உயிரும், உரிமையும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 3,790 
 

உக்ரெயின் நாட்டில் நள்ளிரவு கடந்து சுமார் மூன்று மணி இருக்கும். அந்த பழுப்பு நிற மோட்டார் கார்கதவுகளில் மூன்று மங்கிய மஞ்சள் நிறத்திலும். நான்காவது நீல நிறத்தில் இருந்தன. காரின் வண்ணக் கலப்புஉக்ரெயின் நாட்டின் கொடி வண்ணங்களை நினைவூட்டியது. இது எதேச்சையாக நடந்த வண்ணக் கலப்பாகஇருக்கலாம். ஆனால் அந்த கார் உக்ரெயினிலிருந்து மேற்கு திசையில் இருக்கும் போலந்து நாட்டைஇலக்காக வைத்து நகர்ந்தபோது உக்ரெயின் மக்களின் உரிமை ஓலம் நமக்குக் கேட்கவில்லையா?

மேற்கு திசையில் போலந்து நாட்டு எல்லையில் ‘மெடிகா’ என்ற ஊர் போய் சேர சாதாரணமாக ஒன்பது மணிநேரமாகும் ‘மெடிகா’ போய்விட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அகதிகள் ஆயிரக் கணக்கில்பயணிக்கும்போது, நெரிசல் மிக அதிகமாகி, ‘மெடிகா’ போவதற்கு இரண்டு நாளாவது ஆகலாம்.

ரஷ்யாவின் அடாவடித்தனமான ஆக்ரமிப்பினால் நிலைகுலைந்த உக்ரெயின் மக்கள், உயிரைக்காத்துக்கொள்ள நாடு விட்டு அண்டை நாட்டுக்கு ஓடுகிறார்கள்.

உயிர் இருந்தால்தானே தன்மானத்தையும் நாட்டின் உரிமையையும் காக்க முடியும்?

இந்த முறையும் முடியுமா?

அந்த மஞ்சள் நீல நிற காரை ஓட்டியது ஒரு நடுத்தர வயது பெண். அவள் பக்கத்தில் தூக்கக் கலக்கத்துடன்நாலு வயது சிறுமி, ஏதோ பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தது. காரின் பின் இருக்கையில்பத்து வயது சிறுவன், ஏழு வயது சிறுமி, ஒரு வயதை எட்டும் குழந்தை. குழந்தை வீரிட்டு அழுதது; சிறுவன்குழந்தையின் வாயில் பால் புட்டியை அழுத்தினான். வளர்ந்த குழந்தைகளின் தலைமுடி அலங்கோலமாகக்கிடந்தது.

கார்ஒட்டிய பெண்ணின் தலைமுடியும் அப்படித்தான் இருக்கும் என ஊகிக்கலாம், ஆனால் அவள்தலையை மூடி மறைத்தது ஓர் உல்லன் குல்லாய்.

அடுத்த நாட்டின் சர்வாதிகார தலவனின் வெறித்தனத்தால் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின்உள்ளக்கொதிப்பை நம்மால் எளிதில் கணிக்க முடியாது. ஆனால், தாய் மண்ணைவிட்டு ஓடுவோரின் கண்களேமொத்த கதையையும் சொல்லிவிடும்.

காரின் வேகம் வெகுவாகக்குறைந்து, நின்றது. திடீரென காருக்கு வெளியே ஒரு வீடியோ காமிராவுடன்ஒருவனும் அவன் பக்கத்தில் ஒரு ரிப்போர்ட்டரும் வந்து நின்றனர். உக்ரெயின் மக்களின் அவலத்தைஉலகத்திரையில் படம் பிடித்துக் காட்டவேண்டும் என்ற உந்துதல் ஒரு பக்கம்; தங்கள் தொலைக்காட்சிரேட்டிங் கூடுதலாக வேண்டும் என்ற கட்டாயம் இன்னொரு பக்கம். அவரவர் கவலை அவரவருக்கு!

கார் ஓட்டிய பெண்ணின் கண் மை கலைந்து, அவள் அழுது அழுது சற்று வீங்கிய முகத்தை வீடியோவில்பதிவு செய்தபோது நம் மனதில் என்னென்ன உணர்ச்சிகள் ஓங்குகின்றன? உலகமே இயலாமையில் மூழ்கியஇந்நேரத்தில் நம் உணர்ச்சிகள் எம்மாத்திரம்?

மைக்ரோபோன் அந்த பெண்ணின் முகத்துக்கு அருகே நீண்டது.

“உங்கள் கணவர் காரில் இல்லையே…?”

“அவர் எங்கள் உயிரைக் காப்பாற்ற போலந்துக்கு அனுப்பிவிட்டார். கியெவ் நகரத்தில் மற்ற ஆண்களுடன்சேரந்து …” சிவந்த கண்களில் வழியும் கண்ணீரை ஏற்கனவே நனைந்த துணியால் துடத்துக் கொண்டாள். “ரஷ்யாவின் ஆக்ரமிப்பை தடுப்பது உரிமை என்று தங்கிவிட்டார்.”

“நாலு குழந்தைகளுடன் போகிறீர்களே…பயமாக இல்லையா?”

“நாங்கள் உக்ரெயின் மக்கள். பயம் என்பது எங்கள் ரத்தத்தில் இல்லை…”

“போலந்து நாட்டில் என்ன செய்வீர்கள்?”

“உயிரோடு இருப்போம். மீண்டும் உக்ரெயின் திரும்புவோம். என் கணவரோடு சேருவோம், உரிமைக்காகப்போராடுவோம் என்ற நம்பிக்கையோடுதான் போகிறோம்”

“உங்களுக்கு ஆண்டவன் உதவட்டும்…” வீடியோ காமிரா நின்றது. கார்கள் நகர ஆரம்பித்தன.

அவளால் அழுகையை நிறுத்த நேரமாயிற்று.

பின் இருக்கையில் கைக் குழந்தை அலறியது. சிறிது நேரத்தில் குழந்தையின் அலறல் மொத்தமாகநின்றது. அடுத்த நிமிடங்களில் குழந்தையின் முகத்தில் நீல நிறம் படர்ந்தது. மூச்சு நின்ற குழந்தையின் உடல்கிடந்தது.

குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது வேற்று மண்ணில்…ஆனால் உயிர் பிரிந்தது உக்ரெயின்மண்ணில்தான்.

இதுபோல் ஆயிரக்கணக்கான உயிர்கள் உரிமைப் போராட்டத்துக்கு தியாகமாக அர்ப்பணிக்கப்பட்டதுஉக்ரெயின் நாடு மட்டும்தானா? தாய்நாட்டு விடுதலையை விரும்பும் ஒவ்வொரு நாடும் அனுபவிப்பதுதானே?

***

இது எழுதியது பிப்ரவரி 28,2022. உக்ரெயினில் ரஷ்யா ஆக்ரமிப்பை ஆரம்பித்து ஐந்து நாட்களாயின. எப்போது, எப்படி இந்த நிலமை மாறும் என்று யாருக்கும் புரியாத நேரத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேல்அகதிகள் போலந்து நாடு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பத்து வாரங்கள் நகர்ந்தபோது, இன்னும் அகதிகள் உயிருக்காக அண்டை நாடுகளை நோக்கிபயணிக்கிறார்கள். ஐந்து லட்சம் ஐம்பது லட்சத்தை எப்போதோ தாண்டியது – வாஷிங்டன் ஶ்ரீதர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *