கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,287 
 

(1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அடுத்த வீட்டுச் சேவலுக்கு எப்போதுமே அவசரம். நேர காலத்தோடு கூவி விட்டது. அதன் கூவலைக் கேட்டு வேதநாயக வாத்தியார் துயில் நீங்கி விட்டார். இனிமேற் படுக்கையிற் கிடக்கவும் முடியாது… படுக்கையிலிருந்து எழுந்து சுவிச்சைத் தட்டி ஒளியேற்றினார். நேற்று வாசிக சாலையிலிருந்து கொண்டுவந்த சரத்சந்திரரின் ‘கமலா வின் கணவன்’ என்ற நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார். விட்ட இடத்தை மறந்து விடா மல் இருக்க புத்தகத்தின் பக்கத்தை மடித்து வைக்கும் பழக்கம் ஆசிரியரிடம் கிடையவே கிடையாது. அக்பர் சக்கரவர்த்திக்குத் தன் படையின் ஒவ்வொரு குதிரையும் எந்த இடத்திற் கட்டப்பட்டிருக்கிறது என்பது துல்லிய மாகத் தெரியுமாம். வேதநாயக வாத்தியாருக்கும் புத்தகத்தை எந்த இடத்தில் விட்டேன் என்பது பக்கத்தை மடித்து வைக்காவிட்டாலும் துல்லியமாகத் தெரியுமம். புத்தகத்தைப் பிரித்து ஒற்றைகளைத் தட்டியவர் தான் விட்டிருந்த எழுபத்தெட்டாம் பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினார்.

இலக்கியத்திற் பழையதும் விஞ்ஞானத்திற் புதியதும் என்று வாக்கியம் சொல்வார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் கமலா என்ற பாத்திரம் அற்புதமாக வார்க்கப்பட்டிருந்தது ஆசிரியர் அப்பாத்திரத்தில் லயித்து வாசித்துக் கொண்டிருந்தார்.

வெளியே பறவைகளின் காலைக் கீதம். பட்டினத்திற் பறவைகள்கூட அர்த்தாபத்திதான். தான் ஒரு காலத்தில் ஆசிரிய சேவை செய்த மல்லிகைத்தீவுக் கிராமத்தின் காலைப் பொழுதுகளை நினைத்துக் கொண்டார். வயல் வெளியின் நட்ட நடுவிலே எட்டே எட்டு ஏக்கரில் இருந்த அக்கிராமத்தின் தென்னை மரங்களிலும் இலுப்பை மரங் களிலும் எத்தனை விதமான பறவைகள்! அதிகாலையில் அவைகள் எல்லாமே விழித்துக் கொண்டு இசைக்கும் அற்புதமான – கீதங்கள்! இப்படியான கிராமத்தின் காலைப் பொழுதுகளை இரசித்துத்தான் பாரதியார் * மண்ணுலகத்து நல்லோசைகள் காறறென்னும் வானவன் கொண்டுவந்தான்’ என்று பாடியிருக்க வேண்டும். இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கையில் தூரத்தேயிருந்த சோனக வாடிப் பள்ளி வாசலிலிருந்து ‘பாங்கொல’ சேட்டது. அதிகாலை வேளையிற கேட்கும் அந்த ஒலியும் வேதநாயக வாத்தியாரின் மனதைக் கவர்ந்தது தான். அதிகாலை வேளையில் ‘அல்லாஹு அக்பர்’ இறைவன் மேலானவன் என்று முழக்கிச் சொல்வது எத்தனை நயமானது. நம்பிக்கையானது.

அந்த ‘பாங்கொலி’யைத் தொடர்ந்து பெரிய மாதா கோயிலின் திருந்தாதி மணியின் சுநாதம் காற்றில் மிதந்து வந்தது. தொடர்ந்து ஒலி பெருக்கியிற் பிரார்த்தனை ‘ அருள் நிறைந்த மரியே வாழ்க’. ஆசிரியர் புத்தகத்தை மூடிவிட்டு ஒலிபெருக்கியோடு சேர்ந்து செபித்தார். செபம் முடிந்தபின் எழுந்து வெளியே வந்தார்.

உள் நாட்டுப் போரின் காரணமாகக் கிராமத்தைத் துறந்து பட்டினத்திற்கு குடியேறிய பின்னர், அதிகாலை யிலே குழாயடிக்குச் சென்று குடிதண்ணீர் கொண்டு வருவது ஆசிரியரின் நித்திய கடமைகளில் ஒன்றாகி யிருந்தது. ஆசிரியர் பிளாஸ்ரிக் ‘கானை’ எடுத்துக் கொண்டு, துவிச்சக்கரவண்டியைத் தள்ளிக் கொண்டு தெருவிலிறங்கினார்.

தெருவிலே இன்னமும் சன நடமாட்டம் நன்கு தொடங்கவில்லை. ஆனால் வால வயதினரான ஆண் களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் துவிச் சக்கரவண்டிகளிலும் நடந்தும் அணி அணியாகவும் கூட்டங் கூட்டமாகவும் போய்க் கொண்டிருந்தனர். அதிகாலையின் இதமான குளுமையும் மெதுவாக அசையும் புரட்டாசிக் கச்சான் காற்றின் மெல்லிய வருடலும் அவர் உடலுக்கு உவப்பானதாக இருந்தாலும் ரியூசனுக்குச் செல்லும் அக்கூட்டம் அவர் மனதை உறுத்தத் தொடங் கியது.

அவர் பேரக் குழந்தைகள் இருவர் மூன்றாம் ஆண்டி லும், முதலாம் ஆண்டிலும் படிக்கின்றனர். அவர்களுக்கு அவர் தான் ரியூட்டர். ஆனால் அவர் மகள் சொல்வாள். “அப்பு உங்கட செல்லத்தில இதுகள் உங்களிட்ட படிக் காதுகள். இதுகளை ரியூசனுக்கு அனுப்ப வேணும்”

வேதநாயகத்தார் தன் மகளை மூர்க்கமாக எதிர்த் தார். “இவர்கள் பாடசாலையிற் படிப்பதே போது மானது. காலையிலும், மாலையிலும் ‘ரியூசன்’ என்று அவர்களைத் தொந்தரவு பண்ணினால் அவர்கள் பிஞ்சு மனதிற் படிப்பிலேயே ஒரு வெறுப்பு ஏற்படும்” என்பது அவர் வாதம். தன் பேரக் குழந்தைகளை ரியூசனுக்கனுப்ப அவர் விடவேயில்லை

அவர் மனம் இறந்த காலத்திற் சஞ்சரிக்கத் தொடங் கியது. வெண்மணல் பரந்த தாமரைவில் கிராமம். சாயந்திர வேளைகளில் ஆசிரியராக இருந்த அவரது தந்தையார் முருங்கை மர நிழலில் அமர்ந்து கொண்டு வெண்மணலில் ஆனா ஆவன்னா எழுதுவித்ததை நினைவு கூர்ந்தார். பாட்டும் கதையுமாகச் சொல்லிக் கொண்டே மூன்றாம் ஆண்டில் சூடாமணி நிகண்டின் ககரவெதுகை தொடக்கம் னகரவெதுகை வரை மனனம் பண்ணிவித்து விட்டார்.

நான் என்ன ரியூசனுக்கா போனேன்? ரியூசன் என்றால் என்ன?

மல்லிகைத்தீவு கிராமத்திலே மூன்றாம் வகுப்பிற்கும் நான்காம் வகுப்பிற்கும் நானே ஆசிரியர். இரண்டு வகுப்புக்களிலும் சேர்ந்து ஐம்பதுக்கு மேற்பட்ட மாண வர்கள். எல்லோரையும் வகுப்பிலே தனித்தனியாகக்கவனிப்பது சிரமமானதாக இருந்தது. இதனாற் சிலமாணவர்கள் வகுப்பிலே பின் தங்கிவிட்டார்கள். அப்படி, யாகப் பின் தங்கிய மாணவர்களை மட்டும் சாயந்தர வேளைகளில் வரச்சொல்லிப் படிப்பித்தேன். அதற்காகக் காசா, பணமா… சை….

அது வித்தியாதானம். கிராமத்து மக்கள் அளித்த மரி யாதை தான் அதன் விலை! எல்லா ஆசிரியர்களும் அந்தக் காலத்தில் இதைத்தான் செய்தார்கள்! பின்தங்கிய மாண வர்களுக்கு பின்னேரே வகுப்பு. பாடத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி மேலதிக வகுப்பு. பரீட்சை நெருங்கினால் விசேட வகுப்பு.

அந்த வகுப்புக்களை நடத்திய ஒவ்வொரு ஆசிரியருக் கும் ‘கூழுடையார் கூழளிபர், கோமக்கள் வாழ்வளிப் பர், ஆழி மணி முடிவேந்தர் அகன் நிலத்தை எமக்களிப் பர்’ என லட்சுமிதேவியையே புறக்கணித்த விபுலானந்த ரின் பெருமிதம் இருந்தது.

ஆனால் இன்று…? | பல்வேறு சமூக சேவை நிறுவனங்களின் உதவியாற் பட்டி தொட்டியெங்கும் பாலர் பாடசாலைகள், க.பொ.த. சாதாரண வகுப்பில் இரண்டு மூன்று பாடங் கள் சித்தியடைந்ததையே தகுதியாகக் கொண்டு நான்கு வயதுப் பாலர்களுக்கு தங்களுக்கே சரிவரத் தெரியாத ஆங்கிலம் படிப்பித்துப் பணம் பண்ணும் ஆசிரியர்கள்! மொண்டிசோரி அம்மையார் உயிருடனிருந்தால் இந்த அநியாயத்தைக் காணச் சகியாமற் தற்கொலையே செய்து கொண்டிருப்பார்!

இந்த அபத்தம் பாலர் பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகம் வரை தொடர்கிறது. பின் தங்கிய மாணவர்களுக்கே பிரத்தியேக வகுப்பு என்ற நிலை மாறிச் சகல மாணவர்களுக்குமே ரியூசன்! அது இப்போது ஒரு ‘பேஷன்’ அது நாகரிகமாகிவிட்டது. தமது பிள்ளை கள் ரியூசனுக்குப் போகாவிட்டால் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்களாகி விடுவோம் என ஒவ்வோர் பெற்றோ ரும் எண்ணும் அளவிற்கு இந்த ரியூசன் சமூகத்திற் புரை யோடி விட்டது. –

துவிச்சக்கரவண்டியில் ஏறுவதையே மறந்தவராக வேதநாயக வாத்தியார் தன் சிந்தனைகளிற் தன்னைப் புதைத்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியை உருட்டிய படியே நடந்தார். எதிரே தெரு முழுவதையும் நிறைத்துக் கொண்டு நான்கு பெண்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி சொன்னாள்: – ஆறு மணிக்குதான் சயன்ஸ் பாடம் முடியும். பிறகு வேலுப்பிள்ளை மாஸ்ர ரிட்ட ‘மாத்ஸ்’ பாடத்துக்குப் போக வேணும்.’ இன்னொருத்தி – சொன்னாள்: எனக்குக் கெமிஸ்ரி, பிசிக்ஸ் இரண்டும் – முடிய ஏழேகாலாய் போயிரும் பின்னேரத்தில் பொட்டணி’யும் ‘சூ’வும்… அக்கூட்டம் பேசிக் கொண்டே ஆசிரியரைத் தாண்டிச் சென்று விட்ட து.

‘இந்த ரியூசன்களை எல்லாம் முடித்துவிட்டு வந்து தான் காலைச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுப் பாடசாலைக் குச் செல்ல வேண்டும். பாடசாலை விட்டு வத்தால் அதன் பிறகு மாலையிலும் ரியூசன். இந்தப் பிள்ளைகள் நாளாத் தம் குளிக்கவாவது நேரம் கிடைக்குமோ என்னவோ’, என்று எண்ணினார் வேதநாயகம்.

இந்த ரியூசன்களால் பாடசாலையிற் படிப்பிற்கும் நல்லாசிரியர்கள் கூட “இவர்கள் எல்லாரும் ரியூசன் கிளாசிற் படிக்கிறவர்கள் தானே’ என்ற எண்ணத்தில் வகுப்பில் அசமந்தமாகவே இருந்து விடுகிறார்கள்! ..

அதிகாலையிலும் மாவையிலும் நீண்ட நேரம் ரியூசன் வகுப்பு நடத்தும் – ஆசிரியர்கள் பா.சாலை நேரத்தை ஓய்வு நேரமாக்கிக் கொள்கிறார்கள்! இதன் காரணமாகப் பாடசாலையில் ஆசிரியர்கள் படிப்பிப்பதேயில்லை. ரியூசனுக்கு அனுப்பாவிட்டாற் பிள்ளைகள் உருப்படவே மாட்டார்கள் என்ற எண்ணம் பெற்றோருக்கு ஏற்பட்டு ஆசிரியர்கள் மதிப்பிழந்தவர்களாகிறார்கள்.

சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த வேதநாயக வாத்தியார் குழாயடியை அண்மித்தபோது அங்கே தண்ணீர் பிடிப்பதற்காகப் பார் கியூ வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். ஆசிரியரும் தன் வண்டியை விளக்குக் கம்பத்திற் சாத்தி வைத்துவிட்டுக் கேனுடன் கியூவில் நின்றார். அவர் கண்கள் எதிரே இருந்த சுவரில் பதிந்தன.

சுவரிலே பல வர்ணங்களிலான பட விளம்பரங்கள், ரஜனிகாந்தும் கார்த்திக்கும், ராதிகாவும், நிரோஷாவும் வர்ணப் படங்களில் கண்ணைப் பறித்தார்கள். தியேட் டரில் ஓடும் இந்தப் பட விளம்பரங்களிடையோ டெக் ரீவி’யில் ஓடும் பட விளம்பரங்கள் கோழிச் சாயக் கோல எழுத்துக்களில் சில எழுத்துப் பிழைகளுடன் பல்லளித் தன. இவைகட்குச் சரிநிகர் சமானமாக 9ஆம் ஆண்டிற் கான ஏ.எல். வகுப்புக்களுக்கான ரியூசன் விளம்பரம். சங்கர்-கணிதம், ஜெயம்-பிஸிக்ஸ், டேமியன்-ஹெமிஸ்றீ… சாஸ்திரி-பயோ, சாள்ஸ்-பொட்டணி.

கொட்டை. எழுத்துக்களில் கோழிச் சாயத்தில் மிளிர்ந்தன. ஆசிரியரின் பெயர்கள். படக் கதா நாயகர் களுக்குத்தான் நாட்டிலே மவுசு’ என்று யார் சொன்னது? ஆசிரியர்களுக்குக்கூட அவர்களுக்கொத்த விளம்பரம் வந்து விட்டதே. இனி வரும் காலத்தில் ஆசிரியர்களின் பென்னம் பெரிய ‘கட் அவுட்’கள் சந்திக்குச் சந்தி காட்சி அளிக்கும் என்று நினைத்துக்கொண்ட வேதநாயக வாத்தியார் தனக்குத் தானே சிரித்துக் கொண்டார்.

இந்த விளம்பரங்களுக்கெல்லாம் மூலமான காரணி கள் என்ன? ‘சேவித்தும் சென்றிரந்தும்…’ என்று தொடங்கும் பழைய வெண்பா ஞாபகம் வந்தது வேத நாய்கத்தாருக்கு.

ஆனால் இப்போது நாழியரிசிச்காக மட்டுமல்ல, நாகரிக வாழ்க்கையின் காரணமாகத் தேவைகள் அதிகரித்து விட்டன. அவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் வேண்டும். ஆம். எல்லா வினம்பரங்களுக்கும் காரணம் ‘பணம். பணமேதான்!

வேதநாயக வாத்தியார் அந்தக் கால ஆசிரியர்களின் வேதனத்தை நினைத்துப் பார்த்தார். . ஊருக்கு இளைத் தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பதே பழ மொழி. ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே அரசாங்க உத்தி யோகஸ்தர்களில் சம்பளத்தில் இளைத்தவன் ஆசிரியன்! ஆனாலும் அவனுக்குச் சமூகத்தில் ஒரு அந்தஸ்து இருந் தது. அதன் காரணமாக வேறு உத்தியோகத்திற்கு போகக்கூடிய வசதிகள் இருந்தும், ஆசிரியப் பணியையே ஆத்ம திருப்திக்காக ஏற்றவர்கள் பலர். சம்பளக் குறைவு அவர்களின் பலவீனமே. அதுவே அவர்களின் பலமாகவும் இருந்தது.

வேதநாயக வாத்தியாருக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது 43ஆம் ஆண்டு EAக்களட்டக்கல்லமாக தொட்டு வடக்கே தென்னமரவடி வரை நீண்டு விசாலித்த தேர்தல் தொகுதியில் இடைத் தேர்தல். பணபலம் மிக்க வன்னிமைகளும், நியாயதுரந்தரர்களும் தேர் தல் களத்தில் இறங்கினார்கள். அவர்களோடு பணபலமற்ற ஆசிரியர் ஒருவரும் தேர்தலில் குதித்தார்.

தேர்தல் களத்திலே பணம் தண்ணீராய் ஓடிற்று. மது ஆறாகப் பெருகிற்று. ஆனால் ஆசிரியர் இவைகள் எதையுமே இறைக்க வக்கற்றவராக இருந்தார். ஆனாலும் எந்தக் குக்கிராமத்திலும் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பின்னால் மக்கள் திரண்டு ஆசிரியரை வெற்றித் தம்பத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதே கதைதானே ஐம்பத்தாறாம் ஆண்டிலும் இந்நாட்டில் நடந்தது. பணபலமும் பிரசாரபலமும் மிக்க கட்சியை ஏழை ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து தோற்கடித் தனர்.

ஆனால் ஆசிரியன் இன்று ஏழை அல்ல. ஏனைய அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குச் சரியாக-ரன் அதற் கும் கூடுதலாக அவனுக்கு வேதனம் கிடைக்கிறது. ஆயினும் அவனுக்குத் திருப்தியில்லை. செல்வம் என்பது சிந்தனையின் நிறைவு என்பதை மறந்தவர்களாய் பணம் பண்ணுவதையே ஒரே சிந்தனையாகக் கொண்டு எழுத் தறிவித்த இறைவன் என்ற அந்தஸ்திலிருந்து இறங்கி…

குழாயிற் தண்ணீர் பிடிக்க வேண்டிய முறை வந்து விட்டது வேததாயகத்தாருக்கு. கானைக் குழாடியில் வைத்தார்.

ஆசிரியர்கள் தான் இப்படி என்றால் பகிரங்கப் பரீட்சைகளிற் சித்தியடைந்து வாழும் வழியைத் தேடிக் கொள்வதொன்று மட்டுமே பிள்ளைகளதும் பெற்றோர தும் ஒரே நோக்கமாகி விட்டது. குறுக்கு வழியில் பரீட்சைகளிற் சித்தி அடைய ரியூசன்தான் ஒரே வழி என்றாகி விட்டது. இந்தக் குறுக்கு வழியினால் ஆசிரியத் தொழிலின் புனிதத்துவமும் கல்வியின் நோக்கமும் பிறழ்ந்து விட்டதா?

தண்ணீர்ப் பாத்திரம் நிறைந்து விட்டது. அதைத் தூக்கிக் காரியரில் வைத்து வீட்டை நோக்கிச் செல் கையில், வேதநாயகத்தாரின் எண்ணங்கள் மேலும் தொடர்கின்றன.

அன்று முறையாகக் கற்றவர்கள் தான் வெளிநாடு சென்றனர். அல்லது கற்பதற்காகப் பிறநாடு சென்றனர். அப்படிச் சென்றவர்களிடையே தான் இந்தியாவில் ஒரு கனக சுந்தரம் பிள்ளையும், இங்கிலாந்தில் அழகு சுப்பிர மணியமும், அமெரிக்காவில் ஒரு தம்பிமுத்துவும் தோன்றி நம் நாட்டிற்குப் புகழ் சேர்த்தார்கள். ஆனால் இன்று…?

எதிரே வந்து கொண்டிருக்கும் ரியூசன் இளைஞர்கள் அவரைக் கடந்து சென்றனர். இந்த இளைஞர்கள் சந்தர்ப் பம் கிடைத்தால் தங்கள் கல்வியை முடிக்காமற்கூட வெளு நாடு சென்று விடுவார்கள் என்று நினைத்தார் வேதநாயகம். எத்தனையோ ரியூசன் கல்வி நிலையங்கள் இந் நாட்டிலிருந்தாலும் ஒரு கல்வியறிவற்ற கூட்டம் வெளி நாடுகளுக்குச் சென்று நாட்டின் கௌரவத்தை பாழடிக் கின்றது. இதன் காரணந்தான் என்ன? ஆசிரியர்கள் தம் புனிதத் தன்மையைக் கைவிட்டமையா? அரசன் எவ் வழியோ குடிகளும் அவ்வழிவா?

தமிழ்நாட்டில் தயாராகும் புதுப் படங்களைப் பார்த்தால் கதை மாந்தரின் உடைகளும் செயல்களும் இக்கதை தமிழ்நாட்டில் தான் நடைபெறுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்தக் காலத்து ஆசிரியர்களும்…. ஐயோ! ஆசிரியத் தொழிலும் மற்றத் தொழில்களைப் போல ஒரு தொழில் தான், இதிலே புனிதமும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. ஆசிரியருக்கென்று ‘டிரேட்மாக்’காக ஒரு: வெள்ளுடையும் அவசியமில்லை’ என்கிறான் பட்டதாரி ஆசிரியரான ஓர் இளைஞன்.

வேதநாயகத்தார் வெள்ளைக் கலையுடுத்த அந்தக் கால ஆசிரியர்களை நினைத்துக் கொள்கிறார். அவருக்கு எல்லாமே குழப்பமாக இருக்கிறது. அந்தக் குழப்பத்தில் அவரது துவிச்சக்கர வண்டி அலமந்து செல்கிறது.

– வீரகேசரி 1994

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *