குடிமகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 2,433 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தம்பலகாமம் இரண்டு விஷயங்களுக்குப் பெயர் பெற் றிருந்தது. முதலாவதாகக் கல்வெட்டுடைய தென் கைலைநாதனான பிறவாத பெம்மான் கோயில் கொண்டது அங்கு இரண்டாவதாகக் குளக்கோட்டன் கட்டிய கந்தளாய்க் குளத்து நீர் பாய்வதும் அந்தப் பகுதியிற்தான். இந்தப் பெருமைகளைக் கொண்ட தம்பலகாமம் இவ்விரண்டு பெருமைகளிலும் மெய்மறந்து போய் வெகு காலம் தூங்கிற்று. குளக்கோட்டன் மூட்டுத் திருப்பணியைப் பறங்கிபிடித்து, அதன்பின் அது பூனைக் கண்ணன், புலிக்கண்ணன் கைக்கு மாறிய விஷயங்கள் கூடத் தெரியாது. அத்தனை நெடுந் தூக்கம். ஊருக்கு மேற்கே – முக்கால் மைல் தூரத்தில் ஓடும் வெள்ளைக்கார வண்டியின் ஓவென்ற இரைச்சலும் தம்பலக தூக்கத்தைக் கலைக்கவில்லை.

இந்த ஆழ்ந்த தூக்கத்திடையே மட்டக்களப்ந்து கண்ணப்பர் அங்கு வந்தது ஓர் விசேட சம்ட என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் கண் பனார் மட்டக்களப்பிலிருந்து புறப்படுகையில், அவ தம்பலகாமத்திற்குப் போகப் போகிறேன் என்று கனவு கூடக் கண்டவரல்ல! அவர் திருகோணமலைக்கு வர வேண்டுமென்று தான் புறப்பட்டார்.

கண்ணப்பர் மட்டக்களப்பிலிருந்து புறப்படுகையில் தான் கோணேசப் பெருமானை முகமாகத் தரிசித்து முத் தியடையப் போகிறேன் என்ற ஆத்மார்த்த நம்பிக்கை யும். அவருக்கிருக்கவில்லை. யுத்த கேந்திர ஸ்தான திரு கோணமலைக்குப்போய் அங்கே வெள்ளைக்காரனுக்குத் “தொண்டு’ செய்வதன் மூலம் வளர்ந்து வரும் பாசிசப் பேயை விரட்டியடிக்க உதவப் போகிறோம் என்ற லௌகீக லட்சியமும் அவருக்கிருக்கவில்லை. அவருக்கிருந்த ஒரே ஆசை அல்லது லட்சியமெல்லாம், தன்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு கும்பிகளின் கொதிப்பை அடக்கவேண்டும் என்பது தான். இதற்காகத் தான் அவர் தன் தாவர சங்கமச் சொத்துக்களான கத் தியையும் தோலையும் இரண்டு பழந்துண்டுகளையும் எடு த்து அவற்றைச் சாயம் பூசப்பெற்ற மட்டக்களப்புப் பன் உமலிரண்டினுள் அடக்கி அவ்வுமல்களைப் பிணைத் துத் தோளிற் போட்டுக்கொண்டு கூட்டத்தோடு கூட்ட மாகக் கிளம்பினார். ஆனால் பாவம்! மட்டக்களப்புப் புகைரத ஸ்தானத்திலே வேட்டித் தலைப்பிற் சாவதான மாக முடிந்து வைத்திருந்த பணத்தை அவிழ்த்துக்கொடு த்துத் திருகோணமலைக்குப்போக வரம் கேட்டபோது தா அந்த “ஆட்டிப்படைக்கும் பொன்னப்பன்” அவரு பலகாமத்திற்கு மட்டும் ‘ரிக்கற்’ என்ற வரத் காடுத்தான்!

விடியற்காலையில் தம்பலகாமத்தில் வந்து இறங்கினார் கண்ணப்பர். பிரயாணச்சோர்வும், பசிக்களையும் மேலிட் ள்ளாடிக் கொண்டிறங்கிய அவருக்கு ஸ்டேசனு எதிரில் ஊர் இல்லாமல் இருப்பது பெருத்த ஏமாற்றதக் கொடுத்தது. அங்கு இரண்டு நிமிடம் தாமதித்த வண்டியும் ‘குப்’ பென்று ஒரு முறை ஊதிவிட்டு நிர்வி சாரத்தோடு போய்விட்டது. கண்ணைக் கட்டிக்காட்டில் விடப்பட்ட குழந்தையைப் போலப் பரிதவித்த கண் ணப்பர் ஸ்டேசனுக்கு எதிராக மாட்டு வண்டிற் போக் குவரத்தினால் தடம்விழுந்து போய்க் கிடந்த காட்டுப் பாதையினூடாகச் சித்தம் போக்கு சிவம் போக்காக நடந்தார். வழி இருமருங்கிலும் பாலை மரங்கள் உயர்ந்து நின்றன. அந்நீண்ட மரங்களின் கீழே சடைத்துப் படர்ந்திருந்த பற்றைகளைக் கடித்துக் கொண்டிருந்த வெள்ளாடுகளைக் கண்டபோதுதான் அவருக்கு அருகிலே ஊர் இருக்கிறதென்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலே நடந்தார்.

ஒரு மைல் தூரம் போயிருப்பார். கண்ணப்பரின் கண்ணெதிரில் தென்னை மரங்கள் தென்பட்டன. முதுகுப் புறமாகக் காடு கழிய, மருத நிலம் காலுக்குக்கீழ் மிதிபட்டது. ஆர்வத்தோடு அங்குமிங்கும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தொலைவுக்குப் பரந்து கிடக்கும் வயல் வெளியினூடே, அங்குமிங்கும் திட்டுத் திட்டாக மக்கள் குடியிருக்கும் திட்டிகள் தோன்றின. எந்தத் திட்டை நோக்கி நடப்போம் என்ற யோசனையோடு கண்ணப்பர் நடந்து கொண்டிருந்தார்.

“யாரது? மட்டக்களப்புப்போல இருக்கே” என்ற குரல் கேட்டபோது தான் திரும்பிப்பார்த்தார். எதிரே வாய்க்காலருகிலே முளைத்திருந்த வல்லாரல் கீரையைப் பிடுங்கிக்கொண்டிருந்தார் ஒருவர்.

“ஆமாம் பாருங்க; மட்டக்களப்புத்தான்” அடக்க ஒடுக்கமாகப் பதில் கொடுத்தார் கண்ணப்பர்.

“இங்கே யாரைப் பார்க்கப் போறீங்க?”

“ஒருத்தரையும் பார்த்துக் கொண்டல்ல.தொழிலுக்காகத்தான்…”

“அப்போ மந்திரம், வைத்தியம் எல்லாம் உங்கட்குத் தெரியவேணும்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஐயா. நான் எளியசாதி. அம்பட்டன்…” என்றிழுத்தார் கண்ணப்பர். தோளிற்கிடந்த துண்டு தானாகவே நழுவி முழங்கைக்கு வந்துவிட்டிருந்தது.

“அப்படியா; வா, வா எங்க பூச்சிநாகன் திடலிலேயே நீ பிழைக்கலாம். வா என்னோடு” என்று கொண்டே அந்த மனிதர் தான் பிடுங்கியிருந்த கீரையை அவசரமாக மடியிற் கட்டிக்கொண்டு முன்னே நடந்தார். தனக்குக் கிடைத்த எதிர்பாராத வரவேற்பைக் கண்டு ஆச்சரியப்பட்டவராகப் பின்னே நடந்தார் கண்ணப்பர்.

இப்போதெல்லாம் கண்ணப்பர் வேளாளர் வதியும் பூச்சிநாகன் திடல் என்ற திவ்வியப் பிரதேசத்தில் எல்லோர்க்கும் – அதாவது வேளாளர் எல்லோர்க்கும் வேண்டிய ஒரு மனிதர். சீனத்துச் சிங்காரிகளின் படத்தைத் தொங்க விட்டுக்கொண்டிருக்கும் பெரிய “சலூன்” இல்லாவிட்டால் அதனால் என்ன குறைந்துவிட்டது? அவருக்கென்று குடியிருக்க ஓர் கூரைவீடு இருக்கிறது. “தொழில் செய்யவும்” ஒரு கொட்டில் இருக்கிறது. கொட்டிலுக்குள்ளே விரிக்கப்பட்டிருந்த ஓலைப்பாயில் கட்டி இருக்கிறவர் இருந்தால் கண்ணப்பர் ழிலை ஒரு பாக்கு வெட்டுற’ நேரத்தில் முடித் ர். இத்தனைக்கும் அவரிடம் தொழிலுக்கு வேண் கரணங்களும் அதிகமாக இல்லை. அவைகளை – வண்டுமே என்ற கவலையும் ஏறக்குறையக் கண் ருக்கு இல்லை. ஏன்? வாழ்க்கையிலேயே அவருக்கு கவலையும் இல்லாமற்தானிருந்தது. பூச்சிநாகன் திடல் பளாளரிடையே குடிமகன் என்ற விருது அவருக்கு.

ஊரிலே நல்லதும் பொல்லாதது மான காரியங்கள் அவர் போகாவிட்டால் நடவா. இருபோகமும் அருவி வெட் டும் காலங்களில் களத்திற்குக் களம் குடிமகனுக்கென்று ஒரு கட்டு இருக்கும். இதனாற் கோடைப் போகத்தின் போது கண்ணப்பரும் ஒரு ‘போடியார்’ அளவு நெல் சேர்த்துவிடுவார். வருடத்திற்கு இருமுறை வரும் கல் யாண சீசன்களிலும், திருவிழாக்காலத்திலும், அசுப தினங்களிலும் அவர் தன்னை மறந்த நிலையிற் குடித்துக் களிக்கவும் வசதியிருந்தது! வேறென்ன வேண்டும் அவருக்கு?

ஊர் வேளாளரும் கண்ணப்பர் வரவினால் ஒரு வரி சை உயர்ந்தேவிட்டனர். ‘இந்தக் கரையாரப்பயல்க ட்கு அம்பட்டன் கிடையாதே’ என்று அவர்கள் பெரு மைபட்டுக்கொள்ளாத நாளே கிடையாது. ‘கரையார ப்பயல்கட்கு’ இல்லாத குடிமகன் என்ற காரணத்தி னால் மற்றக் குடிமகன்களைவிடக் கண்ணப்பருக்கு அவர்கள் ஒரு தனி மரியாதையையும் கொடுத்தனர். இந்த மதிப்பினால் நிலாக்காலங்களிலே கண்ணப்பர் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையைச் சத்தத்தோடு வாசிப்பதையும், மட்டக்களப்புக் கிராமியக் கவிகளை இசையோடு பாடுவதையும் ஊரவர் தேவார திருவாச கங்களைக் கேட்பது போல ஆநந்தத்தோடு கேட்டனர். வெள்ளாள சமூகத்தின் ஆநந்தமும் பெருமையும் – முருகுத்திடல் என்ற திட்டியிலிருந்த கரையாத்தை ஒரு உலுக்கு உலுக்கிற்று!

‘வெள்ளாளன் என்ன தான் உயர்ந்த சாதி எ னைச் சொல்லிக்கொண்டாலும் அவனுகட்குப் ட வரிசைதானே. ஏன் கோயிலிலுங்கூட நமக்குத் முதலிடமும் அதிகாரமும். வெள்ளாளப் பயல்கள் எவேலை செய்யவேண்டியவர்கள் என்று தானே கல்வெட் டும் சொல்கிறது. இப்போ அவர்கள் ஒரு அம்பட்டனைக் கொண்டு வந்து சேர்த்திட்டு நம்மோட போட்டி போட் டுப் பதினெட்டு வரிசைக்காரனாகப் பாக்கிறாங்களே’ என்று முருகுத்திடலிலிருந்த பெரிய மனிதர்கள் குறைப் பட்டுக்கொண்டனர்.

உடனேயே மட்டக்களப்புக்கு ஆளனுப்பி ஒரு புதுக் குடிமகன் கொண்டு வர வேண்டும் என்று ஏற்பாடாயி சற்று அவர்களிடையே. கண்ணப்பரின் ஊர்ப் பெயர் தெரிந்திருந்ததால் அந்த ஊருக்கே போய்ச் சேர்ந்தார்கள்.

ஐந்து நாட்களிற் கரை யார சமூகத்திற்கென்று ஒரு புதுக் குடிமகன் வந்துவிட்டான். ஆனால் முருகையா- அது தான் அவன் பெயர்- கண்ணப்பரைப் போலத் தன்ன ந்தனியனாகப் போக்கிடமின்றி இங்கு வரவில்லை. மட்ட க்களப்பிலிருந்து தம்பலகாமம்வரையும் மெய்க்காப்பாள ரோடு வந்த முருகையா, ஸ்டேசனிலிருந்து ஊர் வரையும் ராஜோபசாரத்தோடு ஊர்வலமாக அழைத்துச் செல்ல ப்பட்டார். அவரைக் கொண்டுவந்து சேர்த்ததில், கங் கையைப் பூமிக்குக் கொண்டு வந்தபோது, பகீரதனுக்கு ஏற்பட்ட பெருமை, கரையார சமூகத்துக்கு ஏற்பட்டது.

கெயாவின் வரவு வெள்ளாளருக்கு மட்டும் ஒரு மனமடிவைக் கொடுத்தது. ஆனால் அவர்கள் கண்ணப்பருக்கு மட்டும் சந்தோஷம். ஏனெ உருகையா அவரின் உடன் பிறந்த தம்பி!

கட்கேற்பட்ட ‘மானக்கேட்டைப்’ போக்கிக் வதற்காகக் கண்ணப்பர்மூலமாக முருகையாவை – க்குத் திருப்பியனுப்பிவிட முயன்றார்கள் கண்ணப்பரின் ‘நயினார்கள்’! அம்முயற்சி பலிக்காமற்போகவே அவர்கள் தங்கள் ஆத்திரத்தை எல்லாம் கண்ணப்பர் மேற்திருப்பி ‘கரையாரப் பயலுக்குச் சிரைக்க வந்த வனோட நீ இனி ஒரு தொடர்பும் வெச்சிக்கக் கூடாது. அவன் வீட்டில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக் கூடாது. அவன் வீட்டுப் பக்கம் காலடி எடுத்துவச்சா உடம்பை மொளிமொளியாப் பேத்துவிடுவோம்” என்று தங்கள் வீரத்தைக் காட்டினார்கள்.

கண்ணப்பர் திகைத்தார்! பாவம். அத்தனைப் பிசா சுகளின் முன் அவர் என்ன செய்வார்? தன் சதையின் சதையான ரத்தத்தின் ரத்தமான முருகையாவோடு எந்தத் தொடர்புமே இல்லாதவாறு மூன்று மாதங்கள் அவருக்குத் தெரியாமலே கழிந்துவிட்டன.

அன்று…..

இடமாற்றத்தின் காரணமோ என்னவோ முருகையா ஒரு வாரமாகப் பாயும் படுக்கையுமாகக் கிடக்கிறான் என்ற செய்தி தெரிய வந்தது கண்ணப்பருக்கு . ஆட் பேரற்ற அந்த ஊரிலே, தம்பி தன்னந்தனியனாய் நிரா தரவாகக் கிடக்கிறானே என்பதைக் கேள்விப்பட்ட போது கண்ணப்பரின் உதிரம் துடித்தது. நெஞ்சம் பட படத்தது. ஆனாலும் அவனைப் போய்ப் பார்ப்பதற்குப் பயம். தான் போனாற் தன் நயினார்கள் விட்டுவைப் பார்களா?

யோசித்து யோசித்துக் குழம்பியவாறே ம்பியவராகிக் கண்ணப்பர் சவரஞ் செய்து கொ தார் மாணிக்கம் பிள்ளைக்கு.

பூச்சிநாகன் திடலிலேயே மாணிக்கம்பிள்ளை பான மனிதர். அவர் விரலை அசைத்தால் அந்த நிலை பெயர்ந்து ஆடும். அவரிடம் சொல்லித் தம்பியைப் பார்க்க அனுமதி பெற்றுக்கொண்டால்………..?

நம்பிக்கை யாரைவிட்டது?

நயினார், முருகையா சாகக்கிடக்கிறானாம். அவனைப் போய்ப் பார்த்துவிட்டு…..

ஆமையாய் அடங்கிக் கிடந்த மாணிக்கம் பிள்ளை விறு க்கென்று எழுந்து ” என்னது! அவன் எக்கேடு கெட்டா லும் உனக்கென்னடா? கரை யாரப்பயல்ர மகன் சாகட் ட்டும். நீ போகக்கூடாது அங்கு . போனாப் பிறகு தெரி யுமே…… என்று சீறி விழுந்தார் கண்ணப்பர் மீது.

கண்ணப்பர் பயந்து ஒடுங்கினார் ஒரு கணம்! நம்பி க்கை தவிடு பொடியாய் விட்ட நிலையில் கண்ணப்பரு க்கு எங்கிருந்தோ ஒரு வரட்டுத் தைரியம் பிறந்தது. அந்தத் தைரியத்தில் உங்கட்கு அவங்களோட கோபம் எண்டா முருகையா என் ரத்தம். நான் அவனைப் பார் க்கப் போகத்தான் வேண்டும்” என்றார் கண்ணப்பர்.

“அம்பட்ட நாயே! எதிர்த்தா பேசுறா” என்று உறுமிக்கொண்டே கண்ணப்பரின் முகத்தில் அறைந்தார் மாணிக்கம் பிள்ளை.

அறையை வாங்கிக்கொண்ட கண்ணப்பர் வலது கண் தயாற் பொத்தியபடி அழுதுகொண்டே “இது சகாரன் ராச்சியம், உங்க இஷ்டம்போல மனுதைக்க முடியாது” என்றார்.

அதன் பிறகு…….?

கண்ணப்பருக்கு உலகமே தெரியவில்லை! உடம்பெங் புளியம் விளார்கள் கொஞ்சியதால் ஏற்பட்ட இரத்தம் உறைந்த நீண்ட கோடுகள் – வீக்கம் ஊரே சேர்ந்து அடித்தால் அவர் என்ன தான் செய்திருப்பார்?

மாலையான போது தான் முக்கிமுணகி எழுந்திருக்க முயன்றார் கண்ணப்பர். உள்ளத்திலே தம்பியைப் பற்றிய ஏக்கம், அவனைப் பார்க்கவேண்டுமே என்ற ஆசை. ஆனால் எழுந்து நடக்கமுடியவில்லை. படுத்தபடியே தான் இருந்தார்.

காற்றுவாக்கில் அந்தக் கதை அவர் காதில் விழுந்தது. ‘முருகையா செத்துப்போனானாம், அவனைப் புதைத்தாய்விட்டதாம்….’

எங்கிருந்தோ ஒரு அசுரபலம், ஒரு வெறி வந்தது கண்ணப்பருக்கு, எழுந்து கத்திக்கொண்டே ஓடினார்.

“தம்பி முருகையா…”

செத்துப் போன தம்பி திரும்பி வருவானா?

தேம்பித் தேம்பியழுத கண்ணப்பர் கோணேசரை நோக்கி ஒரு பிடிச் சேற்றை அள்ளி எறிந்து “கோணேசா! இந்தக் கொடுமையை எல்லாம் பார்த்துக்கொண்டு நீ இருக்கியா?” என்று திட்டி விட்டு ஸ்டேசன் ரோட்டிலே நடந்தார்.

– சுதந்திரன்

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *