வள்ளிக்கு வந்த யோகம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,470 
 

காலை நேரம் ஒரே பரபரப்பு குப்பை கொட்டப்போன வள்ளியம்மைக்கு ஒரு திடீர் அதிருஷ்டம் காத்திருந்தது அருகில் ஒரு பேக் கிடைத்தது. அதில் முழுவதும் பணம். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வள்ளியம்மை என்ன செய்வது என யோசித்தாள்.

அதைப் பார்த்த வள்ளியம்மை வீட்டுக்கு சென்று அந்த பேக்கை வைக்க நினைத்தாள் வேலை செய்யும் வீட்டில் கடைக்கு வேறே போய் சாமான் வாங்கச் சொல்லியிருந்தாள் எப்படியும் ஒரு ஐந்து நிமிடத்தில் போய் திரும்பி விடலாம். யோசிக்காமல் வேக நடையில் நடந்தாள்.

மணி ஓன்பது ஆகிக் கொண்டு இருந்தது. லதாவின் கணவர் ராகுல் ஆபிஸ் போக டைம் ஆகிக் கொண்டிருந்தது.

“ லதா ஆபிஸ்க்கு லேட்டாச்சு”

”இருங்க இன்னைக்கு பார்த்து வேலைக்காரி வள்ளியம்மை கடைக்கு போனவ இன்னும் வரலை”

போன் அடிச்சது போனை எடுத்தாள் வள்ளியம்மை தான் பேசினாள்.

“அம்மா நா வள்ளி பேசறேன். வர்ற வழியில கிழே விழுந்துட்டேன் கால்லே சரியான அடி என்னால நடக்க முடியல்ல கடைக்காரங்கிட்ட பணத்தைக் கொடுத்துட்டுப் போறேன். கடைப்பையன் சாமான் கொண்டு தருவான்.” பதிலுக்கு காத்திருக்காமல் நடையைக் கட்டினாள்.

சொன்னபடியே கடைக்குப் போய் பணத்தைக் கொடுத்துவிட்டு விசயத்தைக் கூறி கடைப்பையனை சாமான் கொண்டு போய் கொடுக்க ஏற்பாடு செய்து விட்டு வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள்.

தூரத்தில் போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது. பக்கத்தில் வரும் போது அதில் இருந்த ஒருவன், “சார் நா குப்பை தொட்டியில் போட்ட பேக்கை அதோ அந்த பொம்பளை எடுத்துட்டு போரா சார் புடிங்க” என்றார்.

ஜீப் நின்றது. வள்ளியை போலிஸ் பிடித்தது.

எனக்கு எதுவும் தெரியாது சார் குப்பை கொட்ட வந்தேன். பேக் கிடச்சது. அவ்வளவுதான்சார். இந்தாங்க ” என பையை கொடுத்தாள்.

அதே நேரத்தில் லதாவும் அவர் கணவரும் வந்து கொண்டிருந்தனர். வள்ளி போலிசிடம் மாட்டிக் கொண்டதைக் கண்டனர். அவர்களே வலியச் சென்று, அவர்கள் வீட்டு வேலைக்காரிதான் என்று சொன்னதும் போலிஸ் வள்ளியை விட்டுவிட்டார்கள்.

ஜீப் போய்விட்டது.

வள்ளி கண்ணில் நீர் வழிய, “என்னை மன்னிச்சுடுங்கம்மா ” என கை எடுத்துக் கும்பிட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *