விலைமாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 10,724 
 

‘சரோஜா, இத கட்டிவுடு’ என்று மேனகா தன ஜாகெட்டின் பின்புறம் இருக்கும் நாடாவை கட்டுமாறு அழைத்தாள்.

ஜாகெட்டின் நாடவை அழகாக கட்டியதும் கண்ணாடியில் பார்த்தபோது மார்பகங்கள் ஜாகெட்டினை மீறி வெளிப்பட்டு மறைத்தும் மறையாமல் இருந்தது. அதன்மேல் புடவையின் தலைப்பை போட்டும் வெளிர் நிற புடவையின் உள் அடர்நிற ஜாகெட் செவ்வனே அவளின் எதிர்ப்பார்ப்பினை பொய்பிக்காமல் பளபளத்த மாநிற ஸர்மத்தை நன்கு வெளிப்படுத்தியது.
‘என்ன இன்னிக்கு அலங்காரம் ஜோரா இருக்கு? எப்படியும் இன்னிக்கு நல்ல கிராக்கி கிடைச்சிரும். அது எப்படித்தான் நீ இன்னும்கூட அழகா இருக்கியோ, … உன்ன பாத்தா 15 வயசுல பொண்ணு இருக்குனுதான் ஒத்துக்குவாங்களா?’ என்ற சரோஜாவை பார்த்து மேனகாவிற்கு புன்னகைக்க மட்டுமே முடிந்தது.

மேனகாவிற்கு இப்பொழுது 35 – 36 வயதே இருக்கும். அவளின் மகள் இந்த காலனியில் தான் பிறந்தாள். குழந்தைக்கு விவரம் தெரியும் முன்பே ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரின் உதவியுடன் ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு பின்னர் அவ்வப்போது சென்று பார்த்து வருவாள். இப்பொழுது மகளுக்கும் தெரியும், தன் தாய் செய்யும் தொழில் பற்றி. அவளாகவா விரும்பி வந்தாள் இத்தொழிலுக்கு? இப்பொழுது நினைத்தால் உடனே விட்டுவிட்டு சென்றுவிடதான் முடியுமா?

நேரம் 5 மணியடித்ததும் கிளம்பினாள்.

மாலை கடற்கரை காற்று சில்லென்று உடலைத் தழுவிச்சென்றது. சொன்ன நேரத்திற்கு சரியாக அந்த வெள்ளி நிற கார் வந்து அவள் முன் நின்றது. அங்கு பேருந்திற்காக காத்திருந்த சில கண்கள் அதுவரை கண்டுகளித்த வனப்பு செல்வதை ஏக்கத்துடன் கண்டு பெருமூச்சு விட்டது.

அவள் சென்ற இடம் ஸ்வர்கபூமியாக இருந்தது. இங்கு பலமுறை வந்திருக்கிறாள். கொஞ்சம் முரட்டுத்தனமாகவும், கூடுதல் வெறித்தனமாகவும் நடந்துக்கொண்டாலும் செல்லும்போது கிடக்கும் சன்மானத்தில் தன் மகளின் எதிர்க்காலம் இருப்பதை எண்ணி தாங்கிக்கொள்வாள்.

‘என்ன மேனகா வந்துட்டியா? என்ன சொல்லு புதுசு புதுசா அனுபவிச்சாலும் நீ தர சுகமே தனிதான். இந்த பத்துவருஷத்துல உன்கிட்ட மாற்றமேயில்லை.’ என்று கூறிகொண்டே தன்மேல் படரவிட்டுக்கொண்ட அந்த பெரிய மனிதன், பரோபகாரி, வள்ளல் என்று வெளியுலகுக்கு காணப்படும் மனிதமிருகம் தன் அடையாளங்களை விட்டுச்சென்று தன் இச்சையை தீர்த்துக்கொண்டது.

அன்று தன் இருப்பிடத்தை அடைந்ததும் சிறிது நேரத்தில் மற்றொரு கிராக்கி வந்தது. ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. சிறிதுநேரத்தில் பொலிஸ் ரைட் வந்தது.

‘வா வா வந்து ஏறு. எத்தன வாட்டி வந்தாலும் திருந்தாதுங்க. கான்ஸ்டபிள் எல்லாரையும் போட்டு கொண்டுவா. நான் முன்னாடி போறேன்’ என்று கூறி சென்ற போலிஸ்காரனின் பார்வை அங்கிருந்த பெண்களை கண்ணாலேயே பிரித்து மேய்ந்து.

அவளையும் அவளைப்போல் இருக்கும் மற்ற இரு பெண்களையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். இதைப்போல் பலமுறை வந்த அனுபவத்தால் பெரிய பாதிப்பு அவளிடம் இல்லை.

கூட வந்த பெண், சார் சார்…நான் அப்படிபட்ட பொண்ணு இல்லை. என்னை விட்டுடுங்க.’ என்று அழுதவளை யாருமே சட்டைசெய்யவில்லை.

‘சார்.. மேடம்…கூட இருந்தது என் கணவர் தான். இனிக்கி காலையில தான் கோவில்ல தாலிக்கட்டினார்.’

‘அப்படியா? அப்போ உனக்கு இன்னிக்கு சாந்திமுகூர்த்தமா? ஆனா கூட இருந்த ஆளு உன்ன மனைவின்னு சொல்லவேயில்லை’ என்ற கேட்ட தலைமை போலிஸ்காரர் அவளை இளகாரமாக பார்த்து சிரித்தான்.

‘இல்லை சார், அவர் தான் இந்த தாலிய கட்டினது’ என்று காண்பித்த பெண்ணை பார்த்து
‘இந்த மாதிரி எத்தன பேர பாத்திருக்கோம். உடம்பு நமைச்சல் எடுத்தா இப்படி கிளம்பி வந்துடுவீங்களே’ என்று கூறிய போலீஸ்காரனின் வார்த்தையில் என்ன ஹாஸ்யம் கண்டார்களோ? ஸ்டேஷனில் இருந்த எல்லா காக்கிச்சட்டையும் விகாரமாக சிரித்தது.
மேனகாவிற்கு அப்பெண்ணை பார்க்கும்பொழுது 16 வருடங்கள் முன் தான் கதறியது நினைவு வந்தது.

இன்று அப்பெண் கதி அதோகதிதான்.

அந்த தலைமை காக்கிச்சட்டை அங்கிருந்த மற்ற போலீஸ்காரர்களிடம் கண்ணாலேயே பேசிவிட்டு உள்ளேயிருக்கும் அறைக்குள் சென்றார். சிறிது நேரத்தில் அப்பெண்ணை அழைக்க வேறு காக்கிச்சட்டை வந்து

‘ஏய்.. வா, ஐயா கூப்பிடறார். போ.. போய் சொன்னபடி நடந்துக்கோ. அப்போதான் சீக்கிரம் வெளியாவது மாதிரி கேஸ் போடுவாரு. சொன்னபடி நடக்கலேனா நீ வெளியவே வரமுடியாது’ என்றதைக் கேட்டு அப்பெண் பயத்துடன் கோழிக்குஞ்சாய் சுவரோரம் சுருண்டாள்.

‘ஏட்டு பாவம் சின்ன பொண்ணு. எதுக்கு அது வாழ்கைய நாசமாக்கிட்டு. நா வேண்ணா அந்த ஆளுக்கு வரேன்’ என்று தன்னால் முடிந்தவரை அப்பெண்ணை இப்புதைகுழியில் விழாமல் காக்க முற்ப்பட்டாள்.

‘நீ சும்மா இரு. உன்னோட பொண்ணு பத்தி அந்த ஆளுக்கு தெரியும். ஏதோ விட்டுவெச்சியிருக்கான். தேவையில்லாம எதுலையும் தலையிடாதே. எப்படியும் இந்த பொண்ண கண்ணு வெச்சிட்டாங்க. இன்னிக்கி இல்லைனாலும் என்னிக்காவது முடிச்சிடுவாங்க.’ என்று அப்பெண்ணை அழைத்துக்கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தார்.

அவள் நகராமல் இருக்கவும் உள்ளிருந்த தலைமை காக்கிச்சட்டை அவர்கள் இருந்த இடத்திற்கே வந்து ‘என்னடி ..என்ன நடிப்பு ..பதிவிரதையா? சும்மா என்கிட்டே வெச்சிக்கிட்டே ..உன்ன தே…..லிஸ்ட்ல் சேத்துடுவேன்.’ என்று இழுத்துச்சென்றது அந்த தலைமை காக்கிச்சட்டை.

சிறிதுநேரத்தில் பயங்கர அலறல் நின்று முனகல்களாக கேட்டது. வெளிவந்த தலைமை காக்கிச்சட்டை ‘ஏகாம்பரம்…என்ன சொல்லு புதுசு புதுசுதான். ம்…ம் … போ உனக்கும் விருந்துதான். இதைப்போல புதுசு வரும்போது கண்டிப்பா சொல்லு’ என்றது தலைமை காக்கி.

‘சரிங்கய்யா. ஐயா…’ என்று தலையை சொறிந்துகொண்டு நின்றது ஏகாம்பரம்.

‘எல்லாம் ஞாபகம் இருக்கு. ப்பைல் மூவ் பண்ணிட்டேன். சீக்கிரமே அப்ரூவல் ஆயிடும். சரி நான் கிளம்பறேன். நீ போய் விருந்து சாப்பிடு’ என்று ஏகம்பரத்தை தட்டிக்கொடுத்து சென்றார் அந்த தலைமை.

மறுபடியும் அலறல் கேட்கத் தொடங்கியது.

மேனகாவின் மனதில் எழுந்த ‘யாருக்கு உடம்பு நமைச்சல்’ என்ற கேள்வி ஊமையின் வார்த்தையாய் மனதில் வடித்த இரத்தத்துடன் ஒழுகிச் சென்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *