இது பொய்யல்ல……….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 10,416 
 

Drinking too much……
Smoking too much……

அந்த ஹை டெசிபள் பாட்டு எல்லோருடைய ஹார்மொன்களையும் தூண்டிக் கொண்டிருந்தது. எல்லோரிடமும் ஒரு ஒற்றுமை பார்க்க முடிந்தது. அந்த ஒற்றுமை, மூன்று விரல்களில் கிளாஸ், மற்றும் இரண்டு விரல்களில் சிகரெட். இரவு 11 மணி வெள்ளிக்கிழமை, சனிக்சிழமையை தொட்டுக்கொண்டிருந்தது.

சென்னை, அடையாரில் உள்ள அந்த பெரிய கிளப் வரவேற்பறையில் பில்லியர்ட்ஸ் டேபிள், அதை சுற்றி ஏழெட்டு பேர்கள், நடுவே ஸ்லீல்லெஸ் அணிந்த அந்த பெண் எல்லோர் கண்களுக்கும் விருந்தாக இருந்தாள். சாரி, சைட்டிஷ் போல் இருந்தாள்.

சுண்டி இழுக்கும் கலர் நுனி நாக்கும் இங்கிலீஷ் நடை, உடை, பாவனை, மெதப்பு எல்லாமே மேல்தட்டு வர்கத்திற்கே உண்டான மொத்தமும் ஒட்டிக்கொண்டிருந்தது.

என் பெயர் அனிருத். என் கல்லூரி நண்பன் சுந்தரும் நானும் பல வருடத்திற்குப் பிறது இன்று சந்தித்து கொள்கிறோம்.

டேய் சுந்தர், இன்னொரு ‘ஏ’ ஜோக் சொல்லட்டா…

போதும்டா, இவ்வளோ நேரம் கேட்டதே காதுகூசுது.

எங்களுக்கு அந்தக் கூட்டத்தில் ரெண்டு பேர் பேசிக் கொண்டிருந்தது மெலிதாகவும், தெளிவாகவும் கேட்டது. கவனம் ஈர்த்தது. “இந்த கிளப் டெய்லி அட்டன்டன்ஸ் லிஸ்டில் இவளும் ஒருத்திடா”. இவள் – அந்த சிலிவ்லெஸ் சிலை.

டேய், அவ முதுக கவனிச்சயா வாட்டர் ஸ்பலாஷ் செஞ்ச ஆப்பிலள் மாதிரி ஸ்வெட் ஆகி இருக்காடா. என் மூட வேற ஏத்திவிட்டுட்டா.

ஏண்டா ஒரேடியா பொலம்பற.

“ஐய்யோ என்ன இப்படி இம்சை பண்றாலே….”

பாத்துடா… ஓவரா போயிடாத. ரொம்ப ஜொல்விட்டா அவ உன்ன மதிக்க கூட மாட்டா.

போடா நீயும் உன் அட்வைஸும்.

இருக்கட்டுமே. உனக்கு இப்ப கல்யாணம் ஆகி குழந்த வேற இருக்குடா. சைலஜாவா நெனச்சா தான்டா பாவமாயிருக்கு.

சைலஜாவைப்பத்தி ஞாபகப்படுத்தாதடா. அதுக்கு நான் வீட்லயே இருந்திருக்கலாம்.

அவள எனக்கு மூனு வருஷமா தெரியும்டா. நான் பெங்களூரில் இருந்தப்ப நானும் அவளும் ஓரே டீம்-ல வேலை செஞ்சோம்.

அவ பேரு வர்ஷா. எங்க டீம்லயே இவதான் செமகட்ட. எல்லாரோட ட்ரீம் கேர்ள் கூட. அவள நெனக்காத நாள் கிடையாது.

டேய் நிஜமா சொல்டறயாடா, அவள உனக்கு தெரியுமா? எனக்கு அவள அறிமுகம் செஞ்சுவைடா.

டேய், நடவுல பேசாத நான் சொல்றத முழுசா கேளு. இவள ஒருத்தன் தொரத்தி தொரத்தி லவ் பண்ணான். ஆறே மாசத்துல்ல வேண்டியதெல்லாம் அனுபவிச்சிட்டு கழட்டி விட்டுட்டான. அதுலேர்ந்து மறந்து வரத்தான் இப்ப பெங்களூல் இருந்து சென்னை வந்திருக்கா. வீடு எடுத்து தனியாக தான் தங்கியிருக்கான்னு கேள்விபட்டேன்.

எனக்கு மட்டும் சான்ஸ் கெடச்சா…………

போதும்டா உன் கற்பனையும் நீயும். எல்லாம் பேசுவியே தவிர உன்ன பத்தி எனக்கு தெரியுமெ. நானும் தான் உன்ன பல வருஷமா பார்த்துட்டு வரேனே. ஆனாலும் உனக்கு இவ்ளோ ஆச கூடாதுடா.

டேய் சைலஜா கால் பன்றாடா. நூறு ஆயுசு அவளுக்கு.

சீக்கிரம் வாங்க. நாளைக்கு உங்க பிரண்ட் வினோத் கல்யாணம் நிச்சயத்திற்கு போகனுமே ஞாபகம் இருக்கா?

மறப்பேனாடி நான், இன்னும் 15 நிமிஷ்த்துல வீட்ல இருப்போன்.

நானும் வினோத்தும் க்ளோஸ் பிரெண்ட். ரெண்டு பேரும் கும்பகோணத்தில் +2 வரை ஒண்ணா தான் படித்தோம். ஒண்ணா தான் வளர்ந்தோம். ஸ்கூல் பீஸ் கட்டறது, பரிட்சைக்கு அப்ளை செய்வது, ஏன் நோட் புக் அட்ட போட்டு, லேபிள் ஒட்டுவது கூட ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்வோம். அவங்க வீட்டு சமையல் ரூமிற்கேபோய் அவனோட அம்மா உருளை கிழங்கு சமைச்சு வச்சா, திருட்டுதனமா காலி பண்ணிடுவோம். அவங்களும் கவனிச்சு பார்த்துட்டா சிரிச்சுட்டு போயிடுவாங்க. திட்டவே மாட்டாங்க.

மறுநாள் காலை வினோத் வீடு, கல்யாண கோலமாய் எங்கும் பேச்சு, சிரிப்பு, பாட்டு என்று அமர்களப்பட்டது.

வாடா அனிருத், உன்னதான் எதிர்பார்த்துன்டே இருந்தேன். இப்பதான் அவன் பார்ல்லருக்கு கிளம்பி போனான்.

என்னென்ன செய்யனும்னு சொல்லுங்கோ மாமி ஜமாய்ச்சுடலாம்.
நீ எனக்கு சிலது செஞ்சு கொடு. வாழமரம் கட்டனும், சமையல் மாமாவுக்கு போன் பண்ணு, மாலையெல்லாம் வாங்கிட்டு வரணும். பொண்ணாத்துல சாயிங்காலம் நான்கு மணிக்கு வரா. அதுக்குள்ள எல்லாம் முடிக்கனும். ஓரே டென்ஷனா இருக்கு.

நான் தான் வந்துட்டேன்ல, இன்னும் நிறைய டைம் இருக்கு, எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க டென்ஷன் ஆகாம இருங்கோ.

என்னமோ போடா. நீயாச்சு உன் பிரெண்ட் ஆச்சு. ரொம்ப நாளைக்கு அப்பறம் அவனுக்கு கல்யாணம் அமைஞ்சுருக்கு எல்லாம் நல்ல படியா நடக்கனும். அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா குழந்தைய பார்த்துட்டுதான் கண் மூடனும். இதுதான் என்னோட ஒரே ஆசை. மாமி கண்கலங்கினாள்.

இப்ப தான் ஞாபகம் வருது. மறக்கமாம ஆரத்திய ரெடிய எடுத்துக்கனும். கொஞ்சம் இரு புடவை நுனியை முடிஞ்சு வச்சுக்கிறேன்.

மதியம் 3 மணி.

இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க ஒரு ரொமாண்ஸ் நடக்கப் போகுது. அப்பறம் சார கைலயே புடிக்க முடியாது. இப்பவே நாள் முழுக்க செல்போனில் தான் வாய் கொப்பளிக்கறது, எஸ்.எம்.எஸ்-ல் தான் குளிக்கறது. இப்படியாக கமெண்ட் பறக்க வீடே சிரிப்பில் அதிர்ந்தது. வினோத்தின் சிரிப்பு வெட்கத்தில் ஆழ்த்தியது.

வாசலியேயே காத்திருந்த ஜம்புமாமா, உள்ளே ஓடி வந்து, பொண்ணாத்துல எல்லோரும் வந்துன்ருக்கா. வேன் தெரு கோடில திரும்பியாச்சு ரெடியா இருங்கோ. அவருடைய குரல் அவர் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.

பொண்ணு உள்ளே வருவதுக்கு முன்னாடி ஆர்த்தி எடுக்கனும். சந்தனம் குங்குமம் கொடுத்து, புதுப்பொடவ கொடுத்து மாத்திக்கச் சொல்லனும்.

ஏசி வேன் வாசலில் வந்து நின்றது.

அத்தை, மாமா, தம்பி, அம்மா, அப்பா என் ஒவ்வொருவராய் இறங்கினர். கடைசியில் பெண் இறங்கினாள். அனிருத்திற்கு அதிர்ச்சியில் நாக்கு வரண்டு, தொண்டை அடைத்தது.

கடவுயே… வர்ஷாவா இவ. இங்க எப்படி?

வினோத்கிட்ட பொண்ணப்பத்தி கேட்க எப்படி மிஸ் பன்னேன்?
இப்ப எப்படி இவள பத்தி சொல்லறது?யார்ட்ட போய் சொல்றது? வினோத் அம்மா என்ன நெனப்பாங்க? இந்த கல்யாணத்த நிறுத்தறதா?
இல்ல இதுவும் வாழ்க்கைல ஒரு பகுதிதான்னு விட்டுவிடவா?எல்லார் வாழ்க்கைலயும் இது மாதிரி ஒரு ரகசியம் ஒலிஞ்சிருக்குமா?

இப்படி அவனுக்கு வௌ;வேரான கேள்விகள், தலையை நிமிர்த்தி எங்கோயோ பார்த்துக் கொண்டிருந்தான்.

நானும் தான் வீட்ல ரொம்ப நல்ல பிள்ளையா இருந்துட்டு வரேன். யார் எப்படியோ? ஆனா என் மனைவி சாத்வீகமானவளா இருக்கனும். எனக்கே எனக்கானவளா இருக்கனும் அவ்வளோ தான். நானும் சாதாரன மனுஷன் தான். நான் ஒன்றும் பெர்வக்ட் கிடையாது. நானும் சுயநலவாதி தான்.

அங்கு நடந்து கொண்டிருக்கும் எதுவும் அனிருத் காதில் விழவில்லை.

கொஞ்சம் இருங்கோ, பொண்ணுக்கு ஆரத்தி எடுத்துரேன்.

கிழக்கு பார்த்து கொஞ்சம் நில்லம்மா.

கொழந்தே….. ஒரு பாட்டு பாடு செல்லம்……

“கொளரி கல்யாணம் வைபோகமே…….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *