மடுவும் மலையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 4,682 
 

மேடையில் முக்கிய விருந்தாளியான என்னை பாராட்டி பேசிக்கொண்டிருக்கிறார்கள் நான் உற்சாகமாய் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என்னை பற்றி பேசும்போது எனக்கு கூச்சமாக இருக்கும். இப்பொழுது அந்த மாதிரி உணர்வுகள் மறைந்து விட்டன. இவர்கள் என்னை பற்றி பேசாவிட்டால்தான் எனக்கு மிகுந்த வருத்தம். சில நேரங்களில் பேசுபவர்கள் என்னை பற்றி ஓரிரு வார்த்தைகள் புகழ்ந்து பேசாவிட்டால், நன்கு கவனித்து அவர்கள் அழைக்கும் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவேன்.

நான் மிக முக்கிய அரசியல் பிரமுகர். இருந்தாலும், இதை அடிப்படையாக வைத்து மற்ற துறைகளிலும் வலுக்கட்டாயமாக நுழைத்துக்கொண்டேன். அதற்கு என்னை அழைக்கவேண்டும் என்று மறைமுக நிர்ப்பந்தங்களையும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.

யாராவது விழா ஏற்பாடு செய்வதில் அரசாங்க ரீதியாக சில பிரச்சினைகளை சந்திக்கும்போது, நானே அவர்களில் ஒரு சிலரை ஏற்பாடு செய்து, முக்கிய விருந்தாளியா

இவரை கூப்பிடலாம், அப்புறம் பாருங்க, விழா ஏற்பாடெல்லாம் சட்டுனு முடிஞ்சிடும். என்று பேச வைத்திருக்கிறேன். இப்படி பல பேரை சொல்ல வைத்து,இந்த மாதிரி ஏற்படுகளில் எனக்கு ஒரு வித போதையே வந்து விட்டது.

இந்த விழா கூட ஒரு முதியோர் இல்ல திறப்பு விழா.இதற்கு என்னை அழைக்க தேவையில்லை. ஆனால் அது நான் வசிக்கும் இடத்தில் நடக்கும் விழாவாயிற்றே. விடுவேனா!

நான் வசிக்கும் இடத்திலேயே ஒரு விழா நடக்கிறது என்றால் எங்கெங்கோ என்னை அழைத்து விழாவை சிறப்பிப்பவர்கள், இதற்கு அழைக்காமல் இருந்தால் விடுவேனா!

ஒரு சில சட்ட சிக்கல்களை மறைமுகமாக கொடுக்க ஆரம்பித்தேன். அவர்களும் சமாளித்து விடலாம் என்றுதான் பார்த்தார்கள். ஹூஹூம் முடியவில்லை. எப்படி முடியும்?

பின்னால் நான்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறேனே? கடைசியில் ஒருவர் பேசாமல் நம்ம தங்கமணியை முக்கிய விருந்தாளியா கூப்பிடுவோம். அப்புறம் பாருங்க, எல்லாம் தானாக நடக்கும். இதை பேச வைத்தவன், விழா கமிட்டியார் ஒத்துக்கொண்டதும், மள மள வென அவர்கள் பிரச்சினைகளை முடித்து வைத்தேன்.

இப்பொழுது விழாவில் முக்கிய விருந்தாளியே நான்தான். மேடையில் என்னுடைய சிறப்புக்களைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விழாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை, நான் இவர்களுக்காக ஒரு துரும்பையும் போடவில்லை. தடை ஏற்படுத்த வேண்டுமானால் மறைமுகமாக ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். இருந்தாலும் விழா ஏற்பாட்டாளர்களால் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

கடைசியாக என்னை பேச அழைக்க நான் வழக்க்ம்போல இவர்கள் என்னை பற்றி புகழ்ந்து பேசியவைகளுக்கு நான் தகுதியானவன் அல்ல என்று நாவடக்கமாய் பேச அங்குள்ளோர்கள் கை தட்டி ஆராவரித்தனர். இதுதான் எனக்கு வேண்டும். பிறகு வழக்கம் போல நன்றி சொல்லி விழா முடிவுற்றது.

இறங்கி நடக்கும்போது யாரோ இருவர் பேசிக்கொள்வது காதில் விழுகிறது “தலைவருக்கு தன்னடக்கம் ஜாஸ்தி” மேடையில் எனக்கு தகுதி இல்லை அப்படீன்னு சொல்றதுக்கு ஒரு “கெட்ஸ்” வேணும். அவர்கள் பாராட்டி பேசுவது என்னைத்தான் என்பது எனக்கு தெரிகிறது. இந்த புகழ்ச்சியில் என்னுடைய உடம்பு புல்லரிக்க காரில் ஏறப்போனேன்.

ரொம்ப நல்லா பேசினீங்க, குரல் கேட்டு திரும்பினேன். மெலிந்த கதர் சட்டையும், வேட்டியும் அணிந்த ஒருவர் கை கூப்பி வாழ்த்து தெரிவித்தார். நன்றி என்று இரு கைகளிலும் வைர மோதிரங்கள் மின்ன நானும் வணக்கம் சொன்னேன். காரணம் அவரின் பின்னால் இந்த நிகழ்ச்சியை ஒரு குழு படமெடுத்துக்கொண்டிருந்தது. அவரிடம் விடை பெற்று என் காரில் ஏறப்போகும்போது கவனித்தேன். அந்த படக்குழு அந்த பெரியவரின் பின்னால் செல்தை. மனசு அரிக்க ஆரம்பித்த்து யார் இந்த ஆள்? என்னை விட இவருக்கு என்ன இந்த படக்குழு முக்கியத்துவம் தருகிறது. மனதில் பொறாமை பொங்க அந்த படக்குழுவின் பின்னால் போகவிருந்த ஒருவரை பிடித்து நிறுத்தி விசாரித்தேன்.

சார் அவர் இந்தியாவிலே பெரிய பணக்காரர். அவர் இப்ப டெல்லியில இருக்கார். இருந்தாலும், அவருடைய மாநிலத்துல இருக்கற ஒவ்வொரு ஊர்லயும் இந்த மாதிரி முதியோர் இல்லம் தன்னுடைய சொந்த செலவுல கட்டி கொடுத்திட்டிருக்காரு. இங்க கட்டிக்கொடுத்தது கூட இவருதான். யார்கிட்டேயும் ஒரு பைசா வாங்காம முதியோர்களை சேர்த்துக்க சொல்லி இருக்காரு.

ஆனா பாருங்க ! இந்த விழாவுல எந்த இடத்துலயும் தன்னுடைய பேரை சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாரு. கூட்டத்துல கூட மூணாவது வரிசையில சாதாரணமா உட்கார்ந்து கிட்டு இருந்தாரு. ரொம்ப பெரிய மனுசன் சார் !

காரில் ஏறி போய்க்கொண்டிருந்தாலும் என் மன நிலை “மலைக்கும் மடுவுக்கும்”

உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *