மாம்சம்-தரை-மார்புத்துணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2021
பார்வையிட்டோர்: 4,481 
 

(ஜெ.அண்வேலியின் பழங்குடி மக்களீன் மறைக்கப்பட்ட வரலாறு நூலினை அடிப்படியாக கொண்டு எழுதப்பட்டது)

முத்தச்சி கதை:

அவளின் வாயில் எச்சிலூறியது. உமிழ்நீர் மெல்லப் பெருக்கெடுத்து அவள் வாயை நிறைத்தது.

இன்னொரு துண்டு மாமிசத்தை படையலில் இருந்துப் பிரித்தெடுத்த செல்வ சாம்பன் அவளின் பூரித்த முகத்தைப் பார்த்தபடியே கொண்டு சென்றான். படையலில்., நைத்தியத்தில் மாமிசம் படைப்பது வழக்கமாகத்தான் இருந்தது. படையல் மாமிசத்தின் மணம் செல்வ சாம்பனின் நாசிகளையும் நிறைத்தது.

பிராமணர்கள் ஒழுங்குடன் படையலைப் பார்த்தபடி நின்றிருந்தவர்கள் திடுக்கிட்டபடி செல்வசாம்பனைப் பார்த்தார்கள்.அவர்கள் உடம்புகள் அதிர்ந்து போனதுதால் வியர்வை ஒழுகியது.

“அடே என்னடா பிராமணன் நீ .. உனக்கு என்னடா அவசரம்” வாயில் பெருக்கெடுத்த உமிழ்நீரை மாமிசத்துடன் சுவைத்தபடி அவனின் மனைவி தன் கர்ப்பமான வயிற்றைத் தடவிக்கொண்டாள்.

“கர்ப்ப ஸ்திரி..விரும்பினாள். அதுதான்”

“அதற்கென்னடா அவசரம். சடங்குகள் சாஸ்திரங்கள் என்று உண்டல்லவா. அதை மீறி.”

“பசி.. ருசி.. கர்ப்பஸ்திரியின் விருப்பத்திற்கேற்ப”

“அவளின் விருப்பத்திற்கேற்ப இதைச் செய்கிறாயா. எங்கள் விருப்பத்தை நாங்கள் சொல்லட்டுமா. “

பிராமணர்கள் சூழந்து கொண்டார்கள். வாயில் உமிழ்நீர், முகத்தில் , உடம்பில் வேர்வை என்று ஒழுகித்தீர்த்த்து கர்ப்பஸ்திரிக்கு, முகத்தில் திகில் கூடிவிட்டது.சூழ்ந்திருந்த யாகப்புகை நறுமணத்துடன் கொட்டாரமெங்கும் நிறைத்திருந்தது. ஏதோ கோபமாய் விவாதித்துக் கொண்டார்கள்.

“உன்னையும் உன் குடும்பத்தையும் பிராமணர்களாக வைத்திருக்க மறுக்கிறோம். இனி நீங்கள் பறையர்கள். உங்கள் சாதியை நாங்கள் தாழ்த்திக் கொள்கிறோம். எங்களுடன் சகவாசம் வேண்டாம், நாங்கள் என்றும் பிராமணர்கள். நீ பறையன் இனி..பறையனாகக் கடவது”

கர்ப்பஸ்திரியின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. மாமிசத்துண்டு நன்கு ருசிக்கப்பட்டு தொண்டைக்குழிக்குக் கீழ் சென்று விட்டது. இனியும் துப்ப முடியாது. வாந்தியெடுத்து அதை எடுத்து வீசியெறந்து விட்டோம். எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்க முடியாது. வலது கையை தொண்டையைப்பிடித்துக் கொண்டாள் கர்ப்பஸ்திரி. தொண்டையை நசுக்கிக் கொள்வதன் மூலம் அந்த மாமிசத்துண்டினை வெளியேற்றி விடலாம் என நினைப்பவள் போல் அழுத்தினாள்.

‘உற்சவ முறிக்கலுக்கு அவளைக்கூட்டிக்கொண்டு போடா. உனக்குத் தகுந்த இடம்தான் அது. அந்த வெறியாட்டு உனக்கு உகந்த இடமாக இருக்கும்’. உற்சவ முறிக்கலுக்கு ரொம்பநாள் இருந்தது ஞாபகம் வந்த்து அவனுக்கு.

புரோகிதனான குறவன் அச்சடங்கில் ஆட்டை பலி கொடுத்து ஆட்டு ரத்த்த்தில் சோற்றைக் குழைத்து மாமிசமும் மதுவும் படைத்த் பின் சேயோனின் வேலை எடுத்து வேலனின் ஆசி பெற்று சாமியாடும்போது புரோகிதன் சொல்வதெல்லாம் வேலனின் உத்தரவாகிவிடும் பிறகு.. மலங்காவுகளில் உற்ச குருதி ஆடு, மாடு, கோழி என்று வெட்டி பலிக்கல்லில் இரத்த்த்தை ஓடச்செய்து வேடிக்கை பார்ப்பார்கள்.. அந்த விளையாட்டைத் தொடர்ந்து விடியற்காலையில் கொடிச்சிக்கல் கூடைகளில் நெல்லும் நெல்லுக்கு மேல் நாணயங்களும் வைத்துக் கோவிலுக்கு வெளியே இந்த நேர்ச்ச காழ்ச்சகள் செய்வார்கள், அப்போடு எல்லோருமாக சாதி வித்யாசம் பார்க்காமல் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிரார்த்தனை செய்த பின் தாழ்ந்த சாதியினர் மேல் சாதியினரிடமிருந்து விலகி நின்று அசுத்தம் ஏற்படாதவாறு இருக்கச் சொல்வார்கள். இநத்த் தீண்டாப்பாடு அகலத்தில் கோவில் பூசாரி சிலருடன் வந்து நெல்லையும் நாணயங்களையும் வேறு பாத்திரங்களுக்கு மாற்றிக் கொண்டு போவதுண்டு. ஒவ்வொரு கூடையிலும் கொஞ்சம் நெல்லும் சில நாணயங்களும் இருக்கும் அது ஊராளியின் பங்கு. கோவில் அதிகாரி பிராமணன் ஊராளன் .அதையெல்லாம் ஒரு பாத்திரத்தில் இட்டு ஊராளியும் மதுக்கடைக்கு வந்து மதுவை வாங்கி பாத்திரங்களில் விட்டுக் கும்பிடுகிறார்கள் இந்த உற்ச முறிக்கலுக்கு பின் குறவர்களின் உற்சவம் நடக்கும்.

“உற்சவம் முறிக்கலில் நடக்கும் உற்சவத்திற்கு உகந்தன் நீ போய்க்கோ. இனி எங்கள் ஆளில்லை நீ”

இவ்வள்வு பெரிய தண்டனையா என்றிருந்தது அவனுக்கு.

ஒரு அம்மாவின் கதை

ஈயோய்..ஈயோய் என்று ஏன் அம்மா நீ மெல்ல சப்தமெழுப்பிக் கொண்டிருக்கிறாய்

அப்படி சத்தம் எழுப்பினேனா மகனே.

ஆமாம் அம்மா..ஈயோய்..ஈயோய் என்றாய்.

அது இந்தப்பக்கம் வரும் போதெல்லாம் அப்படி சத்தம் எழுப்பி வழக்கமாகிவிட்டதால்

அப்படியா

ஆமாம் மகனே. வேறு சாதிக்காரர்கள் இந்ததப்பக்கம் செல்வதென்றால் ஈயோய் .. ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும். பிராமணன் பயணம் செய்தால் அவனுடன் வரும் ஆள் ஓய்.. ஓய் என்று சத்தமெழுப்பிச் செல்ல வேண்டும்,

வேறு சாதிக்காரன் என்றால்

நாயர் என்ற் சொல்ல்லாம்

நாம் பிராமணர்கள் இல்லையா அம்மா

ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கிறோம்.

கோவில்களுக்கு பக்கத்திலிருக்கும் கோவிலைத்தொட்டுப்போகும் வீதிகள்தான் பாதைகளாக முன்பு இருக்கும் . மேல் சாதிக்காரர்கள் வந்து போகும் இடங்களாக கோவில்கள் இருந்தன. பிராமணர்கள் வந்து போகும் வீதிகளில் எப்போதும் அவர்கள் நடமாடுவதற்கென்றே எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கும் . அந்த வழியே பிற சாதிக்காரர்கள் செல்ல தடை இருந்தாலும் அவசர காலங்க்ளில் செல்வர். செல்லும்போது ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும் ..பிற சாதிக்காரர்கள் பிராமணனின் பார்வையில் படாமலிருக்கவும் எச்சில் அவர்கள் பாதையில் படாமல் இருக்கவும் அந்த ஏற்பாடு. பிற சாதிக்காரர்கள் பிராமணர்களைப் பார்ப்பது பாவம் என்றிருந்தபோது ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லவேண்டும் .ஈயோய் என்று சத்தம் எழுப்பியபடிதான் செல்லும் சிலரையும் பார்க்க வேண்டியிருக்கும்.. முட்செடிகளும் மரங்களும் வளர்ந்த காவுகளில் வாழ்ந்தவளுக்கு இந்தப் பாதைகள் புதிரானவைதான்.

நாமெல்லாம் செல்வன்கள் இல்லையா அம்மா

முன்னோர்கள் செல்வசம்பான் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்போதையப் பெயரில் மட்டும்தான் செல்வம் இருந்த்து. இப்போது செல்வன் இல்லை, பிச்சைப் பிழைப்புதான். இந்தப் பிச்சைப்பிழைப்பிற்காக உன்னோடு வரும் பையனையும் விறக்த்தான் கொண்டு செல்கிறோம்.

அந்தச் சிறுவனின் இடதுகை அவனை விடச் சிறிய ஒருவனின் தோளைப்பற்றிய படி இருந்தது. அவனின் பிடியிலிருந்து விடுபட்டு விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பவன் போல் அச்சிறுவன் இருந்தான்

இவவை விற்கத்தான் வேண்டுமா அம்மா.. நமக்குக் கிடைக்கிற கூலி பற்றாதா.

அது சரிப்பட்டு வந்தால் இன்னொரு வீட்டுப் பிள்ளையை நாம் ஏன் விற்க வேண்டும் அ.வன் அம்மாவே கூட வந்து இதைச் செய்திருக்கலாம்..அவளுக்கு பெத்த மனம் பித்து. வர மறுக்கிறாள்.நாம் சங்ஙனாச்சேரி சந்தைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கூலியாம் கூலி..

அடிமைகள் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தாலும் ஊதியம் என்று தரப்படுதில்லை. இரவில் ஒரு வேளை உணவுக்காக நெல் மட்டுமே தரப்படும். . பகலில் பசியாற ஆண்டையில் வீட்டில் இருக்கும்போது ஏதாவது கிடைக்கும் . ஆணுக்கு மூணு நாழி நெல்தான். அவ்வப்போது போக்கஞ்சி கிடைக்கும் ஆண்டையின் வீட்டுக்கு அருகில்மண்ணில் குழி தோண்டி அந்தக் குழியில் வாழை இலையோ, பாக்கு மரத்தின் பாளையையோ வைத்து அதில் சிறிது போக்கஞ்சியும் குழம்பும் ஊற்றுவார்கள். குழிக்கு வெளியே முழங்காலிட்டு குனிந்து குடிக்க வேண்டும். . கஞ்சி கூப்பிட ஆண்டை கூப்பிடும் போதுதான் பக்கத்தில் போக வேண்டும் அதுவரைக்கும் ஆண்டைக்குத் தீட்டுப் படாமலிருக்க அடிமைகள் தூரத்தில் நிற்க வேண்டும். . அடிமை வேலைக்குப் போகாமலிருக்கக் கூடாது. அப்படி வேலைக்குப் போகாமலிருந்தால் அடி கிடைக்கும். அதுவும் மாட்டை அடிக்கப்பயன்படும் கம்பியோ, கட்டையோ அடிக்கப் பயன்பாடாகி விடும் அவர்களுக்கு.. அடி வாங்கியவன் எப்படியும் எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்க இயலாது என்றால் அவனால் முடியவில்லை என்று அங்கேயேக் கிடக்க விட்டு விடுவார்கள்.பசியால் துள்ளியப்டி கிடக்க வேண்டும்.

நானெல்லாம் அடிமையா அம்மா

பதினைந்து வயதிற்குட்பட்டவர்கள் அடிமைகள்தான்

அப்படியென்றால் என் கூட இருப்பவன்

அவன் உன்னை விடச் சிறியவந்தானே .அ னும் அடிமைதான் . அவனும் குழியந்தானே

அடிமைகள் வசித்தப் பகுதியில் குழந்தைகள் கிழிக்குள் இருப்பார்கள். குழந்தைகள் குழியிலிருந்து வெளியே ஏறி வர இயலாது. மரத்தடியால் குழியின் உட்புறங்களை அமைத்து குழந்தைகளை அதில் போட்டு விடுவார்கள். மூத்தப் பிள்ளைகள் அக்குழிகளூக்குக் காவல் இருப்பார்கள் .. பெரியவர்கள் ஆண்டிகளின் காடுகளில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். குழந்தைகள் குழியன்கள் என்றாகிப்போனார்கள்.

மாடம் நம்க்கில்லையா அம்மா

நம்க்கெல்லாம் தரைதான். மாடம் எங்கே வாய்த்தது .

தரவாடு கிட்டுமா அம்மா

அது நாயர்களுக்குத் தானே. அவர்களும் நம்மை ஆள்பவர்கள்தானே

வட்டச்சேரி அடிமைகள் சந்தையிலிருந்து பல பெண்கள் சமீபத்தில் அந்த ஊருக்கு விற்கப்பட்டிருந்தார்கள். கூட்டம் கூட்டமாய் வந்து சேர்ந்தார்கள்.

சரியாகக் கூட சேர்ந்து வாடா

என்ன செய்கிறான் அவன்

முரண்டு பிடிப்பது போல் சிரமம் தருகிறான். வெட்டப் போடும் ஆடு போல் வர வேண்டியதுதானே அம்மா

ஆமாம். இவனுக்கு என்ன வாய்க்கப்போகிறதோ

என்னம்மா

காணம் , பாடம் என்று எது இவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ

அதென்னம்மா

ஆண்டான் எந்த உரிமையையும் மிச்சம் வைக்காமல் விற்று விடுவது ஜன்மம்.. குறிப்பிட்டத் தொகைக்கு கொடுத்து விட்டு திருப்பிக் கொடுக்கும்போது அடிமையை பழைய ஆண்டைக்கு விட்டுக் கொடுப்பது காணம் . அடிமையை மொத்தமாக குத்தகைக்கு விடுவது பாட்டம். இவனுக்குப் பாட்டம் வாய்க்கும்.

எவ்வள்வு காசுக்கு அம்மா

ஆண் என்றால் எட்டு பணம் பெண் என்றால் நான்கு கிடைக்கும் . ஆண்டைக்கு அடிமையைக் கொல்லும் அதிகாரம் இருப்பது கெட்டதுதான். கொஞ்சம் ஒதுங்கியே வா. யார் மேல் பட்டும் விடாதே

தாழ்ந்த சாதிக்காரன் ஒரு பிராமணனின் பார்வையில்பட்டால் அவனைச் சித்ரவதை செய்யலாம். பிராமணர்களின் சமீபம் செல்லக்கூடாதவன் பிராமணனிடமிருந்து தூரம் கடை பிடிக்கத்தவறினால் அவனது காலை வெட்டலாம். தொடக்கூடாத சூத்திரன் பிராமணனின் தகத்தில் அவனையும் அறியாமல் தொட நேர்ந்தால் அவனை முக்காலியில் கட்டி அடிக்க வேண்டும். ஆசனவாயில் பலமான நீண்டக் கமபை அடித்து ஊரார்கள் புழங்கக்கூடிய ஏதாவது ஒரு இடத்தில் நட்டு விட அவன் அந்தக் கம்பின் முனையில் கொஞ்சம் கொஞ்சமாய் திளைத்துச் சாக வேண்டியிருக்கும்

பாம்பு இருக்கும் குடத்துக்குள் கை விட முடியுமா அம்மா

அந்த விசப்பரிசோதனை எதற்கு. விச ஜந்துவுடன்

கேள்விப்பட்டேன் அம்மா. கிச்சு முச்சு மூட்டுமோ

விளையாட்டுப் பையனாக இருக்கிறானே என்று அவனின் முகத்தைப் பார்க்க தலையை நிமிர்த்தினாள். அவளின் குல தெயவமான் செல்வ சாம்பனின் முகத்தை ஞாபகப்படுத்த முயன்றாள்

மகளின் கதை:

சாம்பனின் முகத்தை ஞாபகப்படுத்த முயன்றாள். அந்த பிராமணனைக்கண்டதும் அவள் மார்பக்த்துணியை விலக்கிப் போட்டுக்கொண்டாள். இப்போது மார்பகம் திறந்த வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது. அவளின் வலது கையை இறுக்கப்பிடித்த குழந்தை அவளின் திறந்த மார்பைப் பார்த்தது. தனக்குப் பாலூட்டும் அந்த நாட்களில் கூட ஏதாவது துணியை மார்பின் மீது போர்த்திதான் அவள் பாலூட்டுவாள். ஆனால் இது போல் கோவில்கள், வெளியிடங்களில் யாரையாவது பார்க்கிற போது அம்மாவுக்கு என்னாகிறது. மார்புத்துணியை விலக்கிக் கொள்கிறாள். ஒருதரம் கேட்டாள்.

“ உனக்கெல்லாம் இது புரிய ரொம்ப நாளாகும் பெண்ணே “

கோவில் வெகு சுத்தமாக இருந்தது. அரிசி மாவுக் கோலங்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் பரவிக்கிடந்தன். வெயில் பளீரென்று வருகிற நேரங்களில் அரிசி மாவுக்கோலங்கள் சட்டென மறைந்து விடுவது போல் எறும்புகள் சூழந்து கொண்டு அவற்றைக்கடத்தி விடும். சிறு துளிகளை அவை ஜாக்கிரதையாகக் கடத்தி விடுவது ஆச்சர்யம் தந்தது.

சூத்திரப் பென்கள் மார்பக்த்தை மறைத்து உடை உடுத்தவும் நகை அணியவும் வரி தர வேண்டியிருந்தது. முலைக்கரம் வரி கட்டுகிற அள்வு அவள் வசதியானவள் அல்ல. சூத்திரனை, பிராமணனைக்கண்டதும் அவள் மார்பக்த்துணியை விலக்கிப் போட்டுக்கொள்ளாமலிருந்தால் மார்பிலிருந்து துணியை மாற்றாமலிருந்தால் சூத்திரப் பெண்ணீன் மார்பகம் மன்னரின் கட்டளைப்படி அறுத்து எறியப்பட்டு விடும்.

அவளைப் போன்றவர்கள் சூத்திர்ர்களிடம்கிருந்தும் தப்ப முடியவில்லை. திருமண நாளில் கூலி வாங்க ஆண்டையின் வீட்டிற்குச் செல்லும்போது அவனின் விருப்பத்திஅற்கு உடன் பட மறுத்த முதல் பெண் அவள்தான். அது எங்கு போய் முடியுமோ என்று வீட்டில் சலசலப்பு இருந்தது. அதை பிரம்மபாவமாகக் கொண்டு விதி எழுதப்பட்டிருந்தது..

அது பிரம்மபாவம் பெண்ணே

உடன்பட்டால் பாவம் தீர்ந்து விடுமா

முதல் இரவு கூட பிராமணனுக்குத்தான் அர்ப்பணம் செய்ய வேண்டும்

அய்யோ..

உடுத்த் உடையும் மேலே போர்த்ஹ்டிக் கொள்ள ஒரு மேல் முண்டும் ஒரு பெண்ணுக்குத் தரப்பட்டால் அந்தப் பெண் படுக்கைக்கு வந்து விட வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்தது.

உடன்படா விட்டால் என்னவாகும்

கைகால்கள் வெட்டப்படலாம், காதுகளை அறுப்பார்கள், நாக்கை வெட்டுவார்கள், பல்லை அடித்து உதிர்ப்பார்கள், காளையோடு சேத்துக் கட்டி வயலி உழவுக்கு அனுப்புவது, பாமபு இருக்கும் குடத்துக்குள் கையை விடச்செய்வார்கள்.

அம்மா பாம்பு உள்ள குட்த்துக்குள் கையை விட்டால் குறுகுறுப்பாக இருக்குமே.

குறுகுறுப்பா மிஞ்சும். கடி படும். பாம்பு கொத்தும்.

எங்கும் பூரணமாய் குளிர்ச்சி வந்து விட்ட்தைப் போல் தண்ணீர் ஊற்றிக் கழுவப்பட்டிருந்தது. இதைக்கழுவினப் பெண்கள் கூட மார்பினைத் திறந்து காட்டியபடிதான் வேலையைச் செய்திருப்பார்களா. பனியாதவர்கள் வயலில்காளையோடு சேர்த்து உழப்போகியிருப்பார்களா.

அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

பூஜைத்தட்டுடன் வந்த பிராமணப்பெண் ஒருத்தி வெள்ளை உடுப்பால் அவளின் மார்பை மூடியிருந்தாள். அவளின் கையிலிருந்த பழத்தைப் பார்தாள். அது உள் நாட்டில் விளைவதல்ல. பக்கத்தில் எந்தக் காட்டிலும் கிடைக்காது.

ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்த பழம்தான். சிவப்பாய் உருண்டையாய். ஏலக்காயும் மிளகும் கொடுத்து மாற்றாகக் கூடப் பெற்றிருப்பார்கள்.

அவளின் தலைமுறை முந்நூறு ஆண்டுகளாய் சுவைக்காத பழம் அது என்று சொல்லிக்கொண்டான் . செல்வ பகவானே இதெல்லாம் என் மகளின் கண்களில் படுகிறதே .அவள் விரும்பி அதைக்கேட்டால் நான் எங்கு போவேன். எவனிடம் போய் என் மகளுக்காக நிற்பேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *