இளமைக்காலத்தில் வந்து மறைந்த சமுதாய சிந்தனைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 4,704 
 

அது மலைகள் சூழ்ந்த கிராமம்.ஏதோ பிளஸ் டூ படித்துவிட்டாலே பெரிய படிப்புதான் அந்த ஊருக்கு, அந்த படிப்பு முடித்தவர்கள் ரோட்டோரம் திண்ணையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் தொ¢ந்து கொள்ளலாம் அவர்கள் எல்லாம் அந்த ஊரில் பொ¢ய படிப்பு படித்தவர்கள். இதில் ஒரு சில விதிவிலக்கும் உண்டு, அதாவது டிகிரி வரை படித்தவர்கள் கொஞ்சம் பேர் இவர்களுடன் உண்டு, அவர்களுக்கு இந்த பெரிய படிப்பு படித்தவர்கள் கொஞ்சம் மரியாதையை கொடுப்பார்கள் அவ்வளவுதான். மற்றபடி இவர்கள் செய்யும் எல்லா சேட்டைகளிலும் அவர்களும் பங்கு கொள்ளுவர். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் சிறிய தவறு செய்துவிட்டால் போதும் நீ எல்லாம் டிகிரி முடிச்சு கிழிச்ச..என்று அவன் படித்ததை வாயால் போட்டு அரைப்பர். இவர்களும் பேசாமல் கேட்டுக்கொள்ள வேண்டும் காரணம் அவர்கள்தான் அதிகமாக காணப்படுவர். டிகிரி முடித்தவர்கள் தட்டுத்தடுமாறி வெளி ஊருக்கு ஏதோ ஒரு வேலைக்கு ஓடிவிடுவர்.அப்படி வேலை கிடைக்காதவர்கள் தான் இந்த பையங்களுடன் சுற்றித்திரிந்து அவர்கள் திட்டும் பேச்சுக்களையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.பிளஸ் டூ படித்தவர்கள் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாதவர்கள்,அல்லது விரும்பாதவர்கள் இவர்கள்தான் இந்த குழுவில அதிகம் காணப்படுவர்.நாம் கதைக்குள் நுழைவோம்.

டேய் உலகநாதா இந்த ஊருக்கு நாம ஏதாவது செய்யணும் கேட்ட செல்வத்திடம் என்ன செய்யலாம்னு நினைக்கிறே, ஏற்கனவே நம்மளை இந்த ஊரு ரொம்ப மதிக்கறமாதிரி! அலுத்துக்கொண்டான் செலவம். அப்படித்தாண்டா இருப்பாங்க, நம்மளை மாதிரி பசங்க எல்லாம் இதுக்கெல்லாம் அசந்துடக்கூடாது சொன்ன உலகநாதன் யோசனையுடன் நின்றான். இவர்கள் இருவா¢ன் உரையாடலை ஒரு வித உற்சாகத்துடன் மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர்.பாபு மட்டும் என்னத்தயடா செய்யப்போறீங்க என்று கேட்டவனை முறைத்த செலவம் நீ பேசாம் இரு எப்படியும் இரண்டொரு மாசத்துல வேலைய தேடி போயிடுவ, இங்க இருக்கப்போறது நாங்கதான், அதுனால நாங்க என்ன செய்யறமோ அதை மட்டும் வேடிக்கை பார்த்தா போதும். பாபு எதுவும் பேசாமல் இருந்துகொண்டான் அவன் சித்தப்பா அவனுக்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டுள்ளார். கூடிய சீக்கிரம் பொள்ளாச்சி போய்விடுவான்.

அவனை ஏண்டா காயறீங்க, சொன்ன முரளி இப்ப வாங்க எல்லாரும் ஆத்துக்கு போய் மீன் பிடிக்கலாம். சொன்னவுடன் அனைவரும் தூண்டில் எடுத்து வர அவரவர் வீட்டுக்கு சென்றனர்.

வருது பாரு தடிமாடு, காலையில சோத்தை தின்னுட்டு போனவந்தான், கரெக்டா பத்து மணிக்கு வந்திருக்கான், டீ குடிக்கற நேரமாச்சுல்ல சொன்ன அம்மாவை முறைத்து பார்த்த உலகுவை, ஏண்டா முறைக்கிற, அந்த கிரவுண்டுல நல்லா புல் வளர்ந்திருக்கு, இந்த மாட்டை கொண்டு போய் மேய்ச்சலுக்கு விட்டு கூட்டியாரலாமில்ல, அம்மாவிடம் எகிறினான் கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா, என்னைப்போய் மாடு மேய்க்கச்சொல்றீயே.

ஏன் மாடு மேய்ச்சா என்ன? சொந்த வேலைய யார் வேணா செய்யலாம், அப்படித்தான் நீ என்ன பொ¢ய ஆபிசர் வேலைக்கா படிச்சிருக்க? பிளஸ் டூ விலயே கோட்டு விட்டுட்டு பாஸ் பண்ணினவன், பொ¢சா பேச வந்திட்டான், வள வள வென்று பேசிக்கொண்டிருந்த அம்மாவிடம் பதில எதுவும் சொல்லாமல் தூண்டிலை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான்.

வெளியே இவன் அம்மாவின் கூக்குரலை கேட்டுக்கொண்டிருந்த இவனது நண்பர்களை கண்டவுடன் இவன் முகம் சுருங்கியது, இருந்தாலும் எப்படா வந்தீங்க வாங்க போகலாம் என்று நண்பர்களை கூட்டிக்கொண்டு ஆத்துப்பக்கம் விரைந்தனர்.

அந்த திடலில் ஒரு குடிசை போடப்பட்டு அதில் இளைஞர் நற்பணி மன்றம் என்ற போர்டு தொங்க விடப்பட்டு அதைச்சுற்றிலும் கலர் பேப்பர் ஒட்டப்பட்டிருந்தது. நமது இளைஞர் மன்றத்தை திறந்து வைக்க பெருந்திரளாக மக்கள் வந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. (எண்ணிப்பார்த்தால் பத்து பேர் மட்டுமே இருந்த அந்த கூட்டத்தை) பார்த்து உலகநாதன் கையையே மைக்காக வைத்து பேசிக்கொண்டிருந்தான்.

எப்படியோ உலகநாதனின் யோசனைப்படி ஒரு மன்றம் வைத்தாகிவிட்டது, அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும்போது அவர்களுக்கு பொன்னான வாய்ப்பு வந்தது. ரேசன் கடையில் சர்க்கரை வாங்க கூட்டம் வா¢சையாக சென்று கொண்டிருக்க ஒரு கட்டத்தில் கடைக்காரர் பில் போட்டவர்களுக்கு மட்டும் தந்துவிடுகிறேன், அதற்குள் நேரமாகிவிட்டதால் கடை மூடிவிட்டு, நாளை திறந்து பாக்கி உள்ளவர்களுக்கு கொடுத்து விடுகிறேன் என்று அறிவிக்க, இளைஞர் மன்றத்திற்கு செய்தி செல்ல உலகநாதன் தலைமையில் நான்கைந்து பேர் கடைக்கு சென்று கடைக்காரா¢டம் நியாயம் கேட்டனர்.

கடைக்காரர் நிலைமையை சொல்ல இவர்கள் கூட வந்தவன் அவசரக்குடுக்கையாக எல்லாருக்கும் கொடுப்பதாக இருந்தால் அமைதியாக இருப்போம் இல்லாவிட்டால் நீங்கள் பில் கொடுத்தவர்களுக்கும் போடவிடமாட்டோம் என்று சொல்ல கடைக்காரரும் அப்ப பில் கொடுத்தவங்களும் நாளைக்கே வந்து வாங்கிக்கட்டும் என்று ஒரு பாயிண்ட்டை போட, பில் வாங்கியவர்கள் அனைவரும் இந்த இளைஞர்களுக்கு எதிராக திரும்பிவிட்டனர். தம்பி உலகநாதா தயவு செய்து பேசாம இரு எங்களுக்கு கிடைக்கறதையும் கெடுக்காத என்று அவனிடம் சச்சரவு செய்ய, கடைக்காரரிடம் கோரிக்கையை வாபஸ் வாங்கி நடையை கட்டினான். இவ்வாறு முதல் போராட்டத்திலேயே கடைக்காரா¢ன் பிரித்தாளும் தந்திரத்தால் இவர்கள் தோற்றுப்போனார்கள்.

ஒரு வாரம் ஓடியிருக்கும் ஒரு நாள் இவர்கள் இளைஞர் மன்றத்தின் முன்பாக ரகளை நடந்துகொண்டிருந்தது. இளைஞர் பட்டாளம் என்னவோ எதுவோ என்று ஓடி வந்து பார்க்க அங்கு நான்கைந்து பேர் ஒரு இளைஞனை போட்டு அடித்துக்கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்ததில் இந்த இளைஞன் அந்த மன்றத்தின் வாசலில் நின்று கொண்டு போக வர இருக்கும் பெண்களிடம் வம்பு பேசுவதும் கிண்டல் செய்துகொண்டும் இருந்திருக்கிறான், சிலர் போய் கேட்டதில் நான் இந்த இளைஞர் மன்ற உறுப்பினர் என்றும் மன்றத்திற்குத்தான் வந்தேன் எனவும் சாதித்திருக்கிறான், அது வம்பு வழக்காகி கடைசியில் அடிதடியாகி, இவர்கள் மன்றத்தையே அடித்து நொறுக்கும்படி செய்துவிட்டனர்.இப்படியாக இவர்கள் சமுதாய சிந்தனை செயல்படமுடியாமல் பொது மக்களாலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது.

ஒரு மாதம் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் போனது, ஒரு நாள் அந்த ஊரில சாராயம் காய்ச்சவும் விற்கவும் பெயர் போன ஒரு பெண்ணுக்கும், அந்த தொழிலுக்கு வட்டிக்கு பணம் தரும் ஒரு பெண்ணுக்கும் சண்டை வர அதில் சாராயம் காய்ச்சும் பெண் மயக்கம்போட்டு விழ அதனால் அந்தப்பெண்ணின் உறவினர்கள் வட்டிக்கு கொடுக்கும் பெண்ணின் வீட்டை சூறையாட வர, அந்தப்பெண் விவரமாக இவளே வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து, போலீசுக்கு தெரிவிக்க போலீஸ் வந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் நம் இளைஞர் மன்ற இளைஞர்கள் மயக்கம் போட்டு விழுந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி அளிக்க அங்கு செல்ல அப்பொழுது அங்கு வந்த போலீஸ் இவர்கள் சொன்னது எதுவும் கேட்காமல் அனைவரையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஸ்டேசன் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்கள் காண்பித்த ட்ரீட்மெண்டும், இவர்களை பெற்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஸ்டேசனுக்கு வந்து யார் யாரோ கையை காலை பிடித்து இவர்களை வெளியே கொண்டு வர பட்ட பாடும் இவர்களுக்கு உணர்த்திய உண்மைகள்…

“டேய் அந்த 10-12 ஸ்பேனரை எடு? கேட்ட அந்த மெக்கானிக்கிடம் பவ்யமாய் கொண்டு வந்து கொடுத்தான் உலக நாதன், கையிலயாடா கொடுப்ப முண்டம் இந்த தடி மாட்டுக்கிட்ட கொடுத்து அந்த போல்ட்டை டைட் பன்னுங்கடா என்று பக்கத்தில் இருந்த செலவத்தை பிடித்து தள்ளினான் அந்த மெக்கானிக்.இடம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வொர்க்ஸாப்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *