சினேகிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 3,724 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பூனயும்- நரியும் சினேகிதமா இருந்திச்சாம். சினேகிதமா இருக்கயில, பூன செய்யுறத நரியால செய்ய முடியல. பூனக்கித் தெரியுறது நரிக்குத் தெரியல. எதுக்கெடுத்தாலுங் கிர்ண்டு ஓடத்தர் தெரியுது.

இருக்கயில், இந்த நரி, பூனண்ணே ! நிய்யி செய்றதெல்லாம் எனக்குச் சொல்லிக்குடுண்டு கேட்டுச்சு. கேக்கவும் பூனயும் சரிண்டு சொல்லிச்சு.

அப்ப பூன! நரியண்ணே ! இண்ணக்கி ஒரு பெரிய எடத்ல கல்யாணம் நடக்குது. வா – அங்க போவோம். ஆருக்கும் தெரியாம மேவீட்ல போயி ஒக்காந்துக்கிருவோம். ஒக்காந்து, கலியாணத்தப் பாத்திட்டு, சத்தம் போடாம வந்திரணும்ண்டு சொல்லுது. அங்க சத்தம் போட்டு ஊளை இட்றாதண்டு சொல்லிக் கூட்டிக்கிட்டுப் போகுது.

போயி, ஆருக்குத் தெரியாம மேவீட்ல போயி, பூனயும் நரியும் ஒக்காந்திருக்குக. எடயில பூன, நரியண்ணே ! கத்திராத ஆளுக வந்து நம்மள அடிச்சுப் போட்டுருவாங்க. பேசாமப் பாரு. கலியாணம் முடியவும் எரங்கி ஓடிப் போயிருவோம்ண்டு சொல்லுது.

இருக்கயில், கோழி கூப்ட ஆரம்பிக்குது. நரியண்ணே ! கோழி கூப்டப் போகுது. ஊளையிட்டுராதண்டு சொல்லுது. சரிண்ணேண்டு சொல்லிருச்சு.

அப்ப, கெழக்க நல்லா வெளுத்திருச்சு. விடியப் போகுது, விடியப் போகயில், நரிப் புத்தி போகுமா! விடியப் போகயில, இந்த நரி… ஓ… ஓ… ஓண்டு ஊளையிட்டுருச்சு.

ஊளையிடவும், கல்யாண வீட்டுக்காரங்க வீட்டு மேல ஏறி வந்து பாத்திட்டு, நரி இருக்டா, கம்ப எடுத்துட்டு வாங்கடாண்டு சொல்லி, எல்லாரும் வந்து அடிச்சுப் போட்டுட்டாங்க.

அடிச்சுப் போடவும், நரி செத்துப் போச்சு. பூன எடவாரத்ல தவ்வி ஓடிப்போச்சு. இந்த நரியோட பொண்டாட்டி நரி அழுது வருது. எப்டி சொல்லி அழுது வருதுண்டா ,

கூடுவாரோட கூடாத

கூடங்கள் மாடங்கள்ள ஏறாதண்டு சொன்னேனே – இப்ப

கூடுவாரோட கூடி

கூடங்கள்மாடங்கள் ஏறி – இப்ப

குண்டக்க மண்டக்க ஆயிச் போச்சுல்ல – ண்டு

சொல்லி அழுது வருது. வரயில, பூன இருந்துகிட்டு,

கூடுவாரோட கூடுனது குத்தமில்ல

பப்பாaig வ கூடங்கள் மாடங்கள் ஏறுனது குத்தமில்ல கை

வேடங் கழுத்த ஊதாட்டி

நாசங்கள் மோசங்கள் ஏ… வருது – ண்டு

சொல்லிட்டு, பூன ஓடிப் போச்சாம். பூனயும் நரியும் கூடுனா எனமுண்டாலும் ஆகுமா? அதர் சொல்றது. சேருறவங்க கூடத்தா சேரணும்ங்றது. யாராரோடு சேந்தாலும்; அவங்கவங்க புத்தி அவங்கவங்க கிட்டதா இருக்கும். நரிப்புத்தி நரிகிட்டதான இருக்கும். போயிறவா போகுது.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *