எம் பொழப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 5,997 
 

குளிச்சு ரெண்டு வாரமாச்சு…பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும்.

அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி. பிச்சை சோறு எடுத்து தின்கறதுக்கு சாகலாம்.

போனவாரம்கூட வாழ்க்கையே வெறுத்துபோய் வேகமா வந்த லாரிக்குள்ள பாஞ்சுட்டேன்…

என் நேரம் அப்பவும் சாவு வரலை. லாரிக்காரன் போட்ட பிரேக்ல அநேகமா டயரு தேஞ்சிருக்கும்.

கேவலமா கெட்ட கெட்ட வார்த்தையால என்னை திட்டி தீர்த்துட்டான் லாரி டிரைவர்.

அதுக்கப்புறம் ரெண்டு நாளா எங்கேயும் வெளியில போகல. பிள்ளையார் கோவில்லேயே படுத்துக்கெடந்தேன்.

எத்தனை நாளைக்குத்தான் சோறுதண்ணி இல்லாம இருக்க முடியும்?

அந்த கோவில் அர்ச்சகர் ரொம்ப நல்லவர். கொஞ்சம் சுண்டலும் பொறியும் தந்தார்.

தெருத்தெருவா சோத்துக்கு நாயா அலையறது மாதிரி கஷ்டமான வேலை வேற எதுவுமே இருக்க முடியாது.

இதெல்லாம் அந்த‌ எதிர்வீட்டு வாட்சுமேனுக்கு எங்க‌ புரிய‌ப்போகுது? எப்போ என்னை பார்த்தாலும் அடிக்க‌த்தான் வ‌ர்றான் ச‌ண்டாள‌ன். இருக்க‌ட்டும் ஒருநாள் அவ‌ன‌ உண்டு இல்ல‌ன்னு ப‌ண்ணிடுறேன்.

ச‌ரி ச‌ரி நேர‌மாச்சு ப‌க்க‌த்து தெருல‌ இருக்க‌ற‌ குப்பைத்தொட்டிக்கு போக‌ணும்… நாய்ங்க‌ வ‌ர்ற‌துக்கு முன்னால போனாதான் சோறு கிடைக்கும்…

வாலாட்டிய‌ப‌டியே வேகமாய் ஓட‌த்துவ‌ங்கினேன் அடுத்த தெரு நோக்கி.

– Monday, September 17, 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *