என்னாலே முடியும் தம்பி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 5,099 
 

ராஜர் இங்கிலாந்தில் ஒரு பல்களைக் கழகத்தில் படித்து விட்டு MBA பட்டம் வாங்கினான்.

’கான்வகேஷன்’முடிந்து தன் கையிலே ‘டிகி¡£’வந்ததும்,பல கம்பனிக்கு களுகு எல்லாம் போய் வேலைத் தேடிவந்தான்.அவன் போன எல்லா கம்பனிகளும் ராஜரைப் பார்த்து” நீ இப்போ தான் MBA பட்டம் வாங்கி இருக்கே,உனக்கு இன்னும் நிறைய ‘சர்வீஸ்’ ஆனாத் தான் அதிக சம்பளம் தர முடியும்” என்று சொல்லி விட்டு கம்மியான சம்பளத்தைத் தருவதாகச் சொன்னார்கள்.

ஆனால் ராஜர் தனக்குத் திறமை நிறைய இருக்கு என்று நினைத்து அவர்கள் கொடுத்த சமபளத்தை வாங்க மறுத்து வந்தான்.ராஜர் விடாமல் இன்னும் சில கம்பனிக ளுக்குப் போய் முயற்சி பண்ணீ வந்தான்.அந்த கம்பனிக் காரர்களும் முன்னே சொன்ன கம்பனிகாரர்கள் சொன்ன பதிலையே சொன்னார்கள்.

ராஜர் தான் தனியாக ஒரு ‘ஆபீஸ்’ நடத்த எண்ணி, ஒரு சின்ன ‘ரூமாக’ வாடகைக்கு எடுத்துக் கொண்டு,ஒரு ‘ஆபீஸை’ ‘செட் அப்’ பண்ணினான்.

அந்த ஆபீஸ் வாசலிலே “Solutions for your problems” என்ற ஒரு பெரிய போர்ட்டைத் தொங்க விட்டு விட்டு ரூமுக்கு உள்ளே ஒரு ‘டேபிள் சேர்’ போட்டு உட் கார்ந்துக் கொண்டு இருந்தான்.

அந்த ஊரில் ஒரு பெரிய பண்ணைக்காரர் இருந்தார்,அவருக்கு ஒரு பெரிய ‘ஹை வே’ க்கு ரெண்டு பக்கத்திலும்,நிறைய பன்றிகள்,கோழிகள்.ஆடுகள்,மாடுகள், வாத்துகள்,வான் கோழிகள் எல்லாம் வளர்த்து வந்துக் கொண்டு இருந்தார்.அவர் பண்ணை ஆரம்பித்த போது அந்த ‘ஹை வே’யில் அதிகமான கார்கள் போய் வந்துக் கொண்டு இருக்கவில்லை.

நாளாக நாளா அந்த ‘ஹை வே’யில் நிறைய கார்களும் வேன்களும் வேகமாக போய் வர ஆரம்பித்தது.வேகமாகப் போய் வந்துக் கொண்டு இருந்த கார்களிலும், வேன் களிலும் நிறைய சின்ன ஆடுகளும்,வாத்துகளும் கோழிகளும் சிக்கி இறந்து வந்துக் கொண்டு இருந்தது.இதனால் கோவம் அடைந்த அந்த பண்ணைக்காரர் ‘ஹை வே’க்கு ரெண்டு பக்கத்திலும்:

“இங்கே பண்ணை இருக்கிறது.அதிலே நிறைய பன்றிகள்,கோழிகள்,ஆடுகள், மாடுகள்,வாத்துகள்,வான் கோழிகள் எல்லாம் இருக்குது.தயவு செய்து மெதுவாகப் போகவும்”
என்று ஒரு பெரிய பேர்ர்டை நட்டு வைத்தார்.

போர்ட்டை நட்டும் தினமும் ரெண்டு கோழியோ,ரெண்டு வாத்தோ,ரெண்டு பன்றிக் குட்டியோ வேகமாகப் போய் வந்துக் கொண்டு இருந்த வாகனங்களில் சிக்கி இறந்துக் கொண்டு தான் இருந்தது.அவர் எப்படி இதை சரி செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்.

ஒரு நாள் அவர் டவுனில் தன் காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ராஜர் ‘ஆபீஸ்’ வாசலில் இருந்த போர்டைப் படித்தார்.

’சரி,இவர் கிட்டே கேட்டுப் பாக்கலாம்’ என்று நினைத்து அந்த பண்ணைக்காரர், தன் காரை ஒரு ஒரமாகப் ‘பார்க்’ பண்ணி விட்டு,ராஜர் ரூமுக்கு வந்தார்.

ராஜரைப் பார்த்து தன் ‘ப்ராப்லெத்தை’ச் சொல்லி,அதற்கு அவர் அந்த ‘ஹை வே’ க்கு ரெண்டு பக்கமும் வைத்த ‘போர்ட்டையும்’ சொல்லி,ஆனால் இன்னும் தன் ‘ப்ராப் லெம்’சரி ஆகவில்லை என்றும் சொல்லி, ராஜரால் தன் ‘ப்ராப்லெத்தை’ சரி செய்ய முடி யுமா என்று கேட்டான்.

உடனே ராஜர் “நான் உங்க ‘ப்ராப்லெத்தை’ சரி செய்யறேன்.உங்க ‘ப்ராப்லெம்’ சரியான பிறகு,நீங்க சந்தோஷப் பட்டா எனக்கு 10,000 பவுண்டு தர முடியுமா” என்று கேட்டதும் அந்த பண்ணைக்காரர் ஒத்துக் கொண்டார்.

ராஜர் அந்த பண்ணைக்காரருடன் அவர் பண்ணைக்குப் போய் ‘ஹை வே’யின் ரெண்டு பக்கமும் வேகமாக போய்க் கொண்டு இருந்த வாகனங்களால்,இறந்துப் போய்க் கொண்டு இருந்த பன்றியையும்,கோழியையும்,வாத்தையும் பார்த்தான்.பண்ணைக்காரர் சொன்னது உண்மை என்று ராஜர் புரிந்துக் கொண்டான்.

உடனே ராஜர் அந்த பண்ணைகாரர் இடம் தனக்கு ரெண்டு நாள் ‘டயம்’ கேட்டு வாங்கிக் கொண்டு தன் டவுனுக்கு வந்து ஒரு ‘பெயிண்டரை’ப் பார்த்து ரெண்டு பெரிய ‘போர்ட்டை’தயார் பண்ணிக் கொண்டு வந்து, ‘ஹை வே’யின் ரெண்டு பக்கமும்,பண்ணைக்காரர் நட்டு இருந்த ‘போர்டை’ எடுத்து விட்டு,அவன் கொண்டு வந்த ‘போர்ட்டை’ நட்டு விட்டு அவரிடம் சொன்னான்.

என்ன ஆச்சரியம்.அந்த ‘போர்ட்டை’ நட்ட அடுத்த மணி நேரத்தில் இருந்து எல்லா வாகனமும் மெதுவாக அந்த பண்னையை கடந்துப் போய்க் கொண்டு இருந்தது. ஒரு பன்றியோ, கோழியோ, ஆடோ, வாத்தோ எந்த வாகனத்தில் சிக்கிக் கொண்டு இறக்கவில்லை. பண்ணைக்காருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அவர் உடனே சந்தோஷப் பட்டு, ராஜருக்கு 10,000 பவுண்டுக்கு ஒரு ‘செக்’ எழுதிக் கொடுத்தார்.

ராஜர் பண்ணைக்காரர் எழுதிக் கொடுத்த ‘செக்கை’ வாங்கிக் கொண்டு தன் ரூமுக்கு வந்தான்.அவன் மனம் சந்தோஷப் பட்டது.

ராஜர் கிளம்பிப் போனதும் அந்த பண்ணைகாரர் ‘இந்த சின்ன பையன் என்ன ‘போர்ட்டை’ ரெண்டு பக்கமும் நட்டு இருப்பான்.இப்போ எல்லா வாகனமும் ரொம்ப மெதுவா போவுதே’ என்று ஆச்சரியப் பட்டு ராஜர் நட்டு இருந்த ‘போர்ட்டை’ போய் பார்த்தான்.அந்த போர்ட்டில்:

“ NUDE CLUB AHEAD” என்று இருந்தது. பண்ணைக்காரர் சிரித்துக் கொண்டே தன் பண்ணைக்கு வந்தார்.

அந்த டவுனில் ஒரு இருபதாவது மாடியில் ஒரு கம்பனி இருந்தது.அந்த கம்பனியிலே இருபது ஆண்களும்,இருபது பெண்களும் வேலை செய்து வந்தார்கள்.அந்த கமபனியின் ஓனர் அந்த கம்பனியை சரியாக ஐந்து மணிக்கு மூடி விடுவார். கம்பனி மூடினதும் எல்லா ஆண்களும்,பெண்களும் ஒரே சமயதிலே வெளியே வந்து கீழே போக முண்டி அடித்துக் கொண்டு ‘லிப்டு’க்கு வந்துக் கொண்டு இருந்தார்கள்.

பலமான ஆண்கள் முண்டி அடித்து ‘லிப்’டில் ஏற முயற்சி செய்து வந்ததால், நிறைய பெண்களுக்கு ‘லிப்டி’ல் ஏறுவது கஷ்டமாக இருந்தது. சில பெண்களுக்கு காயம் கூட பட்டு வந்தது. இதனால் அந்த பெண்கள் கம்பனி ஒனரிடம் ‘கம்ப்லெயிண்ட்’ எழுதிக் கொடுத்தார்கள்.

அடுத்த நாளே அந்த கம்பனி ஓனர் கமபனியிலே வேலை செய்து வந்த எல்லா ஆண்களையும் தன்னிடம் அழைத்து, பெண்கள் கொடுத்த ‘கம்ப்லெயிண்டைச்’ சொல்லி ‘லிப்டி’ல் பெண்களுக்கும் ஏற இடம் கொடுத்து, ஒரு பெண்ணுக்கும் காயம் வராமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

ஒரு வாரம் ஆயிற்று. ஒரு முன்னேற்றமும் இல்லை.முன்னால் இருந்த மாதிரியே கம்பனி மூடினதும் எல்லா ஆண்களும் முண்டி அடித்துக் கொண்டு ‘லிப்டி’ல் ஏறிக் கொண்டு இருந்தார்கள். பெண்கள் பழையபடி இடிப்பட்டு காயம் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

பெண்கள் இடம் இருந்து மறுபடியும் ‘கம்ப்லெயிண்ட்’ வரவே, வழி இன்றும் தெரியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தார் அந்த கம்பனி ஓனர்.

அடுத்த நாள் அந்த கம்பனி ஓனர் தன் ‘ஆபீஸ்’க்கு வரும் வழியில் ராஜர் ‘ஆபீஸ்’ வாசலில் தொங்கிக் கொண்டு இருந்த போர்ட்டைப் பார்த்தார்.உடனே அந்த கம்பனி ‘ஒனர்’ தன் காரை ஒரு ஓரமாகப் ‘பார்க்’ பண்ணிவிட்டு, ராஜர் ‘ஆபீஸ்’க்கு வந்து தன்னுடைய ‘ப்ராப்லெத்தை’ ச் சொன்னார்.

ராஜர் அந்த கம்பனி ஒணரைப் பார்த்து “நான் உங்க ‘ப்லாப்லெத்தை சால்வ்’ பண்றேன்.உங்க ‘ப்ராப்லெம்’ சரி ஆனா, நீங்க எனக்கு 10,000 பவுண்டு தர முடியுமா” என்று கேட்டான்.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணிய அந்த கம்பனி ஓனர் ராஜரைப் பார்த்து “நான் ரெண்டு வாரம் வரை பொருத்துப் பாப்பேன். எந்த பெண்ணிடமும் இருந்து எந்த ‘கம்ப்லெயிண்டும்’ வராம இருந்தா, அப்போ நான் உங்களுக்கு10.000 பவுண்டுக் கு ஒரு செக் தருவேன்.சம்மதமா” என்று கேட்டார்.

ராஜர் ஒத்துக் கொண்டான்.

ராஜர் அந்த கம்பனிக்குப் போய் அங்கு வேலை செய்து வந்த பெண்களைப் பார்த்தான்.எல்லா பெண்களும் ஒரு 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் இருந்தார்கள். அந்த கமபனியில் இருந்து பெண்களுக்கு ஒரு ‘ரெஸ்ட் ரூமும், ஆணகளுக்கு ஒரு ‘ரெஸ்ட் ரூமும்’ இருந்தது.ராஜர் நன்றாக யோஜனைப் பண்ணீனான்.

உடனே அவன் பெண்கள் ’ரெஸ்ட் ரூமில் நிறைய வாசனை பவுடர்கள், ’செண்ட் பாட்டில்கள்,நிறைய ‘மேக் அப்’ சாதனங்கள், கையை கழுவும் வாசனை ஜெல்’, நிறைய டிஷ்யூ பேப்பர், ’ஸ்னோ’, ‘பவுண்டேஷன்’ சாமான்கள், வித விதமான ‘லிப் ஸ்டிக்’ எல்லாம் வாங்கி வைத்து விட்டு எல்லா பெண்களிடமும் அழைத்து “ நான் உங்களுக்கு ‘ரெஸ்ட் ரூமி’ல் நிறைய ‘காஸ்மெடிக்ஸ்’ ‘மேக் அப்’ ஐயிட்டங்களும் வச்சு இருக்கேன். நீங்க வீட்டுக்குப்போவறதுக்கு முன்னாலே உங்களே நீங்க நல்லா அழகு பண்ணிக்கிட்டுப் போங்க” என்று சொன்னதும் எல்லா பெண்களும் ‘ரெஸ்ட் ரூமு’க்குப் போய்ப் பார்த்தார்கள். அவர்கள் ராஜரைப் பார்த்து “ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு” என்று சொல்லி விட்டு மறுபடியும் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

கம்பனி ஓனர் ஒன்னும் புரியாமல் நின்றுக் கொண்டு இருந்தார்.

அன்று மணி ஐந்தடித்ததும்,எல்லா பெண்களும் ‘ரெஸ்ட் ரூமு’க்கு ஓடிப் போய், தங்களை அழகுப் படுத்தி கொண்டு இருந்தார்கள்.இந்த நேரத்தில் எல்லா ஆண்களும் வேலையை முடித்துக் கொண்டு ‘லிப்டி’ல் கீழே இறங்கிப் போய் விட்டார்கள்.

‘ரெஸ்ட் ரூமு’க்குப் போன பெண்கள்,தங்களை நன்றாக அழகுப் படுத்திக் கொண் டு ‘லிப்டு’க்கு வருவதற்குள் எல்லா ஆண்களும் போய் விட்டு இருந்தார்கள்.

அழகுப் படுத்திக் கொண்ட பெண்கள், சந்தோஷமாக, நிதானமாக ‘லிப்டி’ல் கீழே இறங்கிப் போனார்கள். இதைப் பார்த்த கம்பனி ஓனர் அசந்து விட்டார்.

அதற்கு அப்புறம் ரெண்டு வாரமாக அந்தப் பெண்கள் கம்பனி ‘ஒனரி’டம் எந்த ‘கம்ப்லெயிண்டும்’ தரவில்லை.

‘ப்ராப்லெம்’ தீர்ந்துப் போனதால் அந்த கம்பனி ஓனர் சந்தோஷப் பட்டு ராஜருக்கு 10,000 பவுண்டுக்கு ஒரு ‘செக்’கைக் கொடுத்தார்.

ராஜருக்கு தன் மேல் பூரண நம்பிக்கை வந்தது.

அவன் மிகவும் சந்தோஷப் பட்டு, தன்னைப் போல நல்ல ‘சாதுர்யமும்,மூளையும் இருந்த ரெண்டு MBA படித்த இளைஞர்களை ‘இண்டர்வியூ’ பண்ணி தேர்வு செய்து, அவர்களை அவன் ‘ஆபீஸி’ல் வேலைக்குச் சேர்த்துக் கொண்டு, தன்னுடைய ‘பிஸினஸ் ’ஸை விரிவுப் படுத்தி நிறைய பணம் சம்பாதித்து வந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *