால் காலையில் என்னை எதிர்பார்க்கவேண்டாம், பொழுது விடிவதற்கு முன்பே நான் புறப்பட்டு விடுவேன்…”

“ஐயாவுக்கு எவ்வளவோ அலுவல்கள்…இந்த ஏழையைக் கவனித்துக்கொண்டிருக்க முடியுமா…?’

ஜமீந்தார் சிரித்துவிட்டார். ” அதென்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்…?” ,

இலேசான புன்னகையுடன் சிவப்பழம் கூறினார், ” உண்மையைத்தான் சொன்னேன்…”

“அது என்ன…? அடியார்கள் எதைச் சொன்னா லும் உண்மையாகிவிடுமா….?”

“உலகம் இப்படி இருக்கிறது ஐயனே…? யார் என்னத்தைச்சொல்ல. சரி…நீங்கள் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். பாவம்… இந்திராணி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்த்துவிட்டு வரு கிறேன்…”

“ஆமாம் ஆமாம்……. நானும் அதைச் சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன். பாவம்…அவள் அழுது செத்துக்கொண்டிருப்பாள்……”

ஆண்டையும் அடியாரும் விடைபெற்றுக்கொண்டனர்.

2. இந்திராணி

இந்திராணி அழுது செத்துக்கொண்டிருக்கவில்லை சுகமாக அலங்கரித்துக்கொண்டு மஞ்சத்தின் மேல் சாய்ந்தவாறு தோழிகளுடன் பேசிச் சிரித்துக்கொண் டிருந்தாள். அவர்கள் ஆடியும் பாடியும் தலைவியை மகிழ்வித்துக்கொண்டிருந்தனர்.

சிவப்பழம் திடுக்கிட்டவர்போல் நின்றார். ” வருக வருக…அடியார் வருக…” என்று கூவிக்கொண்டு குதித்தெழுந்து வரவேற்றாள் இந்திராணி. சிவப்பழம் ஒருகணம் யோசித்தார். ‘ நல்லது. இவளுக்கு கண வனுக்கு வந்த கதியைப்பற்றி ஒன்றும் தெரியாது போலிருக்கிறது. இதை நாம் ஏன் கூறவேண்டும்’ கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கவாவது வாய்ப்புக் கிடைக்கட்டும் என்று நினைத்தவாறு அவளைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டு நின்றார். ஆனால் இந்திராணியே ஆரம்பித்துவிட்டாள். “உங் களுக்குத் தெரியுமா…? அவரை யாரோ பிடித்துக் கொண்டுபோய்விட்டார்களாம்….”

ஒன்றும் தெரியாதவர்போல் கேட்டார் சிவப் பழம்…” எவரை …?”

“அவரைத்தான், இளைய ஜமீந்தாரை…” ” என்ன…? இளைய ஜமீந்தாரையா…?” ” ஆமாம்…” ‘யார் பிடித்துக்கொண்டு போய்விட்டார்களாம்?’ “யாரோ கானகத்துக் கள்வர்கள்……?” சிவப்பழம் காதுகளைப் பொத்திக்கொண்டார். ” என்ன விபரீதமான செய்தி…? இப்படியும் நடை பெறுமா…?”

“ஏன் நடைபெறாது…? ஏமாந்த சோணகிரியாய் ….. சோனியாய்…”

“அடடா…என்ன கஷ்டகாலம். இந்திராணி கண்கலங்க அழுதிருப்பாய்…அது தான் உன் கண்கள் சிவந்திருக்கின்றன….’ –

“இல்லவே இல்லை……! நான் எதற்காக அழ வேண்டும்…?”

“எதற்காக அழவேண்டுமா…? இந்திராணி என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்…? எனக்கு லௌகீகம் தெரியாது என்று நினைக்கிறாய். புகழேந்தி நளனைப் பிரிந்த தமயந்தியை எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா… பாடிக்காட்டட்டுமா…? ”

“வேண்டாம் வேண்டாம். நீங்கள் பேசினாலே போதும்…”

“உனக்கு இன்னும் குழந்தைத்தனம் போக வில்லை. அது தான் குதூகலமாய் இருக்கிறாய்…”

“இல்லவே இல்லை உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். அப்பா தமது கஷ்டகாலத்தில் என்னைப் பிடித்து இந்தப் பாழும் கிணற்றில் தள்ளினார். சுருக்க மாகச் சொன்னால் என்னுடைய தாயின் மேல் இருந்த ஆசையினால் ஜமீந்தார், மகனுக்கு என்னை மண முடித்துக்கொண்டார் ”

“சிவசிவா… இது என்ன வேடிக்கை …!”

“வேடிக்கை இல்லை ஸ்வாமிகளே, உண்மைதான். கேளுங்கள். எனக்கு உண்மையில் இந்த இளைய ஜமீந்தார் மதுபாலனைவிட இரண்டு, மூன்று வயது அதிகமாகக்கூட இருக்கும்…… இந்த லட்சணத்தில் அவருக்கு என்னிடத்திலே துளிக்கூட ஆசை இல்லை, ஏதோ நாங்கள் இருவரும் ஒப்புக்குத்தான் கணவன் மனைவிகளாய் இருக்கிறோம். எங்களுடைய வாழ்க்கை எப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கக்கூட முடியாது. இந்த சங்கடம் எப்படியாவது ஒழிந்துபோனால் போதும் என்பது தான் என் ஆசை …..”

“இந்திராணீ……உண்மையில் இவை எல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது…”

“துறவிக்கு ஆண் பெண் உறவுகளின் இரகசியம் எப்படித்தான் தெரியப்போகிறது….? ” இந்திராணி சிரித்தாள். சிவப்பழத்தின் முகத்திலும் புன்னகை அரும்பியது. ” தெரிந்துக்கொள்ள ஆசைதான். ஆனால்…” என்று இளித்தார்.

இந்திராணி கைகொட்டிச் சிரித்தாள். “ அப்படிச் சொல்லுங்கள் ஸ்வாமிகளே அப்படிச்சொல்லுங்கள்… கமலா அடியாருக்கு பாலும் பழமும் கொண்டுவா…

அடியார் நம்மைப்போல் சக்கைகளைத் தின்னமாட்டார் சத்துள்ள உணவைத்தான் அருந்துவார்…” என்று கேலி செய்தாள் அடியாரின் முகத்தில் அசடு வழிந் தது. இருப்புக்கொள்ளாமல் இருந்தார் ஒரு சுகாச னத்தின்மேல். மதுபாலன் இந்திராணி இருவருக்கும் சரியான உறவுகிடையாது என்பது சிவப்பழத்திற்குத் தெரியும். அதனாலேயே அவர் மற்ற பெரிய இடத்துப் பெண்களின் மேல் வைத்திருப்பதைப்போல் அவள் மேலும் ஒருகண் போட்டுவைத்திருந்தார். ஆனால் இந்தக் கைக்கு எட்டாத கனி இவ்வளவு சீக்கிரத்தில் தானாகக் கனிந்து தரைமேலும் விழாமல் மடிமேலேயே விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை…

அடியார் எப்படி உருகுகிறார் என்பதை நோட்டம் பார்த்தாள் இந்திராணி. புலன்களை அடக்கி உடலை வாட்டிவந்ததால் காய்ப்பேறிப்போயிருந்த அவருடைய கனத்த சரீரத்தை அவள் பார்த்தாள். இந்த மனிதன் உடல் ஆசையில் இப்படி ஆய்விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் சிரித்தாள். அவரும் சிரித் தார். அவர்களுடைய சல்லாபப் பேச்சுக்கிடையே சனியன் போல் வந்து விழுந்தான் மதுபாலன்.

அவன் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. செடிகளுக்கிடையே இருந்து புதிய ஆள் ஒருவன் வரு வதைக்கண்டதும் யாரோ வேலைக்காரன் என்று நினைத் தார்கள். அருகில் வந்தும் கூட அவனை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ” ஏது…? அடி யார் இவ்விடத்தில்…?” என்ற கேள்விக் குரலைக்கேட் டதும் அடியாருக்குத் தூக்கி வாரிப்போட்டது. பேச வாயே வரவில்லை. ஆனால் இந்திராணி அயர்ந்துவிட வில்லை…” யார் நீங்களா…? ஐயோ…எனக்குப் போன உயிர் திரும்பிவந்தது. இரண்டு நாட்களாய் நான் உயிருடன் இருக்கவே இல்லை…! நடமாடும் பிணமாக இருந்தேன்…” என்று அவள் பாட்டிற்கு அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டாள். அவள் எவ்வளவு சாமர்த்திய மாக நடிக்கிறாள் என்பதைக் கவனித்தார் சிவப்பழம். அவனோ அவளைக் கவனிக்கவே இல்லை. ” என்ன அடி யார் பேசவேமாட்டேன் என்கிறார்….” என்றான்.

“அப்பா…உன்னைப்பார்த்த அதிசயத்தில் எனக்கு நாவே எழவில்லை அப்பா. இந்திராணிக்குச் சற்று ஆறுதல் கூறலாம் என்று வந்தேன். சென்ற இட மெல்லாம் சொந்த இடம்தானே எனக்கு…?” என்று பரமார்த்திகக்குரலில் பேச ஆரம்பித்தார்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்…! அப்படித் தானே…?” என்றான் மதுபாலன்.

அவன் குரலில் ஏளனம் கலந்திருப்பதை சிவப் பழம் கவனித்தார். பாலும் பழமும் கொண்டுவந்த பணிப்பெண் வீட்டு எஜமானனைக்கண்டு திகைத்து நின்றாள்.

இந்திராணி பரபரப்புடன் சென்று அவள் கையி லிருந்த தட்டை வாங்கிக்கொண்டு, ” போடீ…ஓடிப் போய் ராஜாவுக்கு உணவு கொண்டு வா……ஐயோ இரண்டே நாட்களில் என் துரை எப்படி இளைத்துப் போய்விட்டார். சிறிது நேரம் என் கண் பார்வை இல்லாவிட்டால் இவருக்கு இப்படித்தான் எப்படி இருக்கிறார் என்று பாருங்களேன்…” என்று அடி யாரைத் துணைக்கு அழைத்தாள்.

“இதிலென்ன அதிசயம் இந்திரா…மாதாவுக்குப் பின்னால் மனைவியே அல்லவா…?” என்று உருகினார் அடிகள் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. “இந்திராணீ… உன் கணவன் உனக்கு வந்து விட்டார். அன்புக் குஞ்சுகள் ஆனந்த வெள்ளத்தில் நீந்திக்கிடக்கட்டும். நான் வருகிறேன்……” என்று கூறிக்கொண்டு மெல்ல நழுவப்பார்த்தார்.

“எங்கே ஸ்வாமிகளே ஓடுகிறீர்…? இன்றிரவு இங்கேயே சாப்பிட்டுவிட்டு இங்கேயே தங்கலாம்…’ என்று கூறினான் மதுபாலன்.

3. கடமை …..!

பொழுது விடிந்ததும் விடியாததுமாகப் படுக்கை யில் கிடந்தவாறே இரண்டு குதிரைகளைத் தயார் செய்யும்படிக் கட்டளையிட்டான் மதுபாலன். அத் துடன் மெய்ப்பாதுகாப்பாளர்களை எச்சரிக்கும்படியும் கட்டளையிட்டான். ” அதற்குள் எங்கே ஓடிவிடப் பார்க்கிறீர்கள்…என்னை விட்டுவிட்டு…” என்று கூறிக் கொண்டு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் இந்திராணி. அவன் எதையோ நினைத்துக்கொண்ட வன்போல் துள்ளி எழுந்தான். குளிக்கும் அறையை நோக்கி ஓடினான். முணுமுணுத்துக்கொண்டே பின் னாள் எழுந்துவந்தாள் இந்திராணி. அப்பொழுது தான் கண்களைக் கசக்கிக்கொண்டு வெளியே வந்துகொண் டிருந்தார் சிவப்பழம். இந்திராணியைப் பார்த்ததும் அவருக்கு குறும்பாக ஏதாவது சொல்லவேண்டும் என்ற குறுகுறுப்பு உண்டாயிற்று. ஓரக்கண்களால் பார்த்தவாறு, ‘ராத்திரி நல்ல இரவாக இருந்ததென்று நினைக்கிறேன்…’ என்றார்.

“நல்ல இரவுதான்…… நல்ல இரவு……. சனி யன் வந்து தொலைக்காமல் இருந்தால் நல்ல இரவாக இருந்திருக்கும்…” என்று எரிந்து விழுந்துகொண்டே அவருக்குமாத்திரம் புன்னகையை அளித்தவளாய் நடந்துசென்றாள் இந்திராணி.

சிவப்பழம் சொக்கிவிட்டார். குளிப்பதைக்கூட மறந்து நின்ற இடத்திலேயே, நிலைமறந்து நின்று கொண்டிருந்தார். குளித்து விட்டு வந்த மதுபாலன் அவர் தோளின் மேல் கையை வைத்து,” நேரமாகிறது அடிகளே…ஓடிப்போய்ச் சீக்கிரம் குளித்துவிட்டு வாருங்கள் …” என்றான். அடிகள் நடந்தார்.

இருவரும் குளித்துச் சிற்றுண்டி அருந்தவும் குதிரைகள் தயராய் வந்து நிற்கவும் சரியாக இருந்தது “சரி…புறப்படுங்கள் ” என்றான் மது பாலன். – எங்கே…” என்று கேட்டார் அடிகள். பெரிதாகக் குரலெடுத்து கூப்பாடு போட்டுக்கொண்டு வந்தாள் இந்திராணி. ” நீங்களே சொல்லுங்கள் ஸ்வாமி. இப்போது தான் எங்கேயோ சாவின் தலைவாசல் ஏறி மீண்டும் வந்தார். அதற்குள் மீண்டும் என்னைப் பர தவிக்கவிட்டுப் போகிறேன் என்று நிற்கிறாரே இது இவருக்கு நியாயமா – இவரை மணந்துகொண்டு இப் படித்தினம் தினம் சாகாமல் செத்துக்கொண்டிருக்க யாரால் முடியும்…?” என்றாள்.

“நீயாவது என்னை மணந்துகொண்டு சாகாமல் செத்துக்கொண்டிருக்கிறாய். உன்னை மணந்துகொண் டதில் நான் செத்த வாழ்க்கையையே நடத்துகிறேனே …அதற்கு என்ன சொல்கிறாய்….? ” என்றான் மதுபாலன்.

இந்திராணிக்குக் கண்களில் நீர்வந்துவிட்டது… பாருங்கள் ஸ்வாமி…பாருங்கள்…. ஒரு மனைவியிடம் கணவன் பேசும் வார்த்தைகளைப் பாருங்கள் …” என்று கூறிக்கொண்டு கண்களைக் கசக்கினாள்

மதுபால்னுக்குச் சிரிப்புவந்துவிட்டது “. இந்தி ராணி… யாரிடம் பாசாங்கு செய்கிறாய்…? உன்னைத் தெரியாதா எனக்கு…சரிசரி தெரியாதவன் போலவே நடிக்கிறேன். அதுதான் நல்லது…” என்றான்.

“என்ன தெரிந்துவிட்டது உங்களுக்கு…?” இந்தி ராணி கூச்சலிட்டாள்.

மதுபாலன் சிரித்துக்கொண்டே -…” இப்போது ஏன் கூச்சலிடுகிறாய் போ உனக்குப் பிடித்தமான தோழிகளுடன் பிடித்தமான கேலிகளைப் பேசிக்கொண் டிரு போ..” என்று கூறிவிட்டு குதிரையை நோக்கி நடந்தான் வேறுவழி இல்லாமல் சிவப்பழமும் பின்னால் நடக்கவேண்டியவரானார்.

அதிகாலை நேரத்திலே இரு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்த சாலையின் வழியாக அவர்கள் சென்றனர். நகர்ப்புறம் கடந்ததும் அழகிய பசிய நாற்றுகள் நிறைந்த வயல்கள் பொன்னொளி ஏற்றுக்கிடந்தன. தலைக்கு மேல் மரங்களிலிருந்து கிளிள் பிழற்றின. தூரத்திலே மலைகள் இளநீலச் சிற்பங்களாய் நின்றன. மதுபாலன் குதிரையை இழுத்துப்பிடித்து மெதுவாக நடத்தினான். இருவரும் குதிரைகள் மேல் கவனமற்றுத்தம்போக்கில் வீட்டவாறு பேச ஆரம்பித்தனர்.

“அடிகளுக்கு வாழ்க்கையின் ரகசியம் நன்றாகத் தெரியும். இல்லையா?”

“எனக்குத் தெரிந்தவரை வாழ்க்கை என்பதில் எந்த ரகசியமும் இல்லை…”

மதுபாலனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ” என்ன அப்படிச் சொல்கிறீர்கள்…?”

“உண்மையைத்தான் சொல்கிறேன். மனிதன் பசித்தால் சாப்பிடுகிறான். தாகம்வரும்போது குடிக் கிறான் மோகம் வந்தால் துணை தேடுகிறான். இவற்றில் எதிலும் வெற்றியும் தோல்வியும் அவன் மனத்தைப் பொறுத்தே இருக்கிறது.

“அப்படியானால் இதைப்போல் துறவு வேஷம் போடுவானேன்…?”

சிவப்பழம் அவனைத் திரும்பிப்பார்த்தார். சிரித்துக் கொண்டே, “ இந்தக் காலை நேரம் என்னை உண்மை பேசத்தூண்டுகிறது. தவிர உன்னிடம் சொல்வதால் என்ன…? இந்த வேஷம் வாழ்க்கை சௌகரியமாய்க் கழிய உதவுகிறது என்பதால் தான்…

“புண்ணியம் பாவம் என்பதெல்லாம் பொய் தானா…?”

“இந்தக் கேள்விக்கு ஏற்கனவே விடை அளித்து வீட்டேன். எல்லாம் மனதைப் பொறுத்ததுதான்…”

“பின் எந்த அடிப்படையில் சமுதாய நீதியை அமைத்திருக்கிறார்கள்…”

“பெரிய மனிதர்கள் தங்களுக்குச் சவுகரியமான வழியில் சமுதாய நீதியை அமைத்தார்கள். மதம் அதற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது அவ்வளவுதான்”

“மதம் என்பது தான் என்ன…? ”

“ஒரு திரை……”

“அப்படி என்றால்…” ‘தயவுசெய்து விளக்கம் கேட்கவேண்டாம்.”

“சரிசரி…எதையோ கேட்க வந்தேன். எதையோ கேட்டுவிட்டேன். அடிகளே உண்மையாகச் சொல்லுங் கள் இன்பம் என்பது தான் எதில் இருக்கிறது?”

“அது உனக்குத் தெரியும் ..” ” எனக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது ”

“சந்தேகம் வேண்டாம். ரசம் நிறைந்த ரோஜா இதழ்களில் பூர்த்தி பெற்று நிமிர்ந்து நிற்கும் அமுத கலசங்களில், மயல் நிறைந்த கண்களில்…மென்மை யான ஒரு எழில் மடந்தைதான் ஆடவனுக்கு இன்பத் தின் பொருளாய் இருக்கிறாள்…”

“அப்படியானால்…”

“மதுபாலா…வீண் சந்தேகப்படாதே. இந்திராணி ஒரு இன்பக் களஞ்சியம்……’

“ஆனால்……”

“உன்னால் அவளைப் புரிந்து கொள்ள முடியவீல்லை …”

” என்னால் அவனைக் காதலிக்கவே முடியவில்லை…”

“மனதைச் சரிப்படுத்திக்கொள் சரியாகிவிடும்…”

மதுபாலன் சிந்தனையில் ஆழ்ந்தான். பேசவில்லை. சிவப்பழம் கேட்டார். ” ஆமாம் இப்போது எங்கே

இந்தத் திடீர்ப் பிரயாணம்….”

“ஒரு கடமையை நிறைவேற்ற…’

“என்ன கடமை …? ”

“சொல்கிறேன்…”

4. இரகசியம்…!

சூரியன் உச்சியை நெருங்கிக்கொண்டிருந்த சமயம் அவர்கள் ககனபுரியை அடைந்தனர். வெகு தூரத்திற் கப்பாலிருந்தே, அங்கே எரிந்து கிலமாகி நின்ற கருணா கரரின் மாளிகை தெரிந்தது. மாளிகையில் மூன்றாவது அடுக்கு மாடி பூராவும் விழுந்துவிட்டது. இரண்டாம் அடுக்குள் சில பகுதிகள் அப்படியே நின்றன பளிங்குச் சுவர்கள் புகைமண்டி, ஒரு கரிய ராட்சசன் நிற்பது போன்ற தோற்றத்தை அது அளித்தது. அந்த மாளிகை கண்ணுக்குத் தெரிந்ததுமே மதுபாலன் உணர்ச்சி வசப்பட்டுவிட்டான். குதிரையை நிறுத்தி ஒருகணம் கண் கொட்டாமல் அதைப்பார்த்தான். சிவப் பழமும் குதிரையை நிறுத்தினார். பிறகு மெதுவாக அவர்கள் குதிரையை நடத்தினர். சிவப்பழத்திற்கு அந்த கதை பூராவும் தெரியும். ஆனால் அவர் பேச வில்லை. மதுபாலன் கேட்டான், ” எரிந்து கிலமாகிக் கிடக்கும் அந்த மாளிகையைப் பார்க்கும்போது அடி யாருக்கு என்ன தோன்றுகிறது..?”

கர்வம் நிறைந்த குரலில் அடியார் கூறினார். ” இதைப்போன்ற அவலங்கள் சன்யாசி வாழ்க்கையில் கிடையாது என்று…”, என்று.

மதுபாலன் வெறுப்புடன் அவரைநோக்கித் திரும்பி னான். 14 ஊரை ஏமாற்றித திரியும் உங்கள் சன்யாசி வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரியும். ஐயன்மீர்… பிரபுக்கள் அனுபவிக்கும் போகபோக்கியங்களும் எல்லா சுகங்களும் உங்களுக்குக் கிடைக்கின்றன ஆனால் அவர் களுக்குச் சில சமயங்களில் வரும் தாழ்வுமாத்திரம் உங்களுக்கு எப்போதுமே கிடையாது கிடக்கட்டும். அதை நான் கேட்கவில்லை, இந்த அழிவுச் சின்னங்கள் எதனால் தோன்றுகின்றன என்று கேட்டேன்,” என்றான்.

சிவப்பழம் அவன் கோபத்திற்கு அஞ்சினார். அவரைப் போன்றவர்கள் யாருடைய கோபத்திற்கும் ஆளாகமாட்டார்கள். அதனால் இதமான குரலில் கூறினார், ” மதுபாலா…ஆக்கமும் அழிவும் இயற்கை யின் நியதிகள்…”

“இது இயற்கையால் நேரவில்லையே…?” “ எதுவுமே இயற்கையை மீறி நடப்பதில்லை…”

“அப்படியானால் தங்கள் சித்தாந்தத்தின் அர்த் தம் என்ன? அழுபவன் அழுது கொண்டே இருக் கட்டும். அடிப்பவன் அடித்துக்கொண்டே இருக் கட்டும் என்பது தானே…?”

“சமுதாயம் அப்படித்தான் இருக்கிறது.”

மதுபாலனுக்குச் சிரிப்பு வந்தது. அதை நான் கேட்கவில்லை. துறவிகளிலே நீங்கள் கொஞ்சம் விசித் திரமானவர். சில சமயங்களில் உண்மையும் பேசிவிடு கிறீர்கள் என்பதனால் கேட்கிறேன்.

சிவப்பழம் இடைமறித்தார். ” அப்படியானால் துறவிகள் எல்லாம் பொய்யர்களா…? ”

“இல்லாத கடவுளைக் கண்டதாய்ப் பொய்கூறு வது-அவரைப் பற்றிக் கதைகள் திரிப்பது-உணர்ச்சி களை வெல்வதாய்ப் பாசாங்கு செய்வது, இவை எல் லாம் வேறென்னவாம்? உங்களுடைய அபிப்பிராயங் களும் இவைதானே…?”

சிவப்பழம் பேசவில்லை.

அழிந்து கிடந்த அந்த மாளிகையை அவர்கள் நெருங்கிவிட்டனர். காவலர்கள் அவர்களை வணங்கி வழிவிட்டனர். குதிரையை மெல்ல நடத்தியபடியே அதன் இடையிலே புகுந்து சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தான் மதுபாலன். பாதி எரிந்து அவிந்த மரக் கட்டைகள் கரும் மலைப் பாம்புகள் போல் கிடந்தன. சுவர்கள் பல இடங்களில் பாதி இடிந்தும், உத்திரங் கள் பெயர்ந்தும் அலங்கோலமாகக் கிடந்தன. இன் னும் சில இடங்களில் அனல் வாடை வீசிக்கொண் டிந்தது. காற்றிலே சாம்பல் பறந்தது. ஒரு இடத் திலே இங்கும் அங்குமாக எலும்புக் குவியல்கள் கிடந் தன. ஆடு, மாடு, குதிரைகளினுடையதைப்போல் மனிதர்களுடைய எலும்புக்கூடுகளும் காணப்பட்டன. ” இந்த எலும்புக் கூடுகளிலே கருணாகரருடையது இது, வேலைக்காரர்களுடையது இது என்று யாரா வது கண்டுபிடிக்க முடியுமா…? சாவு மனிதனைச் சரி சமமாக்கிவிடுகிறது…” என்றான் மதுபாலன். சிவப் பழம் பேசவில்லை.

அவர்கள் மாளிகையைவிட்டு வெளியே வந்தனர். நகரின் முதல் வீதிக்குள் புகுந்ததுமே கண்ட காட்சி அவர்களைத் திடுக்கிடச்செய்தது. அங்கே மரங்களில் வரிசையாக ஆண்களையும் பெண்களையும் கட்டி வைத் திருந்தனர். அவர்களுடைய உடல்களில் அடிபட்ட காயங்களிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இன்னும் வீரர்கள் அவர்களில் சிலரைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தனர்.” நிறுத்துங்கள் ” என்று கூச்சலிட்டான் மதுபாலன். வீரர்கள் திடுக்கிட்டு நின்றனர். சாட்டையைச் சுழற்றியவாறு. “ஏன் இவர்களை அடித்தீர்கள்…” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

“ஜமீந்தாரின் உத்திரவு எஜமான்…

“மடையர்களா அடி என்றால் இப்படித்தான் அடிப்பதா…? நீங்கள் என்ன மனிதர்களா அல்லது….”

“எத்தனை அடித்தாலும் அவர்கள் சொல்ல மாட் டேன் என்கிறார்கள் எஜமான்…”

“என்னத்தைச் சொல்ல மாட்டேன் என்கிறார் கள்…?”

” அந்தத் திருடர் கூட்டம் எங்கே இருக்கிற தென்பதை…”

“ஓ……!” மதுபாலன் ஒருகணம் யோசித்துக் கொண்டு நின்றான். பிறகு ” அவர்களை அவிழ்த்து விடுங்கள்…”

வீரர்கள் தயங்கினர், “எஜமான் உத்திரவு எஜமான்…”

“நான் உத்திரவிடுகிறேன். அவர்களை அவிழ்த்து விடுங்க ள்….’

“யார் உத்திரவிடுவது அங்கே ……..” என்று கேட்டுக்கொண்டே ஜமீந்தாரும் வீரர்கள் பலரும் குதிரைகளின் மேல் அங்கே வந்தனர், மதுபாலன் நிமிர்ந்து பார்த்தான். “யார் மதுபாலனா அது….? எப்போது வந்தாய்?” என்று ஆச்சரியத்துடன் கேட் டார் ஜமீந்தார்.

“நேற்றிரவு வந்தேன் .” என்றான் மதுபாலன் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

“பின் ஏன் என்னிடம் வரவில்லை. இந்திராணி யிடம் ஓடிவிட்டாயாக்கும். பயல்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டாலே பிறகு அவர்கள் பெற்றோர்களை மதிப்ப தில்லை…என்ன ஸ்வாமிகளே…” என்று சிவப்பழத்தை நோக்கிச் சிரித்துக்கொண்டு கேட்டார். சிவப்பழமும் UUஹீ…என்று பல்லை இளித்து வைத்தார்.

“ஏன் நிற்கிறீர்கள்…? உதையுங்கள்! இன்னும் நன்றாக உதையுங்கள்! அந்தத் திருட்டுக் கூட்டம் எங்கே இருக்கிறதென்பதைக் கூறும் வரை உதையுங் கள்…” என்று வீரர்களை நோக்கிக் கட்டளையிட்டார் ஜமீந்தார்.

“வேண்டாம். அந்தக் கூட்டம் எங்கே இருக்கிற தென்பது எனக்குத் தெரியும், அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். இவர்கள் பாவம் ஒன்றும் தெரியாதவர்கள். விட்டுவிடுங்கள்…” என்று கூவினான் மதுபாலன்.

” உனக்குத் தெரியுமா…..அப்படியானால் சரி… விட்டுவிடுங்கள்……” என்று கட்டளையிட்டார் ஜமீந் தாரும். “நாங்கள் ஊர் திரும்புகிறோம். என்னோடு வருகிறாயா…” என்று கேட்டார். ” இல்லை நாங்கள் சிறிது தாமதித்து வருகிறோம்” என்றான் மதுபாலன்.

ஜமீந்தார் தன் பரிவாரங்களுடன் கிளம்பிவிட் டார். மதுபாலனும் சிவப்பழமும் வேறு வழியில் திரும்பினர்.

மதுபாலன் மெல்லிய குரலில் கேட்டான் “ஸ்வாமி களே…வலியாரின் கரங்களில் பட்டு பாவம், இந்த ஏழை மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் பார்த்தீர் களா …?”

“என்ன செய்வது? அவர்கள் துன்பப்பட்டுத் தான் ஆகவேண்டியிருக்கிறது…'” சிவப்பழம் இரக்கமற்ற குரலில் கூறினார். மதுபாலன் அவரைத் திரும் பிப்பார்த்தான். ” கருணாமூர்த்திகள் என்று கூறப் படும் மதவாதிகள் பாடுபடும் ஏழை மக்களிடம் ஏன் இவ்வளவு கல்நெஞ்சர்களாக இருக்கிறார்கள்…..?” என்று வெறுப்புடன் கேட்டான்.

சிவப்பழம் நிதானமான குரலில் பதில் கூறினார், “மதுபாலா…அதில்தான் உன்னுடைய வர்க்கத்தின ரான செல்வர்களும் என்னுடைய வர்க்கத்தினரான மத குருக்களும் அடைந்திருக்கும் இன்ப வாழ்வின் இரகசியம் இருக்கிறது…” என்று.

5. காதல்…!

தன் அறைக் கதவு திறக்கப்படுவதைக் கண்டு கண்ணம்மா தலை நிமிர்ந்தாள். எப்போது பார்த் தாலும் யோசித்துக்கொண்டே இருப்பது அவளுடைய பழக்கமாகிவிட்டது. சர்வாதிகாரி மெதுவாக உள்ளே வந்தான். ” என்ன ஆழ்ந்த யோசனை மகாராணீ…”

அவள் தடுமாறினாள். ” இந்தத் தனிமை என்னைக் கொல்கிறது. சாதாரணத் தோழியாக இருந்தால் கூட அந்தப் பெண்களுடன் கலந்துகொண்டு பேசவும் சிரிக்கவும் பாடவும் ஆடவும் இருக்கலாம். இந்த மகா ராணிப் பட்டம் என்னை அடிமைப்படுத்திச் சிறையில்

தள்ளி வைத்திருக்கிறது…”

“உண்மைதான்…ஆனால் நீ அந்தப் பெண்களு டன் கலந்துகொள்ளக் கூடாதென்பதில்லை. அரச குமாரிகள் தோழிகளுடன் பொழுது போக்குவ தில்லையா…? ஆனால்… ஏன் அவர்களை ஆடவும் பாட வும் சொல்லி அனுபவித்துக்கொண்டிருக்கலாமே…? ”

‘நான் கிழவி அல்லவே…’

சர்வாதிகாரியின் முகம் சுருங்கியது. அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். பருவத்தின் எழில் குலுங்கத் தளிர்த்துத் துளிர்த்துத் தழுவப்படாத கொடிபோல் நின்ற அவளுடைய நிலை அவனுடைய மனதைச் சபலம் கொள்ளச்செய்தது. பளிங்கில் இழைத்து பவள வண்ணம் பூசியவற்றைப் போன்ற கன்னங்கள், ரசம் நிரம்பிய இன்பச் சுளைகள் போன்ற இதழ்கள், இளநீல மருக்கள் போன்ற கண்கள் அவனை வெறிகொள்ளச் செய்தன. அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். “கண்ணம்மா…ஆயுட் காலம் முழுவதும் கன்னியாய்க் காலம் கழிப்பதில் உள்ள பெருமை உனக்குத் தெரிந்திராது…ஆனால்……அமர வாழ்க்கை என்று சொல்கிறார்களே அது அது தான்…” என்றான். அவள் பேசவில்லை. தன் நகங்களின் ரோஜா நிறத்தைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரம் மௌனமாக நின்றபின் சர்வாதிகாரி விஷயத்தைத் திருப்பினான், ” கண்ணம்மா அந்த மடையன் தப்பிச் சென்றுவிட்டதில் நமக்குப் பெரிய தீங்கு நேர்ந்திருக்கிறது. ஜமீந்தார் உன்னுடைய தந்தையை உயிருடன் எரித்ததுடன் விட்டுவிடவில்லை அவருடைய குடிகளை மரங்களிலே கட்டிவைத்து உன் இருப்பிடத்தைச் சொல்லும்படி கேட்டிருக்கிறான். பாவம் அவர்கள் அறியாமையால் கூற முடியவில்லை. முதுகுத்தோல் உரிய நையப்புடைக்கும்படிக் கட் டளையிட்டிருக்கிறான் ஜமீந்தார். அப்போது இவன் அங்கே சென்று நீ தங்கியிருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று கூறி அவர்களை விடுதலை செய்தானாம்.

“சாதாரணமாக இந்தக் கானகத்திற்குள் நுழைப வர் யாரும் உயிருடன் தப்பிச்செல்வது கிடையாது, இவன் தப்பிச்சென்றுவிட்டான். அதுவும் ஒரே நாளில் …இது ரொம்ப அதிசயமாய் இருக்கிறது. நாம் நம் முடைய படைகளை வெகு சீக்கிரத்தில் தயார்படுத்த வேண்டும். எதிர்பார்த்ததைவிட குறுகிய காலத்தில் நாம் ஜமீந்தாரைத் தாக்கவேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். அதற்காக நாம் சிறிது சுற்றுப்பிரயா ணம் செய்ய வேண்டும்… இன்னும் எவ்வளவோ வேலை கள் செய்ய வேண்டும்…எனக்குச் சிறிது கூட ஓய்வே இல்லை. இடையில் நீ இப்படித் தனிமையில் அவதிப் பட்டுக்கொண்டிருப்பாயோ என்று தான் உன்னைப் பார்க்கவந்தேன்…” என்றான்.

“அப்படிக் கூறியது அவன் தான் என்று எப்படித் தெரியும்…” அவள் ஆர்வத்துடன் கேட்டாள். அவன் தப்பிச்சென்று சேர்ந்துவிட்டானா என்பதை அறிய வேண்டும் என்பதில்தான் அவள் ஆர்வம் நின்றது.

“ஆமாம்…அதைப்பற்றி நீ சந்தேகமேபடவேண் டாம்…அவன் தான். அவனேதான். ஆனால்… நமது ஆட்கள் எச்சரிக்கப்பட்டுவிட்டனர். இனி அவன் உயிருடன் நடமாட முடியாது.’

அவள் திடுக்கிட்டாள்’ “ என்ன…? ”

“ஆம்…அதில் சந்தேகமே வேண்டாம். அவன் பள்ளி அறை முதல், நடமாடும் ஒவ்வொரு இடத்தி லும் நமது ஆட்கள் தயாராக இருப்பர். அவனை முதலில் காணும் எவனும், நீ விதித்த மரண தண் டனையை நிறைவேற்றி விடுவான்…”

“அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத் தது. அவன் எதிரில் தன் உணர்ச்சிகள் வெளிப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக மென்று விழுங்கிக் கொண்டு நின்றாள். என்ன முயன்றும் அவள் கண் களிலே கண்ணீர் தேங்கிவிட்டன…”சர்வாதிகாரி அவள் முகத்தைப் பார்த்துவிட்டான், “ஏன்…?” என்று கேட்டான். அவள் நிதானமாகப் பதில் கூறி னாள். “நாதியற்று வந்த என் கட்டளையை நிறை வேற்ற இத்தனை ஆட்களா…? நான் உங்களுக்கு என்ன கைமாறு தான் செய்யப்போகிறேன்…?”

சர்வாதிகாரி முகத்தைத் திருப்பிக்கொண்டு நிதா னமான குரலில் கூறினான். ” ஆம் கண்ணம்மா நீ எனக்கு கைமாறு செய்து தான் ஆகவேண்டும். செய்தே தான் ஆகவேண்டும்…என் வைராக்கியம் குலைந்து விட்டது. நீ நன்றி உடையவளாக இருப்பாய் என்று நினைக்கிறேன்…”

அவன் எழுந்தான். ” ஆனால் அதற்கு இன்னும் சமயம் வரவில்லை. இன்னும் சமயம் வரவில்லை…என்று நீ மகாராணி ஆகிறாயோ…அன்று தான் அன்று தான்…” என்று கூறிக்கொண்டே வெளியே போய் விட்டான்.

சர்வாதிகாரியின் இந்தப்புதிய தடுமாற்றத்திற்குக் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. அவள் அதைக் கவனிக்கவும் இல்லை. சர்வாதிகாரியின் ஒற்றர்களிட மிருந்து , அவர் தப்புவாரா…அவர் தப்புவாரா’ என்ற கேள்வி தான் அவள் உள்ளத்தில் அலைமோதியது. அவள் எழுந்து சென்று சாரளத்தைப்பிடித்துக்கொண்டு நின்றாள். மலைமேல் கட்டப்பட்ட அந்தக் கோட்டையிலிருந்து நீல வானத்தைப் பார்த்ததும் ஓ என்று கதறி அழுகவேண்டும் என்று அவளுக்கு ஆத்திரம் வந்தது. அவள் கண்களிலே கண்ணீர் தேங்கியது….

கதவு தாழிடப்படும் ஒலிகேட்டு அவள் திரும்பி னாள் அவள் அறையிலே கன்னங்கரேலென்று குட்டம் பிடித்த விகாரமான ஒரு மனிதன் நின்றுகொண்டிருந் தான். அவள் பயத்தால் கூச்சலிட்டிருப்பாள். ” உஸ்ஸ்…” என்று வாய்மேல் விரல் வைத்து ஜாடை காட்டினான் அந்த மனிதன். ” கண்ணம்மா…என்னை அவனால் கொன்றுவிட முடியாது.”ஆனால்….”

“ஆ…நீங்களா …?”

“கண்ணம்மா…உன்னை நீ அவனிடமிருந்து காத்துக்கொள்ளவேண்டும்…”

“ஏன்….? ”

“அவன் உன்னைக் காதலிக்கிறான்…”

6. முடிவற்ற வேதனை…!

சிறிது நேரம் இருவரும் மௌனமாக நின்று கொண்டிருந்தனர். அவள் அவனை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அவளுக்குச் சிரிப்பு வந்தது. அவனுடைய அழகிய உடல் அவ்வளவு அலங்கோலமாக்கப்பட்டிருந் தது. ” இன்னும் சற்று நேரம் நீங்கள் இங்கே வந்கொன்றுவிட்டதாகவே நினைத்திருப்பேன்…” என்றாள்

“ஆனால் சாவதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை …’

“ஏன்…?

“எனக்காக உண்மையாக ஒரு துளிக் கண்ணீர் விட ஒரு ஆள் இருக்கிறது என்ற நிம்மதியுடன் சாவேன்…”

“யார் அந்த ஆள்…”

அவன் அவளையே பார்த்தப்படி கூறினான்’ ” தேவீ… நீங்கள் தான்…

அவள் பேசவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அவள் கூறினாள், “யாராவது அழுவார்கள் என்பதனால் சாகத்தயாராகி றவர்கள் உண்டா …? ”

“சாவதால் தான் ஒருவருடைய அன்பைப்பெற முடியும் என்றால்…”

அவள் மடக்கிக் கேட்டாள், “செத்தபின் ஒரு வருடைய அன்பைப்பெற்று என்ன பயன்…?”

“தேவீ அப்படியானால் உயிருடன் இருக்கும் போதே உங்களுடைய அன்பு எனக்குக் கிடைக்குமா …? ”

அவள் பேசவில்லை.

அவனும் பேசவில்லை. அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் கேட்டாள், ” ஆமாம் மறுபடியும் ஏன் இந்த கொலைக் களத்திற்கு வந்தீர்கள்…?”

“நான் இங்கே வந்திருக்கிறேன். போய்விடுவேன் …ஆனால் நீங்கள் எப்போதுமே இங்கிருக்கிறீர்களே…’

“என்னைக் கொல்ல இங்கே யாரும் இல்லை…”

அவனுக்கும் ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றிற்று. ஆனால் ஒருகணம் ஆர்வத்துடன் அவள் முகத்தைப் பார்ததான். பிறகு, “தேவீ……எந்தக் கொடிய அபாயத்தையும் எதிர்த்துப் போரிட்டு விடுவேன்…உங்களை ஒருமுறை பார்க்க முடியும் என்றால்…” என்றான்.

மறுபடியும் அறையிலே மௌனம் நிலவியது சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் கூறினாள், ” உங் கள் உயிர் ஒவ்வொரு கணமும் ஆபத்தில் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்…சர்வாதிகாரியின் ஒற் றர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள், அவர்கள் ஈவி ரக்க மற்றவர்கள். ஒரு ஈயை அடித்துக் கொல்வது போல் அவர்கள் ஒரு உயிரை வதைத்துவிடுவார்கள்… இதிலிருந்து எப்படித் தப்பப்போகிறீர்களோ என் பதை நினைத்தால் என் உள்ளமே நடுங்குகிறது…”

அவன் இடைமறித்துக் கேட்டான், ” ஆமாம் சர்வாதிகாரியின் ஆட்களைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்…?”

“ஏன்…? இங்கே நடைபெறுபவைகளைப் பார்த் தாலே தெரியாதா…? இங்கே எப்போது என்ன நடை பெறும் என்பதை யாராலுமே கண்டுபிடிக்க முடியாது. எந்தச்சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். அதனால் சொல்கிறேன்…”

“சர்வாதிகாரி கொடியவன் தான் என்பதை நீங் கள் நன்றாகப் புரிந்துகொண்டீர்களா…?

“இல்லை. அதைப்பற்றி என்னால் ஒன்றும் சொல்லமுடியாது…’

அவன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு, “தேவீ … நான் விடைபெற்றுக்கொள்கிறேன். சர்வாதிகாரி யார்… எப்பேர்ப்பட்டவன் என்பதை நிருபியாததன் முன் நான் மீண்டும் இங்கே வந்தது என்மேல் தவறு. தாங்கள் என்னிடம் கொண்ட கருணையை நான் தவ றாக உபயோகப்படுத்துகிறேன், மன்னிக்கவும், நான் மீண்டும் வருகிறேன் ” என்று கூறி நடந்தான்,

கட்டிலின் கீழே சுறங்க வழியைத் திறந்து அவன் இறங்கி மறைவதை அவள் பார்த்துக்கொண்டு நின் றாள். அவள் உள்ளத்திலே எரிந்து கொண்டிருந்த துவேஷத்தீ அணைந்துவிட்டது. அந்த இடத்திலே அன்புக் கொடி படர ஆரம்பித்திருந்தது. அவளை அறியாமலே அவள் தன் உள்ள ததைப் பறிகொடுக்க ஆரம்பித்திருந்தாள். அது அவளுக்குப் புரிந்திருந்தது அதைக்குறித்து அவள் வருத்தப்படவும் இல்லை. அவள் இதயத்தின் ஆழத்திலே ‘ முடிவற்ற வேதனை… அதோ ஆரம்பமாகிவிட்டது…’ என்ற பழங்காலக் கவியின் வரி ஒன்று அரிக்கத் தொடங்கியது.

7. என்னைக் கைது செய்!

மதுபாலன் சாமர்த்தியமாகச் சபர்மதிக் கோட்டையைத் தாண்டி நடக்க ஆரம்பித்தான். அதிலே சாதாரணமாக எப்போதும் சர்வாதிகாரியின் ஆட்கள் காவல் இருந்தனர். ஆனால் அவர்கள் வழிப் போக்கர்கள் போலும் சாமியார்கள் போலும் தங்கினர். அவர்கள் வருகிறவர்கள் போகிறவர்களை உற்று உற்றுக் கவனிப்பதிலிருந்தும் மறைவாக ஆயுதங்களை வைத்திருப்பதிலிருந்துதான் சர்வாதிகாரியின் ஆட்கள்

என்பது அவனுக்குத் தெரிந்தது. அன்று அவன் அவளைக் காண்பதற்காகச் சர்வாதிகாரியின் குகைக் குள் செல்லும் பொருட்டு குஷ்டரோகிபோல் வேஷ மிட்டுக்கொண்டு வந்த பண்டாரம்போல் காணப்பட்ட ஒருவன் அவன் அருகே வந்து ஏதோ சைகைசெய் தான். முதலில் அதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் யோசித்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் அந்தப் பண்டாரம் அப்பால் போய்விட் டான். அதிலிருந்து இந்தமாதிரிப் பலரகமான வேஷங் களில் தான் அங்கு காவலுக்கு அனுப்பப்படுகிறார் களென்றும் அவர்களைத் தவிர வேறு யாரும் அதிக மாக வருவது கிடையாது என்றும் அவன் தெரிந்து கொண்டான். இன்னும் ஒரு அதிசயம் என்னவென் றால் அந்த இரகசிய வழிக்குச் செல்லும் இருளடைந்த பாழும் அறைக்கு முன்னால் விசேஷமான காவல் ஏதும்

இருக்கவில்லை. சாதாரணமாகவே அது இருளும் புகையும் மண்டி ஒட்டடை பிடித்து, வௌவால்களின் சுகவாசஸ்தலமாய், பாம்பும் தேளும் அடைந்தது போல் வெகு பயங்கரமாகக் காணப்பட்டது. அவ் வளவே தவிர மனிதர்கள் அதைப்பற்றிச் சிரத்தை காட்டவில்லை. அவன் நினைத்துக்கொண்டான் இங்கே காவலுக்காக வருகிறவர்களுக்கே தாங்கள் எதற்காக அனுப்பப்படுகிறார்கள் என்ற இரகசியம் தெரியாது. சர்வாதிகாரி அங்கே ஒரு இரகசிய வழி இருக்கிறது. என்பதை அவர்களிடம் சொல்லியிருக்கவேமாட்டான் வேறு ஏதாவது கற்பனையான காரணத்தின் கீழ் அங்கு காவல்காக்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று.

அவன் திரும்பிவந்தபோது நள்ளிரவு அந்தக் காவலர்கள் கோட்டை வராந்தாவில் ஒரு கணப்பு மூட்டிக்கொண்டு அதிலே சுள்ளிகள் படபட வென்று வெடித்து எரிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். அவன் அவர்களின் கவனத்தைக் கவராமலேயே சாவதானமாக, செடி களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி நடந்து சென்றான். ரொம்பதூரம் சென்றதும் சாதாரணமாக ஒரு குஷ்ட ரோகி நடப்பதைப்போல் அல்லாமல் மிகமிக வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

பொழுது புலரும் சமயம் அவன் ஜமீன் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தான் திடீரென்று ஆயுதபாணி களான வீரர்கள் அவன் முன்னால் தோன்றி ஈட்டி களால் வழியை மறித்துக்கொண்டு – நில்’ என்று கூச் சல்போட்டார்கள். அவன் நன்றாகப் பார்த்தான். அவர்கள் ஜமீன் ஆட்கள் தான். தனக்கு அபாயம் இல்லை என்பதை நிதானித்துக்கொண்டு சாவதானமாக ‘ஏன்’ என்று கேட்டான். ஜமீன் எல்லையைக் கடந்து யாரும் உள்ளே யோ வெளியேயோ போகக்கூடாதென் பது உத்தரவு…

அவன் மீண்டும் கேட்டான், “ஏன்?”

அவர்களில் ஒருவன் முறைத்துப்பார்த்தான். ” போகக் கூடாதென்றால் உன் வேலையைப்பார்த்துக் கொண்டு போ…” என்று கத்தினான்.

“இல்லை ஐயா நான் அவசியம் போகவேண்டும். அங்கே எங்கய்யா சாகக்கெடக்கறாராம்……” என்று கெஞ்சினான் குஷ்டரோகி,

“அட ஏனப்பா நீ ஒருத்தன் பிராணனை வாங் கறே உள்ளே போனாலும் நீ உங்க ஐயாவைப் பார்க்கமுடியாது. மேலதிகாரிகள் உன்னைக் கைது செய்து விசாரிப்பார்கள்…” என்று சலித்துக்கொள் பவனைப்போல் கூறினான் இன்னொருவன்.

மீண்டும் அவன் கேட்டான், ” ஏன்?”

“அவன் கிட்ட என்னப்பா பேச்சு,” என்று முறைத்தான் முதல்வன்.

“பேசினா என்ன நம்ம அப்பன் வீட்டுச்சொத்து போயிடுதோ….? ” என்றான் மற்றவன். பிறகு சாவ தானமாக அவனைப் பார்த்து ” ராத்திரி யாரோ இளைய ஜமீந்தாரையும் ராணியையும் சேர்த்தி ரெண்டுபேர் நெஞ்சிலும் பாயறமாதிரி வாளைச்சொருகிட்டார்களாம் அப்பா ……. தெரிஞ்சுதா விஷயம்… தெரிஞ்சுக்க ……” என்றான்.

அவன் குழப்பம் அடைந்தான். ” இளைய ஜமீந் தாரையும் ராணியையும் சேர்த்தி …..” அவன் அங்கே கல்லுப் பிள்ளையார் மாதிரி நின்று கொண்டிருந்தான்.

படபட வென்று குதிரைகள் பாய்ந்துவரும் சப் தம் கேட்டது. மேலும் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவன் பேசாமல் நின்றான். இரண்டு அதிகாரிகளும் வீரர்கள் சிலரும் அங்கே குதிரைகள் மேல் வந்து சேர்ந்தனர். அதிகாரிகளிடம் தனியாகப் பேசவேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் வீரர்களின் மத்தியிலிருந்து அவர்களை எப்படித்தனி யாக அழைப்பது என்று தெரியவில்லை. பேசாமல் நின்றான். யாராவது சந்தேகப்படத்தக்கவர்கள் அந்த வழியில் வந்தார்களா என்று அதிகார தொனியில் கேட்டுக்கொண்டிருந்தான் அதிகாரி, ‘சட்’ என்று அவனுக்கு ஒருயோசனை தோன்றியது. நழுவ விரும்பு பவன் போல் செடிகளுக் கிடையில் மறைந்து அவன் வெகு வேகமாக ஓட ஆரம்பித்தான். அவ்வளவுதான் …வீரர்களும் அதிகாரிகளும் ஒரே பாய்ச்சலில் அவனைப் பின் தொடர்ந்தனர். பள்ளங்களிலும் மேடுகளிலும் அடர்ந்த புதர்களுக்கு மத்தியிலும் தாவித்தாவி ஓடிய பின் அவன் திரும்பிப்பார்த்தான். அவன் நினைத்தபடி நடந்தது. அதிகாரி ஒருவன் அவனை மிகவும் சமீபித் திருந்தான். அவன் உறுதியுடன் திரும்பி நின்று அந்த அதிகாரியை நோக்கி ” நந்தலால் இறங்கு கீழே.” என் றான். அவன் ஒருகணம் திகைத்தான், ஆனால் உணர்ந்து கொண்டான். குதிரையிலிருந்து கீழே குதித்து வணக் கம் செலுத்தினான்.

“அவர்களை அங்கேயே நிற்கும்படி உத்திரவிடு…”

நந்தலால் கத்தினான். கைகளை ஆட்டிச்சைகை கள் காட்டினான். அவர்கள் திகைப்புடன் சற்று தூரத் திலேயே நின்றனர்.

“இன்னொருவன் யார்…சாரங்கனா…?” “ஆமாம் பிரபு…” ” அவரை மட்டும் இங்கே அழை…”

நந்தலால் உரக்கக் கூவி சாரங்கனை அழைத்தான். மிக அருகாமையிலிருந்த அவன் அங்கே வந்து சேர்ந் தான்.

“சரி…மற்றவர்களை திரும்பிப் போகும்படி கட் டளை இடு…எனக்கும் ஒரு குதிரைவேண்டும்…… பெற்றுக்கொள்…”

சாரங்கனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் நந்த லால் சொன்னபடி செய்யும்படி ஜாடை காட்டவே அவன் குதிரையைத் திருப்பிக்கொண்டுபோய் வீரன் ஒருவனிடமிருந்து ஒரு நல்ல குதிரையைப் பெற்றுக் கொண்டு அவர்களைத் திரும்பிப்போகும்படி கட்டளை யிட்டுவிட்டு வந்தான்.

மூவரும் குதிரைமேல் ஏறிக்கொண்டவுடன் மது பாலன் கேட்டான். ” நந்தலால்…இன்னும் அரண் மனையில் நான் தான் கொல்லப்பட்டதாக நினைக்கிறார் களா ………?”

“இல்லை பிரபு! கொல்லப்பட்டவனின் அடையா ளம் கண்டுபிடிக்கப்பட்டாயவிட்டது. ஆனால் கொன் றது நீங்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருது கிறார்கள்…”

“கொல்லப்பட்டவன் யார்…?”

“சாமியார்…சிவப்பழம்…”

மதுபாலன் ஒருகணம் யோசித்தான். அப்படி நடந்திருந்தால் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிவப்பழம் ஒரு பெண் பித்தன் இந்திராணி வேட்டை யாடித்திரியும் பெண் வர்க்கத்தைச் சேர்ந்தவள். பிறகு மதுபாலன் கேட்டான், ‘ இதனால் இப்போது அரண் மனையில் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கிறது…?”

“இந்த விஷயத்தை எப்படி மறைப்பது என்பது ஜமீந்தாருக்குப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஜமீன் குடும்பத்திற்கே அவமானம். அதிலும் சிவப் பழம் கொல்லப்பட்டிருப்பதால் அரசருக்கு என்ன பதில் சொல்வது என்பது அவருக்குப் பெரிய கவலை யாக இருக்கிறது…”

“நானே கொன்றதாக இருந்தால் இப்போது என்ன செய்யவேண்டியிருக்கும்…?”

நந்தலால் ஒருகணம் தயங்கிய பின், ” உங்களைக் கண்காணிப்பில் வைத்துவிட்டு. அரசரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டி இருக்கும். ஏனென்றால் அரசரிடம் சிவப்பழத்திற்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறது.” என்றான்.

“நந்தலால் நீ சந்தேகப்பட வேண்டாம். ஆனால் அரண்மனையிலே இருந்திருந்தால் நான் கொல்லப்பட் டிருப்பேன். எனக்கு வைத்த குறி தான் தவறு தலாகச் சிவப்பழத்தின் மேல் பாய்ந்திருக்கிறது…”

“பிரபு… தங்கள் உயிரைக் குறிவைத்து மறைந்து திரியும் இந்தப்பேடிப் பயல்கள் யார் என்று கூறுங் கள்.. ஒரு நொடியில் நொறுக்கிவிடுவோம்…”

மதுபாலன் சிறிது மௌனத்திற்குப் பின் கூறி னான் “நந்தலால் நீ நினைப்பது போல அவ்வளவு சுலபமான காரியம் அல்ல அது. சிவப்பழம் கொல்லப் பட்டதால் எப்படி நாம் அரசாங்க விரோதிகள் ஆனோமோ, அதேபோல் இந்த ஆளைக் கொல்வதாலும் நாம் அரசாங்க விரோதிகள் ஆக நேரலாம். நாம் இப் போது வேறுவிதமான தந்திரத்தை கையாளவேண்டி இருக்கிறது. முதலில் நீங்கள் ஒன்றை மனதில் வைத் துக்கொள்ளவேண்டும். இப்போது என்னைப் பார்த் ததையோ; இனிமேல் நாம் செய்யப்போவதையோ பற்றிய எந்த விஷயத்தையும் யாருக்குமே தெரியப் படுத்தக் கூடாது. ஜமீந்தாருக்குக்கூட…நமது கார் யம் வெற்றி பெறுகிற சமயத்திலே அது தானாகவே எல்லோருக்கும் தெரிந்துபோகும். அதற்கு முன்னால் பிறருக்குத் தெரிவதால் நமக்குக் கெடுதலைத் தவிர நன்மை உண்டாகாது. தெரிகிறதா…….? இது முழுவதையுமே நீங்கள் ரகசியமாகக் காப்பாற்ற வேண்டும்..

அதிகாரிகள் அவனுடைய உத்தரவுப்படி நடப்ப தாய்க் கூறினார்கள். “நாம் இப்போது மிகவும் கடின மான வேலையில் ஈடுபடப்போகிறோம். சிங்கத்தின் குகைக்குள்ளே அதற்குச் சிறிதும் தெரியாவண்ணம் புகுந்து வெளிவருவதைப்போன்ற வேலை. சிறிது தவ றினாலும் நாம் உயிரை இழப்போம். உங்களுக்கு இதில் தலையிடத் துணிவு இருக்கிறதா…?”

அவனுக்காக அவர்கள் எதையும் செய்யத் தயா ரென்றார்கள். அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டான் “இப்போது நீங்கள் என்னைக்கைது செய்து கல்லாய்க் கோட்டைக்குக்கொண்டு செல்ல வேண்டும். அதன் பிறகு மற்றவற்றை நான் கூறுவேன்,” என்று.

8. கல்லாய்க் கோட்டையில்!

கல்லாய்க் கோட்டைக்குச் சாதாரணமாக அடிக் கடி ஜமீன் கைதிகள் கொண்டுவரப்படுவது வழக்கம். அதனால் அதைப்பற்றியாரும் அக்கரைக்காட்டவில்லை. கைதி நேராகக்கோட்டைத் தலைவன் கனக பூபதியிடம் கொண்டுபோகப்பட்டான். பூபதியின் விசாலமான அறைக்குள் நுழைந்ததும், நந்தலால் அவர் காதருகே சென்று ஏதோ ரகசியமாகக் கூறினான். உடனே பூபதி அங்கே இருந்த மற்ற காவலர்களையும் சிப்பந்திகளையும் வெளியே போகும்படி கட்டளையிட்டார். நந்தலாலும் சாரங்கனும் வாயில்கள் அருகே காவல் நின்றனர்.

மதுபாலன் பூபதியின் காதருகில் சென்று கூறி னான். ” மாமா….. நீங்கள் என்னை மறைத்துவிட வேண்டும், காரணங்கள் சாவகாசமாகக் கூறுகிறேன். இரண்டாவதாக, ஓவியர் உலகநாதன், ஒற்றர் தலைவன் பூபாலன், நடிக மன்றத்தைச் சேர்ந்த வேலப்பன். மருத்துவன் சாத்தான் இவர்களுடன் எதற்கும் அஞ் சாத உறுதியுள்ள இருபது வீரர்களும் தேவை. இவர் கள் இரண்டு நாட்களுக்குள் இங்கே வந்து சேர வேண்டும். இவர்களின் வருகை பூராவும் ரகசியமாக இருக்க வேண்டும் மூன்றாவதாக நான் இங்கே கொண்டுவரப்பட்டிருப்பது, இங்கிருந்து என்னுடைய நடமாட்டங்கள் இவற்றை யாரிடமும் எக்காரணத்தை கொண்டும் தெரிவிக்கக்கூடாது. தயவுசெய்து செய்வீர் களா …?

“உனக்காக நான் என்ன தான் செய்யமாட்டேன் மதூ…ஆனால் எதற்காக இந்த அவசர எற்பாடுகள்..?”

“பிறகு சொல்கிறேன் மாமா…எதிரியின் ஒற்றர் கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இப்போது நீங்கள் என்னைக்கொண்டு போகும்படிக் கட்டளையிடலாம்…” என்றான்

கனக பூபதி அவனைப் பாதாளச் சிறைக்குக் கொண்டுபோகும்படிக் கட்டளையிட்டார். அதிகாரிகள் இருவரையும் விருந்தினர் மாளிகையில் தங்கும்படிக் கூறிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார். அவர் நல்ல அனு பவம் உடையவர். நிர்வாக காரியங்களிலும், சிக்கல் களை விடுவிப்பதிலும், ஒற்று சம்பந்தமான விவகாரங் களிலும் கைதேர்ந்தவர். தவிர அவருக்கு மதுபால

னிடம் அளவு கடந்த வாஞ்சை உண்டு. அவன் அவ ருடைய தங்கையின் மகன் தான்

பிறகு அவர் மதுபாலன் கூறிய ஆட்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது பற்றி ஆலோசித்தார் ஒற் றர் தலைவனுக்கு உடனே வந்து சேரும்படி கட்டளை பிறப்பித்தார். ஓவியனையும் மருத்துவனையும் அருகி லுள்ள இயற்கை எழில் பிரதேசமான அருகூர் வந்து சேரும்படி உத்தரவு அனுப்பினார். நடிகனை வர வழைப்பதற்காக உள்ளூர் நாட்டியக்காரியிடம் உற வுக்கு வரும்படி அவனுக்கு அழைப்பு அனுப்பக்கூறி னார். இப்படியாக ஒவ்வொன்றாக ஏற்பாடுகள் செய்து முடிந்தபின் அன்றிரவு தாமே ஒரு காவல்காரனைப் போல் உருமாற்றிக்கொண்டு பாதாளச் சிறைக்குக் காவலுக்குப் போனார்.

மற்றக் காவலர்கள் தூங்கி விழுந்துகொண்டிருக் கும் சமயத்தில் மெதுவாக மதுபாலனைக் கூப்பிட்டார். அவனே அவருடைய புதிய உருவத்தில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ” என்ன மதூ…உன்னை யாரோ தூக்கிச்சென்றுவிட்டதாக தகவல் கேள்விப் பட்டேன். பிறகு நீயும் உன் மனைவியும் கொல்லப் பட்டுக்கிடப்பதாக வதந்திகள் வந்தன. கூடவே கொல்லப்பட்டது நீ அல்ல என்று யாரோ சாமியார் என்றும் செய்தி வந்தது. நடுவில் குஷ்டரோகிபோல் நீயே வந்து நிற்கிறாய். இவை எல்லாம் என்ன……..? எங்கும் ஒற்றர்கள் நிறைந்து கிடப்பதாய்க் கூறினாயே யாருடைய ஒற்றர்கள்….. எல்லாம் விளக்கமாக என் னிடம் கூறு..? என்னால் முடிந்தவரை உதவிகள் செய்கிறேன்…” என்றார்

“மாமா அதெல்லாம் பெரிய கதை….. மகா ராஜாவை நீங்கள் நன்றாகப் பார்த்திருக்கிறீர்களா…?”

“பார்த்திருக்கிறேன்…”

“அவருக்கு யாராவது அண்ணன் தம்பி இருப்ப தாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா….?”

“இல்லை …!”

“அப்படியானால், அதே அச்சு அடையாளத் துடன், அவரையே போன்ற ஒரு ஆளைப்பார்த்தீர்க ளானால் என்ன நினைப்பீர்கள்…?”

கனக பூபதி சிறிது யோசித்தார். பிறகு ” மகா ராஜாக்களுக்கு எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது ஒரு மகன் பிறந்திருக்கலாம் ஆனால் அப்படிப்பட்ட ஒருவனைப்பற்றி இப்போது என்ன விஷயம்….?”

“அதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. அவன் யார்…? இப்போது அவனுக்கும் அரண்மனைக் கும் இருக்கும் தொடர்பு என்ன…? அவன் எதற்காகக் கானகத்தின் நடுவே ஒரு கன்னிப் பெண்ணை ராணி என்று வைத்துக்கொண்டு ஊர் முழுவதிலும் ஒற்றர் களை வைத்துக்கொண்டும் படைசேர்த்துக்கொண்டும் திரிகிறான் என்கின்ற விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்…

கனக பூபதி நிதானமாகக் கூறினார். “இதி லென்ன ரகசியம் இருக்கிறது. அவன் அரசாங்கத்தைக்

கைப்பற்றத் திட்டமிட்டிருக்கலாம்…”

“விஷயம் அது தான். ஆனால் நாடு முழுவதிலும் வலை பரப்பி நடுவில் சிலந்திபோல் காத்திருக்கும் அவனைப் பிடிப்பதென்றால் அது சாதாரண காரியம் அல்ல. அதிலும் அவன் ஏற்கெனவே ஒரு தடவை அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்காகச் சதிசெய்து கண்டு பிடிக்கப்பட்டு மரண தண்டனையிலிருந்து தப்பிச் சென்றவனாம்…அவனைப் பற்றிய பூரா விபரங் களையும், சரியாக, அவன் எங்கே எந்த இடத்தில் இருக்கிறான், அவனுடைய மறைவிடங்கள் யாவை, பலம் என்ன என்பவற்றையும் அறிவதற்காகத்தான் இந்த யாத்திரை…அதில் வெற்றி தோல்விவைப் பொறுத்து இருக்கிறது என்னுடைய வாழ்வும் சாவும் …..” என்றான்.

9. பால குருநாதர்

ஏழு வயதிலேயே துறவறம் பூண்டு காசி, இமயம் வரை யாத்திரை செய்துவிட்டுத் திரும்பிவரும் அபூர்வ ஞானி பால குருநாதரைப்பற்றி நடெங்கும் ஒரே பர பரப்பு ஏற்பட்டிருந்தது. அவருடைய மகத்துவத்தினால் தென்னாட்டில் காலடி எடுத்து வைத்ததுமே பல அறி ஞர்கள் அகமகிழ்ந்து அவருடைய சிஷ்யர்களாகியிருக் கிறார்கள். எந்த நோயாளிக்கும் அவர் கையினால் கொடுக் கும் ஒரு துளி திருநூறு பரிபூரண குணமளிக்கிறது, என்பவற்றைப்போன்ற செய்திகளுடன், அவர் யாரை, எதைப் பார்த்தாலும் அதன் இறந்த நிகழ், எதிர்காலங் களைப் பற்றிய எல்லா விபரங்களையும் கண்ணில் கண் டதுபோல் சொல்லிவிடுகிறார், அவர் கைபட்டால் செத் தவர்கள் கூடப் பிழைத்துக்கொள்கிறார்கள் என்பன போன்ற எவ்வளவோ வதந்திகளும் ஊரெல்லாம் பரவி விட்டது கிராமங்களின் மூலை முடுக்குகளிலும் நகரங் களின் சந்து பொந்துகளிலும் எங்கு பார்த்தாலும் அதே பேச்சாகிவீட்டது. அந்தக் காலத்திலே சாதாரண மாகவே சந்நியாசிகள் என்றால் அவர்களிடத்தில் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். தெய்வத்தைப் போல் கருதி நடந்துகொண்டார்கள். எனவே இந்தப் புதிய சாமியாரின் செல்வாக்கும் பெயரும் எங்கும் அடி பட்டதில் புதுமை ஒன்றும் இல்லை.

பால குருநாதர் ஒரு இடத்தில் ஒரு இரவுக்குமேல் தங்குவதில்லை அவர் தெற்கு நோகி யாத்திரைசெய்து கொண்டு வந்தார். வழியில் உள்ள ஒவ்வொரு ஊர் வாசிகளும் அவரைப் பூர்ண கும்பங்களுடன் எதிர் கொண்டழைத்துப் போற்றிப் பணிந்து அவர் திருவாய் மலர்ந்தருளுபவைகளைக் கேட்டார்கள். தொண்டு செய்தார்கள். பணப்பெட்டி மன்னர்களெல்லாம் தாசானுதாசர்களாகப் பணிவிடை செய்தார்கள். ஒவ் வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சி அளித்தபடி அவர் யாத்திரை செய்துகொண் டிருந்தார்.

ஒரு நாள் ‘ப்ரார்த்தனை’க்கு வந்திருந்த நூற்றுக் கணக்கான மனிதர்களுக்கிடையே ஒருவனுடைய முகத்தைப்பார்த்தப் பார்த்துப் பால குருநாதர் திடுக்கிட் டார். அவருடைய நெஞ்சு திக்குதிக்கு என்று அடித்துத் கொண்டது. தான் மாறு வேவுத்திலிருந்த அவனைத் தெரிந்துகொண்டதுபோல் தன்னையும் அவன் தெரிந்து கொண்டிருப்பானா என்ற சந்தேகம் படபடத்தது. அவருக்குக கைகால்களே ஆடவில்லை. ஆனால் தன்னைச் சூழ்ந்திருக்கும் பலவான்களான தொண்டர்களைப் பார்த்ததும் அவருக்கு கொஞ்சம் உயிர்வந்தது. தவிர இந்த யாத்திரையின் போது அவரைச் சந்தித்த அவருடைய தாய் தந்தையரே அடையாளம் கண்டு கொள்ள முடியாதபோது……… இவனால் கண்டுபிடிக்க முடியுமா என்ற சந்தேகம் தோன்றியது. அவருடைய தைரியம் வலுப்பட்டது.

ஒவ்வொருவராக வந்து அவர் பாதத்தைத் தொட்டு வணங்கி ‘ பிரசாதம்’ பெற்றுக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள் அந்தக் குறிப்பிட்ட மனி தன் வந்ததும், ‘ அப்பனே ஒரு நாள் நீ விரும்பும் சிங் காசனத்துக்குப் பக்கத்தில் எமக்கிடம் அருளுவாயாக …’ என்றார். அவன் திகைத்துப்போய் அவர் முகத்தைப் பார்த்தான். இருவர் கண்களும் ஒருகணம் சந்தித்தன. அத்தனை தாபுக்கும் முடிக்கும் நடுவி லிருந்த தன் முகத்தை அவன் அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அவன் நிதானமாக ” ஸ்வாமி களிடம் நமக்குக்கொஞ்சம் காரியம் உண்டு,” என்றான். “மாலையில் 25 நாழிகைக்கு வந்தால் தனிமை கிடைக் கும்…” என்றார் குருநாதர்.

“பாக்கியம்…” என்று கூறிவிட்டுச் சென்றான் அந்த மனிதன். அவனுடன் சென்ற வேறு சில மனி தர்களும் குருநாதரின் கவனத்தைக் கவர்ந்தார்கள். யாரும் தன்னை சந்தேகிக்கவில்லை. குருநாதருக்கு உயிர் வந்தது.

எல்லோரும் போனபின் குருநாதர் ஓடிப்போய் கண்ணாடியில் தமது முகத்தைப் பார்த்துக்கொண்டார். கூடவந்த சிஷ்யர்களில் ஒருவன், ” ஸ்வாமிகள் அப்படி எல்லாம் ஒன்றும் பயப்படவேண்டாம். நடிக மன்ன ரின் தயாரிப்பு. ஒற்றர் தலைவரின் ஆமோதிப்பு…… ஓவிய நிபுணருக்கே அதிசயம்…” என்றான். ஸ்வாமி கள் புன்னகை பூத்தார்.

10. சிங்கத்தின் குகைக்கு!

அன்று மாலை சொல்லிவைத்தாற்போல அந்த மனிதன் வேறொருவனுடன் வந்துசேர்ந்தான். குரு நாதரை வணங்கிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்தக் குறிப்பறிந்து தன் ஆட்களைச் சற்று அப்பால் இருக்கும்படி கூறினார் குருநாதர். சர்வாதிகாரியும் அந்த மனிதனும் அமர்ந்தனர். சர்வாதிகாரி மெல்லிய குரலில் “ஸ்வாமிகள் இன்று ஆசீர்வாதத்தின்போது கூறியதன் அர்த்தம் என்ன…?” என்று கேட்டான்.

குருநாதருக்கு அடிக்கடி தைரியம் தவறிக்கொண் டிருந்தது. ஆனால் இப்போது அவன் நன்றாகத் தெரிந்து கொண்டான். உருக்கு மனம் படைத்த இந்த மனிதனுக்கு உண்மையான பலஹீனங்கள் இருக்கின் றன. அவன் தன் முயற்சிகளில் உள்ளூறச் சந்தேகப் பட்டுக்கொண்டுதான் இருக்கிறான். அவனிடம் உண்மை இல்லை என்பதற்கு இது ஒரு பெரிய உதார ணம். அவன் தன்னைத்தெரிந்துகொள்ளவில்லை என் பதுமாத்திரம் அல்ல உண்மையாக மதிக்கவும் செய் கிறான்…!- அதனால் அவர் நிதானமாகப் பேசினார், ” நீங்கள் என்னைச் சோதிக்க விரும்புகிறார் போல் தெரி கிறது. ஆனால் கூறுகிறேன்… இது இரைதேடும் புலி அல்ல. அரசு தேடும் சிங்கம்…… இதன் கையிலே ஆண்மை இருக்கிறது. அறிவு இருக்கிறது அரசியல் தந்திரம் இருக்கிறது. சந்தர்ப்பம் மாத்திரம் இன்னும் வாய்க்கவில்லை…அதனால்…இப்பொழுது சிங்கம் புதுக் கனவுகள் காண ஆரம்பித்திருக்கிறது.”

“சிவப்பு உடை, சிவப்புக் கொடி, சிவப்புக் குதிரை, சிவப்புப்படைக்கலம் இவைகொண்டு புரட்சிப்படை சமைக்கலாம். புதுமைகளும் காணலாம்…… இப்போது அவ்வளவுதான் கூற முடியும். நாம் அடிக் கடி சந்திப்போம் என்றார்”

குருநாதர் சர்வாதிகாரியுடன் அந்தப் புது மனித னுடன் அதிகம் பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை. குரலை மாற்றிப்பேசவேண்டிய தொல்லை வேறு. எனவே சீக்கிரம் முடித்துவிட்டார். அந்த மனிதன் சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்தான். பிறகு ” குரு நாதர் என் விருந்தாளியாகச் சிலகாலம் தங்கவேண்டும் தங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டான். குரு நாதர் • பளிச்’ என்று கூறினார். ” காடு காண எமக் கும் ஆவலுண்டு. ஆனால் நாடு முடியட்டும். இன் னும் ஏழு நாட்கள் கழியட்டும்,” என்று. அந்த மனி தன் ஸ்தம்பித்துவிட்டான், குருநாதரிடம் அவனுக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டாகிவிட்டது.

அடுத்த வாரம் மதுபாலன் சர்வாதிகாரியின் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். கையில் விலங்குகளுடன் கண்கள் கட்டப்பட்டு அல்ல பல்லக்கு பரிவாரங்களுடன், தலைசிறந்த ஒற்றர்களுடன் வீரர் களுடன்..-

சிங்கத்தின் குகைக்குள்ளே அவன் நுழைந்து விட்டான், குகையை குப்பை மேடாக்குவதற்காக..

11. அங்கே …!

சர்வாதிகாரி அவர்களை ராஜோபசாரத்தோடு வர வேற்றான். நகராக்கள் முழங்கின. விதம் விதமான வாத்தியங்கள் பலவும் கோஷித்தன. மலைப் பாதையின் இரு புறங்களிலும் ஆயுதபாணிகளான வீரர்கள் நின்றனர். இடையிடையே நின்ற பெண்கள் வழி நெடுகப் பூக்களை வாரி இறைத்தனர். தர்பாருக்குச் செல்லும் ஒரு அரசனுக்குரிய விமரிசையுடன் பால குருநாதர் சர்வாதிகாரியின் மலைக் கோட்டையில் நுழைந்தார்.

மண்டபத்திலே நுழைந்ததும் நடமாடும் பதுமை யைப்போல் சிவப்புடைதரித்த ஒரு பெண் முன்னால் வந்து தன் வலதுகையை நீட்டியவாறு கிளிப்பிள்ளை கூறுவதைப்போல் உணர்ச்சியற்ற குரலில் ” குரு நாதரை இந்த அரசாங்கத்தின் சார்பாக வரவேற் கிறேன். மிகமிக மகிழ்ச்சி கருணை கூர்ந்து எமது சிறுகாணிக்கைகளை ஏற்றுக்கொண்டு சிறிதுகாலம் எம் முடன் தங்கியிருந்து எம்மைச் றப்பிக்கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அடியார் தயவு செய்து இந்த ஆசனத்தை ஏற்றுக்கொள்க…” என் றாள். அவள் பேச்சின் இடையிலே திக்கினாள், அவனுக்குச் சிரிப்புவந்தது. பாவம் அவளுக்குப் பாடம் போதித்திருக்கிறார்கள். அதே இடத்தில் அதேமாதிரி நின்று “இழுதுச் செல்லுங்கள் நான் இவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறேன்” என்று கூறிய அதே ஆள் தான் இவன் என்பது அவளுக்குத் தெரிந்தால்…

ஆனால் அவன் கூறினான். மிகவும் விநயமாக …. “மகாராணியாரின் வரவேற்பு எமக்குப் பேரானந் தத்தை அளிக்கிறது. அவருடன் தங்கி அளவளாவி இருக்கும் காலம் தான் எமது வாழ்நாளிலேயே சிறந்த காலமாகும். அவருக்குச் சகலமங்களங்களும் உண்டா வதாக……..” என்று ……..

அவள் காட்டிய ஆசனத்தில் அவன் அமர்ந்தான். அதன் பிறகு அவள் அமர்ந்தாள், சர்வாதிகாரி முன் னால் வந்து ” குருநாதரிடம் நாம் நமது ராணியைப் பற்றிக் கூறவில்லை. அவர் தாமாகவே உணர்ந்து கொள்ளும் வல்லமை பெற்றவர்…என்பதனால். இப் போது நமது ராணியின் எதிர்காலத்தைப் பற்றி அவர் சில வார்த்தைகள் கூறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.

குருநாதர் சிரித்தார். ஆராய்பவர்போல் மன தார அவளைப் பார்த்துக்கொண்டு, ” மகாராணி ஒரு ஒப் பற்ற மாணிக்கம் வெகு விரைவிலேயே ஒரு மகத் தான சாம்ராஜ்யம் அவர் ஆட்சியின் கீழ்வரும். ஆனால் இன்று, மகாராணி வாய்விட்டுச் சொல்லமுடியாத வேதனைகளிலே வதைபட்டுக்கொண்டிருக்கிறார். அவை யாவும் விரைவில் மறையும். உள்ளம் நிறைந்த உவகை யுடன், மிக ஆனந்தமாக, அமைதியாக வாழும் நற் காலம் மகாராணிக்கு விரைவிலேயே வரும்……..” என் றார். அவள் சந்தேகத்துடன் தலையை நிமிர்ந்து பார்த் தாள். இருவருடைய கண்களும் கணநேரம் ஒன்று பட்டு நின்றன. ஆனால் அந்த முகத்தில் கண்கள் மாத் திரம் தான் அவளுக்குத் தெரிந்தவையாக இருந்தன அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சர்வாதிகாரி மெதுவாகக்கேட்டான், “இப்போது மகாராணியை வதைக்கும் துன்பங்கள் எவையாக இருக்கலாம்…?” என்று.

குருநாதர் கூறினார். ” மகாராணியின் உள்ளத் திலே சொல்லவொண்ணாத தனிமையின் தாபம் தகித் துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் பட்ட பேரிடியின் புண் ஒன்று அவள் உள்ளத்திலிருந்து இன்னும் ஆரவில்லை. இவைமாத்திரம் அல்ல நண்பர் யார், பகை வர் யார் என்று பிரித்துணரமுடியாத சூழலிலே அவர் தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறார்.

ஆச்சரியத்துடன் கூவிவிட்டாள் ராணி. உண்மை பாக உள்ளதையே கூறிவிட்டார் குருநாதர். அவளால் நம்பவே முடியவில்லை. “ஸ்வாமி… இவற்றிலிருந்து என்னைத் தாங்கள் தான் காப்பாற்றவேண்டும்……” என்று உரக்கக் கூவினாள், அவள் கண்களின் மருட்சி யையும் உதடுகளின் நடுக்கத்தையும் அவன் கவனித் தான். அவள் பாவம் குழந்தை போன்றவள். மென்மையானவள். உலகை அறியாதவள். திடீரென்று மகாராணி சிலைபோலானாள். அவன் கவனித்தான். சர்வாதிகாரி அவளை உறுத்துப் பார்த்துக்கொண்டிருந் தான். அந்தப் பார்வை …!

குருநாதர் இனிமையான குரலில் கூறினார் “தேவீ …உம்மைக்காப்பாற்றுவது எம்பொறுப்பு. சீக்கிரமே உமது கவலைகள் மாறும்…சிறிதும் மனதில் துயரம் வேண்டாம்…” என்று.

“தேவீ……”

அந்த அழைப்பு அவளை மீண்டும் உணர்ச்சி வசப் படுத்தியது. அவன் தான் அவளை அப்படி அழைத் தான். அவள் குருநாதரின் முகத்திலே அவனைத் தேடினாள், நகையாடும் கண்களைப் பார்த்தாள் ஆனா லும் புரிந்துகொள்ள முடியவில்லை.

அன்றைய பேட்டி அத்துடன் முடிந்தது.

குருநாதருக்கும் அவருடைய சீடர்களுக்குமாக ஒரு தனி மாளிகை ஒழித்துக்கொடுக்கப்பட்டது. மலையின் மேல் முகில்கள் தவழும் அழகிய சிகரங்களையும் தேன் கூடுகள் நிறைந்த பெரிய மரங்களையும், வெறி மணம் கமழும் பூஞ்செடி கொடிகளையும் சூழலாகக் கொண்ட அந்த மாளிகையிலே குருநாதர் தன்னைத் தானும், தன் உள்ளத்தில் நிறைந்திருந்த அந்தக் கன்னி யும் தவிர வேறொன்றும் காணாதவராகச் சிந்தையில் மூழ்கிக்கிடந்தார். நெடுநேரத்திற்குப்பின் தாம் வந்த காரியம் அதுவல்ல என்பதை நினைத்துக்கொண்டு தனது ‘ சிஷ்யகோடிகளை ‘ நோக்கித் திருக்கண் திருப்பினார்.

“நந்தலால்…!”

நந்தலால் ஓடிவந்து ஒரு கும்பிடுபோட்டு வெகு பணிவுடன் நின்றான். இருவரும் குருநாதரின் தனி அறைக்கு நடந்தனர்.

“நந்தலால் முதலில் இந்த அறையிலிருந்து பேசு வது எதையும் வெளியிலிருந்து கேட்க முடியுமா என் பதை நன்றாக கவனி. பிறகு ஒற்றர் தலைவன் பூபாலனை இங்கே வரச்சொல்…” என்றார். குருநாதர் கட்டளை யைச் சிரமேல் தாங்கி வெளியே சென்றான் நந்தலால். குருநாதர் அறைக்குள் ஏதாவது சுரங்க வழிகள் மறை விடங்கள் இருக்கின்றனவா என்று கவனித்தார். ஒன் றும் இல்லை என்பதைக்கண்டு திருப்தி அடைந்தார். சிறிது நேர திதிற்குள் பூபாலன் அங்குவந்து சேர்ந்தான்

“சரியாக இந்த இடம் எங்கே இருக்கிறதென் பதை உங்களால் யூகிக்க முடிகிறதா…” என்று கேட்டான் மதுபாலன்.

“நன்றாகத் தெரிகிறது. நாம் உண்மையில் நினைப் பதைவிட இது நமக்கு மிகவும் சமீபத்தில் இருக்கிறது

வேண்டுமென்றே வழியைச் சுற்றிச்சுற்றி அமைத் திருப்பதனால் தான் நமக்கு அதிக தூரம்போலும் திசை தெரியாமலும் இருக்கிறது, தவளகிரி சாலையிலிருந்து ஒரு படையும் கல்லாய்க் கோட்டையிலிருந்து ஒரு படையும் கனகபுரியிலிருந்து ஒரு படையும் புறப்பட் டால் இந்தக் கானகத்திலிருப்பவர்கள் தப்பிச் செல்ல முடியாது.

“ஆனால் அந்த மலைகள்…”

“ஆமாம் மலைகள் மாத்திரம் அல்ல, கானகவழி களில் படை நடத்தி வருவதே மிகவும் கடினம். இந்த இடம் மிகவும் கவனமாகப் பொறுக்கி எடுக்கப்பட் டிருக்கிறது. இந்த இடத்தில் வந்து எதிரியை வெல் வது என்பது மிகவும் அசாத்தியம்…”

“சர்வாதிகாரியை நன்றாகக் கவனித்தீர்களா…?”

“சந்தேகமே இல்லை. இவன் காலஞ்சென்ற அரசருக்கு நாட்டியக்காரி ரஞ்சனியிடம் பிறந்த மகன் ரத்னவேலு தான். அரசாங்கத்தில் உதவி சேனாதிபதி யாக இருந்தான். அரசருக்கு எதிராகச் சதிசெய்து மரண தண்டனை பெற்றான். தப்பி ஓடிவிட்டான் எத்தனையோ காலம் ஆகிவிட்டது. இவனை உலகமே மறந்திருக்கும்.”

“ஆனால் இவன் உலகை மறந்துவிடவில்லை. இன் னும் யாராவது தெரிந்த முகங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தீர்களா….?”

“அதைத்தான் சொல்ல நினைத்தேன். நான் இங்கே பார்த்த சில முகங்கள் அரண்மனையில் பார்த்த முகங்களாகத் தெரிகின்றன. அதுவும் இப்போது சமீபத்தில் பார்த்த முகங்கள் தான். இவனுடைய

ஒற்றர்களில் அரசாங்கத்தில் பெரிய பதவி வகிப்பவர் கள் கூட இருக்கிறார்கள் போல் தெரிகிறது.”

மதுபாலன் யோசித்தான். ” மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம். இவர்களில் ஒருவனை நாம் சிறைப்பிடித்துச் செல்லவேண்டும்…”

“அப்படிச் செய்ய முடிந்தால் எவ்வளவோ நன் றாக இருக்கும்…”

சிறிது நேரம் யோசித்த பின் ” சரி மருத்துவரை அழையுங்கள்…” என்றான் மதுபாலன்.

மருத்துவன் சாத்தான் ஓடோடி வந்தான்.

“சாத்தனாரே இதுவரைத் தங்களுடைய மூலிகை கள் விபூதியில் கலந்து எத்தனையோ பேருடைய நோய் களைக் குணப்படுத்தின, இப்போது புதிய விபூதி ஒன்று தேவைப்படுகிறது. அதைச் சாப்பிட்டுவிட் டால் சிறிது காலம் மனிதனுக்கு புத்தி மாறிவிட வேண்டும். அப்படி என்றால் அடியோடு அல்ல. அவன் நமக்குத் தேவையான விஷயங்களைக் கூறுகிற நிலையில் இருக்கவேண்டும்… முடியுமா…?”

“அதுக்கென்ன ஒரே நொடியில் தயார் செஞ்சுதர்ரேன். ஆனால் அதைச் சாப்பிட்டுட்டா அவனுக்கு நினைப்பு மறந்துபோகும். நாம் சொன் னதைச் செய்வானே தவிர அவன் கிட்ட இருந்து. நாம் ஒண்ணுமே தெரிச்சுக்க முடியாதுங்க…வேறே மருந்து கொடுத்தாத்தான் பிறகு நினைவு வரும்……” என்றான் சாத்தான்.

பூபாலன் கூறினான், ” அதனால் என்ன நினைவு மாறிய நிலையில் நாம் கொண்டு சென்றுவிட்டால் பிறகு தெளிந்தவுடன் நமக்கு வேண்டியவற்றை தெரிந்து கொள்ளலாமல்லவா…….?

“ரொம்ப சரி அப்படித்தான் செய்ய வேண்டும். பூபாலரே…இன்னும் நீங்கள் இங்கிருந்து என்னென்ன தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கவனியுங்கள் இப்போது நீங்கள் போகலாம். ஓவியர் உலகநாதனை அனுப்புங்கள்…”

சிறிது நேரத்திற்குப்பின் உலகநாதன் வந்து சேர்ந்தான்.

“சர்வாதிகாரியை நன்றாகக் கவனித்தீரா..”

“ஓரளவு கவனிக்க முடிந்தது.”

“அதிலிருந்து அவனை மாதிரி உருவப்படம் தயா ரிக்க முடியுமா…?”

“இப்போதே வேலையை ஆரம்பித்துவிடுகிறேன். இனியும் அவரைக் கவனிக்கும்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கும் அல்லவா…?”

“தாராளமாகக் கிடைக்கும். சரி நீர் போகலாம்”

அன்றிரவு வேலப்பன் குருநாதருடைய வேஷத் தைக் கலைக்க வந்தபோது ” வேண்டாம். எப்போதும் போல் நாளைக் காலையில் வந்து சரிசெய்து விட்டுவிடு போதும்…” என்று கூறி அனுப்பிவிட்டார்.

12. பக்கத்துணை!

இரவு நெடுநேரமாகிவிட்டது. வானம் நிலவொளி யில் இளநீலப்பளிங்குபோல் விளங்கியது. கான கமும் அந்தச் சிறிய மலைகளும் நிலவில் அழகும் அமைதியும் பெற்றுவிளங்கின. அந்த அழகிய இரவிலே குருநாதர் மெதுவாக ஆலோசித்தபடி வெளியே கிளம்பினார்.

அவ்வளவு அருகில் இருந்தும் கன்னி ராணியைப் பார்க்காமல்…அவளோடு இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் அவரால் இருக்க முடியவில்லை. அவர் உள் ளத்திலே காதலின் தவி தவிப்பு கனலாய் எரித்துக் கொண்டிருந்தது இனிமை நிறைந்த நிலவிலே, குளிர் மணம் கலந்த தென்றலிலே அந்த உள்ளத் தீ குறைய வில்லை. பற்றி எரியத் தொடங்கிவிட்டது எங்காவது …எப்படியாவது அவளைக்காண முடியுமா என்று அவர் ஏங்கினார். தன்னைமாத்திரம் தகிக்கும் அந்தத் தாபம் அவளை மாத்திரம் சும்மா விட்டுவிடுமா…? அவளும் இதைப்போல் உறக்கம் கொள்ளாமல் எங்காவது வெளியே வந்து உலவிக்கொண்டிருந்தால்…? அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவளை ஒரு முறை காண்பதற்காக…அவளுடன் ஒரு வார்த்தை பேசுவதற்காக…அவன் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பான்…ஆனால்…?

அவளுடைய அறைக்கே போகலாமா என்ற ஒரு குருட்டுத்துணிச்சல் கூட அவனுக்கு வந்தது. ஆனால் அவன் வந்த காரியம் இன்னும் முடியவில்லை. தவறிப் போய் அகப்பட்டுக்கொண்டால்….? ஏற்கனவே துன் பப்பட்டு கொண்டிருக்கும் அவள் இன்னும் அதிகத் துன்பமடைய நேர்ந்துவிடும். அவன் தன்னைத்தான் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான். சற்று தூரத் தில் இலைகள் சலசலத்தன. அவன் பரபரப்புடன் திரும்பினான். அங்கே அவனைப்போலவே உறக்கம் கொள்ளாது சிந்தனைகளில் ஆழ்ந்து உலவிவந்து கொண்டிருந்த ஒரு ஆளைக் கண்டான். ஆனால் அது ராணி அல்ல சர்வாதிகாரி! அவன் திடுக்கிட்டான், திரும்பிப்போய்விடலாமா என்று கூட நினைத்தான்.

ஆனால் சர்வாதிகாரி அவரைப் பார்த்துவிட்டான். நேராக அவனை நோக்கி வந்தான்.

ஒருகணம் குருநாதர் தமது உருவத்திற்குத் தகுந்த உள்ள நிலையை அடைவதற்காகப் போராடினார். சர்வாதிகாரி வணக்கம் தெரிவித்துவிட்டு “ஸ்வாமி… இந்தச் சமயத்தில் உங்களைக்கண்டது எனக்கு எவ் வளவோ ஆறுதலாக இருக்கிறது ….” என்றான்.

நிதானித்துக்கொண்டு,” அப்பனே எண்ணம் பல கொண்டு உள்ளம் மிக வாடி வருகிறாய்…ஆனால் உன் அச்சத்திற்குக் காரணமே இல்லை…” என்றார் குருநாதர்.

“கண்டமாத்திரத்தில் தாங்கள் பிறர் உள்ளத்தைத் தெரிந்துகொள்கிறீர்கள்…அந்த வல்லமை எனக்கும் கிடைத்திருந்தால்…”

“நிலைமை வேறு விதமாகப் போயிருக்கும்…” அவன் பதில் அவனுக்கே திகைப்பாக இருந்தது

“ஆமாம்…அப்படித்தான் ஆயிருக்கும்…” சர்வாதிகாரி எதையோ நினைத்துக்கொண்டு அதை ஆமோதித்துவிட்டான். சிறிது சிந்தித்துவிட்டு, “என் மனம் உறுதிபட மாட்டேன் என்கிறது. எதைப்பார்த்தாலும் சந்தேகமாகவே இருக்கிறது…”

“ஏன்..? என்னைப் பார்த்தால் கூடவா…?” “இல்லவே இல்லை…!”

“அப்படியானால் என்னிடம் சொல்லத் தயங்கு வானேன்…? ”

“சொல்லத்தான் போகிறேன்…ஆனால் அதன் முன் சில கேள்விகள்…?”

“கேளுங்கள்…”

“என் லட்சியம் வெற்றிபெறுமா…?”

“சுத்த வீரனுக்குத் தோல்வி உண்டா…!”

“தோல்வி இல்லை….ஆனால் நான் நினைத்ததை அடைவேனா…?”

“சஞ்சலம் பெண்களின் குணம்…!”

“ஆம்…! நான் எவ்வளவோ உறுதியுடன் நடந்து கொள்கிறேன். ஆயினும்…” –

“கவலைப்படாதீர்கள்…இந்த உடைகளைக் களைந்துவிட்டு அரசனின் உடைகளை அணிந்துகொண் டால் அரசி கூட வித்தியாசம் தெரிந்துகொள்ளமாட் டாள்….”

சர்வாதிகாரி திடுக்கிட்டான். அவன் குரல் கர கரத்தது. “ஸ்வாமிஜீ…” என்று கூறிவிட்டான்….

குருநாதர் உள்ளம் அசாதாரண துணிவடைந்து விட்டிருந்தது. சாவதானமாகச் சிரித்துக்கொண்டு….” அதுமாத்திரமல்ல…இத்தனை காலத்திற்குப்பின் ஒரு பெண்ணின் மேல் உங்களுக்கு மோகம் உண்டாகியிருக்கிறதல்லவா…?”

சர்வாதிகாரியால் பேசவே முடியவில்லை. ஒருகணம் மௌனமாக இருந்தான். பிறகு திடீரென்று தலையை உயர்த்திக் குருநாதா…தாங்கள் என்னைவிட்டுப் போக வேண்டாம்…எப்பொழுதும் என் னுடனேயே இருந்து என்னுடைய லட்சியங்களை வெற்றிக்குக்கொண்டு சேர்ப்பது தங்கள் பொறுப்பு…

“அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்… நான் எங்கே இருந்தாலும் என் துணை உங்களுக்கு இருக்கும்…”

“தாங்கள் என்னுடன் இருந்தால்…” “நான் போவதன் முன் பலவற்றைச் சரிப்படுத் திக்கொண்டுதான் போவேன். இன்னும் இரண்டு நாட்கள் தான் இங்கு தங்குவேன். இடையில் ராணியை

ஒருமுறை தனிமையில் சந்திக்கவேண்டும்…”

“இப்போதே…”

வேண்டாம்… நீங்கள் ஒன்றுமே செய்ய வேண் டாம். உங்கள் ஒற்றர்கள் என்னையும் என் சீடர்களை யும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்…”

“இப்போதே கட்டளையிட்டுவிடுகிறேன். இது வரை எனக்குத் தங்களைப்போல் ஒரு துணை கிடையா மல் இருந்தது. இனி நான் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிபெறும்…”

சர்வாதிகாரி நம்பிக்கையுடன் விடைபெற்றுச் சென்றான். குருநாதரும் தம் அறையை நோக்கி மகிழ்ச்சியுடன் நடந்தார். சர்வாதிகாரி இவ்வளவு சுலபமாக வந்து அகப்பட்டுக்கொள்வான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய சந்தேகங்கள் தெளிந்துவிட்டன. . இனி விரைவில் காரியத்தை முடிக்கவேண்டியது தான். குருநாதருக்கு வெற்றியை நோக்கி வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருப்ப தாகத் தோன்றியது.

13. சந்திப்பு…!

மறுநாள் காலையில் மிக உற்சாகத்துடன் குரு நாதரை வரவேற்றான் சர்வாதிகாரி. அன்று குரு நாதரைக் கவுரவிப்பதற்காகப் படை அணிவகுப்பு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. நகராக்கள் முழங்கின.

கன்னி ராணி தனது பரிவாரங்கள் சூழப்பவனி வந் தாள். அவள் குருநாதரை வணங்கினாள். ஆர்வத் துடன் அவளைப் பார்த்தவாறு கையை உயர்த்தி ஆசீர் வாதம் செய்தான் மதுபாலன். வீரர்கள் கட்டியம் கூற அவர்கள் நடந்தனர். சர்வாதிகாரி முதலில் நடந் தான். குருநாதரும் கன்னி ராணியும் அருகருகில் இணையாக நடந்து சென்றனர்,

தன்னுடைய வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் குரு நாதரை அறிமுகப்படுத்திவைத்தான் சர்வாதிகாரி தங்களுடைய லட்சிய வெற்றிக்காகக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்று புகழ்ந்தான். குருநாதர் மௌனமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் கன்னி ராணியின்மேல் மொய்த்துக்கொண் டிருந்தன. அவளோ அளவுகடந்த சந்தேகத்துடன் அவரைப் பார்ப்பதும் தலையைத் திருப்பிக்கொள்வது மாக இருந்தாள், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. உண்மையில் அவள் உள்ளம் மிகவும் தவித்துக்கொண்டிருந்தது.

அன்றிரவு அதே தவி தவிப்பில் அவள் இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தாள். அவள் உள் ளம் அலைந்துகொண்டிருந்தது. அந்தச் சொல்லமுடி யாத ஏக்கத்திற்குக் காரணம் என்னவென்றே புரிய வில்லை. அவள் நினைத்தாள்…அந்தச் சமயத்தில் எப் படியாவது அவன் அருகே இருக்க முடிந்தால்…அவனை அவள் காணமுடிந்தால்…அவன் கண்களிலே குழை யும் காதல் அமுதை ஒருகண நேரம் கண்டுகொண்டே இருக்கமுடிந்தால்……அவன் சொல்லிலே தெறிக்கும் இன்ப மொழிகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால்.. கடவுளே அப்படியும் நடைபெறுமா…? அவள் உள்ளம் விம்மியது ஆழ்ந்த பெருமூச்சுடன் அவள் மீண்டும் நடந்துகொண்டிருந்தாள்.

குருநாதர் எப்படி உள்ளே வந்தார் என்பது அவளுக்குப் புரியவில்லை. அவள் எதேச்சையாகத் திரும்பியவள் திடுக்கிட்டாள். கதவுகள் அடைத்தபடி இருந்தன. அவர் அவளையே பார்த்தபடி தன்னை மறந்து நின்றுகொண்டிருந்தார். அவள் உள்ளம் நடுங் கியது. என்ன சொல்வதென்று தெரிய வில்லை. தலையைக் குனிந்துகொண்டு தடுமாறினாள்.

“தேவீ…கன்னியாக வாழ்வதற்கென்று படைக் கப்பட்ட நீ காதல்கொண்டு தடுமாறலாமா…?”

குருநாதர் குறும்புக் குரலில் கேட்டார். அவள் நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு கோபம் வந்தது அவன் கண்களில் அந்தக் காமப்பார்வையைப் பார்த்த பின் குருநாதர் என்ற மதிப்பு அவள் உள்ளத்திலிருந்து அகன்றுவிட்டது. அதுவும் அவன் தன் உணர்ச்சி களைத் தெரிந்துகொண்டு குத்தலாகப் பேசியதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

“உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்……” அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்.

“உன் காதல்…!”

“காதல்…! ஒருகணம் அவள் தடுமாறினாள். வெறியும் ஆத்திரமும் அவள் உள்ளத்தில் வந்து மோதின….” காதல்…எத்தனையோ கபடசந்யாசிகளில் ஒருவர் தானா நீரும்..?

“ஆம்…ஆனால் காரியமாக வந்த கபட சந்யாசி…”

“என்ன காரியம்…”

“ஒரு கன்னியை விடுவிப்பது…”

“உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க நான் தயாராயில்லை. தயவுசெய்து வெளியேறிவிடுங்கள்….”

“கொஞ்சிப் பேசத்தகுதியான இதழ்களால் கோப மொழிகளை உதிர்க்காதே கண்மணீ..”

“ஆ…என்ன துணிச்சல் உனக்கு.?”

“என்னை நீ உணர்ந்துகொள்ளவில்லை, அதனால் தான்…”

“உணர்ந்துகொண்டவரை போதும், இனியும் இங்கே நின்றுகொண்டிருந்தால்…”

குருநாதர் நிதானித்தார். அமைதியாகத் தனது பழய குரலில், “தேவீ…நான் போகத்தான் வேண்டுமா…?” என்று கேட்டார்.

அவள் திடுக்கிட்டாள். திரும்பத்திரும்ப அந்த முகத்தைப் பார்த்தாள். ஆனால் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

அவன் அவளை நெருங்கி மிக மெதுவான குரலில் கூறினான்: “தேவீ இந்த வேஷத்தில் உன்னாலேயே என்னைப் புரிந்துக்கொள்ள முடியாதபோது சர்வாதி காரிக்குத் தெரியாமல் போனதில் அதிசயம் இல்லை. நான் வந்த நோக்கம் வெற்றிகரமாக முடிகிறது. நாளை நான் புறப்படுகிறேன். இடையில் ஒருமுறையாவது உன்னைப் பார்க்கவேண்டும் என்கின்ற ஆவல்…

அவளால் நம்பவே முடியவில்லை. ‘நீங்கள்… நீங்கள்…’ என்று தடுமாறினாள். ஆனந்தத்தில் அவள் அப்படியே மூர்ச்சித்து விழுந்திருப்பாள். அவன் அவளைத் தன் மார்பில் தாங்கிக்கொண்டான்.

தன்னை மறந்து போய் அப்படியே அவள் அவன் தோளில் சாய்ந்துகொண்டிருந்தாள். அவளுக்கு சுய உணர்வே இருக்கவில்லை. அவள் எவ்வளவோ பேச வேண்டும் என்று விரும்பினாள். எதுவும் பேச அவ ளால் முடியவில்லை. எவ்வளவோ கேட்கவேண்டும் என்று நினைத்தாள். எதுவும் கேட்கவும் முடியவில்லை உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவன் மார்பை வருடிய வளாய் அப்படியே சாய்து கொண்டிருந்தாள் அவன் ஆனந்த கண்ணீ ர் உகுத்தான். ” தேவீ…..சர்வாதி காரியைக் கூண்டுடன் சிறைப்பிடிக்கத் திட்டமிட்டிருக் கிறேன். என்னுடைய முயற்சி வெற்றிபெறும் என்ப தில் சந்தேகம் இல்லை. கூடிய விரைவில் நான் மீண்டும் உன்னிடம் வருவேன். அன்று நீ என்னுடன் வந்து விடத்தயாராக இருக்கவேண்டும்…” என்றான்.

அவள் கண்களில் கண்ணீர் பொங்கிவிட்டது. * ஐயோ… எனக்காக…ஏன் இங்கே வந்தீர்கள் .. ஏன் வந்தீர்கள்… நீங்கள் அகப்பட்டுக்கொண்டிருந்தால்…?” என்று தேம்பினாள்.. அவள் முகத்தைத் திருப்பி, அதையே பார்த்தவனாய் . – தேவீ… உன்னைவிட… உன்னைவிட… எனக்கு இந்த உயிர் என்ன பெரிதா…?’ என்றான்.

14. தப்பிவிட்டார்கள்!

இரண்டு நாட்களுக்குப்பிறகு சர்வாதிகாரி குரு நாதருக்கு ராஜோபசாரத்துடன் விடை அளித்தான். கானக எல்லைவரை கள்வர் படைகள் தொடர்ந்து வந்தன. அதன் பிறகு குருநாதர் ஆனந்தத்துடன் தன் சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டே வழிநடந்தார் அவர்களுடன் அரசாங்கத்தில் நிதி நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்த நீலவர்மனும் இருந்தான். அவனுக்குப் பாவம் சுய உணர்ச்சி இருக்கவில்லை. தலை முடியை உயரக்கட்டி உடலெல்லாம் விபூதிப் பட்டை தீட்டி அவனையும் ஒரு சாமியாக்கிவிட்டிருந் தார்கள். அவன் நெடுநாட்களாக ஒரு பெண்ணைக் காதலித்தான். அவள் அவனுக்கு இணங்கவில்லை. குருநாதரின் அருளைத் தேடினான். மூலிகை சேர்க்கப் பட்ட விபூதி அவன் மதியை மயக்கியது. அடிமையாகி விட்டான், இப்போது அவன் சிஷ்யகோடிகளுடன் உணர்ச்சியற்ற நிலையில் பிரேதம்போல் நடந்துகொண்டிருந்தான்.

கானக வழிகளிலே அவர்கள் மிகவேகமாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். ‘தப்பிவிட்டோம்’ என்ற மகிழ்ச்சி எல்லோருடைய உள்ளத்திலுமே குதித்துக் கொண்டிருந்தது. இனி மிக விரைவில் சர்வாதிகாரியை நிர்மூலமாக்கிவிடவேண்டும் என்று மதுபாலன் திட்ட மிட்டுக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு இடத்தி லிருந்து ஆயுதபாணிகளான கள்வர்கள் வந்து வழியை மறித்தார்கள். அவர்களுக்குத் தலைவன் போல் தோன் றிய ஒருவன் “வணக்கம் தயவுசெய்து நில்லுங்கள்…” என்றான்.

ஒற்றர் தலைவன் கேட்டான், “ஏன்…?”

“நாங்கள் சோதனை செய்யவேண்டும்…?”

“யாரை…?”

“உங்களைத்தான்…”

“நாங்கள் அடியார்கள்”

“யாராயிருந்தாலும் சரி ..”

“சர்வாதிகாரியின் நண்பர்கள்…”

“அதைப்பற்றிக் கவலை இல்லை. எங்கள் கடமையைச் செய்தாகவேண்டும்….”

“எதற்காகச் சோதனை செய்ய வேண்டும் என்கிறீர்கள்…?”

“நீங்கள் வரும்பொழுது முப்பத்தேழு பேர் இருந்தீர்கள். செல்லும்போது ஒருவர் அதிகரித்திருப்பதன் காரணம் அறியவேண்டும்.

“புதிதாக ஒருவர் எம்முடன் சேர்ந்தார்…”

“சாம்ராஜ்யத்தில் யாருக்கும் அடியாராக அனு மதி கிடையாது…”

“என்ன விசித்திரமான சாம்ராஜ்யம் …!”

அந்த அதிகாரி தொண்டர்களை ஒவ்வொருவராக உறுத்துப்பார்த்துக்கொண்டு நடந்தான். “இல்லை அடியார்கள் இல்லை…” என்று கூவினான்,

“ஏன்…?”

“உங்கள் உடம்புகளில் வாள்பட்ட தழும்புகள் இருக்கின்றன நீங்கள் வீரர்களாக இருந்திருக்க வேண்டும்.”

“எங்கள் சாம்ராஜ்யத்தில் வீரர்கள் அடியார் களாகக் கூடாது என்று சட்டமில்ல ..”

“ரொம்ப சரி…” அதிகாரி கூவிவிட்டு மேலும் நடந்தான், நீலவர்மன் அருகே வந்ததும் நிலைத்து நின்றுவிட்டான் “என்ன..நீலவர்மரே..எங்கே செல்கின்றீர்…”

“ஆ…என் ராசாத்தி…கண்ணே…இன்னும் நீ என்னை ஏமாற்ற முடியாது குருநாதரிடம் வசிய மருந்து சாப்பிட்டிருக்கிறேன்…” லேவர்மன் மதிமயங் கிய நிலையில் பிதற்ற ஆரம்பித்துவிட்டான்.

ஒற்றர் தலைவன் கூறினான், ” இவருக்கு மதி மயக் கம் ஏற்பட்டிருக்கிறது சர்வாதிகாரியின் அனுமதி யின் பேரில் குணப்படுத்த எடுத்துச் செல்கிறோம்…”

“எங்கே அனுமதி?…”

ஒற்றர் தலைவன் ஏமாந்து விட்டான். ஆயினும் சமாளித்துக்கொண்டு, “ அடியார்களுக்குப் பத்திரம் ஒன்றும் தேவை இல்லை…”

“பூபாலா…உன்னை யாருக்கும் இங்கே தெரியா தென்று நினைத்துவிட்டாய். ஆனால் நீ பேச ஆரம் பித்த உடனேயே நான் கண்டு பிடித்துவிட்டேன். தப்பிவிட்டோம் என்கின்ற மமதையில் நீ உன் வேஷத் திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளவில்லை. நல்ல காலம்… நான் சமயத்தில் வந்து சேர்ந்தேன். இவர்களை கைது செய்யுங்கள்…”

அவர்கள் திகைத்து நின்றபோது கள்வர்கள் அவர் களை நோக்கி வந்தனர். ஆனால் சமயத்தில் மதுபாலன் வாளுடன் துள்ளிப்பாய்ந்தான். அடியார்கள் ஆயுத பாணிகளானார்கள். கள்வர்கள் இதை எதிர்பார்க்க வில்லை. என்ன தான் சாமர்த்தியமாகப் போரிட்டும் அவர்களால் நிற்கமுடியவில்லை. அவர்கள் அடிபட்டு ஓடுகிற சமயம் நந்தலால் அவர்கள் சவாரி செய்து கொண்டுவந்திருந்த குதிரைகளை மடக்கிக்கொண்டான் இனி அரைக்கணமும் தாமதிப்பது ஆபத்து என்று அறிந்ததும் மதுபாலன் முக்கியமானவர்களுடன் கல் லாய்க்கோட்டையை நோக்கிக் குதிரையில் பறக்க ஆரம்பித்தான்.

சர்வாதிகாரி செய்தி கேள்விப்பட்டதும் துடி துடித்தான் தானே வலியச்சென்று வலையில் மாட்டிக் கொண்டது அவனுக்கு வெட்கமாக இருந்தது. உடனே தன் வீரர்களுக்கு உத்திரவிட்டான், மாறு வேஷத்தில் பின் தொடரும்படி…… “பூபாலன் ” என்றதுமே அவன் உடல் நடுங்கிற்று. உடனே மது பாலனுடைய நினைவுதான் வந்தது. அவனுடைய ஒற்றர்களுக்குச் செய்திகள் பறந்தன.

என்ன ஏற்பாடுகள் செய்த போதிலும் இனித் தாமதிப்பதில் பயன் இல்லை என்பதை அவன் நன்றாக உணர்ந்து கொண்டான் இனித்தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் எதிரி பலமடையும் நாள். அவன் வலிவிழக் கும் நாள். உடனே அவன் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கத் தயாராகியாகவேண்டும். அதை அவன் என்றா வது ஒருநாள் எதிர்பார்க்கத்தான் செய்தான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வந்துவிடும் என்று எதிர் பார்க்கவில்லை. தனது படையை எப்போதும் தயா ராக இருக்கும்படி உத்திரவிட்டான். அங்கங்கே மூலைக்கு மூலை நகர்களில் இருக்கும் தன்னுடைய ஆதர வாளர்களைத் திரட்டுவதற்காக யாத்திரை கிளம்பினான் கன்னி ராணியுடன் தான்…….!

15. அடாத பழி!

கல்லாய்க் கோட்டையை அடைந்ததும் மது பாலன் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என் பது பற்றி யோசித்தான் எப்படியிருந்தாலும் இதற் குள் சர்வாதிகாரிக்குச் செய்திபோயிருக்கும். ஏற் கெனவே அவனை ஒழிப்பதற்காகத் தீவிரமாக முயன்று கொண்டிருக்கும் சர்வாதிகாரி இந்தச் செய்தியும் அறிந் தால் தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் அவனை ஒழித்துவிடுவதற்காக முயற்சிப்பான் என்பதை அவன்

உணர்ந்தான். அதற்காக பகிரங்கமான ஒரு யுத்தத் திற்குக்கூட அவன் தயாராகிவிடக் கூடும். இதற் குள்ளாகவே வழிகளில் அவனுடைய வீரர்கள் மாற் றுடைகளில் நிறைந்துவிட்டிருக்கவும் கூடும். இந்த நிலையில் அவன் எங்கிருப்பதும், எந்த மாறுவேடத்தில் இருந்தபோதிலும் ஆபத்து தான் என்பதை நன்றாக உணர்ந்தான். இந்த நிலையில் அவன் செய்யக்கூடிய ஒரே காரியம் தலை நகருக்குச் சென்று அரசரிடம் நிலைமைகளை விளக்கிப்படைகளைத் தயார்செய்வது தான் எவ்வளவு விரைவில் தலைநகரை அடைந்து விடுகிறானோ அவ்வளவுக்கு அவன் உயிருக்குப் பாது காவல் இருந்தது. நீலவர்பனையும் எப்படித் தலை நகருக்குக்கொண்டு சேர்ப்பது என்பது தான் அவனுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது.

அவன் யோசித்தான். அவர்கள் கல்லாய்க் கோட்டையை நோக்கி வந்தது சர்வாதிகாரிக்குத் தெரிந்திருக்கும். கல்லாய்க் கோட்டை எந்த நிமிஷத் திலும் தாக்கப்படலாம். ஜமீன் கோட்டைகளும் ஏக காலத்தில் தாக்கப்படலாம், மாறு வேஷத்தில் வெளியே இருக்க நினைப்பதிலும் பயன் இல்லை சர் வாதிகாரி இனியும் ஏமாறமாட்டான். தவிர அவனிடம் நல்ல திறமைசாலிகளான ஆட்கள் இருந்தார்கள்,

நீண்ட நேர ஆலோசனை களுக்குப்பின் அவன் ஒரு முடிவுக்கு வந்தான், அந்தக் கூட்டத்தை இரண்டாகப் பிரித்து பூபாலனையும் உலகநாதன் சாத்தான் முதலிய வர்களை நாடோடி வியாபாரிகளாகச் சென்று தலை நகரை அடைய ஏற்பாடு செய்தான் இந்தக் கூட்டம் நீலவர்மனையும் ஒரு வேலைக்காரன் போல் கொண்டு செல்ல ஏற்பாடுசெய்யப்பட்டது. வேலப்பனும் சில

வீரர்களும் மதுபாலனும் இரண்டு மூன்று அரண் மனைத் தோழிகளுடன் ஒரு நாடகக் கம்பெனிய கத் திரண்டது. இவர்களும் வேறு வழியாகத் தலை நகருக்கு வந்துசேர்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.

முதலில் பூபாலனின் கூட்டம் புறப்பட்டது.

நடிகர்களின் கூட்டம் எங்கெங்கோ சுற்றி வளைத் துக்கொண்டு மெதுவாகத் தலைநகரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. எல்லாவிடங்களிலும் சர்வாதிகாரி யின் ஒற்றர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்கள் சாதா ரணமாக எல்லா முக்கியமான சாலைகளிலும் போகிற வர்கள் வருகிறவர்களைக் கூர்ந்து கவனித்துக்கொண் டிருந்தார்கள். மதுபாலனுக்கு ஒவ்வொருகணமும் ஒவ்வொரு யுகமாக இருந்தது. சிறிது ஏமாந்தாலும் அவன் உயிர் அவனிடம் இருக்காது. ஒவ்வொருகண மும் அவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பது போல் உணரவேண்டி இருந்தது. கூடுமானவரை அவர்கள் ஜனங்கள் அதிகமாக நடமாடுகின்ற மாலை நேரங்களிலும் முன் இரவுகளிலுமே வழி நடந்தார்கள் இரவுகள் சர்வாதிகாரியின் ஆட்களுக்கே சொந்தமாக இருந்தன.

அவர்களுடைய யாத்திரையிலே எதிர்பாராவித மாக ஒருசந்தர்ப்பம் நிகழ்ந்தது. ஒருநகரிலிருந்து அவர் கள் வெளியேறிக்கொண்டிருந்த பொழுது இரவு வெகு நேரமாகியும் ஜன நடமாட்டம் இருந்துகொண்டே இருந்ததைக்கண்டு அவன் அதிசயமடைந்தான். ஒரு சிறிய கூட்டத்துடனேயே அவர்கள் நடந்தார்கள். மதுபாலன் அவர்கள் எங்கோ வேறு ஊருக்குச் செல்வதாகவும் அவர்களுடனேயே நடந்தால் கொஞ்சம் பாதுகாவலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தான். நகரைக் கடந்து வெகுதூரம் வந்ததும் அவர்கள் ஒரு ஆற்றுப் படுகையில் இறங்கி நடந்தனர். அந்த வழி, யாக வேறு ஆட்களும் நடந்து கொண்டிருந்தார்கள். ஏதாவது குறுக்கு வழியாக இருக்கும் என்று நினைத்து அவனும் நடந்தான். வெகு தூரத்திற்கப்பால் ஒரு இடத்தில் அந்தக் கூட்டம் ஆற்று வழியைவிட்டு மேட் டில் ஏறித் தோப்புகளின் வழியாக நடந்தது. அவர் களுக்கு முன்னால் சென்றவர்களும் அதே வழியாகச் சென்றார்கள். பின்னாலும் அதே இடத்தை நோக்கி ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள். ஆனால் இதைப் போல் வழி நடைப்பயணம் போகிறவர்களின் இயற்கைக்கு மாறாக அத்தனை பேரும் மௌனமாக… வாய் அடைபட்ட ஊமைகளைப்போல் விடுவிடுவென்று நடந்து கொண்டிருந்தார்களே தவிர ஒருவராவது வாய் திறந்து ஒருவார்த்தை கூடப் பேசவில்லை.

அவனும் தன் கூட்டாளிகளுடன் ஒன்றும் பேசா மல் அவர்களைப் பின் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தான். கடைசியாகத் தோப்புகளுக்கு மத்தியில் ஒரு இடத்தில் ஒரு பெரிய மைதானத்தில் ஆயிரக் கணக்கான ஜனங்கள் குழுமியிருப்பதை அவன் கண் டான். அந்தக் கூட்டத்திற்கு வேலி கட்டியதுபோல் சர்வாதிகாரியின் ஆட்கள் ஆயுதபாணிகளாக நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அவன் உயிர் அவ னிடம் இருக்கவில்லை…… யாருக்கு அஞ்சி அஞ்சி…… யாருடைய ஆட்களின் கண்முன் கூடச்செல்லாமல் தலை நகருக்கு ஓடி ஒளியவேண்டும் என்று கருதினானோ …அதே ஆளிடத்தில், அவனுடைய ஆட்களுக்கு மத்தியில் அவன் தன்னை அறியாமல் வந்து மாட்டிக்கொண் டான். அவன் நெஞ்சு படப்பட வென்று அடித்துக் கொண்டது. வேலப்பன் முதலியவர்கள் ஒன்றும் புரி யாமல் அவனைப் பார்த்தார்கள். அவன் ஜாடையாக மௌனமாக இருக்கவேண்டும் என்று எச்சரித்து விட்டு, இனிமேல் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என் கிற நிலையில் பேசாமல் சென்று அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் அமர்ந்துகொண்டான். நந்தலால் அவனு டன் இருந்தான். அவன் ஓரளவு நிலைமையை உணர்ந்து கொண்டான். இப்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் ஒரளவு அவன் யூகித்துக் கொண்டான். கூட்டத்தோடு கூட்டமாக அவர்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு எதிரே பிராமாண்டமான ஒரு மேடை இருந்தது. அதைச் சுற்றிலும் பொறுக்கி எடுத்த வீரர்கள் வரிசையாக நின்றனர். முதல் வரிசை யில் இருந்தவர்கள் வாட்களும், அடுத்த வரிசைகளில் சட்டிகள் தாங்கியவர்களும், அடுத்த வரிசைகளில் வேறு வேறு விதமான ஆயுதங்கள் தரித்தவர்கள் இருந்தார்கள், கடைசியாக மேடையை ஒட்டி நாணேற்றிய விற்களுடன் வீரர்கள் தயாராக நின்ற னர். இந்தப் பயங்கரமான அணிவகுப்பை மதுபாலன் கவனித்தான். எவ்வளவு சாமர்த்தியத்துடன் அந்த வியூகம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது அவன் கவனத்தைக் கவர்ந்தது. அவர்கள் மேடையையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தீப்பந்தங்களைத் தாங் கிய வீரர்கள் வரிசையாக வந்து மேடையின் இரண்டு பக்கங்களிளும் நின்றார்கள். இன்னொரு வரிசை நேராக வந்து இரண்டாகப்பிரிந்து எறும்பு போல் ஊர்ந்து சென்று கூட்டத்தைச்சுற்றிச் சூழ்ந்து நின்றது. சிறிது நேரத்திற்கெல்லாம் ஒருபெரிய ஆரவாரம் கிளம்பியது அந்த மேடையின் மேல் வெள்ளை உடைதரித்த கிழவி ஒருத்தியும் ராணுவ வீரனைப்போல் உடைதரித்த சுறு சுறுப்பான இளைஞன் ஒருவனும் மெதுவாக ஏறிவந்த னர். முதல் பார்வையிலேயே மதுபாலன் தெரிந்து கொண்டான், அந்த இளைஞன் கன்னி ராணியே தான்… அவன் மூச்சு முட்டியது. அந்தக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித் துக்கொண்டிருந்தான்.

அந்தக் கிழவி நிமிர்ந்து நின்றாள். மேடையின் மேல் நின்ற வீரன் ஒருவன் வந்து வணங்கிக் கூட்டத் தைப் பார்த்துச் சர்வாதிகாரி வந்து வீட்டார் என்றான் கூட்டத்தில் பரபரப்பும் குழப்பமும் உண்டாயிற்று. அங்கே அத்தனை பேருடைய குரலிலும் ‘ சர்வாதிகாரி, சர்வாதிகாரி, சர்வாதிகாரி ‘ என்ற ஒரு வார்த்தைத் தான் அடிப்பட்டது. ஜனங்கள் சுற்று முற்றும் பார்த்தார்கள். கழுத்தை உயர்த்திக்கொண்டு கால் விரல்களில் நின்று நலாபக்கமும் பார்த்தார்கள். அவர் கள் கண்களுக்குச் சர்வாதிகாரி தோன்றவில்லை ஒரு கிழவி தான் நின்றுகொண்டிருந்தாள். அந்தக் கிழவி இரண்டு கைகளையும் உயர்த்திக் கூட்டத்தை அமைதி யாக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டு தன் வெள்ளை அங்கியை இழுத்து அப்பால் போட்டாள். ஜனங்கள் ஆச்சரியத்தில் விதம் விதமான ஒலியைக் கிளப்பினர். சர்வாதிகாரி, சர்வாதிகாரி என்ற குரல்கள் மீண்டும் எதிரொலித்தன. அவன் மீண்டும் தன் கைகளை உயர்த்தி அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டான். அலைகுமுறி ஓய்ந்ததைப்போல் அத்தனை கூச்ச லும் ஆரவாரமும் நிசப்தத்தில் மறைந்தன. அவன் ஆழ்ந்த நிதானமான குரலில் பேசினான்,

“துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்ந்து அழுந்திக் கொண்டிருக்கும் என்னுடைய ஏழைச் சகோதரர்களே …அடிமைத்தனத்திலும் அல்லலிலும் அவதியுற்ற காலம் நமக்கு இனி முடிவடையப்போகிறது. அதோ விடுதலை தேவதை உதயமாகிறாள். அவள் வருகையை இன்னிசைக் குரலில் பாடி அறிவிக்கின்றன பறவைகள்……..”

உண்மையாகவே அப்போது இசைக் கருவிகள் மீட்டப்படுவது போன்ற நாதம் இலேசாக வந்து கொண்டிருந்தது. மதுபாலன் ஆச்சரியத்துடன் திரும் பித்திரும்பிப் பார்த்தான். அங்கே மேடைமேல் நின்ற இளைஞன் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக அந்த இசைதான் எங்கோ தூரத்திலிருந்து அருகில் வரு வதைப்போல் கேட்டுக்கொண்டு வந்தது. சர்வாதிகாரி மீண்டும் பேசினான்.

– தோழர்களே…அவள் வருகை நமக்குத் தெளி வாய்க் கேட்கிறது. ஆனால்… நமது அடிமைத்தனத் தின் மேல் தமது சுகவாழ்வைக் கட்டிக்கொண்டே ஆள்வோர் கூட்டம் அவள் உதயமாவதைத் தடுக்கக் கச்சைகட்டிக்கொண்டு நிற்கின்றனர். பணமும் பதவி யும் படையும் காட்டிப்பயமுறுத்தி நிற்கின்றனர். ஆனால்…. ஆதவன் எழுச்சியை மேகங்கள் தடுத்துவிட முடியுமா…? முடியவே முடியாது… சூரியன் கிழக்கே உதிப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் தான் நமது வெற்றியும்… எத்தனை தடைகள் எதிர்த்திடினும் எத்தனை துன்பங்கள்மோதிடினும்..எத்தனை தோல்விகள் ஆரம்பத்தில் வந்து நம்மைத் தாக்கினும் –.நாம் உறுதிகொள்வோம்…போரிடுவோம் என்று. வெற்றி நமது தான்… நிச்சயமாக……! கண்டிப்பாகச் சுதந்திர தேவி உதயமாகியே தீருவாள்…இதோ உதய மாகிவிட்டாள்…!”

இந்தச் சமயத்தில் அந்தப் பின்னணிகளின் முழக் கம் அதிகமாகி ஆயிரம்பறவைகள் ஆரவாரிப்பதுபோல் முழங்கி நின்றது. மேடைமேல் கன்னி ராணி தோன்றி நின்றாள். பிரத்யேகமாக அவளுடைய முகத்திற்கு மாத்திரம் அதிகமான ஒளிதரும் படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்தக் கூட்டம் ஆச்சரியத்தில் மூழ்கி எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து நின்றது. ஒவ்வொருவருடைய வாயிலிருந்தும் எதிர் பார அதிசயத்தினால் விதம் விதமான ஒலிகள் கிளம் பின…அலை அலையாகப் பாயும் கூந்தல், அதன்மேல் நட்சத்திரங்களைப்போல் மின்னிய தூய மலர்கள்…….. செக்கச் சிவந்த உடைகள்..அதன்மேல் பொன்மலர் மாலை…அவள் முகமும் கைகளும பவளத்தில் கடைக் தெடுக்கப்பட்டவைபோல் மின்னின…அந்த உருவம் பார்ப்பவர்கள் மனதில் எவ்வளவு ஆழ்ந்த உணர்ச் சியை உண்டுபண்ணிய தென்பதை மதுபாலன் உணர்ந் தான். அவனே ஒருகணம் நினைவு மறந்துவிட்டான்.

அதன் பின் நெடு நேரத்திற்குப் பிறகு யோசனை செய்து பார்த்தபின் தான் சர்வாதிகாரியின் கூர்மை யான மதிவன்மை அவன் அறிவுக்குப் புலப்பட்டது. கன்னி ராணி தோன்றிய பின் சர்வாதிகாரி பேசிய வார்த்தைகள் அவன் மனதில் பதியவில்லை. அவன் அவளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான்.

ஆனால் கூட்டத்திலிருந்தவர்கள் வெறிபிடித்தவர்கள் போல் குத்துக்கொண்டும் கூவிக்கொண்டும் இருக் தார்கள். அவன் பேசப் பேச ஆரவாரித்துக்கொண் டிருந்தார்கள். நடைபெறப் போகும் போராட்டத் தில் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப் பணித்துவிடுவதாகச் சபதம் செய்தார்கள்… கடைசி யில் கரகோஷத்துடன் அளவுகடந்த உற்சாகத்துடன் பிரிந்தார்கள்…எல்லாவற்றையும் அவன் கவனித்தும் கவனியாதவனாக இருந்தான்.

கூட்டத்துடன் கூட்டமாக அவனும் கலைந்து சென்றான். அப்போது அவன் திரும்பத்திரும்ப யோசித்தான். ஜனங்களை ஒரு வெறிகொண்ட நிலைக் குத்தூண்டிவிடக் கூடிய மகத்தான சக்தி அவளுடைய அந்தத் தோற்றத்திற்கு இருந்தது. அதை நன்றாக உணர்ந்து உபயோகித்துக்கொள்கிறான் சர்வாதிகாரி. அதுமாத்திரமல்ல… நடைமுறையிலிருக்கும் அரசாங்க யந்திரத்தின் கீழ் ஜனங்கள் உண்மையிலேயே அவதிப் படுகிறார்கள் . அவர்களுடைய துன்பத்தைச் சுட்டிக் காட்டி அவற்றிற்கு விமோசனம் கொண்டு வருவதாய்க் கூறும் யாரையும் எளிதில் நம்பிவிடுகிறார்கள். சர்வாதி காரி மிகமிகச் சாமர்த்தியத்துடன் தான் தன் திட்டங் களை வகுத்திருக்கிறான். அவனை வெல்வது அவ்வளவு சுலபமல்ல ….!

மதுபாலன் இந்த நிகழ்ச்சிக்குப் பின் இன்னும் வேகமாகத் தலை நகரை நோக்கி யாத்திரை செய்யத் தொடங்கினான். எவ்வளவுக்கெவ்வளவு காலம் தாமத மாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சர்வாதிகாரியன் பலம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவுக் கவ்வளவு அரசாங்கம் பலஹீனமடைகிறது. சர்வாதிகாரியின் வெற்றி அவனுடைய சர்வநாசம்தான்……. எனவே அதற்கெதிரான சக்திகளை அவன் சீக்கிரம் திரட்டியாகவேண்டும். அதற்காக அவன்பறந்தோடினான்.

ஆனால்….?

தலை நகரை அடைந்தபோது அவன் கேள்விப் பட்ட செய்தி அவனைத் திடுக்கிட வைத்தது. பூபாலன்

முதலியோர் அப்போது தான் அங்கு வந்து சேர்ந்திருந் தனர். பூபாலன் அரசனைப் பேட்டி காண விரும்பினான். ஆனால் அவன் முன்னே மந்திரி அவன் கையில் உத்தர வொன்றைத் திணித்தார். உடனே எங்கிருந்தாலும் மதுபாலனைக் கைது செய்ய வேண்டும் என்பது தான் அது.

சர்வாதிகாரியின் சூழ்ச்சியில் அரசரும் சிக்கிக் கொண்டாரோ என்று பூபாலன் சந்தேகித்தான். அமைச்சர் கூறினார், அரசரின் விசேஷ ஆலோசகராக வும் தூதுவராகவும் இருந்த அடியார் சிவப்பழத்தைக் கொன்றுவிட்டதாக மதுபாலன மேல் குற்றம் சாட்டப் பட்டிருந்தது. சிவப்பழம் மதுபாலனின் அறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். அத்துடன் அவனுடைய மனைவியும் கொல்லப்பட்டிருந்தாள். மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு இருவரையும் மது பாலன் கொன்றுவிட்டதாக அரசர் கருதினார். அதற் கேற்றாற்போல் மதுபாலன் உடனுக்குடன் மறைந்து விட்டான். குற்றவாளி மறைந்துவிட்டதாகக் குற்ற இலாகா குற்றம் சாட்டியது. எனவே குற்றம் ஒரு தலைப்பட்சமாகத் தீர்ப்பளிக்கப் பட்டு மதுபாலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பூபாலன் அமைச் சரிடம் உண்மைகளை விளக்க விரும்பினான். ஆனால் அதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. மறுபடியும் இரவு சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அமைச்சர் அரசரைக் காணச் சென்றுவிட்டார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் மது பாலனுக்குச் சிரிப்பு வந்தது அரசருக்கு வேண்டிய ஒருவர் கொல்லப்பட்டார் என்றவுடன் காரணகாரியம் அறியாமல் உத்திரவு பறக்கிறது. இன்னொருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவன் ஒருகணம் சிரித்தான். இந்த அரசாங்க யந்திரம் கண்மூடித்தன மாக மனிதர்களுக்கு எத்தனையோ துன்பங்களைச் சிருஷ் டித்து வைத்துவிட்டது. அவர்களைத் தன் யதேச் சாதிகாரத்தினால் எத்தனையோ அல்லல்களுக்கு ஆளாக்கிவிட்டது. துன்பத்திலும் வறுமையிலும் பிணித்து அவர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கிறது அந்தக் கொதிப்புதான் மிக எளிதாக அவர்களைச் சர் வாதிகாரியின் ஆட்களாக மாற்றிவிட்டன. அரசாங் சத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் அனுபவத்தில் அவன் கண்டறிந்திருந்த இயற்கை அறிவு அவனுக்கு மிகச் சாதகடான, எளிய வழியை அமைத்துக்கொடுத்துவிட்டது.

மதுபாலனுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருபுறம் சர்வா கொரியின் ஒற்றர்கள். மறுபக்கம் அரசாங்கத்தின் ஒற்றர்கள். இரு பக்கங் சளிலும் அவன் தப்பவேண்டும். இதுவரை எப் படியோ காலம் கடத்திவிட்டான். இனி என்ன செய் வது…? மற்ற இடங்களில் ஓரளவு அவன் சமாளித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் தலை நகரிலேயே எத்தனை நாட்களுக்கு மாறுவேஷத்தில் உலவ முடியும். பூபா லன் எப்படியும் சில நாட்களுக்காவது அவன் மறைந்திருந்தாகவேண்டும் என்று கூறினான். எங்கே மறைவ தென்று தான் அவனுக்குத் தெரியவில்லை. பூபாலன் அதற்கு ஒரு ஏற்பாடுசெய்தான். நகரின் ஒதுக்குப் புறமாக இருந்த சத்திரம் ஒன்றிலே தற்காலிகமாக மதுபாலனும் சில வீரர்களும் தங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. சத்திர நிர்வாகி பூபாலனின் கட்டுப் பாட்டில் இருந்தான். அதனால் அங்கு அவனுக்கு எந்த வித ஆபத்தும் நேரிடாது என்று பூபாலன் உறுதி கூறினான்.

ஆனால்…… அங்கும் அவனால் தங்க முடியவில்லை. அதே இரவு சர்வாதிகாரியின் ஆட்கள் அந்தச் சத்தி ரத்தைத் தாக்கினர். அவர்களுக்கு எப்படியோ விஷ யம் தெரிந்துவிட்டது. சத்திரத்தில் இருந்த அத்தனை பேரும் கொலைசெய்யப்பட்டார்கள்…அந்த அல்லோல கல்லோலத்தில் யார் இறந்தார்கள் யார் பிழைத்தார் கள்… ஒன்றுமே தெரியவில்லை…

16. கால் நடையாக…!

சர்வாதிகாரியின் பிரச்சாரத் திட்டத்திலே அவள் ஒரு நாடகமேடை நடிகையாக இருந்தாள். அவ ளுடைய நடிப்பு ஆயிரக்கணக்கான எளிய உள்ளங் களிலே அனலை மூட்டிவிடப் போதுமான தாக இருங் தது. அந்த நடிப்பு ஏதோ ஒரு ஆவேசம் கொண்ட முழக்கத்தின்கீழ் மக்களை ஒன்று திரட்டப் போதுமான தாக இருந்தது. அவள் நடுங்கினாள். அந்த நடிப்பு… அவளுடைய உயிர்க் காதலனையும் அவனைச் சேர்ந்தவர் களையும் ஒரே அடியாக நிர்மூலம் செய்துவிட ஒரு மாபெரும் சக்தியை உருவாக்குவதில் முனைந்திருந்தது.

ஒவ்வொருகணமும் அவள் உள்ளம் போராடியது அவள் அதைச் செய்யத் தயாராக இருக்கவில்லை. ஒவ் வொரு விநாடியும் – இல்லை…… நான் சர்வாதிகாரியின் கைப்பொம்மையாக இருக்கமாட்டேன்…’ என்று சப் தம் செய்து கொள்வாள். ஆனால்…அவனுடைய கட் டளையிடும் கண்களைக் கண்டவுடன் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவாள், அவனை எதிர்த்து நிற்கமுடியும் என்பதில் அவளுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அவள் பெண் யாதொரு பாதுகாவலுமின்றி அந்தக் கொடிய வனின் பிடியில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவளால் என்ன செய்யமுடியும்….?

ஆனால்…, மனச்சாட்சிக்கு மாறாக, உள்ள உணர் விற்கு விரோதமாக…… இந்த உலகில் எல்லாம் தனக் குரிய ஒரே துணையாக யாரைக் கருதுகிறாளோ, அவ னுடைய அழிவுக்கு உதவும் இந்த வேலையை அவள் எத்தனை நாள் செய்துகொண்டிருப்பாள். அவள் உள் ளம் குமுறிக்கொண்டிருந்தது. வழக்கம்போல் அன் றிரவும் அவள் தனிமையிலே தன் உள்ளத்தில் நிறைந் திருந்த துயரவெள்ளத்தைக் கண்ணீராய்க் கரைத்துக் கொண்டிருந்தாள், அழுது அழுது ஓய்கின்ற நிலையிலே அவள் உள்ளத்தில் ஒருபுது உணர்ச்சி தோன்றியது, ஆமாம். அழுதுகொண்டிருப்பதால் என்ன பயன்…? அவளும்தான் மனிதப் பிராணியாகப் பிறந்திருக்கிறாள். அவளைப்போல் மனிதர்களாகப் பிறந்தவர்கள்…மகத் தான காரியங்களைச் சாதிப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்களிலே எத் தனையோ பேர் உயிரைக்கூடத் தியாகம் செய்கிறார்கள் அந்தத் தியாகத்திலே இன்பம் காண்கிறார்கள். அவள் மாத்திரம் ஏன் சோற்றைத் தின்று ஊசலாடிக்கொண்டிருக்கும் வெறும் பொம்மையாக இருக்கவேண்டும்…? அவள் மாத்திரம் ஏன் மனச்சாட்சிக்கு விரோதமாக ஒரு கொடியவனுக்கு அடங்கிக்கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டும்.

அவள் சிந்தித்துக்கொண்டே இருந்தாள். அன் றையப் பிரச்சாரக் கூட்டத்திற்குப் பிறகு அவர்கள் இருவர் மாத்திரம் அதே மாறுவேஷத்தில் நெடு நேரம் குதிரைகளின் மேல்சவாரிசெய்துகொண்டு போனார்கள். பிறகு, . பாலைவனம்போல் தோன்றிய ஏதோ ஒரு வெட்ட வெளியின் நடுவிலே இடிந்து கிலமாகிக் கிடந்த பாழும் மனை ஒன்றிலே தங்கினார்கள். அங்கே இவர்களைத்தவிர வேறு யாரும் இருக்கவில்லை. குதிரை களை உள்ளே கொண்டுபோய் மறைவாக ஒரு இடத் தில் கட்டியவுடன் சர்வாதிகாரி அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான். வெளியிலேயே அவளை நிறுத்தி விட்டு அந்த இடத்தைத் தன் கையால் சுத்தம் செய் தான். பிறகு அவர்கள் கொண்டுவந்திருந்தவற்றில் இரண்டு சால்வைகளை விரித்துக் கண்ணம்மா…இந்த இரவைக் கொஞ்சம் கஷ்டத்துடன் தான் கழிக்கவேண் டும். எனக்கு இதைப்போல் துன்பங்களை அனுபவித்துப் பழக்கம். ஆனால் நீ…’ என்று சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்தான்.

‘நானும் இவற்றை எல்லாம் பழகிக்கொள்ளத் தான் வேண்டும்….’ என்று சொல்லிவிட்டு அவள் பேசாமல் படுத்துக்கொண்டாள். படுத்தவுடன் கண் களை மூடிக்கொண்டாள். வழிநடந்த களைப்பிலேயே அவள் உறங்கவிரும்புகிறாள் என்று கருதிச் சர்வாதி காரியும் படுத்துக்கொண்டான். உண்மையில் அவன் தான் மிகவிரைவில் களைப்பினால் அயர்ந்துவிட்டான்.

யோசனைசெய்து கொண்டே படுத்துக்கொண்டிருந்த வள் நெடுநேரத்திற்குப்பிறகு திடுக்கிட்டவள் போல் எழுந்திருந்தாள். சர்வாதிகாரி அயர்ந்து தூங்குவதைக் கவனித்தாள். கீழே விரித்திருந்த சால்வையை எடுத் துப் போர்த்துக்கொண்டு கால்போன வழியில் நடக்க ஆரம்பித்தாள். அவள் உள்ளத்தில் ஒரே ஒரு எண் ணம்தான் இருந்தது. எப் டியும் தன் காதலனைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பது தான் அது.

பொழுது புலரும் சமயத்திலே அந்த வழியிலே பாரம் ஏற்றிக்கொண்டு போய்கொண்டிருந்த வண்டி ஒன்றிலே இரண்டாம் முறையாக அவளுக்கு இடம் கிடைத்தது. அது ககனபுரிக்குப் போய்க்கொண்டிருந்தது.

17. மஞ்சு

ஜமீந்தார் மாளிகையின் முன்னால் ஏழைப் பெண் ஒருத்தி நின்றுகொண்டிருந்தாள். அவள் தனக்கு ஏதாவது வேலை தரும்படிக் கெஞ்சிக் கேட்டுக்கொண் டிருந்தாள். ஒன்றும் அறியாத பட்டிக்காட்டுப் பெண் போலக் காணப்பட்டாள். திக்கித் திக்கிப் பேசினாள். கந்தல் உடைகள் தான் அணிந்துகொண்டிருந்தாள். ஆனாலும் என்ன…? அவளைப் பார்த்தவர்கள் திரும் பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்,

அவளுடைய குரல் பரிதாபகரமாக இருந்தது. கண்களில் கவலையும் ஏக்கமும் குடிகொண்டிருந்தன. உறக்கமின்மையாலும் அலைச்சலாலும் களைத்துப் போய்விட்டவள் போல் காணப்பட்டாள். தலை எல்லாம் கலைந்து காற்றில் பறந்து கொண்டிருந்தது. வருகிறவர்கள் போகிறவர்களிடம் எல்லாம் ‘ஐயா எஜமானைப் பார்க்கணுங்க ஐயா… ஏழைக்கி ஒரு வேலை கொடுக் கச்சொல்லுங்க ஐயா…’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

மாடிமேல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்தார் ஜமீந்தார். அந்த எளிய சிறுமியின் கவர்ச்சி மிகுந்த தோற்றம் அவர் கவனத்தைக் கவர்ந்தது. அவர் உள்ளத்தில் குதுகுதுப்புத் தோன்றியது. அந் தப் பெண்ணை அழைத்து வரும்படிக் கட்டளையிட் டார். கண்களில் சாகஸம் மின்ன ‘ஏ பெண்ணே … வீதியில் போகிறவர்களிடம் வேலை கேட்டால் கிடைக் குமா….?’ என்றார்.

அவள் நடுங்குவதுபோல் நடித்துக்கொண்டு, ‘ஏழைங்க எஜமான்… தெரியலையுங்க எஜமான்… திக் கில்லை எஜமான்… காப்பாற்றுங்க எஜமான்…” என் றாள். ஜமீந்தார் சிரித்தார். ‘சரிசரி .. போ… அந்தப் புறத்தில் ஏதாவது வேலை செய்யப்போ … அழகாய் இருக்கிறாய்… வேறு உடைகள் அளிக்கச் சொன்னேன் என்று சொல்லி வாங்கி உடுத்திக்கொள்…’ என்று கூறினார். ‘எஜமான் சலாமுங்க எஜமான்… சலாமுங்க எஜமான்…’ என்று கும்பிடு போட்டுக் குதித்துக் கொண்டு ஓடினாள் பெண்.

இரண்டு நாட்களில் அவள் ஜமீன் மாளிகையின் ரகசியம் முழுவதும் தெரிந்து கொண்டாள், அங்கே எத்தனையோ பணிப்பெண்கள் இருந்தனர். யாருக்கு என்ன வேலை என்பது கிடையாது. பலவிதமான கார ணங்களுக்குப் பலவிதமாக அங்கே சேர்க்கப்பட்டு எல் லோரும் ஆட்டுமந்தை போல் திரிந்துகொண்டிருந்தனர். அவர்களில் பலரும் ஜமீந்தாருக்கு ஆசை நாயகிகளாகவும் இருந்தனர். வேறு வேலையே இல் லாததால் அவர்கள் உண்பதும் உறங்குவதுமான நேரம் போக மற்ற நேரங்களில் யாராவது கண்ணுக் குக்கிடைத்தவர்களுடன் காதல் புரிய வாய்ப்புக்கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்…

இந்தப் புதிய பணிப்பெண் இளைய ஜமீந்தார் மாளிகையைச் சுற்றிச் சுற்றி வலம் வருவதில் ஈடுபட் டிருந்தாள். நெடுநாட்களாக அதில் யாருமே வசிக்காத தால் பாழடைந்து இருள் மண்டிப்போய்க் கிடந்தது. வேலைக்காரர்கள் கூட அந்தப்பக்கம் போவதை மறந்து விட்டனர், குப்பையும் கூழமுமாகக் கிடந்த அறைகள் சிலவற்றை அவள் நன்றாகச் சுத்தம் செய்து வைத் தாள். இரவுகளில் யாரும் கவனியாத வண்ண ம் அங்கே சென்று சிறிய மெழுகுவர்ததி ஒன்றை ஏற்றி வைத்துக்கொண்டு மணிக் கணக்காக உட்கார்ந்த வண் ணம் காத்துக்கொண்டிருந்தாள். சீக்கிரத்தில் ஒருநாள் அவன் அங்கு வருவான் என்று அவள் எதிர்பார்த் தாள். சர்வாதிகாரியின் ஒற்றர்கள் அங்கும் இருப்பார் கள் என்பதில் அவளுக்குச் சந்தேகமே இருக்கவில்லை, அவள் கூடுமானவரை மறைந்து மறைந்தே வசித் தாள். இந்தப்பெரிய ஆபத்திலிருந்து எப்படித் தப்ப முடியும் என்பது அவளுக்கு விளங்கவே இல்லை.

நாளாக நாளாக அவளுடைய நம்பிக்கை மறைந்து கொண்டிருந்தது. உயிரோடு கடைசியாக ஒருமுறை அவனைப் பார்க்கமுடியுமா என்பதுகூட அவளுக்குச் சந்தேகமாகப்பட்டது. ஆனாலும் அவள் இரவுகள் பூராவும் விடிய விடிய அங்கே அந்த அரண்மனையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருப்பதில் தவறவில்லை

அவளுடைய ஆசை வீண் போகவில்லை. எதிர் பார்த்ததைப்போலவே ஒரு நாள் நள்ளிரவில் அங்கே ஒரு மனிதன் வந்தான் பைத்தியக்காரன் போல் தலையை விரித்துப்போட்டுக்கொண்டு கிழிந்த உடை கள் அணிந்துகொண்டிருந்தான். அவன் தான் வந்து விட்டான் என்று அவள் நினைத்தாள். ஆனால் அந்த மனிதன் அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்ததும் ‘ஆ… கன்னி ராணீ…நீங்களா…? வணக்கம்…’ என்று சர்வாதிகாரியின் ஆட்கள் செய்வதைப்போல் வணக் கம் செய்தான். அவள் உயிர் அவளிடம் இருக்கவில்லை கைகால் ஆடாமல் பேச நா எழாத நிலையில் நின்றாள். அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பின்னாலிருந்து பாய்ந்துவந்த வேறொருவன் கட்டாரியால் ஒரே குத் தில் அந்தப் பைத்தியக்காரனைப் பிணமாக்கினான். அவள் மூர்ச்சைபோட்டு விழப் போனாள். அவன் அவளைத் தன் மார்மேல் தாங்கிய வண்ணம்… “தேவீ … நான் தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை…” என்று அவன் தழுதழுத்த குரலில் கூறினான் அவள் அவன் முகத்தைப் பார்த்தாள் அடுத்தகணம் அவன் மார் பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டாள்.

அவன் அவளை மெதுவாக அழைத்துச்சென்று ஒரு ஆசனத்தின்மேல் அமர்த்தினான் மெதுவாக அவளைத் தன் மடியில் சாய்த்தவனாய், ” கண்ணம்மா …அழுதுகொண்டிருக்க நேரமில்லை. நான் உன்னை இங்கு எதிர்பார்க்கவில்லை. இங்கிருந்து நாம் தப்பிப் போயாகவேண்டும்…வெளியே சர்வாதிகாரியின் படைகள் நாலாபக்கங்களிலும் போரிட்டிக்கொண்டிருக்கின் றன. எங்கு பார்த்தாலும் ஒற்றர்கள் சூழ்ந்துகொண் டிருக்கிறார்கள். இதோ இவன் இன்று காலை முதல் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். எனக்கு வேறு புகலிடம் கிடைக்கவில்லை. அதனாலேயே சாகஸ மாக இங்கேயே அழைத்து வந்தேன்…. கண்ணம்மா …இப்போது எனக்கு ரொம்பவும் பசியாக இருக் கிறது. எப்படியாவது ஏதாவது கொஞ்சம் சாப்பிட வேண்டும்…” என்றான்.

“கொண்டுவருகிறேன்,” என்று சொல்லிவிட்டு எழுந்திருந்தாள் பிறகு மீண்டும் அவன் அருகே அமர்ந்து அவன் மேல் சாய்ந்தவாறு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். மறுபடியும் ஒரு கணம் அவனை உற் றுப் பார்த்துக்கொண்டிருந்த பிறகு அவள் புறப்பட்டாள்.

அவள் சமையல்கட்டை அடைந்திருக்கமாட்டாள் நாலா புறங்களிலும் இடி முழக்கம்போல் படைகளின் ஆரவாரம் கிளம்பியது. அவன் ஒரே பாய்ச்சலில் வாளை உருவிக்கொண்டு கிளம்பினான்.

அவள் அவசரம் அவசரமாக கைக்குக்கிடைத்த உணவுப் பொருள்களை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டிருந்தாள். அரைத் தூக்கத்தில் எழுந்திருந்த சமையல்காரர்களும் பரிசாரகர்களும் செய்வதறியா மல் மூலைக்கு மூலை ஓடிக்கொண்டிருந்தனர். எங்கும் ஒரே குழப்பமும் கலவரமுமாக இருந்தது. அவன் அங்கே உருவிய வாளுடன் ஓடிவந்தான். நிதானமாக அவள் அருகே சென்று ஒரு கையால் அவளை அணைத் துக்கொண்டவனாக வாளை ஒருபுறமாக வைத்துவிட்டு அவள் தட்டில் எடுத்துவைத்திருந்த பலகாரங்களையும் பழங்களையும் சாவகாசமாகச் சாப்பிட ஆரம்பித்தான். வீரர்கள் உருவிய வாட்களுடனும், ஈட்டிகளுடனும் ஓடிக்கொண்டிருந்தனர். குதிவைத்த செறுப்புகள் தரையில் மோதும் ஓசையாலும் பாய்ந்து செல்லும் குதிரைகளின் குளம்படி ஓசையாலும் கலவரத்தினால் செய்வதறியாமல் பிதற்றுகிறவர்களின் குரலாலும், போர்க் களத்தில் அடிபட்டு விழுகிறவர்களின் அவலக் கூச்சலாலும் மாளிகை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் நடுங்கிக்கொண்டிருக்கும் தன் உயிர்க் காதலியை மார்புறத்தழுவியவனாய் மிக மெதுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவன் வயிறாரச் சாப்பிட்டு எவ்வளவோ நாட்களாய்விட்டன. அதைப்போன்ற உணவை ருசித்து எத்தனையோ கால மாகிவிட்டது.

குழப்பமும் கூச்சலும் மிகுதியாயிற்று. களத்தை நோக்கி ஓடிய வீரர்கள் திரும்பி ஓடிவந்தனர். அரண் மனைக்குள்ளேயே கொள்ளைக்காரர்கள் புகுந்து விட்ட னர். கண்ட இடங்களில் கைக்குக் கிடைத்த பொருள் கள் சூறையாடப்பட்டன. வேலைக்காரர்கள் அலறிக் கொண்டு கூவி அழுதனர். கொள்ளைக் கூட்டம் கண்ணிற்பட்டவர்களைக் கொன்று தீர்த்தது. கைக்குக் கிடைத்த பெண்களைக் கற்பழித்தது. அவன் திரும்பிப் பார்த்தான். கொள்ளைக்காரன் ஒருவன் உருவிய வாளு டன் அவனை நோக்கிப்பாய்ந்து வந்தான். அவன் லாவகமாகத் தலையை வளைந்துகொடுத்தான். அவன் தலை குப்புறத் தரையில் மோதி விழுந்தான், தன் அரு கில் இருந்த தண்ணீர்க் கூஜாவினால் ஓங்கி அவன் தலை யில் அடித்தான். அவன் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான். மிக விரைவில் அவனுடைய உடைகளைக் களைந்து தான் அணிந்து கொண்டு அவளையும் ஒரு கையில்பிடித்து இழுத்துக்கொண்டு இருளில் மறைந்து ஓட முயன்றான்.

“கன்னி ராணி…” என்ற குரல் விண்ணைப் பிளந் தது.

“கன்னி ராணிக்கு…”

“ஜே…ஜே…ஜே….”

“கன்னி ராணிக்கு ஜே…” அந்த முழக்கம் அந்த காரத்தைப் பிளந்து கொண்டு வானத்தில் சென்று முட்டியது, ஆயிரக்கணக்கான குரல்கள் அந்த முழக் கத்தை எதிரொலித்தன. ஆயிரக்கணக்கான வீரர்கள் வெறிகொண்டவர்கள் போல் கூச்சலிட்டுக் குதித்தனர் படைத்தலைவன் வந்து அவளை வணங்கினான். அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனால் தன் கண் களையே நம்பமுடியவில்லை. “தே வீ …. தாங்கள் தானா…?” என்று ஆர்வத்தால் கூவி விட்டான்.

அவன் தன் தலையிலிருந்த கவசத்தைக் கழற்றி னான். அவன் தான் ‘மஞ்சு’..!

” தேவீ…” என் சபதத்தை நிறைவேற்றிவிட் டேன். ஜமீந்தாரின் உடலை என் கையால் சுக்கு நூறா கக் கிழித்தெறிந்துவிட்டேன். இந்த ஜமீந்தார் மாளி கையைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் அத்தனை பேரை யும்… ஒரு குஞ்சு குழந்தையைக் கூட விடாமல் கொன்று தீர்த்துவிட்டேன். இங்கே இருந்த அத்தனை வஸ்துக்களையும் ஒன்றைக்கூட விடாமல் நாசம் செய்து விட்டேன். அன்று நம்முடைய அரண்மனை இந்தப் படுபாவியின் கரத்தால் தீ மூட்டப்பட்டு எந்தக்கதியை அடைந்ததோ.. அந்தக் கதிக்கு இந்த ஒரே இரவில் கொண்டுவந்துவிட்டேன். தேவீ…என் சபதத்தை நிறைவேற்றிவிட்டேன். நான் தங்கள் அடிமை.

‘சபாஷ்…மஞ்சு…இன்னும் ஒரே ஒரு ஆளைபாக்கி யாகவிட்டுவிட்டாய்…’ என்ற ஒரு உரத்த குரல் கிளம் பியது. சர்வாதிகாரி நிதானமாகக் குதிரைமேல் அமர்ந்தபடியே வந்துகொண்டிருந்தான். தன் கையி லிருந்த உருவிய வாளால் மதுபாலன் தலையில் அணிந் திருந்த கவசத்தைத் தட்டிவிட்டு, “இதோ இளைய ஜமீந்தார்” என்றான் சர்வாதிகாரி.

“இளைய ஜமீந்தார்…”

அந்தக் குரல் நாலாபக்கங்களிலும் எதிரொலித்தது,

அவள் கதிகலங்கிவிட்டாள். ”நமது ராணியை உரிய மரியாதையுடன் கோட்டைக்குக் கொண்டுவந்து சேர். ராணியின் கட் டளைப்படி இளைய ஜமீந்தாரை நடத்து. எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன…” என்று சொல்லிவிட்டுச் சர்வாதிகாரி வந்த வழியே திரும்பினான்.

18. முடிவு

ஆயுதபாணிகளான கள்வர்களுக்கு நடுவிலே மது பாலன் கைகளைக்கட்டிக்கொண்டு பெருமிதத்துடன் நின்றான். வாழ்வா, சாவா என்ற சந்தேகம் அவன் மனதிலே இருக்கவில்லை. அவன் எதற்கும் தயாராக இருந்தான். வாழ்வானாலும் சாவானாலும் அதிலே பங்கு கொள்ள அவளும் தயாராக இருந்தாள். அவன் மனம் பூரணமாக நிரம்பியிருந்தது. அவனுடைய உள்ளம் விரிவான தத்துவ ஆராய்ச்சியிலே ஈடுபட்டிருந்தது. கண்கள் குழிவிழும் வரை வாழ்ந்தவர்கள் கண்டது தான் என்ன…? கைகால் நடுங்கி உடல் வளைந்து கூனிக்குறுகி, புலன்கள் செயல் மறக்கக் காணவும், கேட்கவும், பேசவும்கூடத் தடுமாறும் நிலைவரும் வரை வாழ்ந்தவர்கள் தான் உலகத்தில் கண்டதுதான் என்ன? அனுபவித்தது தான் என்ன…!

வாழ்க்கை ஒரு சுமை…! சுமைதான் இந்த வாழ்க்கை ..!

அது ஒழிந்துபோவதானால் நிச்சயமாக ஒழிந்து போகட்டும். அவனுக்கு கவலை இருக்கவில்லை. அவனு டன் வாழ அல்லது மடிய உண்மையான காதலுள்ள ஒரு களங்கமற்ற ஜீவன் தயாராக இருந்தது. அவன் அவளை உயிரினும் அதிகமாக நேசித்தான். அவளோடு அடையும் எந்தக் கொடிய தண்டனையும், நரகவேதனை யும் இன்ப மயமானதாகவே இருக்கும் என்று கருதினான்.

ஆனால் அப்போது அவள் அவனைப்போல் அங்கே கைதியாக நின்றுகொண்டிருக்கவில்லை. உள்ளே அழைத்துச்செல்லப்பட்டிருந்தாள். அவன் சுற்றுப் புறத்தை மீண்டும் ஒருமுறை கவனித்தான் சர்வாதி காரியின் கோட்டைகளை எல்லாம் தாண்டி மலைகளுக்கு மத்தியிலே ஒரு குகையின் அருகே அவன் நிறுத்தப் பட்டிருந்தான். அந்தக் குகை ஏதோ ஒரு சாதாரண மான குகையைப்போல்தான் அவனுக்குக் காட்சியளித் தது. அருகில் இருந்த காவலர்கள் ஏதோ கண்ணைச் சிமிட்டிப் பேசிக்கொண்டதை அவன் கவனிக்கவில்லை.

நகராக்களின் முழக்கம் கேட்டது மெல்ல மெல்ல நெருங்கி அதுமிக அருகில் வந்தது. தேர்ந்தெடுத்த வீரர்கள் நூற்றுக் கணக்கான பேர் வரிசையாகவந்து நின்றனர். அவர்களுக்குப்பின்னால் குதிரைகளின் மேல் சர்வாதிகாரியும், ராணியும், மஞ்சுவும் வந்தனர்.

சர்வாதிகாரி கண்ணம்மாளின் முகத்தையே பார்க்கவில்லை. அதிலிருந்து அவன் அவளிடம் ஒன் றுமே பேசவில்லை என்பது தெரிந்தது.

அவர்கள் குதிரைகளிலிருந்து கீழே இறங்கினர். சர்வாதிகாரி முதல் தடவையாகக் கண்ணம்மாளைப் பார்த்தான். அந்தப் பார்வை அளை அருகிலிருந்த மேடை ஒன்றின் மேல் ஏறி நிற்கும்படிக் கட்டளையிட் டது. அவள் மெதுவாக நடந்து சென்று அந்தப்பீடத் தின்மேல் ஏறி நின்றாள். சர்வாதிகாரி பேசினான்.

“என்னுடைய அன்புக்குப் பாத்திரமான வீரர் களே…! இன்று ஒரு புனிதமான நாள். நமது அரசி நமக்கு மீண்டும் கிடைத்துவிட்டாள். நாம் ஒளிந்து திரிந்த சிறு கூட்டமாக இருந்த திலிருந்து அரசாங் கத்தை நேரடியாக எதிர்த்துத் தாக்கும் ஒரு மகத் தான சக்தியாக வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த நேரத்திலே நமது ராணி மீண்டும் நம்மை அடைந்த இந்த நிகழ்ச்சி நமது வெற்றியை மேலும் நிச்சயப் படுத்துகிறது…

“அதே சமயத்தில் இன்று… நம்முடைய ஜென்ம வைரியும் நம்மால் ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு நமது வீரர்களை ஏமாற்றிக் கொலை செய்து தப்பிச்சென்று ஒளிந்து திரிந்துகொண்டிருந்த வனுமான இளைய ஜமீந்தாரும் நம்மிடம் அகப்பட்டி ருக்கிறான். இது நமக்கு வெற்றிமேல் வெற்றியாகும்…

இந்த இளைய ஜமீந்தார் யார்…?

நமது அரசி தனது மனையிலே தந்தையுடனும், ஆள் அம்புடனும் நிர்ச்சிந்தையாக உறங்கிக்கொண்டி ருந்த சமத்திலே அவர்கள் வசித்த மாளிகைக்குத் தீ மூட்டி… அவருடைய தந்தையும், வேலையாட்களும், கன்றுகாலிகளும்கூட உயிருடன் வெந்து சாம்பலா கும்படிச் செய்த மகா பாபியான ஜமீந்தாரின் மகன். அந்த ஜமீந்தார் நாம் ஒழிக்க விரும்பும் இந்த அரசாங் கத்தின் தூண். அரசனின் கையாள். ஏழை எளியவர் களை ஈவிரக்கமின்றி வெட்டி வதைத்துக் கசக்கிப் பிழி வதே தொழிலாய்க்கொண்ட துரோகி…..

அவனை நமது புதிய பிரதம சேனாதிபதி ஒழித்து விட்டார்… இது நமக்குக் கிடைத்திருக்கும் மற்றும் ஒரு வெற்றி…!

எனது அன்புக்குரிய வீரர்களே…!

இன்று நாம் தொடுத்திருக்கும் விடுதலைப் போர் உச்சநிலையில் நடந்துகொண்டிருக்கிறது. பிறர் அறிய முடியாத நிலையில் எவ்வளவோ சாமர்த்தியத்துடன் அமைக்கப்பட்டிருந்த மறைவிடம் இதோ… இந்தத் துரோகியினால் அரசனுக்குக் காட்டிக்கொடுக்கப் பட்டு விட்டது. நமது வீரர்கள் அரசனைத் தலை நகரிலேயே மடக்குவதற்காகப் போரிட்டுக் கொண்டிருக்கையில் அரசன் தானே ஒரு படையைத் திரட்டிக்கொண்டு வந்து இப்போது இந்தக் கானகத்தை முற்றுகை யிட்டுக்கொண்டிருக்கிறான். பாவம் அவனுக்கு நமது வலிமை தெரியாது. பொறியில் அகப்பட்ட எலியைப் போல் இன்னும் சிறிது நேரத்தில் அவன் இங்கு கைதி யாக வந்து நிற்பான். அதற்கு முன்னால் அந்த அரச னுக்கா ஆண்டியாக வந்து நம்மை வேவு பார்த்துச் சென்ற இந்த மரண தண்டனைக் கைதிக்கு…..அவன் செய்த மகத்தான குற்றத்திற்குத் தகுந்த பாடம் கற் பித்தாகவேண்டும். இவனுக்கு முதலில் மரண தண் டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதைச் சித்ரவதை செய்து சிறுகச்சிறுகக் கொல்லும் தண்டனை யாக மாற்றி நமது ராணியின் சார்பாக நான் உத்திர விடுகிறேன்.

சர்வாதிகாரி மேலும் ஏதோ சொல்ல வாயெடுத் தான்…அதன் முன் பயங்கரமான குரலில் கீச்சென்று கத்திக்கொண்டு அவள் அவனை நோக்கி ஓடினாள். மது பாலனை இறுகக்கட்டிக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதவளாய் “ இல்லை . அவரை மன்னித்துவிடுங்கள் …. எனக்காக மன்னித்துவிடுங்கள்…” என்று அரற்ற ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அங்கே ராணியாகவும் கட்டளையிடுபவளா கவும் இருக்கவில்லை. தன் கண்ணீ ரால், கதறலால், அழுகையால், ஆர்ப்பாட்டத்தால் சர்வாதிகாரியின் மனதை மாற்றவிரும்பும் ஒரு பேதைப் பெண்ணாக மாத்திரமே இருந்தாள். சர்வா திகாரியைத் திரும்பிப் பார்க்கக்கூட அவளுக்குப் பயமாக இருந்திருக்க வேண்டும். அவள் அவனைப் பார்க்கவே இல்லை அத் தனை வீரர்களுக்கு மத்தியில் அவள் மதுபாலனைக் கட் டிப் பிடித்துக்கொண்டிருந்தாள் தன் ஒரே குழந்தை யின் உயிருக்காக வாதாடும் தாயைப்போல் அவள் கூவி அழுதுகொண்டிருந்தாள்.

சர்வாதிகாரி இதை எதிர்பார்க்கவில்லை. அவளு டைய தவறை உணராதவன் போல் மீண்டும் அவளை ராணியாக்கித் தன்னுடைய கைப்பாவையாக ஆட்டி வைக்க முடியும் என்று அவன் நம்பியிருந்தான். அவ ளுக்கு தன்னிடம் எவ்வளவு பயம் என்பது அவனுக் குத் தெரிந்திருந்தது. தவிர அரசனுடைய படைகள் அவனுடைய வீரர்களின் முன்னால் திக்கு முக்காடிக் கொண்டிருந்தனர், வெற்றி அவனுடையது தான் என் பது நிச்சயமாகத்தெரிந்தது. அந்த அளவுகடந்த உற் சாகத்திலே, தைரியத்திலே……. அவன் தான் செய்வ தென்ன என்பதைப்பற்றித் துளிகூட யோசிப்பவனாக இருக்கவில்லை. அவள் தன் எதிரி , தன் படைவீரர் களின் எதிரில் இப்படிக் குழந்தை யப்போல் நடந்து கொண்டதைக் கண்டதும் அவனுக்கு ஆத்திரம் வந்த து….

“கண்ணம்மா.. இது என்ன வேடிக்கை இந்தப் பக்கம் வா…” என்று கூவினான்.

“இல்லை…அவரை மன்னித்து விட்டதாய்க் கூறுங்கள்…” என்று குழந்தையைப்போல் கெஞ்சினாள் அவள்.

“கண்ணம்மா …! மன்னிப்பா …? அவனுக்கா …?”

“ஆம் – எனக்காக…! நான் உயிர் வாழவேண்டு மானால் அவரும் வாழ்ந்தாகவேண்டும்..”

“இல்லை. முடியாது! முடியவே முடியாது…”

“அப்படியானால் அவருக்களிக்கும் மரண தண் டனையை எனக்கும் அளியுங்கள்…”

“உறங்கும்போது உன் தந்தையின் மாளிகைக்குத் தீ வைத்து அவரை உயிருடன் எரித்துக்கொன்றவள் நீயும்தானா…?”

“இல்லை. அதைப்போல் அவரும் இல்லை…”

“ஆனால் அவன் தந்தை…”

“தந்தையைத் துரோகியாக மதிக்கும் மக்களும் இருக்கின்றனர்…”
“அதனால்….?

“செய்யாத குற்றத்திற்காக ஒருவரைத் தண்டிப்பதா…”

“நான் விதித்த தண்டனை விதித்ததுதான்…!”

“அப்படியானால் அந்த தண்டனையை எனக்கும் விதியுங்கள்.”

சர்வாதிகாரியின் கோபம் அளவுகடந்துவிட்டது. “இவர்கள் இருவரையும் இழுத்துக் குகையில் தள்ளுங் கள்…” என்று கூச்சலிட்டான். வீரர்கள் தயங்கினார் கள். ” உம் சீக்கிரம்…” சர்வாதிகாரி கர்ஜித்தான்.

இரண்டு வீரர்கள் முன்னால் வந்தனர். அதுவரை சிலைபோல் நின்றுகொண்டிருந்த மஞ்சு வாளை உருவிக் கொண்டு துள்ளி அவர்கள் முன்னால் வந்து நின்றான். ‘ நில்லுங்கள்…” என்று கூவினான். ” நில்லுங்கள்” என்றான் மீண்டும். அவர்கள் நின்றனர், ” நீங்கள் ராணிக்கு விஸ்வாசமாய் இருப்பதாய்ச் சபதம் எடுத் துக்கொண்டிருக்கிறீர்களே தவிர சர்வாதிகாரிக்கு அல்ல…” என்று உரத்த குரலில் கூறினான். வீரர்கள் ஈட்டிகளைப் பின்னால் இழுத்துக்கொண்டு மௌனமாய் நின்ற னர்.

சர்வாதிகாரியின் ஆத்திரம் அளவுகடந்து விட்டது. “இவனையும் சிறையில் தள்ளுங்கள்…” என்று கர்ஜித்தான்.

“என்னையுமா…?”

மஞ்சு கம்பீரமாக நின்று அந்த வீரர்களைப் பார்த் தான். அவனுடைய ஆட்கள் தான் அங்கே நின்றனர். சர்வாதிகாரி படைதிரட்டினபோது தானாகத் தனியாக வந்து சேர்ந்தவன் அல்ல மஞ்சு. அவன் தனக்கென்று பொறுக்கி எடுத்த வீரர்களுடன் ஒரு கூட்டம் அமைத் துக்கொண்டிருந்தான். அந்தக் கூட்டம் அவனுக்கு மிகவும் கட்டுப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தினரு டன் தான் அவன் சர்வாதிகாரியுடன் சேர்ந்தான் சர்வாதிகாரியின் படைகளிலே அது ஒரு தனிப்பிரி வாக இருந்தது. அந்தப்படைதான் ஜமீந்தாரை ஒழிப் பதற்காக அனுப்பப்பட்டது, அது அளவிலும் ஆற் றலிலும் முன்னைவிடப் பன்மடங்கு அதிகரித்திருந்தது ஆனால் மிதமிஞ்சிய வெறியிலே இருந்த சர்வாதிகாரி எதையும் கவனிக்கத் தயாராக இருக்கவில்லை. ஆத் திரத்துடன் வாளை உருவிக்கொண்டு, “உம்…இவர் களைச் சிறையில் தள்ளுங்கள் என்று முழங்கிக்கொண்டு முன்னால் வந்தான்.

மஞ்சு தன்னுடைய வலிமையை நன்றாகக் கணக் கிட்டுக்கொண்டான். சர்வாதிகாரியின் வாளை அலட் சியமாகத் தட்டி எறிந்துவிட்டு “இவனை இழுத்துச் சிறையில் தள்ளுங்கள்..” என்று கூவினான். அவனுடைய வீரர்கள் பாய்ந்து வந்தனர். சிறிது நேரம் ‘அங்கே பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் சர்வாதிகாரி குகையில் தள்ளி அடைக்கப்பட்டுவிட்டான்.

மஞ்சு ஒருகணம் யோசித்தான், இனி நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி….”அம்மா…இனி நீங்கள் சற்று நேரம் உண்மையான ராணியாக இருக்கவேண்டும். சர்வாதிகாரியின் படை வீரர்களை நாம் ஏமாற்றியாகவேண்டும்…இனி நாம் எப்படித் தப்புவது என்பதைப்பற்றி எனக்கு ஒன்றுமே விளங்க வில்லை…” என்றான். தூரத்திலிருந்து வீரன் ஒருவன் குதித்துக்கொண்டு ஓடிவந்தான்.

“மகாராணி…மன்னர் கைதியாக்கப்பட்டார் அரசாங்கப் படைகள் சிதறி ஓடுகின்றன…” என்று கூவினான்.

“சரி…நீ போ… நாங்கள் வருகிறோம்,” என்று உரத்த குரலில் உத்திரவிட்டான் மஞ்சு. அவன் சென்றவுடன் ” இனி நாம் இங்கே நிற்கக்கூடாது கோட்டைக்குச் செல்வோம்…” என்றான்.

மதுபாலன் ஓடிப்போய் அருகே இருந்த வீரன் ஒருவனின் உடைகளை வாங்கி உடுத்துக்கொண்டான். மஞ்சுவின் அருகே வந்து, “நாம் கோட்டையிலிருந்து நம்முடைய வீரர்களைக்கொண்டு அரசனையும் இதே சிறையில் தள்ளிவிட ஏற்பாடுசெய்வோம். நமது மகா ராணி நாடு முழுவதையும் நாட்டின் மக்களுக்காக்கி விட்டதாக பிரகடனப்படுத்திப் படைகளைக் கலைத்து விடுவோம்…” என்று கூறினான்

மஞ்சு ஆனந்தத்தில் துள்ளிவிட்டான். “ஆம்… அதுதான் சரி…” என்று கூவினான்..

அந்தக் கூச்சலிலே இருள் சூழ்ந்துகிடந்த நாட் டிலே, இன்பமயமான ஜோதி சுடர்விட்டதுபோலிருந் தது. அந்தச் சுடரின் ஒளியிலே, மஞ்சுவின் சபதம் * பளிச்’ சென்று தெரிந்தது ராணிக்கு.

சாதாரண ஒரு வேலைக்காரன், தன் சபதத்தை முடித்துக்கொண்டதால், தன்னையே உயர்ந்த வீரனாக்கிக்கொண்டான். எஜமானின் உண்மை ஊழியனாக இருக்கும் பண்பு தனக்குண்டு என்பதை காட்டிவிட் டான். தன் தந்தையின் துர்மரணத்தால் ஏற்பட்ட வேதனைப் புண்ணை ஆற்றிய வைத்தியனாகவும் ஆகி விட்டான், என்ற எண்ணங்கள் ராணியின் மனதிலே சுழன்றன. மஞ்சுவைப் பார்த்தாள் ராணி. அந்தப் பார்வையிலே, நன்றி உணர்ச்சி நடமாடிக்கொண்டிருந்தது.

சர்வாதிகாரியும் மன்ன னும் இருட் குகைக் குள்ளே சந்தித்தனர் மண்ணாசை மன்னர்களான இருவரும் முதன் முதலில் தங்கள் பிரதிபிம்பத்தைப் பார்ப்பதாகவே நினைத்தனர். ஆனால்…அதுவேறு ஆள் ….அவன் யார் என்பதை உணர்ந்துகொண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டனர். சாகும்வரை ஒரு வருடன் ஒருவர் அவர்கள் பேசிக்கொள்ளவே இல்லை

இருட்குகை வேறொன்றில் முதன் முதலாக மதுபாலனும் ராணியும் சந்தித்தனர், ஆனந்த வெள்ளத் திலே அவர்கள் இருவரும் ஒருவராகிவிட்டனர். இதயம் நிறைந்த அன்புக் காதலிலே அவர்கள் என்றுமே பிரியவில்லை.

-முற்றிற்று-

– கானகத்திலே காதல்!, முதற் பதிப்பு: பிப்ரவரி 1951, ஜனக்குரல் காரியாலயம், துறையூர், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *