இன் பாக்ஸ்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 4,481 
 

“ஏண்டி!….இன்னைக்கு எத்தனை பேர் இன் பாக்ஸில் வந்தாங்க!…”

“அதை ஏண்டி கேட்கிறே?….இன்னைக்கு மட்டும் இருபத்தி ஐந்து பேர்!……அடேயப்பா அவர்கள் விடற ஜொள்ளு மட்டும் செல் போனிலிருந்து கீழே கொட்டறதா இருந்தா… சென்னை மழை வெள்ளத்தை விட அதிகமாப் போய் விடும்!….” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் மோகனா.

“அது என்னடி நீ ஃபிரண்ட் ரிக்வஸ்ட்டை ஏற்றவுடனேயே உடனே இந்த ஆம்பளைப் பசங்க எல்லாம் உன் இன் பாக்ஸுக்கு உடனே ஓடி வந்திடறாங்க!..”

“அது தான் என் ப்ரோபைல் பிக்ஸர் செய்யற வேலை!…” என்று கர்வமாகச் சிரித்தாள் மோகனா.

“நீ ரொம்ப அழகு தாண்டி!…அதற்காக உன் பேஸ் புக் ப்ரோபைல் பிக்ஸரை கவர்ச்சியா அடிக்கடி மாற்றி ஆம்பளைகளை ரொம்பத் தான் கிறங்கடிக்கறே?….”

“இது எனக்கு நல்ல விளையாட்டு!…நல்லாப் பொழுது போகுது!…சிலர் போடும் பதிவுகளைப் பார்த்தா பாவமா இருக்குதடி! ஒருத்தன் ஒரு முறை நேரில் தரிசனம் தரமாட்டிங்களானு காலில் விழாத குறையா கெஞ்சறான்…இன்னொருத்தன் நீங்க எனக்கு பிரண்டா கிடைச்சது போன ஜென்மத்துப் புண்ணியம் என்கிறான்… இப்படி ஒவ்வொருத்தனுடைய பதிவுகளையும் பார்க்கும் பொழுது, ரொம்ப தமாஷா பொழுது போகும்! இன்னொருத்தன் என் பதிவுகள் எல்லாத்திற்கும் நீங்க லைக் போடறீங்க…அப்படினா…உங்களுக்கு என் மேலே ஒரு ‘இது’ இருக்குமென்று வழியறான்… மற்றொருவன் உங்க அழகிய முகத்திற்கு ஒரு ‘இச்’ கொடுத்திட்டேன்… அது உங்க கிட்ட வந்தா தப்பா நினைச்சிடாதீங்க என்று வழிகிறான்…”

“ஒரு பெண் மட்டும் அழகா கவர்ச்சியா இருந்திட்டா எல்லா ஆண்களையும் அடிமையாக மாற்றி விடலாம் போலிருக்கு!..” என்று சொல்லி விட்டு வர்ஷாவும் சிரித்து கொண்டே அன்று மோகனாவின் இன் பாக்ஸில் வந்த பதிவுகளை ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்தாள்.

மறு நாள். மோகனாவின் முகம் வாட்டமாக இருந்தது. ஒரு வித்தியாசமான ஒரு ஆண் அவளுடைய இன் பாக்ஸில் வந்திருந்தான். வர்ஷா தோழியின் செல் போனை வாங்கி அந்தப் பதிவைப் பார்த்தாள்

“நீ பேக் ஐடிதானே?…நீ பிராத்தல் என்று எனக்கு நல்லாத் தெரியும்!… என்ன ரேட்…எந்த லாட்ஜ்?…” என்று இருந்தது!

– மக்கள் குரல் 9-7-2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *