சேர்ஜிக்கள் ஸ்ரைக்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,170 
 

10 ஐப்பசிமாதம் 2017.

“சரியாக இரவு ஒன்பது மணிக்கு இந்திய இராணுவத்தின் ஐந்து ஹெலிஹொப்டர்களில் இருந்து எழுபத்தியைந்து விஷேட கொமான்டோக்கள் பாகிஸ்தானில் இருக்கும் வாஹா என்ற‌ காட்டுப்பகுத்திக்குள் இறங்கினர்.

தண்ணீர் கட்டியாகிவிடுமளவுக்கு குளிரிலும் காடுகளினூடாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இரண்டு தீவிரவாதிகளில் முகாம்களை சுற்றிவளைத்தது இராணுவம்.ஒரு அணி உள்ளே சென்று தாக்குதல் நடத்த இன்னொரு அணி வெளியில் தப்பிவரும் தீவிரவாதிகளைச் சுட்டுவீழ்த்தினர்.

சரியாக மூன்று மணிநேரத்தில் தாக்குதலை முடித்துவிட்டு வெற்றிகரமாக நமது இராணுவம் நம் எல்லைக்குள் வந்துவிட்டது.எமது பிரதமரின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த சேர்ஜிக்கல் ஸ்ரைக்கை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.”

பாதுகாப்பு அமைச்சர் சொன்னதை டீயில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஜெய் ஹிந்த் என கத்திக்கொண்டே குதூகலித்தனர்.

பிரபலங்கள் எல்லாம் முண்டியடித்துக்கொண்டு இரானுவத்துக்கு தங்கள் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அடுத்தநாளே இது வெறும் பொய் ,இந்திய இராணுவம் எங்கள் பக்கம் வரவே இல்லை என்று சர்வதேச ஊடகவியளாலர்களை அழைத்துப்போய் தாக்குதல் நடந்ததாக சொல்லப்பட்ட வாஹா பகுதிகளைச் சுற்றிக்காட்டியது பாகிஸ்தான்.

இரண்டாவது முறையாக சேர்ஜிகல் ஸ்ரைக் நடத்திய மோடியின் படத்தை இளைஞர்கள் சிங்கத்துடன் சேர்த்து பச்சை குத்திக்கொண்டாடினர்.

அந்தக்கொண்டாட்டத்தில் நிறைய விடயங்களை மறந்துபோயிருந்தனர் மக்கள். போன மாசம் தான் கர்நாடாவில் பத்து தமிழர்களை உயிரோடு கொழுத்திய‌ வீடியோ வெளியிட்டிருந்தார்கள்.அதைக்கூட மறந்துபோகுமளவுக்கு மக்களின் மகிழ்ச்சி இருந்தது.

………………………………………………………

“பிள‌டி இந்தியன்ஸ்…
நம்மையே சீண்டிப்பார்க்குதா?” உருது மொழியில் கத்தினான் அபூ.
அவன் கண்கள் சிவந்திருந்தன. பற்கள் கோபத்தில் கரகரவென்றன.

முகத்தைமூடும் தாடி,தலையில் தொப்பி போட்டிருந்தான்.ஹிந்திப்பட ஹீரோ மாதிரி உயரமாக இருந்தான்.

“பயந்தாங்கொள்ளி இந்தியா எவ்வளவு துணிச்சல் இருந்தா இப்படி ஒரு பொய்யைச் சொல்லும்?நம்மள அவ்வளவு கோழை என்று நினைக்குதா இந்தியா?
உண்மையான தாக்குதல் எப்படி இருக்கும் என்று நான் காட்டுறன்.”

ஆக்ரோஷமா புலம்பிக்கொன்டிருந்த அபூவைச் ஆசுவாசப்படுத்தினான் மிலான்.

மிலான் அபூவின் நம்பிக்கைக்குரிய இளைஞன். படித்தவன் ,உலகமறிந்தவன். அவன் சொல்லும் அறிவுரைகளைமட்டும்தான் அபூ கேட்பான்.

மிலான் காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்தவன். குடும்பத்தில் மூத்தவன்.அவனுக்குக்கீழே இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும்.

சின்னவயதிலிருந்தே படிப்பில் நல்ல கெட்டிக்காரன். அதனால்தான் மும்பையில் இருக்கும் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் அணுத் தொழில்நுட்பம் சம்பந்தமாகப் படிக்கும் வாய்ப்புக்கிடைத்தது. அம்மா அவன் சின்ன வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டதால் அப்பாதான் கஷ்டப்பட்டு இன்னொரு கல்யாணம் கூடக் கட்டாமல் பிள்ளைகள் எல்லோரையும் வள‌ர்த்துவந்தார். அவன் அப்பா ஒரு அப்பிள் தோட்டத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த பணம் குடும்பச் செலவுக்கே போதுமானதாக இருந்தது. மிலானுக்கு புலமைப்பரிசிலில் இலவசமாக படிக்க முடிந்தாலும்,அவனது சாப்பாடு,ஹொஸ்டல் காசுக்காக இரவில் மும்பையில் இருந்த ஒரு ஹொட்டலில் சாப்பாடு பரிமாறும் வேலை செய்தே படித்துவந்தான்.

ஒருநாள் விடுமுறைக்கு ஆசையாக ஊருக்குச் சென்றவனுக்கு அவன் வீட்டில் நான்கு பிணங்களைத்தான் காணக்கிடைத்தது. பத்திரிகைச் செய்திகளில் இராணுவம் சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் என்று மிலானின் அப்பா, தம்பியினுடைய போட்டோ வந்திருந்தது. கூட்டு வன்புனர்வுக்குப்பிறகு இறந்த தங்கைகளைக் கொன்ற‌து யார்?அவர்களைப்பற்றி எந்தப்பத்திரிகையும் செய்தி வெளியிடவுமில்லை.

அவர்களின் கடைசிக் கடமையை முடித்த அடுத்த கணமே எல்லையைத் தாண்டி அபுவோடு சேர்ந்துகொண்டான். மும்பையில் வசித்ததால் கூடப்படித்த நண்பர்கள் மூலம் ஹிந்தி பழக்கமாயிருந்தது. மும்பை பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த மிலான்தான் மும்பையில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பின்னால் மூளையாக இருந்தான்.

பிறந்தது இந்தியாவில் என்றாலும் இப்போது இந்தியாவையே வெறுக்கிறான் மிலான்.சொன்னால் நம்பமாட்டீர்கள் இன்னும் மிலானுக்கு இந்தியாவில் வாக்கு இருக்கிறது. கடந்த தேர்தலிலும் மிலானின் வாக்கைத் திருநீறு பட்டையுடன் ஒருத்தன் போய்ப்போட்டுவிட்டு வந்தான்.
அபூவுக்கு இருந்த அத்தனை கோபமும் மிலானுக்கும் இருந்தது ,ஆனால் அவன் கண்கள் சிவக்கவில்லை பற்கள் கர கரவெனவில்லை.

அமைதியாக இருந்தான் .

“அபூ இந்தமுறை இந்தியாவுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும் ,ஆனா நமக்கு எந்தப்பாதிப்பும் இல்லாமல் ,எந்த ஆயுதமும் இல்லாமல் காரியத்தை முடிக்கவேண்டும்.”

‘ஆயுதம் இல்லாமல்? “ஆச்சரியமாகப்பார்த்தான் அபூ.

தன் ஐபேடைத் திறந்தான் மிலான்.
“அபூ இது கூடங்குளம் அணுமின் நிலையம்.
முட்டாள் இந்தியர்களை ரஷ்யாவும் , இஸ்ரேலும் ஏமாற்றி விற்றுவிட்ட அணு உலைகள் இந்த இடத்தில்தான் இருக்கு.இங்கேதான் தாக்குதல் நடத்தப்போகின்றோம்.”

“எப்படி மிலான்?
அங்கேதான் பாதுகாப்பு பலமா இருக்குமே, நாமளும் எந்த உளவும் பார்க்கல” புரியாமல் பார்த்தான் அபூ.

“வேண்டாம் அபூ ,இந்தத் தாக்குதலுக்கு யாரும் போகத்தேவை இல்லை.

இங்கே அனுவை உடைத்து அதில் இருந்து வரும் சக்தியைப்பயன்படுத்தி நீரைக் கொதிக்க வைத்து ,அந்த ஆவியால் டைனமோவை சுழல‌ச் செய்தே மின்சாரம் செய்கிறார்கள். ஒரு அனு உடையும்போது வெளிவரும் ச‌க்தியின் ஒரு பகுதியே இப்படி நீரைக்கொதிக்கவைத்து மின்சாரம் செய்ய பயன்படும். மற்ற சக்தியெல்லாம் வீணாகும்.வீணாகும் சக்தியை சரியான முறையில் அகற்றாவிட்டால் அது வெப்பமாகி அனு உலை வெடித்து பெரிய அணுகுன்டு வெடித்ததுபோல அழிவு வரலாம். இங்கேதான் இந்தியர்கள் மாபெரும் முட்டாள்த்தனத்தைச் செய்திருக்கிறார்கள்.

“என்னது முட்டாள்த் தனம்?”ஆர்வமாகக்கேட்டான் அபூ,

வெப்பமாகி அணு உலை வெடிப்பதைத் தவிர்ப்பதற்கு குளிர் நீரை பயன்படுத்தி சூட்டைத் தணிக்கும் வழிமுறை இருக்கு.வெளிநாட்டில் இப்படியான அணு உலைகளை தேவையான அளவில் தண்ணீர் கிடைக்கும் இடங்களில்தான் வைப்பார்கள்,ஆனா இந்தியாவோ முட்டாள் தனமா இலகுவாக தண்ணீர் கிடைக்காத கூடங்குள‌த்தில் அனு உலையை வைத்து தண்ணீரை வேறு இடத்தில் இருந்துதான் எடுத்து குளிராக்கப்பயன்படுத்துகிறது.

நாம கூடங்குளத்துக்கு தண்ணீர் போவதை நிறுத்தினாலே போதும், அணு உலை வெடித்து எப்படியும் நூறு கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் அத்தனை ஊரும் தடம் இல்லாமல் அழிந்துபோகும்.”

இதைச் சொல்லும்போது மிலானின் கண்களில் தெரிந்த வெளிச்சம் அபூவையும் தொற்றிக்கொண்டது.

“தண்ணீர் போவது தடைப்பட்டவுடன் அவங்க அணு உலையின் செயற்பாட்டை நிறுத்திவிட்டால்….?’ சந்தேகமாககேட்டான் அபூ

“நான் அவங்க அணு உலையின் தொழிற்பாட்டு முறையை படித்துப்பார்த்தேன். இப்படியான சந்தர்ப்பத்தில் தானாகவே அணு உலை செயற்பாட்டை நிறுத்திவிடும் படிதான் ஆலையை வடிவமைத்திருக்கிறார்கள், ஆனா இவர்கள் அணுச்சக்திக்காக பயன்படுத்தும் யுரேனியத்தின் தன்மையை குறைவாக மதிப்பிட்டு இருக்காங்க. ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் இந்த யுரேனியத்தின் செயற்பாடு அணு உலை நிறுத்தியவுடன் நிற்காது. கொஞ்ச நேரத்தின் பின் தான் நிற்கும்.அதாவது வேகமா ஓடும் வாகனத்தை பிரேக் போட்டவுடன் உடனேயே நிற்காது ,கொஞ்சம் தூரம் போய்தானே நிற்கும். அதேமாதிரிதான் , அணு உலை தானாக நிறுத்திக்கொண்டாலும் யுரேனியத்தில் இருந்து வெளிப்படும் சக்தி நிறுத்திக்கொள்ள சற்று நேரமாகும்,அந்தக் கொஞ்ச நேரத்தில் உருவாகும் வெப்பமே அணு உலையை வெடிக்க வைக்கப்போதும். நான் எல்லா வழியிலும் கணக்கிட்டுப்பார்த்துவிட்டேன் ,நாம தன்ணீர் கிடைப்பதை நிறுத்தினால் கட்டாயம் வெடிக்கும்.”

“வெரி குட் மிலான் !”

அபூ சந்தோஷத்தில் மிலானைக் கட்டிப்பிடித்தான்.

“அப்படியென்றான் யாராவது ஒரு தற்கொலையாளியை அந்த தண்ணீரை நிற்பாட்டும் செயன்முறைகளைச் சொல்லிக்கொடுத்து அனுப்பி வை” பொறுப்பை மிலானிடம் நம்பிக்கொடுத்தான் அபூ.

“இல்ல அபூ அது சாத்தியமில்ல,நாம் ஒரு படையோடு போனால் கூட அதைச் செய்ய முடியாது. அவர்கள் தன்ணீர் எடுக்கும் வழிமுறை நிறைய பாதுகாப்புடன் இருக்கும்,அதை நாம் போய்த் தடுக்க ஏலாது.
ஆனா நான் ஒரு வழி வைத்திருக்கன்”

“என்ன வழி ?”ஆர்வம் தாங்காமல் சீக்கிரம் சொல்லு என்பது போல பார்த்தான் அபூ.

“கிருஷ்ணசாமி, தலைமைப் பொறியியளாள‌ர். யூனிவர்சிட்டியில் என் சீனியர்தான்.இப்போ கூடங்குளத்தில்தான் வேலை செய்கிறார். அனு உலையின் சிஸ்டத்தினுள் போகும் அனுமதி இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.அவர்தான் இந்த வேலையை நமக்காகச் செய்யப்போகிறார்.
ஆனா காசுதான் கொஞ்சம் அதிகமாகக்கேட்கிறார்.”

“பரவாயில்லை கேட்கிறத கொடுத்துவிடு….. இந்தியாவுக்குச் சரியான பதிலடி கொடுத்தேயாகனும்”

அடுத்த நாளே கிருஷ்ணசாமியின் பெயரில் சுவிஸ் வங்கி ஒன்றில் கணக்குத் திறக்கப்பட்டு , பத்து மில்லியன் டொலர் வைப்பிலிடப்பட்டது.

வழமைபோல வேலைக்குப்போன கிருஷ்ணசாமி பணம் டிப்போசிட் ஆன செய்தி வந்தவுடன் சிஸ்டத்தில் போய் தண்ணீர் வருவதை நிறுத்தினான்.

உடனேயே பீப் பீப் என அலாறம் அடித்து, அனு உலை நின்று போனது.

கொஞ்ச நேரத்திலேயே அனு உலையில் அபாய அலாரம் அடித்தது எங்கும் பரவிவிட்டது .
“யாரும் அச்சப்படத்வேவையில்லை . தண்ணீர் சப்ளை நின்றதால்தான் அலாறம் அடித்தது.ஆனாலும் இப்போ அணு உலையின் செயற்பாடு தானாக நின்றுவிட்டதால் எந்த ஆபத்தும் வராது . யாரும் அஞ்சத்தேவை இல்லை ” நேரடியாகவே தொலைக்காட்சியில் தோன்றிச் சொன்னார் பிரதான அணு விஞ்ஞானி.

மிலான் கணித்தபடி அணு உலை தொழிற்படுவது நின்றபின்னும் யுரேனியம் அணு வெடித்து சக்தி வெளியேறி உலையின் வெப்பம் அதிகரிதுக்கொண்டே வந்தது. அவன் கணிப்பின் படி எப்படியும் நான்கு மணிநேரத்தில் அனு உலை வெடிக்கவேண்டும்.

தண்ணீர் நிறுத்தப்பட்டு மூன்று மணி நேரத்திலேயே குடும்பத்துடன் லன்டன் போகும் விமானத்தில் ஏறினார் கிருஷ்ணசாமி.அவருக்கு நெருக்கமான சொந்தக்காரர்கள் எல்லாம் ஏற்கனவே வேறு ஒரு நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *