கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,250 
 

பிரபு, உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையைச் சொல்லித்தருவதில்லையாம்!

ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித் தருகிறாராம்” என்று கேட்டார் பொதுமேலாளர்.

“மன்னிக்கனும் சார். ஏதாவது ஒரு புதிய வேலையை எங்கள் இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள் ஆட்களுக்கு சொல்லித்
தருகிறோம். அடுத்தவாரம் அதே போல வேலையை நீங்கள் அவர்களுக்குக் கொடுத்து நீங்களே நேரடியாக கண்காணியுங்கள் என்றான் பிரபு.

அதேபோல ரகுவுக்கு பிரபுக்கும் புதுவேலையைக் கொடுத்தார் பொதுமேலாளர். ரகுவின் ஆள் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில் பிரபுவின் ஆள் வேலையை முடித்துவிட்டான். ரகுவின் ஆள் மூன்று முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான்.

ஒரு வழியாக 5 மணிநேரத்தில் முடித்தான்.

பொதுமேலாளர் பிரபுவை அழைத்து, எப்படி முடிந்தது? என்று கேட்டார் பொதுமேலாளர்.

“சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லி கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது. அதனால் விளைவுகளை
மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ என்று நேரம் கொடுத்து விட்டுடணும்.

தேடிப்பிடிச்சு கத்துக்கிட்டா, கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும் பணத்திற்கு மதிப்பு அதிகம்” என்றான் பிரபு,

“நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைப்படுகிறேன் என்றார் பொதுமேலாளர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *