மூலக்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2021
பார்வையிட்டோர்: 3,761 
 

இயக்குனர் மகாராஜாவின் “தீட்சை” என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது . அதை பலர் பாராட்டினார்கள். சில தமிழ் நாட்டு பத்திரிகைகள் அந்த படம் வெற்றி பெற மூலக் கதையே முக்கிய காரணம் என்று எழுதியது .அந்தக் கதை எழுதியது ஜெகநாத் சவுத்ரி என்ற மேற்கு வங்காள இந்திய மாநிலத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அவர் ரவீந்திர நாத் தாகூரின் தூரத்து உறவினர். படத்தின் ஆரம்பத்திலேயே மூலக் கதை ஜெகநாத் சவுத்ரி என்று குறிப்பிட்டு விட்டார் உருவாக்கியவர் இயக்குனர் மகாராஜா. அவர் படைத்த படம் அமோக வெற்றி பெற்றது அந்த ஆரம்பத்திலேயே திரைக்கதை வசனம் என்று அந்த படத்தை தமிழ் நாட்டு சூழலுக்கேற்றவாறு கதையை சொல்லும் விதத்தில் கட்சிகளை கிராமத்தில் காட்டி சற்று மாற்றி அமைத்து பொருத்தமான பாடலையும் இசையையும் சேர்த்து அமைத்தார் இயக்குனர் ராஜா. அந்தக் கதையை எழுதிய வட மாநில வங்காளி எழுத்தாளர் ஆனால் அதை படமாக தயாரித்தவர் தமிழ்நாட்டு இயக்குனர் . அந்த கதையை தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்துக்கு ஏற்வாறு திருத்தி அமைத்தபடியால், படம் தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் கர்நாடகாவிலும், அமோக வெற்றி பெற்றது

ஒரு பத்திரிகை நிருபர் இயக்குனரை நேர்காணல்கண்ட போது” ராஜா சேர் உங்களுடைய படம் வெள்ளி விழா கொண்டாடியது. அதுக்கு காரணம் அந்தக் கதையின் கரு அல்லவா”? என்று கேட்டார்

“ஆமாம் உண்மை. கதையின் கரு புல்லாங்குழல் வாசிக்கும் கபோதிக்கும், இனிமையனான குரல் கொண்ட அழகிய பெண்ணுக்கும் இடையான காதல் பற்றியது அவள் ஒரு உயர் சாதி பெண், அவன் தலித் இனத்தை சேர்ந்தவன்”

“எதிர் பாராத முடிவு யதார்தமான கதை சேர்”

“உண்மைதான், அதுக்குத்தான் நான் ஆரம்பத்திலேயே மூலக்கதை எழுதியவர் யார் என்பதை குறிபிட்டு விட்டேனே” நான் கதைக்கு உரிமை கொண்டாடவில்லை” நிருபருக்கு பதில் சொன்னார் இயக்குனர்.

“அது சரி சார் அவர் வங்காளமாநில எழுத்தாளரின் கதை அவருடைய கதையின் கருவின் கொப்பி ரைட் பெற்று விட்டீர்களா?”.

“ஆமாம் அந்த எழுத்தாளன் இப்போது இல்லை அவர் இறந்துவிட்டார் அவருடைய கதை வெளிவந்த பத்திரிகை ஆசிரியருடன் நான் பேசி பணம் கொடுத்து அந்த பதிப்புரிமையை பெற்று விட்டேன்”

“அது எப்படி சார் முடியும்? அந்தக் கதையை அந்தப் பத்திரிகை அந்தக் கதையை பிரசுரித்தது என்பதற்காக அந்தப் பத்திரிகை ஆசிரிய்ருக்கு நீங்கள் பணத்தை கொடுக்க முடியாது. அது சரி நீங்கள் அந்த ஆசிரியரிடம் இருந்து கதை வாங்கி விட்டீர்கள் என்பதற்கு ஆதாரம் உண்டா?” நிருபர் கேட்டார்.

“என்னிடம் எந்த ஆதாரம் இல்லை. ஆனால் அவர் என்னிடம் பணம் வாங்கிஎயதுக்கு ஒரு ரசீது தந்திருக்கிறார் அந்த கதையை எனக்கு விற்றதாக ரசீதில் எழுதி இருக்கிறார்” என்று ராஜா சொன்னார்.

“இதெல்லாம் சரியான முறை அல்ல, என்றாலும் நான் கேள்விப்பட்டேன் அந்த மறைந்த எழுத்தாளளனுடைய ஒரே மகள் இப்பவும் வாழ்கிறாரள். அவள் வறுமைக் கோட்டில் கணவனுடன் வாழ்கிறாள் என்று”.

“அப்படியா எனக்கு அது தெரியாதே. அப்படியானால் நான் நிட்சயமாக அவளுக்கு உதவி செய்வேன் ஏன் என்றால் இந்த படத்தின் மூலம் கிடைத்த பணத்தில் ஒரு சிறு பகுதி, அவளுக்கு அவசியம் போய் சேரவேண்டும் என்று என் மனசாட்சி சொல்கிறது” என்றார் ராஜா.

“சரியாகச் சொன்னீர்கள் அதன்படி செய்யுங்கள் மிஸ்டர் ராஜா” என்றார் நிருபர்.

“நீங்கள் சொன்ன ஆலோசனைக்கு மிகவும் நன்றி. என் மனசாட்சியின் படி ஆவான செய்வேன். நான் இந்த படத் தயாரிப்பாளருடன் மற்றும் நடித்த முக்கிய நடிகர் நடிகைகளுடன் பேசி அவளுக்கு உதவி செய்வேன்” என்றார் ராஜா.

சில நாட்களில் மேற்கு வங்காளத்திற்கு பயணம் செய்து கதை வெளி வந்த அந்தப் பத்திரிகை ஆசிரியரை ராஜா கண்டு பேசினார்.

“மிஸ்டர் ராஜா இதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் படம் வெற்றி பெற்று உங்களுக்கு பணம் கிடைத்துவிட்டது. ஏற்கனவே எனக்கும் நீங்கள் அந்த கதைக்கு பணம் தந்து விட்டீர்கள். இப்போது அந்த கதை எழுதிய எழுத்தாளரை உயிருடன் இல்லை. அதனால் நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை அப்படி உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் என்னிடம் தாருங்கள். நான் அவருடைய ஒரே மகளுடன் தொடர்பு கொண்டு நீங்கள் தரும் பணத்தை அவளிடம் கொடுக்கிறேன்”

இயக்குனர் ராஜாவுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை ராஜா நம்பவில்லை என்றாலும்: “சரி நான் அதைப் பற்றி யோசித்து விட்டு உங்களிடம் திரும்ப வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ராஜ புறப்பட்டார்.

இயக்குனர் ராஜா அந்த பத்திரிகை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட உதவி ஆசிரியர் ஒரு தமிழர்.. அவர் பெயர் சுப்பிரமணியன். அவரின் சொந்த ஊர் சிவகாசி அங்கிருந்து அவர் வங்காளத்திற்கு புலம் பெயர்ந்தவர். அவரும் ஒரு ரிப்போர்ட்டராக வேலை செய்து வங்காள மொழி படித்தபடியால் அவருக்கு அந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. அவருடன் வேலை செய்தவள் ரிபோர்ட்டராக அனுபமா என்பவள். அவள் மறைந்த பிரபல எழுத்தாளர் ஜெகநாத் சவுத்ரிதயின் ஒரே மகள்,அவள் சுப்பிரமணி மேல் பிரியம் கொண்டு இருவரும் காதலித்து பின் திருமணம் செய்தவர்கள். அதனால் சுப்பிரமணிக்கு தனது மறைந்த மாமனை பற்றியும் அவருடைய திறமை பற்றியும் தெரியும்.

***

பத்திரிகை நிலையத்தை விட்டு வெளியே வந்த இயக்குனர் ராஜாவை பின்தொடர்ந்து சென்ற சுப்பிரமணியம் “ஐயா உங்களுடன் ஒரு சில வார்த்தைகள் பேச வேண்டும்” என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்த ராஜா அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியரை கண்டார்.

என்ன இவர் தமிழில் பேசுகிறாரே என்று சிந்தித்தார் ராஜா.

“யோசிக்க வேண்டாம் சார் நான் எப்படி தமிழ் பேசுகிறேன் என்று. நான் தமிழ்நாட்டில் பிறந்த தமிழன். என் பெயர் சுப்ரமணியன். என் சொந்த ஊர் சிவகாசி. நான் இங்கு இந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை செய்கிறேன் ஏனென்றால் எனக்கு வங்காளமும் ஆங்கிலமும் தமிழும் தெரியும். அது எனக்கு இங்கு வேலை கிடைக்க உதவியது” என்றரறார.

“அப்படியா என்ன விசேஷம் எதுக்கு எண்னை கூப்பிட்டீர்கள்”

“நீங்கள் எங்கள் பத்திரிகை ஆசிரியரிடம் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்தேன். அவரிடம் பணத்தை கொடுக்க வேண்டாம் சார். அந்தப் பணம் உண்மையில் இந்தக் கதையை எழுதிய ஆசிரியர் குடும்பத்திற்கு தான் போக வேண்டும். அந்த கதை எழுத்தாளர் இப்போது இல்லை, அவர் ஒரு பிரபல எழுத்தாளர் அவருக்கு மகள் ஒரு மகன் மட்டுமே இருக்கிறாரள், அவரின் மனைவியும் இறந்து விட்டாள். அவரின் மகள் அனுபாமா தான் என் மனைவி, அவள் முன்பு இந்தப் பத்திரிகையில் ரிப்போர்ட்டராக வேலை செய்தவள். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் எங்களுக்கு நல்ல உறவு இருந்து வந்தது, இப்போது அவளுக்கு இருக்கும் நோயுக்கு வைத்தியம் செய்ய செய்ய பணம் இல்லாமல் வாழ்கிறோம்”.

“உங்கள் மனைவிக்கு என்ன வியாதி?” என்று கேட்டார் ராஜா.

“என் மனைவி அனுபாமா கடந்த ஒரு வருடமாக நீரக நோயினால் பாதிக்கப்பட்டு அவளின் இரு நீரகங்களும் பழுதாகி விட்டன, அதற்கு அவளுக்கு ஒரு கிழமையில் மூன்று நாட்கள் ரத்த சுத்தி செய்வதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. அதனால் அவள் செயல் இழந்து இருக்கிறால். அதோடு அவள் கற்பமாவதை டாக்டரின் ஆலோசனைபடி நாங்கள் இருவரும் தவிர்த்தோம். அவளின் நீரகங்களில் ஒன்றை மாற்ற பதினைந்து லட்சம் இந்தியன் ரூபாய் மட்டில் பணம் தேவை. என்னுடைய ஒரு நீரகத்தை அவளுக்கு கொடுப்பதற்கு என்னுடைய என் நீரகம் அவளுக்கு பொருத்தம் இல்லை என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். ஒரு நீரகம் பணத்துக்கு பெற அதற்கு தேவையான பணம் கிட்டத்தட்ட பல லட்சங்கள் ஆகும், சத்திர சிகிச்சைசெலவு மற்றும் செலவுகளும் உண்டு” சுப்பிரமணி சொன்னார்

“சரி இப்போது உங்களுடைய மனைவியின் பிரச்சினையை நான் நிச்சயமாக தீர்த்து வைக்கிறன். உங்கள் மனைவி அனுபாமா திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய பண உதவி செய்வேன் நாளை உங்கள் வீட்டுக்கு வருகிறேன் இங்கு வந்து இந்த இடத்தில் இந்த நேரம் வந்து என்னை சந்தியும். நாங்கள் இருவரும் சென்று நான் அந்த கதையை ஆசிரியர் ஜெகநாத் சவுத்ரியின் மகள் அனுபாமாவிடம் பேச விரும்புகிறேன்” என்றார் ராஜா .

அடுத்த நாள் ராஜாவும் சுப்பிரமணியமும் சுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்றார்கள் அங்கு சென்றபோது அனுபமா வீல்சேரில் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் தான் யார் என்று அறிமுகப்படுத்தினார் ராஜா அவரின் பெயரை கேட்டவுடன் ஆங்கிலத்தில் அவருக்கு பதில் சொன்னாள் “மிஸ்டர் ராஜா! என்னுடைய அப்பா எழுதிய சிறு கதை இப்படி புகழ் பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்பாவுக்கு அந்த கதைக்கு போட்டியில் முதல் பரிசு கிடைத்தது ஆனால் அவர் பரிசு கிடைக்க முன்பே திடீரென்று இருதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துய் விட்டார் அவருக்கு முன் என் அம்மா இறந்து விட்டார். உங்களுக்கு என் கணவர் சொல்லி இருப்பாரே என்னை நீரக நோய் பாதித்தை பற்றி”.

“ஆமாம் அவர் எல்லாம் சொன்னார் நான் உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறான்”

“என்னால் தொடர்ந்து என் கணவர் வேலை செய்யும் பத்திரிகையில் வேலை செய்ய முடியாமல் போய்விட்டது எங்களிடம் சத்திர சிகிச்சை செய்வதற்கும் பணம் இல்லை என்றாலும் என்னுடைய வாழ் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்றால் அனுபாமா கண்கலங்க.

அதைக்கேட்ட சுப்பிரமணியம் “பார்த்தீர்களா ராஜா நான் சொன்னதை என் மனைவியே உங்களுக்கு உறுதிபடுத்தி விட்டாள்” ராஜா சொன்னார். “அனுபமா உங்கள் தந்தை ஒரு சிறந்த படைப்பாளி நான் அவருடைய கதையை என்னுடைய பங்காளி நண்பர் சொல்லி அறிந்த பின்னரே அதை படமாக்க நினைத்தேன் அது என்னுடைய தயாரிப்பாளருடன் பேசி அவரும் பண உதவி செய்ய சம்மதித்தார். சிறந்த நடிகர் நடிகைளை வைத்து எடுத்தேன். ஆனால் அந்தக் கதையை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் நடந்த கதையாக சித்தரித்து திரைக்கதை வசனம் எழுதி அதுக்கு இசையை செய்தேன். ஆனால் உங்கள் அப்பாவின் கதையின் கருவை நான் மாற்றவில்லை. அதே நேரம் உங்களுடைய தந்தையாரின் பெயர் கூட முதலில் ஆரம்பத்தில் திரையில் போட்டி போட்டுக் காட்டினேன்”

அதுக்கு அனுபாமா சொன்னாள்: “எல்லாம் எனக்குத் தெரியும் ராஜா நீங்கள் செய்தது ஒரு சிறந்த சேவை, இப்படி எத்தனையோ எழுத்தாளர்களுடைய சிறந்த கதைகளை சிலர் ஆக்கிவிட்டு அவர்களின் பெயர்களை போடாமல அவர்கள் தங்களுடைய கதை போல் மாற்றிவிடுவார்கள். நீங்கள் அப்படி செய்யவில்லை நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர. என் தந்தை இந்த கதையை சத்யஜித் ரே என்ற திரைக்கதை எழுத்தாளர், ஆவணப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், பாடலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், மற்றும் இசையமைப்பாளர்ஆகிய திறமைகள் உ;ள்ள வங்காளி ஒருவர் படம்மாக விரும்பினர் அததற்கு முன்னர் என் தந்தை இறந்து விட்டார். ரே உலகின் மிகப் பெரிய திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்வர். தி அபு சன்சார், தி மியூசிக் ரூம், தி பிக் சிட்டி மற்றும் சாருலதா போன்ற படைப்புகளுக்காக அவர் கொண்டாடப்பட்டவர்.”

“அவரை பற்றி கேள்விபட்டேன்.அது சரி அனுபாமா உங்களிடம் உங்கள் அப்பா கை பட எழுதிய அந்தக் கதையின் பிரதி இருக்கிறதா இருந்தால் எனக்கு தரமுடியுமா?”

“முடியும் ராஜா அவர் எப்பொழுதும் 1920 களில் இருந்து வரும் இந்தியாவில் திரித்த காமா. பேனாவை பாவித்து எழுதுவது வழமை. அது அவருக்கு ஒரு வாசகர் கொடுத்தது. அதைஅவர் நான் தொகட விட மாட்டார் . கதை எழுத தொடங்கினால் பிலாஸ்சக்கில் என் அம்மாசெய்த சுக்கு போட்ட பால் கோப்பியை அடிக்கடி சுவைத்து குடித்த படியே எழுதவார் , சில சமயம் கதை நடுவே வெளியே சென்று சற்று உலாவி விட்டு வருவார் . அவருடைய அழகான எழுத்தில் கதையை எழுதி முடித்தபின் அதன் கீழ் அவர் கையொப்பம் இடுவது வழக்கம் அத்துடன் இந்த தேதி மாதம் வருடம் எந்த இடத்தில் எழுதியது என்று குறிப்பிடுவார்.அவருடைய கதைகள் எப்போதும் ஒரு சம்பவத்தை கருவாக வைத்து உருவாகும். இந்த கதையும் அப்படியே, கபோதியின் காதல் என்று நீங்கள் தேர்ந்து எடுத்த கதைக்கு தலைப்பு வைத்தார், அது சரின்கள் என் மிஸ்டர் ராஜா தீட்சை என்று பெயர் வைத்தீர்கள்”

“தீட்சை எனபது உடல் போருள் ஆன்மா ஆவியை ஆர்பணிப்பது அந்த இருவரின் காதல் அப்படியானது”

“அப்படியா கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது மிஸ்டர் ராஜா”

“இந்தக் கதையை என் நண்பன் எனக்கு சொன்ன போது எனக்குப் மிகவும் பிடித்தது அது ஒரு கிராமியக் கதை நான் கிராமிய படங்கள் எடுப்பவரன் அதுவுமன்றி அந்த கதை வங்காள கிராமிய கலாச்சாரத்தையும் மண்வாசனையும் எடுத்துக்காட்டியது நான் அதன் சூழலையும் காட்சிகளையும் பல வசனங்களை மாற்றி தமிழ்நாட்டுக் ஏற்றவாறு அமைத்து விட்டேன் அவ்வளவு தான் பெரிய மாற்றவில்லை” என்றார் ராஜா.

“அது நல்லதுதான் ஏனென்றால் மாநிலத்துக்கு மாநிலம் பேச்சுவார்த்தை கலாச்சாரம் இசை எல்லாமே மாறுபடுகிறது நீங்கள் செய்தது சரி”.

“அனுபாமா முடிந்தால் அவருடைய கையெழுத்துபட எழுதிய கதை பிரதியைத் எனக்கு தர முடியுமா”? என்று ராஜா கேட்டார்

“சற்று பொறுங்கள் ராஜா”. என்று சொல்லி தன் கணவனை நோக்கி அனுபாமா சொன்னாள் “மணி நீங்கள் போய் இந்த சாவியை கொண்டு எனது அறைக்குள் இருக்கும் சிறு சந்தன மரப் பெட்டிக்குள் அவர் எழுதிய கதைகளில் நிறைய உண்டு அவை முழுவதையும் இவரிடம் கொண்டு வந்து கொடுங்கள் அதில் இந்த கதையும் அந்த கத்தையில் இருக்க வேண்டும்” என்று அனுபாமா சொல்லி; சுப்ரமணியிடம் சித்திர வேலைப் பாடு உள்ள ஒரு வெள்ளி சாவியை கொடுத்தாள். அவர் அவள் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் இருந்த ஒரு கட்டு கதைகளை கொண்டு வந்து ராஜாவிடம் கொடுத்தார்.

ராஜா தான் படமாக்கிய கதையை தேர்ந்தெடுத்தார் அந்த எழுத்தாளர் எழுதிய எழுதிய கதை அவருடைய கையெழுத்தில் இருந்தது.

“சுப்பிரமணி எனக்கு இந்த ஒரிஜினல் வேண்டாம் எனக்கு இதன் செராக்ஸ் கொபிப் ஓன்று கொடுத்தால் போதும் நான் அதையே எனக்கு ஆதாரமாக வைத்துக் கொள்வேன் தங்கச்சி நீங்கள் செய்த உதவிக்கு மிகவும் நன்றி நான் உங்களுக்கு பிரதியுபகாரமாக ஓன்று செய்தாக வேண்டும் அதாவது உங்களக்கு ஒரு நீரகம் ஒருவரிடம் இருந்து வாங்கும் செலவு மருத்துவ செலவு மற்றும் சத்திரசிகிச்சை செலவு போன்றவைக்கு நான் நிச்சயம் பண உதவி செய்தேன் அதுமட்டுமல்ல நீங்கள் திரும்பவும் தொடர்ந்து உங்கள் தந்தையைப் போல எழுத வேண்டும் அதோடு வேலையும் செய்ய வேண்டும் நீங்கள் இருவரும் நல்ல காதல் கணவன் மனைவியாக குழந்தைகள் பெற்று வாழவேண்டும்என்று அனுபாமாவின் இரு கைகளையும் பிடித்த் படியே ராஜா சொன்னார்

அதைக் கேட்டு அனுபாமா கண்கலங்கச் சொன்னாள் “எனக்கு ஒரு அண்ணன் கிடைத்துவிட்டார். நீங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு மிகவும் நன்றி. நான் திரும்பவும் எனது தந்தையை போல் எழுத தொடங்குவேன்”.

அதுக்கு ராஜா சொன்னார் “நான் ஒரு தடவை சொன்னால் பல தடவை சொன்ன மாதிரி”

அதைக்கேட்ட சுப்பிரமணி சொன்னார் “ரஜினியின் நடிப்பை நீங்கள் கொப்பி அடிக்கிறீர்கள் போலிருக்கிறது”.

அதற்கு ராஜா, “சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வசனம் பேசவேண்டும் சுப்பிரமணி நான் கொப்ப்பி அடிக்கவில்லை அவருடைய அனுமதி பெற்றுத்தான் இந்த வசனத்தைப் பேசினேன்” என்றார். எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள் .

பல நாட்களுக்குப் பின் தன் மனைவி சிரிப்பதை பார்த்து “என்னுடைய மனைவியை நீங்கள் சிரிக்க வைத்து விட்டீர்கள் ராஜா உங்களுடைய பேரன்பினால். கொடுத்த வாக்கினால் எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும்” என்றார் சுப்பிரமணியம்.

அனுபாமா கணவன் சொன்னதை ஆமோதித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *