சங்ககாலப் பெண் புலவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 2,560 
 

(இதற்கு முந்தைய ‘ஈடிணையற்ற பெண்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

சங்க காலத்தில் பல சிறந்த பெண் புலவர்கள் இருந்தனர்.

உதாரணமாக குறமகள் குறி எயினி; காமக்கணி பசலையார்; ஒவ்வையார்; நல்வெள்ளியார்; நக்கண்ணையார்; மதுரை ஓலைக் கடையத்தார்; நப்பசலையார்; வெள்ளி வீதியார்; வெறிபாடிய காமக்கண்ணியார்; நன்முல்லையார்; ஆதிமந்தியார்; ஊண்பித்தை; ஒக்கூர் மாசாத்தியார்; நன்னாகையார்; நச்செள்ளையார்; பூங்கண் உத்திரையார்; பூதப் பாண்டியன் தேவி; குறமகள் இளவெயினி; ஏணிச்சேரி முடமோசியார்; முடத்தாமக் கண்ணியார்; அங்கவை, சங்கவை (பாரி மகளிர்); தாயங்கண்ணியார்; பெருங்கோப்பெண்டு; பேய்மகள் இளவெயினி; காவற்பெண்டு; பொன்முடியார்; போந்தைப் பசலையார்; அன்சியந்தை மகள் நாகையார்; அணிலாடு முன்றிலார்; அஞ்சில் அஞ்சியார்; ஓரிர் பிச்சையார்; வருமுலையாரித்தி.

இவர்களில் சிலர் ஒரே பெண்மணிதான் என்றும் வேறு வேறு அடை மொழிகளுடன் வெவ்வேறு பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் சில பெயர்கள் ஆண்களா, பெண்களா என்ற ஐயப்பாடும் இருக்கிறது. ஆகையால் குறிப்பாக இத்தனை பேர்தான் என்று சொல்லவும் முடியாது.

மேலும் 2381 சங்கப் பாடல்களில் 154 மட்டுமே பெண்களுடையது என்பதைப் பார்க்கையில் அவர்களுடைய தாக்கம் அதிகமில்லை என்பதும் தெளிவாகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வையார் பாடிய பாடல்கள்தான் அதிகம். அவர் பாடிய பாடல்கள் அறுபது. அவரைத் தவிர பத்து பாடல்களுக்கும் மேலாகப் பாடியோர் மூன்றே பேர்தான்.

450 க்கும் மேலான புலவர்களில் முப்பதுக்கும் குறைவானவர்களே பெண் புலவர்கள். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இதைத் தவிர அதிகம் பெண் புலவர்கள் இருந்தது ரிக் வேதத்தில் மட்டும்தான். அது சங்க காலத்திற்கு 1500 ஆண்டுகளுக்கும் முந்தையது. இவ்வாறு 3500 ஆண்டுகளுக்கு பெண்களும் புலமை பெற்ற ஒரே நாடு இந்தியாதான். இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதும் சிறப்புடையது.

உலகிலேயே நாம் அறிந்த முதல் தத்துவ ஞானி கார்க்கி வாசக்னவி என்ற பெண்மணிதான். 2850 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.

இப்பெண்களின் பெயர்களில் பெரும்பாலானவற்றில் ‘கண்’ பற்றியும் ‘முடி’ பற்றியும் வருவது நோக்கத்தக்கது. அது மட்டுமல்ல. ‘நல்’ என்ற அடைமொழி சமஸ்கிருத மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது. ‘சு’ என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் ‘நல்’ எனப்படும். நக்கீரன் என்ற பெயரிலும் இதைக் காணலாம்.

ஆயினும் பெண்களின் பெயர்களில்தான் இதை நாம் அதிகம் காண்கிறோம். சுமதி, சுகந்தி, சுகீர்த்தி, சுநீதா, சுலோச்சனா, சுசீலா, சுகன்யா என்று ஏராளமான பெயர்கள் இருக்கின்றன.

இந்தப் பெயர்களில் ‘முல்லை’ என்பது சமஸ்கிருதத்தில் ‘மல்லிகா’ என இருக்கிறது. ‘காமக்கண்ணி’ என்பது காமாட்சி அம்மனின் பெயர். இதைத் தமிழ்த் தாத்தா உவேசா; காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் (1894 – 1994) ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர்.

‘நற்கண்ணை’ என்பது ‘சுலோச்சனா’ என்கிற சமஸ்கிருதப் பெயரே. இதில் வியப்பொன்றும் இல்லை. ஆண்கள் பெயர்களிலும் விஷ்ணுதாசன் என்பதை புறநானூறு விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணன்தாயன் என்றும் எழுதி இருக்கிறது.

தமிழ்ப் புலவர்களின் சமஸ்கிருதப் பெயர்களை பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் கொடுத்துள்ளார். மேலும் காக்கைப் பாடினியார். (காகம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே காணப்படும் சொல். மேல் நாடுகளில் இது க்ரோ க்ரோ என்று கத்தும்; இந்தியாவில் இது கா கா என்று கத்துமாம்) போன்ற பெயர்கள் காரணப் பெயர்கள்.

இது போல காரணம் அல்லது அவர்கள் பாடிய வரிகளைக்கொண்டு பெயர் இடுவது ரிக்வேத முறையாகும். இப்படி அவர்கள் பாடிய வரிகளைக் கொண்டு புலவர் பெயர் பெறுகிறார். அவர்களுடைய உண்மைப் பெயர் தெரியாததால் அல்லது இதுவே அவர்களுக்குப் பெயர் ஈட்டித் தந்தது என்பதால் இருக்கலாம்.

ஓரில் பிச்சையார் பிராமணப் புலவர். குறுந்தொகையில் ஒரு பாடல் பாடிய புலவர் பிராமண ஆண்பாற்ப் புலவராக இருக்க வேண்டும். பிச்சை என்பது ஆண்களின் சமஸ்கிருதப் பெயர். (சுந்தர் பிச்சை என்பவர் தற்போது google தலைவர்). இதை புத்தமதத்தினர் இந்து நூல்களில் இருந்து எடுத்து பிட்ஷூ என்று (பெக்கர்) என்று பிரபலப் படுத்தினர். தவிர, பெண்கள் பிச்சை போடலாமேயன்றி பிச்சை எடுப்பதில்லை. வீட்டில் மட்டும் பிச்சை எடுக்க வேண்டும் என்பது மனு தர்ம விதி.

ஓரில் என்கிற பெயர் பெண்பாற் புலவர் பெயர் அல்ல. ஓரில் பிச்சை என்பது பாட்டில் வரும் வரி. அவர் பிராமண அக்ரஹாரத்தில் பிச்சை (உஞ்சுவர்த்தி) எடுப்பது பற்றிப் பாடிய பாடல் இது என்பது தமிழ்த் தாத்தா உவேசா உரையில் உள்ளது. நாய்கள் வரக்கூடாத அக்ரஹாரத்தில் ஒரே வீட்டில் மட்டும் நெய் கலந்த சாதத்தை வாங்கும் துறவி என்பது பாடலில் வரும் செய்தி. அந்தத் துறவியும் பார்ப்பனர் என்பதில் ஐயமில்லை.

உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு இந்தோனேஷியாதான். அங்கு எல்லாப் பெயர்களும் இராமாயண, மஹாபாரதப் பெயர்களாக இருக்கும். சுகர்ணோ என்பவர்தான் அந்த நாட்டின் முதல் தலைவர். விடுதலை பெற்றுத் தந்தவர். அவருடைய தந்தைக்கு மஹாபாரத கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆயினும் கெட்டவர்க்கு நன்றிக்கடன் பட்டு உயிர் துறந்தார் கர்ணன். ஆகையால் அவரது தந்தை தனது மகனுக்கு ‘சு’ கர்ணன் என்று பெயர் வைத்தார். அதுவே சுகர்ணோ…

அவளது மகளின் பெயர் மேகவதி சுகர்ணோ புத்ரி. இந்த ‘சு’, ‘நல்’ என்ற முன்னொட்டாக (prefix) சங்ககாலப் பெயர்களில் உள்ளது. இது சம்ஸ்கிருத மொழியின் தாக்கம். தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கேசவன் என்ற பெயர்களும் பிராமண கோத்திரப் பெயர்களும் சங்கப் புலவர்களின் பெயர்களில் இருப்பதும் சமஸ்கிருத மொழியின் தாக்கத்தைக் காட்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதி வாரியாகப் பட்டியல் போட்டால் பிராமணப் புலவர்களே அதிகம் பாடியதும் தெரிகிறது. கபிலர், பரணர் என்ற பிராமணப் புலவர்களின் பாடல்களே இதற்குச் சான்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *