கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 11,224 
 

“ஹலோ!….நான் ரமேஷ் பேசுகிறேன்!…நீங்க யார் பேசறது?…”

“நான் உன் பால்ய சிநேகிதன் கேசவன் பேசுகிறேன்!….என்னைத் தெரியவில்லையா?…”

அட!…..சின்ன வயசிலே கூடப் படித்த அந்தக் கேசவனா…ஐயோ! …அவனுக்குப் பொய் சொல்வது அல்வா சாப்பிடற மாதிரி! …அவனிடம் எப்படி தப்பிப்பது என்று ரமேஷின் சிந்தனை ஓடியது! ….

“ ஓ!…கேசவன் நீங்களா!….. ஓய்வுக்குப் பிறகு நீங்க மதுரையில் செட்டிலாகி விட்டதாகச் சொன்னார்களே!……இங்கே கோயமுத்தூருக்கு எப்ப வந்தீங்க?….எப்படி இருக்கிறீங்க?….”

“ நான் அதே மாதிரிதான் இப்பவும் இருக்கிறேன்!…”

“அப்படியே தான் இன்னும் இருக்கிறீர்களா? எந்த மாற்றமும் இல்லையா?……..இப்ப கோயமுத்தூருக்கு என்ன வேலையா வந்திருக்கிறீங்க!…”

“நமக்குத் தெரிந்தவர் இங்கு ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறார்!….கோயமுத்தூர் மார்க்கெட் தான் இப்ப நல்லா இருக்காம்..கணபதியிலே சைட் பிரிச்சுப் போட்டிருக்கிறார்…ஒரு பிளாட் இருபது லட்சம் தான் ஆகிறதாம்!…..என்னை இரண்டு பிளாட் வாங்கிப் போடச் சொன்னார்!.இப்ப வசதிப் படாது என்று சொன்னேன்!…அவர் கேட்கலே!…வர வர டிமாண்ட் அதிகமாகிக் கொண்டே போகுது.. நீங்க வந்து ரிஜிஸ்டர் பண்ணிட்டுப் போயிடுங்க!…அப்புறமா பணம் கொடுத்தாப் போச்சு! என்று சொன்னார்…அது தான் நேற்று வந்தேன்…உங்களுக்கு ஏதாவது அபிப்பிராயம் இருக்கா?…”

“ அப்படியா!….எனக்கு திருமால் இது விஷயமா இன்னும் எஸ்.எம்.எஸ் அனுப்பலையே! ”

“ எந்தத் திருமால்?…”

“ அதுதான் நம்மைப் படைத்த படைப்புக் கடவுள்! கோயமுத்தூரில் நீ சொன்ன மாதிரி இருபது லட்ச ரூபா பிளாட்டை பணமே வாங்காமே ரிஜிஸ்டர் செய்து கொடுக்கும் குணம் உள்ள ஒரு ஆளை அவர் படைச்சிருந்தா எனக்கு உடனே எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்திடுவாரே!….”

ரமேஷ் அதி புத்திசாலி! என்னிடம் அவன் பருப்பு வேகாது என்று தெரிந்து கொண்டு, கோபமாக போனை ‘டக்’கென்று வைக்கும் சத்தம் கேட்டது!

பாக்யா ஆகஸ்ட் 7-13

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *