தெருச் சிறுவன் தர்மசேனா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 6,013 
 

எனக்கென்று கார் இருந்தும் ஆபிசுக்கு பஸ்சில் நான் போய் வருவது தான் வழக்கம். ஒன்று காரில் போனால் போய் வர பெற்றோலுக்கான பணச்; செலவு இருக்கும். இரண்டாவது டிரபிக்கில் கார் ஓட்டுவதென்றால் பொறுமையும,; கவனமும் வேண்டும். அதுமட்டுமல்ல ஆபிசுக்கு அருகே கார்பார்க் செய்வதற்கு பணம் கொடுத்தாக வேண்டும். என் வீட்டுக்கும் நான் வேலை செய்யும் இடத்துக்கும் பத்துமைல் தூரம். அவ்விடத்துக்கு டிரெயினிலும் போகலாம். ஆனால் ஸ்டேசனிலிருந்து இன்னும் பதினைந்து நிமிட நடை என் ஆபிசுக்கு. பஸ்சில் போனால் என ஆபீசுக்கு அருகே நிற்பாட்டும் பஸ் தரிக்கும்;; வசதியுண்டு. இதையெல்லாம் அலசி ஆராய்ந்த பின்னரே பஸ்ஸில் போக தீர்மானித்தேன். விட்டில் இருந்து பத்து நிமிடங்கள் நடந்தால் பஸ் தரிக்கும் இடமுண்டு.;

தினமும் அறிமுகமான பல முகங்களை சந்திக்கும்போது அவர்களுக்கு “குட் மோர்னிங்”; சொல்லிப் போவது என் பழக்கத்தில் வந்துவிட்டது. பல காட்சிகளைப் பார்த்தபடி பஸ் ஸ்டாண்டுக்கு நடப்பேன். பாதையோரத்தில் வீட்டில் தயாரித்த உணவுவகைகளையும் . பழங்களையும் வி;ற்கும் “வட்டியம்மமா” என்று அழைக்கப்படும் வயோதிப பெண்கள் வாடிக்கையாளர்களை கூவி அழப்பார்கள்.

போகும் பாதை ஓரத்தில் பிள்ளையார் விலாஸ் என்ற பெயரோடு ஒரு ரெஸ்ரொரண்ட் உண்டு அந்த விலாசில் தாயரிக்கப்படும் மசாலா தோசைக்கும் மோதகத்துககும் ஏக கிராக்கி. காலையில் சாப்பிடாமல் அந்த விலாசை காலைப் போசனத்துக்காக தஞ்சமடையும் பிரமச்சாரிகள் பலர். அந்த ரெஸ்ரொரண்ட முதலாளி கணபதிப்பிள்ளை இலகிய மனம் படைத்தவர். அவரது கடைக்கு முன்னால் சப்பாத்து பொலிஷ் செயயும்; சிறுவன் கை நீட்டி பிச்சை வாங்காமல், சொநதமாக தொழில் செய்தான்.

அவனுக்கு மிகுதியாக இருக்கும் காலை, மாலை சாப்பாட்டை அச்சிறுவனுக்கு இலவசமாக கொடுப்பார். அதற்கு பிரதி உபகாரமாக சமையல் அறையையும் ரெஸ்ரொரண்டையும் சுத்தம் செயவதும், பாத்திரங்களைச் சுத்தம் செயவதும் அச்சிறுவனின் பொறுப்பு. அச்சிறுவனின் பெயர் தர்மசேனா என்று பிள்ளையார் ரெஸ்;ரொரண்ட முதலாளி கணபதிபிள்ளை சொல்லித் தான்; எனக்கு தெரியவந்தது. அவனை அன்போடு தர்மா என்றுதான் கணபதிப பிளளை அழைப்பார்

தர்மாவைத் தவிர்த்து, தெரு ஓரத்தில் லொட்டரி டிக்கட் விற்பவன் . தினப் பத்திரினை விற்பவன் , இளனி விற்பவன் , சப்பாத்துகளை பழுதுபார்க்கும் ஒரு வயோதிபன்;. இவர்களோடு ஒரு பிச்சைக்காரர் கூட்டம். அந்த கூட்டத்தில் இருவர் முடமானவர்கள். கைக் குழந்தையோடு ஒரு கண்தெரியாத பெண். இவர்கள் எல்லாம் நான் தினமும் காணும் கதாப்பாத்திரங்கள். இவர்கள் தினமும் என் பார்வையில் இருந்து தப்பமாட்டார்கள்.

ஒரு நாளாவது வட்டியம்மாக்கள் கூவி விற்கும் பொருட்களையோ, லொட்டரி டிக்கட் விற்பவனிடம் லொட்டரி டிக்கட்டையோ நான் வாங்கியது கிடையாது. ஆனால் சில சமயததில்; தாகமாக இருந்தால் செவ்விளனியை வாங்கிக் குடிப்பேன். பஸ்சில் பயணம் செய்யும் போது வாசிப்பதற்கு அன்றை தினப் பத்திரிகை ஒன்றை வாங்கிக்கொள்வேன்.

நான் தினமும் காணும் கதாப்பாத்திரங்களில் எனது அனுதாபத்தைக் கவர்ந்தவன் சப்பாத்து பொலிஷ் செய்யும் தெருச் சிறுவன் தர்மா. அவனுக்கு சுமார் பத்து வயதிருக்கும். டீப்டொப்பாக ஆடை அனிந்து டை கட்டிக்கொண்டு வேலைக்குப் போகிறவர்கள் தங்கள் சாப்பாத்துகள் பிரகாசமாக இருக்க வேண்டும்; என்று விரும்புவார்கள். தர்மாவின் வாடிக்கையாளரர்களில்; பொலீஸ்காரன் சிரிசேனாவும் ஒருவன். சிரிசேனாவுக்கு பெயருக்கேற்ற சிரித்த முகம். மூன்று வருடங்களாக வெள்ளைவத்தை பொலீஸ்டேசனில் வேலை செய்பவன்.

இவர்கiளின் சப்பாத்துகனை பொலிஷ் செயது உழைப்பதே அச்சிறுவனின் தொழில். வாடிக்கையாளர்கள் அணிந்திருக்கும் சப்பாத்தை பார்த்தவுடனேயே அது பழையதா, எவ்வளவு காலமாக செவை செய்திருக்கிறது என்று கண்டு பிடித்துவடுவான். சப்பாதது பாவனையால பழுதுபாhக்க வேண்டியிருந்தால் அருகே இருக்கும சப்பாத்துகளை பழுதுபார்க்கும் வயோதிபருக்கு அறிமுகப்படுத்தி வைப்பான.;;; வருமானம் குறைந்தவர்கள்; உள்நாட்டு விலை குறைந்த பாட்டா அல்லது டிஐ சப்பாத்துகளை அணிவார்கள். அவை நீண்ட காலம் சேவை செய்யாது. வசதி படைத்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் தங்கள் பிள்ளைள் மூலம் கேசூ, அல்லது கிளார்க் சூ போன்றi விலையுயாந்த சப்பாத்துகளை அணிந்திருப்பார்கள். அவர்கள் வசதி அறிந்து தன் சேவைக்கான ஊதியததை தர்மா வாங்குவான். அவர்கள் அணிநதிருக்கும் சப்பாத்தைப் பொலிஷ் செய்வதற்கு வசதியாக காலை வைக்கக கூடிய வித்தில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சிறுமேடை அவனது கருவிகளில் ஒன்று. அவன் வைத்திருநத பெட்டிக்குள் கீவீ பொலிஷ் டின் இரண்டு;, பிரஷ் இரண்டு, மஞ்சல் நிறத்தில் கம்பளித் துணி ஒன்று ஆகியவையே அவன் தொழிலுக்காகப் பாவிக்கும் பொருட்கள். தினம் குறைநதத ஐம்பது ரூபாய் மட்டில சம்பாதித்துவிடுவான். சிலர் அவன் மேல இரக்கப்பட்டு கொசுறாக பணம் கொடுப்பார்கள்.

அவனின் வாடிக்கையாளர்களில் ஒருவனான சிரிசேனா தான் டியூட்டிக்குப் போகமுன் தர்மாவிடம் தன் இரு சப்பாத்துகளைப் பொலிஷ செய்த பின்னரே செல்வது வழமை. சிரிசேனாவின் சப்பாத்துகளைப் பொலிஷ் செய்யும் நேரத்தில் தர்மாவும் சரிசேனாவும்; தாழ்ந்த குரலில் மற்றவர்களுக்கு கேட்காத வாறு பேசிக்;கொள்வார்கள். அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் எனபது பக்கத்தில் இருப்பவருக்குக் கேளாது.

பிரதான வீதியின் ஒரு பக்கத்தில் ஒரு அனாகரிக பௌத்த மகா வித்தியாலயம் என்ற பெயரில் கல்லூரி இருநதது. அக்கல்லூரி மாணவாகள் சிலர் போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றும் வகுப்பு ஒழுஙகாக வருவதிலலை என்றும் கல்லூரி அதிபர் அறிந்தாh. கல்லூரி முடிந்ததும் சிலமாணவர்கள் போதை மருந்து விற்பவர்களோடு போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபடுவதாக வெள்ளவத்தை பொலீஸ் ஸ்டேசனுக்கு பொறுப்பாக உள்ள பொலிஸ் இன்ஸபெடருக்கு புகாhகள் பல போய் சேர்ந்தன. இதைத் தொடர்நது கல்லூரி அதிபரும் முறைப்பாடிட்டார். பொலிஸ் இன்ஸ்பெடர் தன் நம்பிககை;கு பாத்திரமான சிரிசேனாவை அழைத்து போதை மருந்து வியாபாரம் செயபவர்களை விரைவில் கண்டுபிடிக்கும் படி உத்தரவு பிரப்பித்தார்.

***

அன்று வழமை போல ஆபிசுக்குப் போக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன். போகும் வழியில ஒரு தினப்பத்திரிகையை வாங்கிக கொண்டு பஸ் நிற்கும் இடத’தை நோக்கி நடந்தேன். அன்று அமைச்சரும், உயர் அதிகாரிகளும் ஒபீசில் நடக்க இருக்கும் முக்கிய கூட்டமொன்றுக்கு வர இருப்பதால் வசீகரமாக ஆடை அணிந்து, டை கட்டிக்கொண்டு புறப்பட்டேன். போகும் வழியில் தர்மாவிடம் எனது சப்பாத்தைப் பொலிஷ் செயய வேண்டியிருந்ததால் அவன் வழமை போல் வேலை செய்யும் இடததை நோக்கிச் சென்ற போது அங்கு ஒரே கூட்டம். பொலீஸகாரன் சிரிசேனா உற்பட மூன்று பொலீஸ்காராகள் பலரை விசாரண செய்து கொண்டு நின்றார்கள்.; எனக்கு காரணம் தெரியவில்லை. பிளாட்பாரத்தில் தர்மவாவின் உடல் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு கிடந்தது. அவன வேலைக்கு பாவிக்கும் பொருட்கள சிதறிக கிடந்துன. தர்மாவுக்கு ஏதோ நடகக்கக் கூடாதது ஒன்று நடந்து விட்டது எனபதை நான் ஊகிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. நேரே தர்மாவுக்க தினமும் சாப்பாடு கொடுத்துவந்த பள்iளார் ரெஸடொரண்ட் முதலாளி கணபதிபிள்ளையரிடம் போனேன்.

“என்ன கணபதி ஏன இந்தக் கூட்டம. தர்மாவுக்கு என்ன நடந்தது?. ஏன தர’மாவின்’ உடல் துணியால் மூடி இருக்கிறுது?” என்ற விசனத்தோடு அவரைக் கேட்டேன.

“அதே ஏன் கேக்கிறியள் சேர். பாவம் ஒன்றும் தெரியாத அந்த ஏழைச் சிறுவனை யாரோ பாவிகள் கொலை செய்து விட்டார்கள். தர்மா சமூகத்துக்கு நல்ல காரியம் செய்யப் போயிருக்கிறான். அதுவே அவனுக்கு யமனாக வந்துவிட்டது” என்றாhர் கண்களில கண்ணீர் மல்க கணபதி.

“அப்படி கொலை செய்ய அப்படி என்ன தர்மா பாரதூரமாக செய்து விட்டான?” நான் கணபதியைக் கேட்டேன்.

“இந்த பகுதியிலை மாணவர்களுக்கு போதை மருந்து வியாபாரம் செய்த கூட்டத்தைப் பொலீஸ் கைது செய்து விட்டது.”

“அப்படியா?. அதுக்கும் தர்மாவுக்கும் என்ன தொடர்பு?” நான் புரியாமல் கணபதியைக் கேட்டேன்.

“வேலை செய்யும் போது தர்மா பிரதான வீதியில் என்ன நடக்கிறது என்பதை அவதானித்தபடியே Nலை செய்தான். தான் கண்ட விபரத்தை பொலீஸ்காரர் சிரிசேனாவுக்கு சொல்லியிருக்கிறான். அது போதும் பொலீசுக்கு போதை மருந்து விற்பவர்கள் யார் என்று கண்டு பிடித்து கைது செய்ய”

“அப்போ தர்மா ஒரு பொலீஸ இன்போமர் என்கிறீரா கணபதி?” நான கேட்டேன்.

“ஆமாம் அது தான் உண்மை. தங்களைப் காட்டிக் கொடுத்தவன். அவன் வாழக் கூடாது என்ற அந்தக் கோபத்தில் போதை மருந்து கடத்தற்காரர்கள தர்மாவைக் கொலை செய்து விட்டார்கள். “என்றார் சோகத்தோடு கணபதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *