மகிழம் பூ மனசுக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 3,612 
 

இருளை வெளிச்சம் சிறிது சிறிதாக ஆக்கிறமித்துக் கொண்டு இருக்கும் அதிகாலை வேலை. வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் சப்தம் கேட்டு கதவை திறந்தேன்.

அழகா சவரம் செய்யப்பட்ட முகம், எண்ணெய் போட்டு வாரிய தலை, கஞ்சி போட்டு தேய்த்து கத்தி போன்று நிற்கும் சட்டை. முகத்தில் தவுசன் வாட்ஸ் பல்ப் போன்று பிரகாசமான புன்னகையுடன் கையில் கொண்டு வந்த மலர்க் கொத்தை என்னிடம் கொடுத்து அவர் சொன்ன அந்த வார்த்தைதான் எனக்கே ஞாபகம் வந்தது.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி”

ஆம் இன்று என் பிறந்த நாள். ஆனால் இவர் யார்? நீங்கள் யார் என்று கேட்டு விடலாமா? மனசு யோசிக்கும் முன்பே முந்திக்கொண்டது வாய்!

“சாரி நீங்க யாருன்னு ஞாபகம் இல்ல?”

“தம்பி! என்ன ஞாபகம் இல்லையா? இருக்க வாய்ப்பு இல்லதான். என்னை போன்று எத்தனை பேரை இப்படி மாற்றியிருப்பீர்கள் அதனால் என்னை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்வது கடினம் தான்”

அவர் சொல்வது புரியாமல் என் கைபேசியில் எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியவர்களுக்கு பதில் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் பார்த்தேன்.எனது தோழி ரோஸ் அனுப்பிருந்த இரண்டு புகைப்படங்களை அன்று இன்று என்று பதிவிட்டு ஒருவரின் புகைப்படங்களை அனுப்பிருந்தாள்.

“தம்பி”

அவர் அழைத்த குரல் கேட்டு கைபேசியில் மூழ்கிருந்த நான் அவரின் முகம் பார்த்தேன். ஆம் அவள் அனுப்பிய புகைப்படத்தில் இருப்பவர் தான் என் எதிரில் நிற்பவர்.

“என்ன தம்பி! இப்போ நா யாருன்னு ஞாபகம் வந்துருச்சா?” என்றார் என் கைபேசியில் உள்ள அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு.

“நீ………நீங்களா!” என் வார்த்தை கொஞ்சம் தடுமாறியது.

“ஆமாம் தம்பி! கொஞ்ச நாளைக்கு முன்ன உங்க தோழி ரோஸ்வை ரோட்டில் பார்த்தேன், உங்களையும் பார்க்கணும்னு அவங்ககிட்ட சொன்னேன், அவங்கதான் இணைக்கு உங்க பிறந்தநாள் இணைக்கு போய் பாருங்கன்னு சொல்லி அனுப்பிவச்சாங்க”

என்னுடைய சென்ற வருட பிறந்தநாளில் தான் இவரை சந்தித்தேன் என்பதை விட சந்திக்க வைத்தாள் ரோஸ் என்பதே சரி.

வழக்கமா என்னுடைய பிறந்தநாள் என் தோழர்கள், தோழிகள் புடை சூழத்தான் கொண்டாடுவோம், ஏதோ ஒரு மால் அல்லது ஹோட்டடலில் கேக் வெட்டி எனது பிறந்தநாள் கொண்டாடப்படும். போன வருடத்திற்கு முந்தைய நாள் பிறந்தநாளுடன் என் கல்லூரி வாழ்க்கை முடிவு பெற்றுவிட்டது. நண்பர்களும் வேலை, குடும்பம் என் சமூக பொதுவெளியில் அடையாளமற்று போய் விட்டனர். ஒரு சில நண்பர்களுடன் மட்டும் தான் தொடர்ப்பில் உள்ளேன். எப்போதாவது பேசிக்கொள்வோம்.

சென்ற வருடத்தின் என்னுடைய பிறந்தநாளுக்கு முன்தினம் ரோஸ்விடம் இருந்து எனக்கு போன் வந்தது.

“என்னடா பர்த் டே பாய்!” நாளைக்கு என்ன ட்ரீட் கொடுக்க போற?”

“நம்ம பிரண்ட்ஸ் எல்லாமே பிஸி ஆஹ் இருக்காங்க! நீயும் நானும் மட்டும் கேக் வெட்டி பர்த் டே வ செலிப்ரேட் பண்ணுவோம்”

“அதுதான் என்ன செலிப்ரேட்”

“எப்பவும் போலதான்! ஹோட்டல் போய் சாப்பிட்டு கேக் வெட்டிட்டு வந்துருவோம்”

“ஆது எல்லாம் ஒன்னும் வேன்டாம், நா ஒரு புது ஐடியா சொல்லுறேன்! உன்னோட இந்த பர்த் டே வ இப்படி செலிப்ரேட் பண்ணுவோம்”

“என்ன ஐடியா?”

“நாளைக்கு சொல்லுறேன்!”

போன் அழைப்பை துண்டித்துவிட்டாள். என்ன புது ஐடியாவா இருக்கும்னு என் மனது யோசனையில் சென்றது.

அடுத்த நாள் திண்டுக்கல் குமரன் பூங்கா அழைத்துச் சென்றாள், பூங்காவின் வாசலில் நின்னுகொண்டு யாரையவோ தேடினாள்.

“இங்க வரதுதான் உன் புது ஐடியாவா?”

யாரையோ தேடிக்கொண்டு இருந்த அவளில் கண்கள் என் பக்கமே திரும்பவில்லை.

பூங்கா சுற்றுசுவரின் வெளி பக்கத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது போல ஈக்களில் அலைமோதல்களுக்கிடையே முகமெல்லாம் முகமெல்லாம் முடிகளால் மறைத்து அழுக்கு பிடித்த சட்டையுடனும் ஒட்டிப்போன உயிருடனும் சாக்கடையின் ஓரத்தில் படுத்து கிடந்த அந்த ஆள் எங்களையே பார்த்து கொண்டிருந்தார். அதை அவளிடம் காட்டலாம் என்று நினைப்பதற்க்குள் அவளே பார்த்துவிட்டாள். என்னை அவளின் அருகில் அழைத்துச் சென்றாள்.

“ஐயா” என்டர் அவள் அழைப்பில் அவரின் முகத்தில் ஆயிரம் புன்னகை.

“என்னையவா தாயி கூப்ட்ட” பசியும் சோகமும் அவர் வார்த்தையுடனே சேர்ந்து வெளிவந்தது.

“ஆமாம் ஐயா” என்ற அவளின் பதிலுடன் என் குரலும் சேர்ந்து ஒலித்தது. இத்தனை நாட்களாக யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததால் நாங்கள் அவரிடம் பேசியது அவரை தண்ணீரில் நடப்பதை போன்ற மகிழ்ச்சியையும் விண்ணில் பறப்பதை போன்ற புகழ்ச்சியையும் கொடுத்துவிட்டது போல அவரின் முகத்தில் மலர்ச்சி.

“யாரு ஐயா நீங்க? வீட்டுல யாரும் இல்லையா? ஏன் இப்படி இருக்கீங்க?” ரோஸ் அவரின் கையை பிடித்து கேட்டாள்.

அவரிடம் இருந்து வார்த்தைக்கு முன் இரண்டு மூன்று சொட்டு கண்ணீர் நிலத்தில் விழுந்தது.சிறிது நேர அமைத்திக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்தார்.

இன்னையோட ஏழு வருசமாச்சு! ஒரு விபத்துல குடும்பத்தையே இழந்தேன்.ஊருக்குள்ள வீட்டுல இருக்க முடியாம மனசு கஸ்ட்டத்துல பைத்தியம் புடுச்சவன் மாதிரி கிடந்தேன். சூழ்நிலையை தனக்கு சாதகமா மாத்திட்டு சொந்தகாரங்க என் வீட்டையும் அவங்க பேருக்கு எழுதிட்டு ஏமாத்திட்டாங்க,

மனசு ஓடஞ்சு கிடந்த என்னால அதெல்லாம் கவனிக்க முடியலை, கால் போன போக்குல இப்படி வந்துட்டேன். நாளு போக போகத்தான் வயிருன்னு ஒண்ணு இருக்குனு தெரிஞ்சது கைல காசும் இல்ல ஒன்னுமில்ல, ஏதும் வேலை செய்யலாம்னு கடை கடையா போய் கேட்டுப்பார்த்தேன், அழுக்கு புடிச்ச சட்ட தாடி மீசைன்னு பிச்சைக்காரன் போல இருக்க யாரும் வேலை தரல , சில பக்கம் அடுச்சு கூட போட்டாங்க

அங்கிட்டு இங்கிட்டுன்னு சுத்திட்டு இப்போ இங்க நாயோட நாயா குப்பையோட குப்பையா கிடக்கிற, ரோட்டுல குழந்தைங்க போறத பார்த்தா என் பேரப்பிள்ளைங்க ஞாபகம் வந்துரும் அந்த பிள்ளைங்க தாத்தா ன்னு ஒரு வார்த்த கூப்டாதான்னு ஏக்கமா இருக்கும்.

இப்போ இவ்வளவு வருசத்துக்கு அப்புறமா நீங்க எங்கிட்ட வந்து எங்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. அவர் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீர் அவரின் வயிற்று பகுதியில் வந்து விழுந்தது.

இங்கையே இருங்க ஐயா வந்துருறோம் என்று அவரிடம் சொல்லிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு ஒரு துணிக்கடைக்கு சென்று அவருக்கு சட்டை, வேட்டி என்று வாங்கிவிட்டு பின்பு அவரை அழைத்து கொண்டு அருகில் இருந்த பப்ளிக் பாத் ரூமில் குளித்து கூட்டிட்டு வரச்செய்து அந்த புது துணியை அவரிடம் கொடுக்க சொன்னால். அவர் அதை போட்டுகொண்டு வந்தார். பின்பு அவரையும் அழைத்து கொண்டு மூன்று பேரும் ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட்டோம். அவரை ஒரு ஹோமில் சேர்த்துவிட்டு விட்டு வீட்டுக்கு சென்றோம்.

சிறிது நாட்கள் கழித்து அவரைப் பார்க்க சென்றோம். அவர் அங்கில்லை எங்கயோ வேலைக்கு போய்விட்டதாக சொன்னார்கள். என்றாவது ஒரு நாள் அவரை பார்க்கவேண்டும் என்று இருந்தேன். இன்று என் முன்னாலே நின்று கொண்டிருக்கிறார் அவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *