தேயிலைத் தோட்டத்து பெரியதுரை கொலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2022
பார்வையிட்டோர்: 4,302 
 

கண்டியில் இருந்து நுவெரேலியாவுக்கு போகும் வளைந்த A5 மலைப் பாதையில் 45 கிமீ தூரத்தில் புசெல்லாவா கிராமம் அமைந்துள்ளது பாதையில் இரு பக்கத்திலும் பச்சம் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களும் ரம்போட போன்ற நீர்வீழ்ச்சிகளும் கண்களை கவரும் . அந்த புசெல்லாவா கிராமத்தில் 500 தொழிலார்களை கொண்ட ஸ்டெல்லேன்பேர்க் (Stellenberg) தேயிலை தொட்டம் உள்ளது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் அனேகர் தமிழ் நாட்டில் இருந்து கண்காணி முறையினால் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் . ஒரு அறை உள்ள லைன் வீடுகளில் குடும்பத்தோடு வாழந்தனர் . கடும் குளிரிலும், அட்டை கடியிலும் முதுகில் கூடையைச் சுமந்த படி உடலை குளிரில் இருந்து பாதுகாக்க கம்பிளி போர்த்தபடி தேயிலை காலை 7 மணி பிற்பகல் 3 மணி வரை தேயிலை கொய்வது பெண்கள் தொழில் . ஆண்கள் தொழிற்சாலையிலும் தோட்டத்தை பராமரிப்பதிலும் வேலை செய்தனர்.

1938 யில் அந்த தோட்டத்துக்கு பொறுப்பாக பெரிய துரை என்று அழைக்கப்படும் ஜார்ஜ் போப் என்றவர் சுப்ரீண்டேண்டனாக வந்தார் . அவருக்கு திருமணமாகவில்லை. பல அறைகள் கொண்ட மிகப் பெரிய பங்களாவில் சமையல்காரனோடும் . வேலைகாரனோடும் வசித்து வந்தார் .

ஸ்டெல்லேன்பேர்க் தேயிலை தொட்டத்து பெரிய துரை போப் என்பவர் மிகவும் கண்டிப்பான பேர்வழி. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் பெரிய துரைமார் தம் கீழ் வேலை செய்யும் தேயிலைத்தொட்டத் தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தினார்கள். அவர்களில் போப் என்ற பெரிய துரையும் ஒருவர் . இவர் தினமும் குதிரையில் வாயில் பைப்போடு வளம் வருவார். அவர் முகத்தில் சிரிப்பை காண முடியாது ஒரரளவுக்கு தமிழ் பேசுவார். ஒரு புது ஆஸ்டீன் கார் வைத்திருந்தார்

1939 ஆண்டு முடிவில் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கண்டியில் ஒரு தொழிலாளர் சங்கம் உருவாகியது. 1941 ஆண்டு முதல் வலதுசாரி சங்கமான அகில இலங்கையின் தொழிலாளர் சங்கத்தின் தலைமை அலுவலகம் கண்டி திருகோணமலை வீதியில் இலக்கம் 54 கட்டிடத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது

அச் சங்கத்தில் அங்கதினராவதுக்கு வருடத்துக்கு அந்தக் காலத்தில் ஐம்பது சதம் கட்டவேண்டும் . அந்த சங்கத்தில் பல தோட்டத் தொழிலாளர்கள் சேர்ந்தார்கள். சேர முன் அவர்கள் ஸ்டெல்லேன்பேர்க் தோட்டத்து பெரிய துரை போப்பிடம் போய் அனுமதி கேட்டனர் . அவர் அனுமதி கொடுக்க மறுத்ததுமல்லாமல் சங்கத்தில் சேர்பவர்களை வேலையில் இருந்து நிறுத்துவதாகவும் எச்சரித்தார். ஆனால் அரசினால் அங்கீகரிக்கப் பட்ட தொழில் சங்கத்தில் அவரின் தோட்டத்தில் இருந்து 300 பேர் மட்டில் சேர்வதை அவரால் தடுக்க முடியவில்லை.

அந்த தோட்டத்தில் வேலை செய்த மெய்யப்பன் என்ற தொழிலாளி முற்போக்கு சிந்தனையுடையவன். நிதானமாக நடப்பவன். அவன் சங்கத்தின் செயலாளரானான்.அவனுக்கு தோழில் திணைக்களத்தோடு தொடர்பு இருந்தது அவனுக்கு ஸ்டெல்லேன்பேர்க் தோட்டத் தொழிலாகளின் பிரச்சனைகளும், போப் பெரிய துரையின் குணம் பற்றி நன்கு. தெரியும். எப்போதாவது ஒரு நாள் அந்தத் தோட்டத்தில் பூகம்பம் வெடிக்கும் என் அவன் எதிர்பார்த்தான் .

***

1940 ஜூலை 20 இல் மெய்யப்பன். அவனின் மனைவி, வேலாயுதம் என்பவனும் இன்னொருவனும் காரில் கதிர்காமதுக்கு யாத்திரை சென்று திரும்பினார்கள். அவர்களின் காரை தொட்டத்துக்குள் நுழைய விடாமல் பெரிய துரையின் கட்டளையின் தேயிலை தயாரிக்கும் அதிகாரி லுடோவைக் (Ludowyk) தடுத்தார்

அதனால் தேவை இல்லாத பிரச்சனையை தோற்றுவித்தார் பெரிய துரை . அவரது கட்டளையை மீறி காரில் துரையின் வீடுவரை மெய்யப்பன் கூட்டம் சென்றது . பெரிய துரை அவர்களை காரில் இருந்து இறங்கி அவர்களின் லைன் வீடுகளுக்கு நடந்து செல்லும்படி திரும்பவும் கட்டளையிட்டார். அவர்கள் அதையும் மீறி காரில் சென்றனர் . இதில் பெரிய துரை தன் ஆணவப் போக்கினால் பெரிய தவறு செய்து விட்டார் . வெகு தூரப் பயணத்தின் பின் வந்தவர்களை அவர் அப்படி நடத்தி இருக்கக் கூடாது.

இன்னொரு சம்பவமும் அதன் பின் நடந்தது. தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்த வீரசாமி என்ற மெய்யப்பனின் நண்பன், தேயிலை தாயாரிப்பாளர் லுடோவைக் என்ற வெள்ளையனை தாக்க முயற்சித்ததாக் அந்த அதிகாரி பெரிய துரைக்கு முறைப்பாடு செய்தான் . லுடோவைக் பெரிய துரையின் கையாள். எந்த ஒரு விசாரணையும் இன்றி வீரசாமியை ஒரு மாத சம்பளத்தோடு வேலையில் இருந்து பெரிய துரை நிறுத்தினார். வீரசாமி தொழில் சங்கத்துக்கு முறையிட்டான் . மெய்யப்பன் உடனே தொழில் திணைக்காளத்தோடு தொடர்பு கொண்டு வீர்சாமிக்கு திரும்பவும் வேலை கிடைக்க வழி செய்தான். இது பெரிய துரையின் ஆணவத்துக்கு ஒரு அடி

பழி வாங்கும் நோக்கத்தோடு மெய்யப்பனை எந்த ஒரு காரணமும் இன்றி வேலையில் இருந்து பெரிய துரை நிறுத்தினார் வெள்ளைக் சார நீதவானுக்கு புகார் சொல்லி மெய்யப்பனை கைது செய்தரர். அந்த பழிவாகும் நடவடிக்கையிலும் பெரியதுரை தோழ்வியைத் தழுவினார் . தோட்டத்து தொழிளார்கள் தங்கள் சங்கத் தலைவருக்கு நடந்ததை கண்டு கொதித்த மன நிலையில் இருந்தனர். மெய்யப்பனின் நண்பர்கள் வீர்சாமியும், வேலாயுதமும் பெரிய துரைக்கு ஒரு பாடம் புகட்ட தீர்மானித்து திட்டம் போட்டனர். அவர்களின் திட்டத்தில் அய்யன் பெருமாள், ரங்கசாமி, சின்ன முனியாண்டி மாரிமுத்து வேலு சேர்ந்தனர்

வீரசாமி, ரங்கசாமி, மாரிமுத்து வேலு ஆகிய மூவரும் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள லைன் வீடுகளில் வசித்தனர் மற்ற மூவரும் பெரிய துரையின் பங்களாவுக்கு அருகில் உள்ள லைன் வீடுகளில் வசித்தனர்

வீரசாமியும் வேலாயுதமும் பெரிய துரையை தீர்த்துக் கட்ட திட்டம் வகுத்தனர். அந்த திட்டத்தை செயல் படுத்த மற்ற நால்வரும் உடந்தையாக இருந்தனர் தக்க சமயம் வரும் வரை காத்திருந்தனர்.

அன்று 1941 ஆம் ஆண்டு மே மாதம் 9 திகதி பெரிய துரையின் ஆணவப் போக்குக்கு முடிவு கண்ட நாள். அன்று மாலை அவர வீட்டு வேலைகரன், அவனின் லைன் வீட்டில் கிரமபோன் போட்டு தியாகராஜ பாகவதரின் இசையை ரசித்து கொண்டு இருந்ததை வேலாயுதம் கண்டான் . அவனிடம் “என்ன உன் வீட்டில் பெரிய துரை இல்லையா?. நீ இங்கு இருந்து இசை ரசிக்கிறாயே”? என்று வேலாயுதம் அவனைக் கேட்டான் அதற்கு அவன் “பெரிய துரை சில மைல் தூரத்தில் உள்ள டெல்டா கிளப்புகு தன் நண்பரை சந்திக்க போய் விட்டார். அங்கு அவர இரவு உணவு முடிந்து இரவு பதினொரு மணி அளவில் தான் வீடு திரும்புவார்” என்று சொன்னான. அவன் சொன்ன செய்தி வீர்சாமிக்கும் வேலாயுதத்துக்கும் சிலரின் உதவியோடு பெரிய துரையை அன்று இரவு கொலை செய்ய திட்டம் போட உதவியது. இது வேலைக்காரனுக்கு தெரியாது

பெரிய துரை போப் மாதத்துக்கு இரு தடவை அருகில் உள்ள தோட்டத்து பெரியதுரையை சந்தித்து பேசி அவரோடு இரவு உணவருந்த போய் வருவதுண்டு . வெகு நேரம் சென்று வீடு திரும்புவதால் தேயிலை தயாரிக்கும் அதிகாரி லுடோவைக்குக்கு போன் செய்து தன் வீட்டு வேலைகாரனை தன் கார் வரும் போது கராஜ் கதவை திறந்து வைக்க படி சொல்லும்படி சொன்னார்

அன்று 1941 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவும் அந்த அதிகாரியும் அவ்வாறே செய்தார். அன்று இரவு எட்டு மைல் தூரத்தில் உள்ள டெல்டா கிளப்புக்கு போய் பெரியதுரை பக்கத்து டெல்டா தோட்டத்து பெரியதுரையோடு இரவு போசனம் உண்டபின் தன் காரில்இரவு 11 மணியளவில் திரும்பும்போது பக்டரிக்கு அருகே பாதைக்கு நடுவே மரம் ஒன்று கார் போக முடியாமல் குறுக்கே கிடந்ததைக் கண்டார் . அவர் காரில் இருந்து இறங்கி மரத்தை அப்புறப் படுத்த முயற்சித்த போது தேயிலை பற்றைக்குள் இருந்து சிலர் திடீர் என்று வெளியே வந்து கத்தியும் இரும்பு போல்லுக்களுடன் பெரிய துரையை தாக்கத் தொடங்கினார்கள்.. பலத்த காயங்களோடு பெரியதுரை போப் குற்றுயிராக இரத்தம் ஓட பாதையில் கிடந்தார் . தாங்கள் வந்த காரியம் முடிந்தவுடன் தாக்கியவர்கள் ஓடி மறைந்தனர். பெரியதுரை வீடு வராததால் வேலைகாரன் தேயிலை தயாரிக்கும் அதிகாரிக்கு போன் செய்து சொன்னான். உடனே அவர் தன் காரை எடுத்துக் கொண்டு பெரியதுரையின் பங்களா நோக்கி சிலரோடு போனபோது வீதியில் குற்றுயிராக இரத்தகாயங்களோடு பெரிய துரை வீதியில் கிடப்பதைக் கண்டார. உடனே வேலைகாரனின் மற்றும் சில தொழிலாளர்கள் உதவியோடு பெரியதுரையை டிஸ்பென்சரிக்கு அவரை கொன்று சென்று காயங்களுக்கு மருந்து போட்டு உடனே கம்பொலவில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது பெரிய துரையின் உயிர் பிரிந்தது. உடனே வைத்தியசாலை போலீசுக்கு அறிவித்தது தாமதிக்காமல் போலீஸ் உடல் இருந்த இருந்த இடத்துக்கு வந்து விசாரணையை ஆரம்பித்த பொது சாவிக் கொத்து. கைகுட்டை இரும்பு போல் போன்றவை கிடைத்தது.பிரேத விசாரணையின் போது பெரியதுரையின் உடலில் 28 வெட்டு காயங்கலாள் இறந்தார் என்று தீர்ப்பு சொல்லப் பட்டது . முன்பு நடந்த சம்பவங்களை வைத்து சந்தேகத்தின் பேரில் . வீரசாமி, வேலாயுதம் அய்யன் பெருமாள் ரங்கசாமி, சின்ன முனியாண்டி. மாரிமுத்து வேலு . மெய்யப்பன் குப்புசாமி ஆகிய எட்டு பேராய் போலீஸ் தடுப்புக்கு காவலில் வைத்து விசாரணையை தொடர்ந்தது. அஆந்த எட்டு பேரில் வீராசாமியும் வேலாயுமும் தலை மறைவானார்கள். இறந்தவர் பிரிட்டிஷ் அதிகாரி என்பதால் போலீஸ் விசாரணையில் அதிக கவனம் எடுத்தது. முக்கிய உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டார்கள். விசாரணையின் முடிவில் போதிய ஆதாரம் இல்லாததால் மெய்யப்பனும் குப்புசாமியும் விடுதலை செய்யப்பட்டனர். வீரசாமி முதலாம் குற்றவாளி என்றும், வேலாயுதம் இரண்டாம் குற்றவாளி என்றும் மற்றவர்கள் முறையே அய்யன் பெருமாள், ரங்கசாம, . சின்ன முனியாண்டி , மாரிமுத்து வேலு மூன்று முதல் ஆறாவது குற்றவாளிகள் என வழக்கு தொடரப்பட்டது. முதலாம் குற்றவாளி தலை மறைவானதால் போல்கர் தீவிரமாகத் தேடத் தொடங்கியது. வெள்ளுதம் சில நாட்காளில் கலஹாவில் பிடிபட்டான் படத் தோடு வீரசாமி என்ற போப் கொலையின் முதலாம் குற்றவாளி தேவை. கண்டு பிடித்து தருபவர்களுக்கு தகுந்த பரிசு தரப்படும் என்ற நோட்டீஸ் எல்லா இடங்களிலும், பத்திரிகைகளிலும் போடப் பட்டது

சட்டத்தின் நீண்ட கரங்களில் இருந்து தப்ப வீரசாமி இந்தியாவுக்கு தப்பிப் போய் இருக்க வேண்டும் அது முடியவில்லை.

***

ஒருவர் பின் ஒருவாரக மூன்றாம் முதல் ஆறாம் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். ஐந்து மாதங்களாக பல இடங்களில் வீரசாமி ஒளிந்து வாழ்ந்தான். அவனுக்கு சங்கம் மறைமுகமாக உதவியது. ஒரு நாள் வீர்சாமியின் தாடியும் முடியும் வளர்ந்ததால் முடி வெட்டி தாடியை சவரம் செய்ய கண்டியில் இருவர் வேலை செய்த ஒரு சலூனுக்கு போனான் . அந்த சலூனுக்கு வந்தவனின் அழுக்கு படிந்த சரத்தையும் சேர்டையும் கண்டு சலூன் நாவிதன் முகம் சுளிததான். வந்தவனுக்கு மறுப்பு தெரிவிக்காமல் முடி வெட்டி சவரம் செய்யும் போது வந்தவனின் முகம், முன்னால் இருந்த கண்ணாடியில் தெரியத் தொடங்கியது, உடனே அவன் யார் என்று அடையாளம் கண்டு அதை உர்ஜிதப் படுத்த முடி வெட்டிக் கொண்டிருந்த வீரசாமியிடம் தனக்கு மலம சலம் களிக்க வேண்டி அவசியம் தேவையாக இருக்கிறது சில நிமிடங்களில் வந்துவிடுவேன் என்று பொய் சொல்லி பொலீஸ் நோட்டீசில் இருந்த படம் அவன் நினைவுக்கு வந்த படியால் அதை பார்க்க சென்றான் . தான் செய்த வேலையே உதவியாளனிடம் கொடுத்து விட்டு அறைக்குள் போய் போலீஸ் நோட்டிசில் இருந்த படத்தை எடுத்துப் பார்த்தான். தான் முடி வெட்டுபவன் போலீஸ் தேடும் குற்றவாளி தேடும் முதலாம் குற்றவாளி வீரசாமி என்பவன் என அறிந்தான். உடனே பக்கத்து துணி தைப்பவன் கடைக்குப் போய் போலீசுக்கு போன் செய்து விசயத்தை சொன்னான் . சில நிமிடங்களில் ஐந்து போலீஸ்காரர்களும், இன்ஸ்பெக்டரும் சலூனுக்கு வந்து வீரசாமியை கைது செய்தனர். வீரசாமி அதை எதிர்பார்கவில்லை . பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது உண்மை

ஆறு குற்றவாளிகள் மேலான வழக்கு திறமையான நீதிபதியின் கீழ் நடந்தது 55 சாட்சிகள் வழக்கில் சாட்சி சொன்னர்கள். கொலை குற்றவாளிகளை தவிர வேறு ஒருவரும் கொலை நடந்ததை கண்ணால் பார்கவிலை. குற்றவளிக்ளில் சிலர் பழியை வீரசாமிமீதும் வேலாயுத்தின் மீதும் சுமத்தினார்கள். பெரிய துரையை கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்கள் அவர்கள் இருவருமே என்றார்கள். வழக்கின் முடிவில் நீதபதி முதல் இரண்டு குற்றவாளிகளே கொலைக்கு காரணம் என்றும், மாற்றவர்கள் அதில் ஈடுபடாத வாறு ஜூரிகளுக்கு நீதிபதி எடுத்து சொன்னார். நீதிபதி சொன்னதை வைத்து வீரசாமியும் வேலாயுதமும் குற்றவாளிகள் என ஜூரிமார்கள் தீர்ப்பு அளித்தனர் மற்றவர்கள் நால்வரையும் போதிய ஆதாரம் இல்லததால் நிரபராதிகள் என விடுதலை செய்தனர். அப்பீல் கோர்ட்டிலும் முதல் இரண்டு குற்றவாளிகளின் மரண தண்டனை நீக்கப் படவில்லை

1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கலை 8 மணிக்கு வீரசாமியும், அடுத்த நாள் அதே நேரம் வேலாயுதமும் கொழும்பு வெலிக்கட ஜெயிலில் தூக்கில் இடப்பட்டனர் இந்த கொலைக்கு பின் பல தோட்டங்களின் பெரியதுரைமார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களை மனிதாபிமானத்தோடு நடத்தத் தொடங்கினார்கள். ஜார்ஜ் போப்பின் கல்லறையை புசெல்லாவ அங்கிலிக்கன் சர்ச்சின் அருகில் உள்ள கல்லறையில் இன்றும் காணலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *