அவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 2,243 
 

அறைக்குள் வந்து தன் எதிரில் சுவாதீனமாக அமர்ந்த அந்த இரு சுடிதார் அழகு இளைஞிகளைப் பார்த்ததும் சந்திரன் முகத்தில் மலர்ச்சி.

“சந்திரன் ! நாங்க ரெண்டு பேரும் அதுக்காக வரலை. ஆண் விபச்சாரம் பத்தி புள்ளி விபரம் எடுக்க வந்த பத்திரிகையாளர்கள். !” என்றாள் ஒருத்தி!

பயப்படாதீர்கள்!

இதையே உயிர் மெய் எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்து ஓரெழுத்தாக இல்லாமல் பிரித்து எழுதி இருக்கிறேன்.

அவ்அர்க்அள்

அற்ஐக்க்உள் வ்அந்த்உ த்அன் எத்இர்இல் ச்உவ்ஆத்ஈன்அம்ஆக்அ அம்அர்ந்த்அ அந்த்அ இர்உ ச்உட்இத்ஆர் அழ்அக்உ இள்ஐஞ்இக்அள்ஐப் ப்ஆர்த்த்அத்உம் ச்அந்த்இர்அன் ம்உக்அத்த்இல் ம்அல்அர்ச்ச்இ.

“ச்அந்த்இர்அன் ! ந்ஆங்க்அ ர்எண்ட்உ ப்ஏர்உம் அத்உக்க்ஆக்அ வ்அர்அல்ஐ. ஆண் வ்இப்அச்ச்ஆர்அம் ப்அத்த்இ ப்உள்ள்இ வ்இப்அர்அம் எட்உக்க்அ வ்அந்த்அ ப்அத்த்இர்இக்க்ஐய்ஆள்அர்க்அக்அள். ! ” என்ற்ஆள் ஒர்உத்த்இ.!!

தமிழ் என்று தோன்றியது. எப்படி வளர்ந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது.!

பிராமி எழுத்துகளிலிருந்து உயிர், மெய் எழுத்துக்கள் எப்படி எல்லாம் உருமாறி வந்தது என்றும் தெரியாது.!

உயிர், மெய் தோன்றிய பிறகு உயிர்மெய் எழுத்துக்கள் ஓரெழுத்தாய் யாரால் எப்படி உருவாக்கப் பட்டது என்றும் எனக்குத் தெரியாது.

நான் படித்த பாடம்…

உயிர் எழுத்துக்கள் – 12

மெய் எழுத்துக்கள் – 18

உயிர்மெய் எழுத்துக்கள் 12 x 18 = 216

ஆயுத எழுத்து – 1

ஆக… தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 என்பது மட்டும்தான்.

அதற்கடுத்து இடையில் எழுத்து சீர்திருத்தம் தந்தை பெரியாரால் “விடுதலை ” தினப்பத்திரிக்கையில் அறிமுகப்படுத்தப் பட்டு நடைமுறைக்கு வந்தது எல்லோருக்கும் தெரிந்த சேதி.

தற்போது எனது நண்பரொருவர் புலவர் பட்டம் பெற்று தமிழாசிரியராய் ஓய்வு பெற்றவர்….

ஆங்கில எழுத்துக்கள் எப்படி 26.

அது போல தமிழ் எழுத்துக்கள் உயிர் + மெய் = 30. என்று அறுதியிட்டுக் கூறி… அதற்கான இலக்கண இலக்கியங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

அந்த முயற்சியில் நான் உங்களுக்காக எழுதியதுதான் மேலே உள்ள ஹைகூ கதை. பெரிய கதையாக எழுதினால் பார்த்ததுமே மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள். இல்லை…. படித்ததும் மூளைக் குழம்பி விடுவீர்கள் என்றுதான் உதாரணத்திற்கு நான்கு வரிகள் எழுதினேன்.

ஒரு காலத்தில் கூட்டெழுத்து என்ற ஒன்றிருந்தது. க்கு, ட்,டி,டீ எல்லாம் சேர்த்து ஒரே எழுத்தாக எழுதுவார்கள். அப்படி ஒரு சில எழுத்துக்கள் நடைமுறையில் இருந்தது. அவைகளெல்லாம் பத்திரிகை, பத்திரங்களிலெல்லாம் நடைமுறைகளில் இருந்து மக்கள் புழக்க வழக்கத்திலும் இருந்தது எழுத்துக்களைச் சுருக்கவும், பக்கங்களைக் குறைக்கவும் பயன்பட்டன.

இந்த 30 எழுத்துக்களின் பயன்பாடு எந்த அளவிற்கு நீளும், ‘நினைத்துக்கொண்டிருக்கிறேன்’ போன்ற பெரிய சொற்களெல்லாம் எந்த அளவிற்கு விரியும் என்று யோசித்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.

மறைமலையடிகளார் எழுதி, பின்பற்றிய ‘தனித்தமிழ் ‘மக்கள் இயல்பு நடைமுறைக்கு வராதபோது…இந்த 30 எழுத்து தமிழ் வளர்ந்து வளமாக எத்தனை நூற் றாண்டுகள் ஆகும்’ என்று எனக்குத் தெரியவில்லை!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *