இதுவரை அறுபத்திநான்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 13,586 
 

1. அக்கரவிலக்கணம்

நான் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கிறேன். எனது டியூசன் சாரை பார்க்காமல், பேசாமல் இருக்க முடியவில்லை. அவருக்கும் அப்படித்தான். நாங்கள் அவ்வப்போது தொட்டுக் கொள்வோம். எனக்கு அடிக்கடி முத்தம் கொடுப்பார். ஒரு நாள் டியூசன் கிளாசில் வைத்து அவரிடம் என்னை முழுமையாய் இழந்து விட்டேன். ஆனால் சமீபமாக அவர் என்னை கவனிப்பதில்லை. பத்தாம் வகுப்பில் படிக்கும் கிரிஜாவிடமே பேசிக் கொண்டிருக்கிறார். கேட்டால் நீ சந்தேகப் படாதே என்கிறார். என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் அவரை மீண்டும் என்வசப் படுத்துவது எப்படியென்று, வழி சொல்லுங்கள், ப்ளீஸ்..

பெயர் வெளியிட விரும்பாத வாசகி,

அந்தேரி, மும்பை

2. லிகிதம்

என்னை பிடிச்சிருக்கா?

ரொம்ப பிடிச்சிருக்கு.

3. அவஸ்தை ப்ரயோகம்

ஹலோ… ஹலோ நான் உமா பேசுறேன். அடேய் .. என்னடா கண்ணா திடீர்ன்னு போன். ஒன்னுமில்ல உங்கிட்ட ஒன்னு சொல்லனும். சொல்லுப்பா. ம்ம்ம்… அப்புறம் சொல்றேன். என்ன விஷயம் இப்பவே சொல்லேன். பணம் எதாவது வேணுமா? அய்யோ, அதெல்லாம் ஒன்னுமில்ல. ம்ம்ம் நான் அப்புறம் சொல்றேனே. – என்றபடி போனை துண்டித்து விட்டாள். அவன் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். காந்திவிலி ஸ்டேஷன் மார்க்கெட் டில் அவன் தான் அவளைப் பார்த்தான். வீட்டிற்கு அழைத்துப் போனாள். தேனீரும் உப்பு பிஸ்கெட்டும் கொடுத்தாள். பெரிதாய் எதையும் பேசிக் கொள்ளவில்லை. அவளது வீட்டாரும் அவன் வேலை, குடும்பம், வருமானம் என்று எதையும் கேட்கவில்லைதான்.

காலையில் அவளது அழைப்பு குறித்து மறந்து விட்டிருந்தான். அலுவலகப் பணியில் தீவிரமாயிருந்த போது இடையில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்ததை அவன் கவனிக்க வில்லை. அதில் ‘’ நான் உன்னுடைய வாழ்க்கை துணையாக விரும்புகிறேன்’ என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது.

அவன் அவளுக்கு கால் செய்தான். ‘’ என்ன திடீர்ன்னு இப்படியொரு முடிவு என்று கேட்டான். ‘’ எல்லா ஏங்கல்ளயும் யோசிச்சு பார்த்தேன் சரின்னு பட்டுச்சு அதான் சொன்னேன். நீ யோசிச்சு சொல்லு’’ என்று போனைத் துண்டித்தாள்.

4. கணித சாத்திரம்

சுரேஷ் ஜங்கனாவை போரிவலி கோராய் பீச்சுக்கு அழைத்துச் சென்றான். ஜங்கனா வீட்டில் பொதுக் கழிப்பிடம் போக வேண்டும் என்றால் கூட அவளது அம்மா ஆயிரம் கேள்விகள் கேட்பாள். இன்னைக்கு என்ன இந்த நேரத்துல போற? வயிறு சரியில்லையா? வெளியில எதாவது சாப்பிட்டியா? என்ன ஆச்சு? வேற எதாவது புராப்ளமா? மருந்து வாங்கலாமா? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவள். இப்படிப் பட்ட அம்மாவிடம் ஞாயிற்றுக் கிழமையில் வெளியில் போக எப்படி அனுமதி கேட்பது.

சுரேஷின் கடிதத்தை புத்தகத்திற்குள் வைத்து மீண்டும் ஒரு முறைப் படித்துப் பார்த்தாள். ‘டியர் ஏஞ்சல்’ என்று அவன் கடிதத்தை துவங்கிய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளை யாரும் இதுவரை ஏஞ்சல் என்று அழைத்திருக்கவில்லை. ஆனாலும் அம்மாவிடம் ஏதோ சாக்கு சொல்லிவிட்டு வந்து விட்டாள்.

கோராய் பீச்சில் ஞாயிற்றுக் கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆட்டோ ரிக்‌ஷாவிலிருந்து இறங்கிய அவள் முகத்தை மூடிக் கொண்டு ’இங்க வேண்டாம்’ என்று அழுது விடும் பாவனையில் கெஞ்சினாள். சுரேஷ் அவளை நோக்கி ’நாம பீச் பக்கம் போக வேண்டாம், அதோ அங்க டோன்கர் பக்கம் போகலாமென’’ பாறைகள் சூழ்ந்த பகுதிக்கு அழைத்துப் போனான்.

பயம் அவளைத் தூக்கி போட்டுக் கொண்டிருந்தது. அருகருகே உட்கார்ந்து கொண்டார்கள். சுரேஷின் மெல்லிய தொடுகை அவளை என்னமோ பண்ணியது. இடையிடையே பெப்சி, சமோசா மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். சுரேஷ் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். அவள் ’போகலாமா?’ என்ற வார்த்தையையே எல்லா கேள்விகளுக்கும் தொடுகைகளுக்கும் பதிலாகக் கொடுத்தாள். மாலை வரை இருக்கலாம் என்று திட்டமிட்டிருந்தான் சுரேஷ் ஆனால் அவள் போகலாம் போகலாம் என்று புலம்ப ஆரம்பித்ததும் சுரேஷ் கிளம்பி விட்டான்.

இரண்டு வாரங்கள் பள்ளிக்குப் போகையில் வருகையில் அவளைப் பார்த்தான், பின் தொடர்ந்தான் ஆனால் பேச முடியவில்லை. நண்பர்கள் மூலமாக செய்தி கொடுத்துப் பார்த்தான், பதிலில்லை.

சுரேஷ்க்கு பைத்தியம் பிடித்தது போலாகி விட்டது. ஹிமால்யா வித்யாலயா வாசலில் நின்று காத்திருந்தான். ஜங்கனா பள்ளி கேட்டை விட்டு தோழி ஒருத்தியுடன் சிரிப்பை சிந்திக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். ‘’ ஏன் எங்கிட்ட பேச மாட்டேங்கிற?’’ சுரேஷ் கோபமும் வேதனையும் கலந்து கேட்டான். அவள் அவனது கேள்வியை மட்டுமே புரிந்து கொண்டாள். அதற்கு மட்டுமே பதில் சொல்ல தயாராய் இருந்தாள்.

ஜங்கனாவுடன் இருந்த தோழி ‘’ சல், மை சல்தி ஹூன்’’ என்று கிளம்பி விட்டாள். ஜங்கனாவும் நடந்து கொண்டிருந்தாள். சுரேஷ் கைகளை விரித்து அவளை நிறுத்தினான். ‘’ சுரேஷ், இப்ப போ. யாராவது பார்த்துட்டாங்கன்னா எங்கம்மா என்ன கொன்னுடுவாங்க’’ என்றாள். சுரேஷ்க்கு ஆத்திரமாக வந்தது. ‘’ என்ன புராப்ளம்?’’ என்றான் சுரேஷ். ‘’ உனக்கு என்ன புராப்ளம்? என்று கேட்டாள் ஜங்கனா. ’’ அன்னைக்கு சரின்னு சொன்னல?’’ என்றான் சுரேஷ் ஆத்திரம் குறையாமல். ‘’ நான் அன்னைக்கு முழுசா சரின்னு சொல்லல’’ என்றபடி வேகம் குறைக்காமல் நடந்து கொண்டிருந்தாள் ஜங்கனா. செய்வதறியாது நின்று கொண்டிருந்தான் சுரேஷ்.

5. வேத சாத்திரம்

ஆஜ் தோன்சே பன்னாஸ் தே? அரே மீ ரெகுலர் ஆஹேனா? காய் ஜாலா? ஹா மெஹ மால் ஆஹே காய் டிஸ்காவுண்ட் தியாளா? அஹ, ஐ லவ் யூ. சல் ஹல்கட். மீனாட்சிலா பன் து ஐ லவ் யூ மண்ட்லாஸ். நாய்க மீ துஜிசி பிரேம் கர்தோ. சல், அதா கஸ்டமர்ச்சா டைம் ஆஹே, து தீட் சைவ் தே, ஒன் பிப்டி! தீட் சைவ்? , ஒன் பிப்டி. அஹ து மாஜி பாய்கோ, மை வைஃப். ஹே சல் ஹட்.. குத்ரையா… அத்தா யே லவ்கர்.. அரே தாம்.. ஹா… ஹா… ஹா

6. இந்திரஜாலம்

உன் ஹஸ்பண்ட் பாவம்ப்பா. அது கிடக்கு சனியன். அதுக்கு என்ன கொழுப்பு தெரியுமா? சரி விடு. நேத்து சாப்பாட்டு ரெடியாக கொஞ்சம் லேட்டாயிட்டுப்பா அதுக்குள்ள குக்கர தூக்கி போட்டு ஒடச்சிட்டு. அய்யோ?. ஆமா நான் ரொம்ப பயந்துட்டேன். இது சரிபட்டு வராதுப்பா, நீ விவாகரத்து வாங்கிட்டு வந்துடு. சே, அதெல்லாம் எதுக்கு, அந்த ஆளுக்கு கோபம் அதிகமா இருந்தாலும் நல்ல திறமைசாலி. என்னமா சம்பாதிக்குது தெரியுமா? இந்த ஒரு வருஷத்துல நாற்பது லட்சம் ரூவா சேர்த்துட்டுன்னா பாரேன்.

சம்பாதிச்சு என்ன புண்ணியம் பொண்டாட்டி கிட்ட எப்படி நடந்துக்கிறதுன்னு தெரிய வேண்டாமா. உனக்கு பொம்பளைய குஷி படுத்த தெரியும் அதுக்கு சம்பாதிச்சு போட தெரியும். பொம்பளைக்கு ரெண்டுமே வேணும். இந்த ரெண்டையும் ஒரு ஆம்பளையால முழுசா கொடுக்க முடியாதுதான். அப்ப உன் புருஷனுக்கு சம்பாதிக்க மட்டும்தான் தெரியுங்குற, இல்லியா? அதுக்கு எல்லாம் தெரியும் அதுக்கு எங்கிட்ட வேண்டியதுயென்ன, வீட்டையும் புள்ளைங்களையும் பாத்துக்கிட்டு சமைச்சி, துவைச்சி போடுறது அவ்வளவுதான். நானும் அதுக்கிட்ட பெரிசா எதிர் பார்க்கிறது இல்ல. சரி நான் கிளம்புறேன். இரேன், நான் குளிச்சிட்டு வந்துடுறேன். நானும் வரட்டா. ம்ம்ம் அது செகண்ட் ரவுண்ட்ல பார்க்கலாம். புள்ளைங்க எங்க? அதுங்களுக்கு நாலு நாள் லீவு, பாட்டி வீட்டுக்கு போயிருக்கு, அவரப்பத்தி தான் தெரியுமே, இப்ப எந்த தேசத்துக்கு பறந்துக்கிட்டிருக்காரோ?

7. வியாகரணம்

நீ அத டேஸ்ட் பண்ணியிருக்கியா? ‘ ஆமா? ஆமாவா? எப்ப, யார் கிட்டா? சாரி, நீங்க என்ன கேட்டீங்க? அடிப்பாவி, நீ அத டேஸ்ட் பண்ணியிருக்கியான்னு கேட்டேன், நீ உடனே ஆமான்னு சொல்லிட்ட? ஐய்யோ ச்சீ… நான் இதுக்கு முன்னாடி அதப் பார்த்தது கூட இல்ல தெரியுமா? போங்க எப்படியெல்லாம் கேட்கிறீங்க. அப்பா, நான் பதரி போய்ட்டேன்ம்ப்பா. சரி இப்ப டேஸ்ட் பண்ணுறியா? ச்சீ… வேண்டாம்… ஹேய்.. ம்ஹூம்… ம்ஹூம்..

பெருமூச்சு சுவரெங்கும் எதிரெலித்துக் கொண்டிருந்தது. குப்புறப் படுத்தான் அவன். களைத்துப் போயிருந்த போதிலும் கேட்ட மாத்திரத்தில் ஆம் என்று வந்த உடனடியான பதில் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். இன்னும் வாழ்க்கை முழுமைக்கும் சிந்துத்துக் கொண்டிருப்பான்.

8. சோதிட சாத்திரம்

சித்ரா ஓடி போயிட்டாளாம்? யாரு நம்ம பல்லன் பொண்டாட்டியா? ஆமா. அடப் பாவமே, யாரு கூட? அதக் கேட்டா நீ டென்ஷனாயிடுவ. சொல்லேன் யார் கூட போயிட்டாளாம், அவளுக்கு ஒன்பது வயசுல ஒரு பையன் இருக்கான்ல? ஆமா, இங்க முனிசிபாலிட்டி ஸ்கூல்ல படிக்கிறான். ஆனா அந்தப் பல்லனுக்கு அவ்வளவு அழகான பொண்டாட்டி தேவையில்லதான்? அவனும் அவன் மூஞ்சியும், சரி யாரோட ஓடிப் போனா, சொல்லேன்? நம்ம கடைக்கார அண்ணாச்சி இருக்கார்ல அவரு மகன் சேகரோட. அடப் பாவமே, அவன் ரொம்ப சின்னப் பயலாச்சே. ஒரு பதினெட்டு பத்தொன்பது வயசு இருக்குமா அவனுக்கு. அவ்வளவுதான் இருக்கும் இப்பதான் காலேஜ்ல படிச்சிக்கிட்டு இருந்தான். ஆனா அவன் சரியான பொம்பள பொறுக்கி, கடைக்கு போனா அவன் அட்டுலியம் தாங்க முடியாது. பாவம் என்ன ஆகுமோ தெரியல. சித்ரா புருஷன் போலீஸ்ல கம்ப்ளைண்டு கொடுத்திருக்கானாம். அவங்க ரெண்டு பேரும் ஊருக்கு ஓடி போயிட்டாங்கன்னு சொல்றாங்க. சரி பஜாருக்கு வாரியாக்கா? இரு வர்ரேன். சீக்கிரம் வா, என் ஊட்டுக்காரன் வந்தான்னா திங்குதிங்குன்னு குதிப்பான்.

9. தரும சாத்திரம்

’ஏண்டா ரெண்டு புள்ள பெத்த என் பொண்டாட்டிக்கே இவ்வளவு பெரிசா இருக்கே நூறு புள்ள பெத்தாளாமே காந்தாரி அவளுக்கு எவ்வளவு பெரிசா இருந்திருக்கும்’ என்று மூணு தலையான் தாத்தா பாரதம் கதைத் துவங்கினார்.

தாத்தாவைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர் இளம் வயதில் கூத்துகளில் நடித்திருக்கிறார். பரம்பரை சொத்தும் அவர் சம்பாதித்த சொத்துமாக குவிந்து கிடக்கிறது. ஆனால் சும்மா இருக்க விரும்பாமல் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். நான்காவது முறையா அவர் இளம் பெண்னொருத்தியை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்.

ஆரியங்களியும் கத்திரிக்காய், காராமணி கொட்டை போட்டு வைத்த கருவாட்டு குழம்புமாக அவரது மனைவி ஆராயி வந்து கொடுத்து விட்டுப் போனாள். இந்த வயதிலும் இன்னும் வீரியம் குறையாமல் இருக்கும் தாத்தாவிடம் அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டியே கூட்டம் கூடி கிடக்கும்.

பாரதம் சொல்லத் துவங்கி படுக்கை சமாச்சாரங்களை புட்டு புட்டு வைப்பார். ‘’டேய் ஊருக்கு நாட்டமையா இருக்கலாம்டா ஆனா ஊட்ல பொண்டாட்டிகிட்ட அடிமையாயிடனும் அப்புறம் எல்லாத்தையும் அவ பாத்துக்குவா’’ என்று களியை குழம்பில் தொட்டு கோழியை போல் விழுங்கினார்.

’என்னாது, எப்பப் பாத்தாலும் சின்ன பசங்களோட ஞாயம் பெசிக்கிட்டு.. போ.. சித்த நேரம் தூங்கிட்டு வா. அதுமுட்டும் நான் கடைய பாத்துக்குறேன்’ என்று ஆராயி விரட்டினாள்.

‘ஏண்டி ராத்திரிக்கு ரம்ம நேரம் முழிச்சிருக்கிறதுக்கோசரம் இப்ப தூங்க சொல்லி விரட்டுறியா?’ என்று தாத்தா காவிப்பல் காட்டினார்.

‘ அட, போன்னா.. எப்ப பாரு அதே நினைப்புத்தான்’ என்று ஆராயி ஒரு வசியப் புன்னகை செய்தாள். மூணுதலையான் தாத்தா மெதுவாக எழுந்து சற்று நேரம் முதுகை வளைத்தே நின்று கொண்டிருந்தார். பின் மெதுவாக நகர்ந்தார்.

10. யோக சாத்திரம்

நாம பிரண்ட்ஸ்சாவே இருப்போம். அப்ப எதுக்கு எங்கூட பழகின? நான் சும்மா தான இருந்தேன். நீதான பேசின பழகின, ஏண்டி கல்யாணம் பண்ண வேண்டாமுன்னா தொட்டு எதுக்கு பழகின? எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சிடு, ஆனா என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுதான் ஏன்னு கேட்கேன்? நான் எதாவது தப்பா நடக்கிறேனா? இல்ல. நீ எல்லாத்துலயும் சரியா இருக்க. ஆனா நான் உனக்கு வேண்டாம். என்ன காரணமுன்னு சொல்லு. காரணம் சொல்லத் தெரியல, நீ வேற பொண்ணு பாத்துக்கோ. வேற பொண்ண பாக்குறதா இருந்தா நான் ஏன் உங்கிட்ட கேக்கிறேன். நான் கிளம்புறேன். காரணம் சொல்லிட்டுப் போ. நான் சொல்லிட்டேன், என்ன விட்டிரு. பாய். நில்லு. என்ன காரணம். வேற யாரையாவது உனக்கு பிடிச்சிருக்கா? நான் தான் இல்லைன்னு சொல்றேன்ல. என்ன விட்டுறேன். உன்ன பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு. சைக்கோ மாதிரி பேசுற செய்ற. நான் சைக்கோவா? நான் பைத்தியமா? எல்லாம் உன்னாலதான. கத்தாத, எல்லாரும் பாக்குறாங்க. பாக்கட்டும். முடிவா என்ன சொல்ற? என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல, என்ன தொந்தரவு பண்ணாத நான் போறேன். சாவுடி. போய்ச் சாவு.

11. மந்திர சாத்திரம்

சாப்பாடு சூப்பரா இருக்கு. இப்படி யாராவது சமைச்சு போட்டா இந்த வாழ்க்கையை வாழ்ந்த மாதிரி இருக்கும். சும்மா சொல்றீங்க. இல்ல சத்தியமா.

அப்படியா, அப்ப தினமும் வந்து சாப்பிட்டுப் போங்க, ஆனா பில்லு கொடுத்திறனும். என்ன ரேட்டு? ஹய், நீங்க எது கொடுத்தாலும் சரி. எங்க வீட்டுக்கு வந்து சமைக்கச் சொன்ன வருவியா? மாட்டேன்னு எப்ப சொன்னேன். ஹேய்ய்ய்ய்…

12. சகுன சாத்திரம்

நான் உனக்கு வேண்டாம். நான் ரொம்ப அசிங்கம். இல்லப்பா, நீ சாமி மாதிரி. இல்ல நான் ரொம்ப கெட்டவ. இல்லப்பா. நீ ரொம்ப நல்லவ.

இல்ல. நான் எதுக்கும் லாயக்கு இல்ல. நமக்குள்ள ஒத்து வராது. அய்யோ அப்படி சொல்லாத. நீ இல்லன்னா… என்னால… ஒத்துக்கப்பா. உன்ன நல்லா பாத்துக்குறேன். என் சாமில்லா…

13. சிற்ப சாத்திரம்

ஏண்டி அப்படியா உனக்கு அறிப்பெடுக்கு, அண்ணன் முறையாவுதுடி. அவனோட புள்ள பெக்க அலையுறியாக்கும்.

நீ ஊட்ட சுத்திசுத்தி வரப்பவே நினைச்சேன். இந்த மாதிரி எதாவது கோக்குமாக்கு நடக்குமுன்னு. போடீ யென் அவுசாரி பு…. எங்கயாவது போய் சாவுடி தே…

14. உருவ சாத்திரம்

’சயலன்ஸ், லைட்ஸ் ஆன், ரோலிங், சவுண்ட், ஆக்‌ஷன்’ என்றதும் நடிகை ஷீலா இடுப்பை நடிகர் வெற்றியின் இடுப்புடன் சேர்த்து அசைத்துக் கொண்டிருந்தாள். ’ கட்’ என்று சொல்லாத நிலையில் நடிகையின் நடன அசைவுகளையே மொத்த யூனிட்டும் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது.

சொல்லிக் கொடுத்த நடன அசைவு முடிந்ததும் ஷீலாவே நிறுத்திக் கொண்டு யூனிட்டைப் பார்த்துச் சிரித்தாள். நடிகர் வெற்றி இன்னொரு டேக் போகலம் சார் என்று இயக்குனரைக் கேட்டுக் கொண்டார். இயக்குனருக்கும் ஆசைதான் ஆனால் டான்ஸ் மாஸ்டர் ஓகே சொல்லி விட்டதால் மேற்கொண்டு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

ஷீலா ஒரு நீளமான துணியால் உடலை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளது உடலெங்கும் பூசப் பட்ட பெயின்ட் விறுவிறுவென இழுத்தது. அவளைச் சுற்றி ஒரு ஆயிரம் கண்கள் அவள் உடம்பை இஞ்ச் இஞ்சாக கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தது.

தொடையின் இரண்டு பக்கமும் பூசப் பட்ட பெயிண்ட் கூடுதல் அரிப்பைக் கொடுத்தது. ஆனால் சொரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை. அவளால் தனது இயற்கை உபாதைகளைக் கூட கழிக்க முடியாத அளவுக்கு அவளைச் சுற்றி கண்கள்.

‘ என்ன ஷீலா, இன்னைக்கு டான்ஸ் கலக்குற, எல்லாம் ஒரே டேக்ல ஓகே ஆகுது’ என்று பிளாஸ்டிக் சேரை அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டான் ஹீரோ வெற்றி. ‘ அப்படி இல்ல சார், உங்க ரேஞ்ஜுக்கு என்னால ஆட முடியுமா என்ன?’ என்று சிரித்தாள்.

’ சரி இன்னைக்கு நைட் டின்னருக்கு போகலாம், நான் ஒன்பது மணிக்கு லாபியில வெயிட் பண்ணுறேன்’ என்றபடி எழுந்து கொண்டான். ‘’ சார், இன்னைக்கு..’’ என்று சொல்லும் முன் எழுந்து போய் விட்டான்.

உடலெங்கும் யாரோ ஊதி விட்டது போல் இருந்தது. ‘கூல் மேடம்’ என்று புன்னகையுடன் திரும்பினான் வினித். ‘ என்ன இது?’ என்றாள் மகிழ்ச்சியுடன். ஷீலாவுக்கு எப்பொழுது என்ன வேண்டுமென்று கேட்காமலேயே கொடுக்கும் மந்திரம் கற்றிருந்தான் துணை இயக்குனர் வினித்.

ஜூஸ் வேணுமா? என்று கேட்டான் வினித் கையில் சில்லென்ற தண்ணீர் பாட்டிலுடன். அவளுக்கு அப்பொழுது தண்ணீர் தான் தேவையாயிருந்தது. ‘ ஜூஸ் வேண்டாம், தண்ணீ தான் குடிக்கலாமுன்னு இருந்தேன்’ என்றாள் ஆங்கிலத்தில்.

அதற்குள் தயரிப்பாளர் வந்து விட்டார். ‘ என்ன ஷீலா, அடுத்த ஷாங் சூட்டிங் ஆஸ்திரேலியா பிளான் பண்ணிருக்கார் டைரக்டர், உங்களுக்கு ஓகே தானே’ என்று மார்பு பிளவையும் தொடைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். ‘ ஆஸ்திரேலியா போர் சார். ஈரோப் பக்கம் போகலாமே’ என்றாள். ‘ அதான் நானும் சொன்னேன், சரி ஏற்பாடு பண்ணிடலாம்’, இன்னைக்கு நைட் டின்னருக்கு ரூமுக்கு வந்துடுங்க’ என்று கிளம்பினார்.

’வினித், இன்னைக்கு டின்னர என் ரூம்க்கு அனுப்பிடு, நீயும் வா, என்ன?’ என்றாள். ‘ மேடம், ஹீரோ சார், புரோடியூசர் சார் ரெண்டு பேரும் உங்களுக்கு டின்னர் புரோபசல் குடுத்திருக்காங்க, அவங்களுக்கு என்ன சொல்லப் போறீங்க?’

’ இருக்கவே இருக்கு அந்த மூணு நாள் பிரச்சனை, அப்புறம் என்ன?’ என்று உடல் குளுங்க சிரித்தாள். யூனிட்டின் பரபரப்பு ஸ்லோ மோஷனுக்கு தாவியது.

15. இதிகாசம்

உன் அம்மாவைத்தாண்டே எனக்கு கட்டலாமுன்னு இருந்துச்சி. உன் தாத்தா இருக்கானே அவன் பெரிய கவுரவத்துல அலைஞ்சான் அப்ப. உங்கப்பங்கிட்ட அந்த வேலையத் தவிர ஒரு மஷுரும் கிடையாது. கால் ரூவான்னாலும் கவுர்மெண்டு மாப்பிள்ளைக்கு கொடுப்பேன்னு ஒத்தக் கால்ல நின்னான் உன் தாத்தன்.

உங்கப்பன் என்னத்த வைச்சிட்டுப் போயிருக்கான். ஏதோ கவுர்மெண்ட் கோட்டால சீட் வாங்கி உன்ன படிக்க வைச்சிருக்கான். உன் தங்கச்சி காரி கல்யாணத்துக்கு என்னத்த சேத்து வைச்சிருக்காம் சொல்லு. இன்னைக்கு என்ன பாரு. மூணு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சேர்த்துட்டேன். உன் அம்மாகாரி நிறத்துக்கும் அழகுக்கும் உங்கப்பன் கொஞ்சம் கூட பொறுத்தமில்லன்னு ஊரே சொல்லுச்சு. யாரு கேட்டா. இப்ப இப்படி அல்ப ஆயுசுல போய்ட்டான். உங்கம்மாவ பாரு இப்பவும் ஆளு எப்படி இருக்கான்னு. எல்லாம் விதில விதி. காரியமெல்லாம் முடிஞ்சதும் வீட்ல வந்து பாரு. கோணாருகிட்ட சொல்லி வேலைக்கு சேர்த்து விடுதேன். என்ன சரியா. ஏலேய் பாடை கட்டியாச்சாப்பா. சீக்கிரம் முடிகங்ப்பா. பொணத்துல நீர் இறங்க ஆரம்பிச்சுட்டு.

16. புராணம்

கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று / உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, / அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை / ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன; / வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும் / தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்ததுவே.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து / ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் / வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் / இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்.

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும், / ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர் / கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் / பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? (கம்பர்)

17. நீதி சாத்திரம்

மூன்று விஷயங்கள் என்னை வியக்கச் செய்கின்றன- நான்காவது எனக்கு கிஞ்சித்தும் புரிவதில்லை: வான்வெளியில் கழுகின் வழியும், பாறையின்மேல் பாம்பின் வழியும், நடுக்கடலில் மரக்கலத்தின் வழியும் ( வியப்பு) ; ஆண் பெண்ணை நேசிப்பது எங்ஙனம்? (புரியாதது). பழைய ஏற்பாடு- பழமொழி ஆகமம்- 30: 18-19

18. வைத்திய சாத்திரம்

அவன்: ஐ லவ் யூடா. அவள்: பட், ஐ டோண்ட். அவன்: நல்லா யோசிச்சு சொல்லுடி.

அவள்: நோ. ஐ செட் ஐ டோண்ட். அவன்: ப்ளீஸ்டி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டி. அவள்: நான் சொல்லிட்டேன்ல.. முடியாது, முடியாது, முடியாது. அவன்: சரி. எனக்கு மனசு சரியில்ல. நான் கிளம்புறேன். ஐஞ்சு மணிக்கு அப்புறம் போட் இல்ல. நூற்றி இருவது ரூவா டிக்கெட் பத்திரமா வந்துடு. இல்லைன்ன இங்கேயே தங்க வேண்டியதுதான்.

அவள்: ஐ லவ் யூ, ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. போதுமா. ஆண்பிள நீ, உடனே சொல்லிடுவ, நாங்க கொஞ்சம் தயங்கித்தான சொல்லுவொம். அதுக்குள்ள கோபம் பொத்துக்கிட்டு வந்துட்டு. இரு நானும் வர்றேன். டிக்கெட்டு நூற்றி இருவது ரூவாவா? ரொம்ப அதிகம்ல.

19. கனகப் பரிட்சை

நேற்றைய, இன்றைய நாளைய நட்சத்திரங்களின் பலன்கள்: – அசுவினி – புதிய சந்திப்பு, பரணி – புத்துணர்ச்சி கூடும், கார்த்திகை – காரிய வெற்றி, ரோகிணி – உற்சாக செயல்பாடு, மிருகசீரிடம் – மனக்குழப்பம், திருவாதிரை – தடை, தாமதம், புனர்பூசம் – அதிக எதிர்பார்ப்பு, பூசம் – சந்தோஷ சூழ்நிலை, ஆயில்யம் – உற்சாகம் கூடும், மகம் – காலம் கரையும், பூரம் – தண்டச் செலவாகும், உத்திரம் –ஸ்பரிஷம் உண்டாகும், அஸ்தம் – வாய்ப்புகள் அதிகரிப்பு, சித்திரை – உண்மை வெளிப்படும், சுவாதி – தேவைக்கதிக பேச்சு, விசாகம் – ஆசை நிறைவேறும், அனுஷம் – நாட்டம் மிகும், கேட்டை – காத்திருப்புகள், மூலம் – மறதி, பூராடம் – பூரிப்பு மிகும், உத்திராடம் – நண்பர்கள் உதவலாம், திருவோணம் – இறைவழிபாடு தேவை, அவிட்டம் – சந்திப்பு தவிர்ப்பு, சதயம் – துரோகம் நேரலாம், பூரட்டாதி – சந்தோஷம் குறையும், உத்திரட்டாதி – கலக்கமுண்டாகும், ரேவதி – மரண அபாயம்.

20. மதுரபாஷணம்

’சட்டைய கழத்துங்க’ என்றாள் அவள். உதட்டுச் சாயத்தையும் மீறித் தெரிந்தது வெடிப்புகள். முகத்தில் ஒருவித களைப்பு. உடலிலும் தளர்ச்சி. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் மீண்டும் சட்டையைக் கழற்றும் படி சொன்னாள். ‘ அது இருக்கட்டும், இங்க உட்கார்’’ என்று அவளை அன்புடன் அழைத்தான். அவளது வாழ்நாளில் இதுவரை யாரும் அப்படி அழைத்திருக்க மாட்டார்கள் போலும். இறைவனின் கட்டளையாய் ஏற்று அவனருகில் உட்கார்ந்தாள். அவளது கைகளை பற்றினான்.

அதற்குள் கதவு தட்டப் படும் சத்தம். பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் கையில் சில டிஸ்யூ காகிதங்களும் காண்டம்களும் வைத்திருந்தான். ‘ காண்டம் லேக்கே ஆயா கியா? என்றான் சிறுவன். இல்லை என்று தலையை அசைத்து பதில் சொன்னான். மேலும் காண்டம் தனக்கு வேண்டாம் என்றும் இந்தியில் பதில் சொன்னான். ’காண்டம் லேனா படேகா’ என்றபடி இரண்டு டிஸ்யூ காகிதங்களையும் ஒரு காண்டம் பாக்கெட்டையும் கட்டிலில் வைத்து விட்டு ‘’ பீஸ் ருப்யா தோ’ என்றான் சிறுவன். அவனது அவசரத்தை புரிந்து கொண்ட அவன் மேல் சட்டையில் பார்த்தான் ஐம்பது ரூபாய் இருந்தது. பேண்ட் பாக்கெட்டில் பத்து ரூபாய் நோட்டும் சில நூறுகளுமே இருந்தது. ஐம்பதை அவனிடம் கொடுத்தான். ‘’ தேங்க் யூ சாப்’’ என்றபடி பையன் விரைந்து விட்டான்.

மீதி காசை அவன் டிப்ஸ்சாக நினைத்திருக்கக் கூடும். ‘ நஹி கரேங்கே கியா? என்றாள் அவள். அவன் இல்லை என்றபடி அவளை இன்னும் அருகே உட்காரச் சொல்லி அவளது கைகளை வருடி தூக்கி தனது இரண்டு கைகளுக்கும் இடையில் வைத்துக் கொண்டான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ’எத்தனை வருஷமா இங்கே இருக்க?’ ‘ஐஞ்சு வருஷமா?’ ‘ எந்த ஊரு?’ கொல்கத்தா’ ‘ எப்படி இங்க வந்தே?’ ‘ புருஷன் ஆக்ஸிடெண்ட்ல செத்துட்டான். ஒரு பையன். அப்புறம் மாமியார். பம்பாய்ல எக்ஸ்போர் டெய்லர் வேலைன்னு கூட்டியாந்து இங்க விட்டுட்டாங்க’’ என்றாள் தலை கவிழ்ந்தபடி. ‘ அய்யோ?’ உனக்கு கஷ்டமா இல்ல’ அவன் அனுதாபம் காட்டினான்.

’கஷ்டந்தான். எங்க வேலைக்கு போனாலும் இதே தொந்தரவு. இலவசமா அப்படி சாகுறத விட காசு வாங்கிட்டு பண்ணிடலாமுன்னு விட்டுட்டேன்’ என்று முகத்தில் மலர்ச்சி காட்டினாள்.

’என்னை வெளியே கூட்டிட்டுப் போறீங்களா?’ ஏக்கமாய் கேட்டாள். ’ உன்னால வர முடியுமா?’ முடியாது என்பதை நாசுக்காய் சொன்னான். அவள் மவுனமானாள்.

‘நீங்க ரொம்ப நல்லவங்க’ என்ற அவளது கண்களிரண்டிலும் கண்ணீர் நிறைந்திருந்தது. ஒரேயொரு கட்டில் மட்டுமே போடும் படியான அந்த அறையின் மூளையில் மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் அங்கு அப்படி மணி ஒலித்துக் கொண்டிருக்கும். இந்த அரை மணிநேரம் இன்னும் நீண்டு போயிருக்கக் கூடாதா என்ற ஏக்கத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

21. அலங்காரம்

’ ’சார், என்ன புராப்ளம், ஏன் டல்லா இருக்கீங்க?’ என்றான் முகேஷ். ‘’ சாந்தாவுக்கு முகத்துல நிறைய முகப்பருவா இருக்குடா’ என்றான் கிஷோர் கடுங் குழப்பத்துடன். ‘ அதுக்கென்ன சார்?’ ‘ இல்ல, அதிகமா செக்ஸ் இண்ட்ரெஸ்ட் உள்ளவங்களுக்குத்தானே அப்படி வரும்பாங்க’’ என்று அமைதியானான்.

‘அதுக்கென்ன உங்களுக்கு நல்லதுதானே, ஜாலியா இருக்கும்ல’ என்று சிரித்தான் முகேஷ்.

’அதுக்கில்ல, அவ யார் கூடவாவது…’’ என்று வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தான் கிஷோர். கிஷோரையே பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ்.

22. நாடக சாத்திரம்

’ எனக்கு எதுவுமே பிடிப்பதில்லை, யாரையும் பிடிப்பதில்லை, நான் எப்பொழுதும் உங்களுடனே இருக்க விரும்புகிறேன், உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும், உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், வழி சொல்லுங்க’ ‘ அது எப்படி முடியும்?, நீ ஒருத்தி மட்டுமா இருக்க’ ‘ ஆமா தெரியும், உங்களுக்கு மணிக்கொரு ஆளு கிடைப்பாங்க, இருக்காங்கன்னு’ ‘ தப்பா சொல்லாத, அவங்கயெல்லாம் என் பக்தைகள்’ ‘ நான் மட்டும் பக்தை இல்லையாக்கும்’ ‘ நீ நெருக்கமான பக்தை’ ‘ ஆமா ரொம்பத்தான் நெருக்கம், அய்யோ மெதுவா வலிக்கு’

‘ சரி சரி மெதுவா பிடிக்கிறேன்’ ‘ நீங்க அந்த ஆந்திரா பொண்ணுக்கு ரொம்பதான் சலுகை கொடுக்றீங்க, எனக்கு பிடிக்கலை’ ‘ அப்படி இல்ல, அவ பெரிய நடிகை, மார்க்கெட்டுல அவளுக்கு நல்ல பேரு, அவ என்னுடைய பக்தையா இருக்கான்னு வெளியில தெரிஞ்சா எனக்கு நல்ல விளம்பரம் தானே’ ‘ விளம்பரத்தோட நிறுத்துங்க’ ‘ அட வேற என்ன பண்ணப் போறேன்’ ‘ ம்ம்ம்ம்… அவளுக்கு யோகா சொல்லிக் கொடுத்தீங்கன்னா’ ‘ கேட்டா சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான்’ ‘ அப்படின்னா என்ன விடுங்க…’ ‘ ஹேய் கோவிச்சுக்காத, சாயங்காலம் இண்டஸ்டிரியலிஸ்ட் வர்மா வர்றாரு’ ‘ அவருக்கு ஏற்கனவே மொட்டை நீங்க என்ன பண்ணப் போறீங்க’ ‘ உனக்கு ரொம்ப விஷயம் தெரிஞ்சு போச்சு’ ‘ ஆஹா.. அப்ப பபிதாவை போட்டுத் தள்ளின மாதிரி என்னையும் முடிச்சிடுங்க’ ‘ ஹேய் சும்மா இரு’ ‘ அய்யோ லைட்டா ஆப் பண்ணுங்க’ ‘ ம்ம்ம்’ ‘ம்ம்ம்’ ‘ம்’

23. காவ்யம்

ஆம் என்றால் இல்லை, இல்லை என்றால் ஆம். பார்க்கலாம் என்றாலும் இல்லைதான். நான் வருத்தப் படுகிறேன் என்றால் நீ தான் வருத்தப் பட வேண்டும். நமக்குத் தேவை என்றால் எனக்குத் தேவை. இது உன்னுடைய முடிவு என்றால் இது சரியான முடிவாக இருக்காது.
கண்டிப்பாய் செய் என்றால் கண்டிப்பாய் அதை செய்யாதே. நாம் பேச வேண்டும் என்றால் உன் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. விளக்குகளை அணைத்து விடு என்றால் என் வயிறும் தொடைகளும் பருத்து விட்டன. கழிப்பறை, சமையலறை சவுகரியமாக இல்லை என்றால் புதிய வீடு வாங்கலாம். நீ தூங்கிட்டன்னு நினைச்சேன் என்றால் நீ விழித்துக் கொண்டிருந்தது தெரியும்.

நீ என்னை நேசிக்கிறாயா? என்றால் விலையுயர்ந்த பரிசோ அல்லது வெளியில் செல்ல அனுமதியோ வேண்டும். என்னை எவ்வளவு நேசிக்கிறாய்? என்றால் உனக்கு பிடிக்காத ஒன்றை இன்று செய்து விட்டு வந்துள்ளேன். இதோ ஒரு நிமிடத்தில் தயாராகி விடும் என்றால் எதாவது வேலையிருந்தால் போய் பாரு இது இப்போதைக்கு முடியாது. இடுப்பு, தொந்தி பெரிதாகி விட்டதா? என்று கேட்டால் கண்டிப்பாய் இல்லையென்று பொய் சொல். உனக்குப் பேசத் தெரியவில்லை என்றால் நான் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடு.
நான் சொல்வதை கேட்கிறாய் தானே? என்றால் நீ கேட்டுத்தான் ஆக வேண்டும். உனக்கு பிடித்தமானதைச் செய் என்றால் உனக்கு பிடிக்கவில்லை என்று சொன்ன பலவற்றை நானும் செய்ய வேண்டும்.

24. காம சாத்திரம்

டேய் ஒரு ஜோக் தெரியுமாடா? நிறைய ஜோக்ஸ் தெரியும் ஆனா நீ சொல்ற அந்த ஒரு ஜோக் என்னான்னு தெரியாது, சொல்லு கேட்கலாம். பீட்டரும் ஜூலியும் கல்யாணமாகி இருபத்தைந்து வருஷம் ஒன்னா வாழ்ந்த தம்பதிங்க. அவங்களுக்கு இடையில ஒரு நாள் கூட சண்டையோ, கருத்து வேறுபாடோ, மனஸ்தாபமோ வந்தது இல்ல. அவ்வளவு ஒத்துமையா வாழ்ந்த தம்பதிங்க. அவங்களோட இருபத்தைந்தாவது திருமண நாளை நண்பர்கள் எல்லாருமா சேர்ந்து கோலாகலமா கொண்டாடினாங்க.

இருபத்தைந்தாவது மணநாள் கொண்டாட்டம் முடிஞ்சு பீட்டரும் ஜூலியும் இரவுப் பொழுதை சேர்ந்து கழிக்கலாமுன்னு முடிவு பண்ணினாங்க. அப்ப பீட்டர் கேட்டாரு ‘’ ’டார்லிங், இந்த இருபத்தைந்து ஆண்டுகள் நாம் ஒண்ணா இருந்ததுக்கு உன்னுடைய ஒத்துழைப்பும் அன்பும்தான் காரணமுன்னாரு’’ அதுக்கு ‘இல்லை பேபி, நீங்க கொடுத்த சுதந்திரம் தான் என்னை உங்களோட இவ்வளவு வருஷம் இருக்க செய்தது’’ அப்படின்னாங்காளாம் ஜூலியம்மா.

‘டியர், நான் உன் பெட்ரூமை பார்க்கலாமா?’ பீட்டர் அனுமதி கேட்டார். ‘தாராளமாக’ என்றாள் ஜூலி. ஜூலியின் படுக்கையறைக்குள் இருவருமாக நுழைந்தனர். பீட்டர் முதல் முறையாக ஜூலியின் படுக்கையறைக்கு வருகிறார். அந்த அறை மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஜூலி ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள். பீட்டர் அங்கே இருந்த பெரிய அலமாரியை ஜூலியின் அனுமதியுடன் திறந்தார். அலமாரியின் மேல்ப் பாகத்தில் விலையுயர்ந்த பட்டாடைகள் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த தட்டில் வைரங்களும், நகைகளுமாக நிறைந்து கிடந்தன. அதற்கடுத்த தட்டில் கட்டு கட்டாய் பணம் நிறைந்து இருந்தது. கடைசி தட்டில் நான்கு கோழி முட்டைகள் வைக்கப் பட்டிருந்தன. பீட்டருக்கு எல்லாவற்றையும் விட கோழி முட்டைகளைப் பற்றி, ஜூலியிடம் கேட்க ஆர்வமானார்.

‘ஜூலி டார்லிங், இத்தனை விலைமதிப்பு மிக்க பொருட்களுக்கிடையில் கோழி முட்டைகளை ஏன் வைத்திருக்கிறாய்?’ என்றார் பீட்டர். ‘என்னை மன்னித்து விடுவீர்கள் என்றால் நான் சொல்கிறேன்’’ என்றாள் ஜூலி. ‘கண்டிப்பாய் மன்னித்து விடுகிறேன், சொல்’ என்றார் பீட்டர். ‘ முதலில் உறுதி செய்யுங்கள்’ என்றாள். பீட்டரின் ஆர்வம் அதிகரித்தது. ’உறுதி, இப்பொழுது சொல்’ என்றார் பீட்டர். ‘ அதாவது நான் வேறு ஆணோடு உறவு வைத்துக் கொண்டு உங்களுக்கு துரோகம் செய்து விட்டால் அந்த பாவத்தின் நினைவாக ஒரு முட்டை வாங்கி வைத்து விடுவது என் பழக்கம்’’ என்று தலையை கவிழ்ந்து கைகளை பிசைந்து கொண்டிருந்தாள். பீட்டர் மீண்டும் அலமாரியின் அடித்தட்டில் பார்த்தார். அங்கே நான்கு கோழி முட்டைகள் பிரகாஷமாய் இருந்தது. ‘ சரி, பரவாயில்லை. இது வரை நான்கு முறை எனக்குத் துரோகம் செய்திருக்கிறாய், மன்னித்து விட்டேன்’ என்று மூச்சை இழுத்து விட்டார்.

‘ இன்னொரு விஷயம்’ என்று தயங்கினாள், ‘’ முட்டைகள் அதிகமாகி விட்டால் அவற்றை விற்று பணமாக்கி விடுவேன். பணம் அதிகமானால் நகையோ, வைரமோ வாங்கி விடுவேன்’ என்று தலையை குணிந்த படியே இருந்தாள். இந்த முறை அலமாரியின் மேல் தட்டுகளைப் பார்த்தபடி மூச்சை இழுத்தார் ஆனால் விடவில்லை.

25. வேணு கானம்

வீடு முழுவதும் சாம்பிராணி புகை மெதுவாய் தவழ்ந்து கொண்டிருந்தது. வீணையின் ஒற்றை நரம்பு மீட்டலும் அத்துடன் கலந்து வரும் இனிமை தோய்ந்த குரலும் சாம்பிராணி புகையுடன் தவழ்ந்து கொண்டிருந்தது. ராஜ்வீன் கண்களை மூடி புகையுடன் கலந்து கொண்டிருந்தாள். ஷாஹினின் பாடலில் கரைந்து கலந்து கொண்டிருந்தாள். பாட்டில் மூழ்கிய தருணங்களில் உடல் எச்சில் கின்னமாய் தினம் அசிங்கப் படுவதை மறப்பாள்.

ராஜ்வீன் பாதாம் கீரை பிரத்யேகமாக தயார் செய்தாள். ஷாஹினுக்கு பாதம் கீர் என்றால் கொள்ளைப் பிரியம். யார் எங்கே எப்பொழுது பாதம் கீர் கொடுத்தாலும் சாப்பிடுவாள்.

ஷாஹின் மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள். ஆடைகள் நீங்கிய மேனியுடன் ராஜ்வீன் ஷாஹினை தழுவினாள். ராஜ்வின் பாடலை இன்னும் உரக்கப் பாடினாள்.

பாதாம் கீரை மெல்ல பருகக் கொடுத்தாள் ராஜ்வீன். பாட்டின் மயக்கத்தில் ஷாஹின் குடித்துக் கொண்டிருந்தாள். எஞ்சியதை ராஜ்வீனும் குடித்தாள். தான் இப்படி செய்வது குறித்து அவளுக்கு உணர்வில்லை. தந்தம் போன்ற மேனி மெதுவாய் நீலம் படர்ந்து கொண்டிருந்தது.

அந்த ஹவேலி முழுவதும் என்றைக்குமில்லாத அளவுக்கு அன்று இரவு முழுவதும் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் அன்றைக்குப் பிறகு என்றைக்குமே பாட்டுச் சத்தம் கேட்கவில்லை.

26. நிருத்திய சாத்திரம்

நடிகை கேத்ரீனாவின் புகைப்படம் கண்டு இடப் பட்ட மறுமொழிகள்.

1. அம்ரி: கேட்டி, நீ ரொம்ம்ம்ம்பவும் அழகாய் இருக்கிறாய். 2. சலீம்: என்ன அழகு? , நீ தான் எல்லாரையும் விட பெஸ்ட் 3. அமன்: ஹேய், கேட்டி, நீதான் எப்பொழுதும் எங்களுக்கு உலக அழகி. 4. காதலன்: உன்னைக் காதலிக்கிறேன். 5. மரியம்: நீ இயற்கையாகவே அழகானவள்… உனது உதடுகள் சூப்பர். 6. தேவ்: நீ ரொம்பவும் அழகாய் இருக்கிறாய், சல்மான் உனக்கு வேண்டாம். 7. கன்னா: உன் அழகுக்கு அலங்காரம் தேவையில்லை. 8. அக்பர்: நீ உலகின் மிக செக்ஸியான பெண். 9. சோனு: நீ ரொம்பவும் ஹாட்ட்ட்ட். 10. முகுல்: கோடானுகோடி தேவர்கள் இருக்கலாம் ஆனால் கேத்தரீனா, நீ மட்டும் தான் தேவைகளுக்கெல்லாம் தேவதை.11. அனானி: சரியான கட்டை. 12. மஹரூ: கேத்ரீனா, உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உன் மேல் பைய்த்தியமாக உள்ளேன். 13. மன்னு: மேக்கப் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ அழகு. 14. தன்யா: I wanna **** you kat and i will surely one day **** in both ur **** ****** and big ***.

27. சப்த ப்ரம்மம்

மலர்விழி கைக் கடிகாரத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டாள். மகேஷ் பத்து மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தான். மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. கைத்தொலைபேசியில் அழைத்தால் துண்டித்து விடுகிறான். கண்டிப்பாய் மலர்விழி காத்துக் கொண்டிருப்பது தெரியும் ஆனால் எங்கோ மாட்டிக் கொண்டிருக்கிறான். ‘ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாம்’ என்று மலர்விழி உதடுகள் பிரித்து சொல்லிக் கொண்டு ‘பச்ச்’ என்ற ஓசைப் புள்ளி வைத்தாள். கைப்பேசியில் மெசேஜ்க்கு பொத்தான்களை பொறுமையின்றி அழுத்திக் கொண்டிருந்தாள்.

அவ்வழி கடக்கும் அத்தனைக் கண்களும் அவளை மொய்த்தபடி கடந்தன. திரும்பி விடலாம் என்றிருந்தது அவளுக்கு. கையில் வைத்திருந்த இருபது சிகப்பு ரோஜாக்களும் அவள் அசைகளுக்கேற்ப ஆசைந்து கொண்டிருந்தது.

28. வீணையிலக்கணம்

ஞானச் சுடராய் மூத்தவன் முன்னகர, ஒளிவாங்கி ஜொலிக்கும் சந்திரன் போல் வடிவலகாய் அடுத்தவன் பின் தொடர, அவன் பாதச் சுவடுகளை பற்றி நடந்தார்கள் மற்றவர்கள். வில் வளைக்கும் வீரனுக்காய் பெண்ணொருத்தி மாலையுடன், கண் வருத்தி கால் நிறுத்திக் காத்திருக்க, மாளிகையின் வாயில் நுழையும் கட்டழகன் உரு கண்டு, தூலிகையால் எழுதிய நாயகி காமம் கொண்டு, காற்றில் பரப்பினாள் காதல் வாசம், கண் உயர்த்திய அவன் அடைந்தான் காதல் தேசம், கண்ணென்னும் அம்பராத்தூணியிலிருந்து பார்வைக் கணைகளை பரிமாறிக் கொண்டன அந்நான்கு விழிகள். கலிங்கென கால்களிடையில் விழுந்தது அறுந்த மேகலையின் மணிகள். தந்தனம் தந்தனம் தத்தி தந்தனம் தத்தி தத்தி தந்தனம் என்று பெரியசாமி வட்டமடித்துக் கொண்டிருந்தான்.

கண்ணிமைக்காமல் மரகதம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ என்னாடியம்மா, இப்படி தொறந்துட்டு உக்காந்துருக்க வாய, உள்ள பூந்துரப் போவுதுடி கொசு’ என்று கோமாளித் துள்ளிக் கொண்டிருந்தான்.

29. மிருதங்க சாத்திரம்

’ ஒரு நாள், அவ பொய்கையில் குளிச்சிக்கிட்டிருந்தா. ஆம்பளைங்க குளிச்சிக்கிட்டிருந்த பக்கமா. தலை முடிய விரிச்சி காயப் போட்டுக்கிட்டு பாறை மேல அஞ்சு தலையோட ஒரு உருவம் நின்னத பார்த்தாளம். அந்த உருவம் குளிச்சிட்டு ஏதோ மோன நிலையில கண்ண மூடிக்கிட்டு நின்னுச்சு. கட்டுமஸ்தா அம்மனமா நின்ன அந்த ஆளை கூர்ந்து பார்த்தா அவ. அட இது நம்ம நாயகன் தான், அவருக்குத்தானே அஞ்சு தலை இருக்கும்முன்னு ஓடிப் போய் கட்டிக்கிட்டா.

இவளும் அம்மனமா இருந்தாளா. யாரோ கட்டிப் பிடிக்கிறத உணர்ந்த அந்த உருவம் கண்ண தொறந்து பார்த்துச்சாம். அட இது நம்ம தோஸ்த்தோட சம்சாரம்லன்னு திடுக்கிட்டு தள்ளப் பாத்துச்சாம். ஆனா அதுக்குள்ள அவ முக்கி மொனங்கி என்னமோ பண்ணிக்கிட்டிருந்தா. நல்ல இருக்கே!!!ன்னுட்டு அந்த அஞ்சு தல ஆசாமியும் சந்தோஷமா இருந்திருக்காரு. அதுக்குள்ள இந்த பொம்பளையோட ஒரிஜினல் புருஷன், தன்னோட ஞான திருஷ்டியால விவரத்தை தெரிஞ்சுகிட்டு ஓடி வந்தாராம்.

பொண்டாட்டிய இழுத்து ஓரமா வீசிட்டு, இடுப்பில் இருந்த வாளை எடுத்து அந்த அஞ்சு தல ஆசாமியோட ஒரு தலைய வெட்டிட்டாராம். அதுல இருந்து அவருக்கு நாலு தலைதான்’ என்று அதுவரை கையில் வைத்து சுருட்டிக் கொண்டிருந்த புகையிலையை வாயில் போட்டாள் பாட்டி.

30. தாள சாத்திரம்

’என்னான்னு தெரியலடா, இன்னைக்கு ரொம்ப வலிக்குடா’ என்று கோவிந்தன் சோர்ந்து படுத்துக் கிடந்தான். பீடியை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தான் ரமேஷ். ‘ என்னடா, ஒரு மாதிரியா இருக்க?’ இல்லடா, புள்ளைய ஸ்கூல்ல சேர்க்கனும், டோனேஷனுக்கு பணம் தேவைப் படுது, தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்காங்க, கல்யாணச் செலவு என் தலையில தான் வந்து விழும் அதான்’ என்று புகையை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தான்.

’ நீ கல்யாணத்துக்கப்புறம், ரொம்ப மாறிட்டடா ரமேஷ், எப்ப பார்த்தாலும் பணம் பணம்ன்னுட்டு, ஆசையா ரெண்டு வார்த்தை பேசக் கூட மாட்டேங்குற’ என்று கோவிந்தன் ரமேஷின் முதுகில் படர்ந்தான். ‘ சே தூரப் போடா’ என்று சலிப்பு காட்டினாள். ‘ ஏன் கோபம்’ கோவிந்தன் வருடினான். ‘ கோபம் இல்லடா, ரொம்ப புழுக்கமா இருக்கு அதான்’ என்று பீடியை தரையில் தேய்த்தான். பேச்சு மற்றும் அத்தனை நடவடிக்கைகளிலும் ஒருவித இழுவையைக் காட்டிக் கொண்டிருந்தான் ரமேஷ்.

’நாம இனிமே சந்திக்க வேண்டாம்டா’ கோவிந்தன் தீர்மானமாகச் சொன்னான். ‘ ஏன் என்னா ஆயிட்டு?, ஏதோ ஒரு நாள் மூட் ஆஃப்பா இருந்ததனால இப்படியா கோவிச்சுக்கிறது?’ ரமேஷ் குரல் மாற்றினான். கோவிந்தனின் தாடையில் கையை வைத்து தடவிக் கொடுத்தான்.

’இல்ல ரமேஷ், உனக்கு கல்யாணம் ஆயிட்டு, இனிமே நீ உன் குடும்பத்த கவனிக்கனும், இதுக்கு எடையில என்னையும் வச்சுக்கிட்டு நீ கஷ்டப் படுவியே அதான்’ என்றபடி பாயிலிருந்து நூல் இழுத்தான்.

‘ ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?’ ரமேஷ் பீடிகை போட்டான். ’ என்னடா சொல்லு, உன் மேல நான் எப்ப கோவிச்சிருக்கேன்?’ கோவிந்தன் ரமேஷின் மடியில் படுத்துக் கொண்டான்.

‘ உனக்கு உங்கப்பாவோட வேலை கிடைச்சிருக்கு, நல்ல சம்பாதிக்கிற. பொறுப்பா இருக்கிற, எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது, நீ என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிறியா?’’ என்று குழந்தையைப் போல் கெஞ்சலாய் கேட்டான் ரமேஷ்.

கோவிந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘டேய் என்னப் பத்தி தெரியும்ல, நாம ரெண்டு பேரோட ரிலேஷன் என்னான்னு ஊருக்கே தெரியும்டா, இந்த நிலைமையில’ கோவிந்தன் எழுந்து உட்கார்ந்தான்.

‘ எதுவும் ஆகாது என் தங்கச்சிக்கிட்ட கூட கேட்டுட்டேன், அவளும் சரின்னு சொல்லிட்டா, மத்தது உன் கையிலதான் இருக்கு’ என்றபடி ரமேஷ் நம்பிக்கையாய் புன்னகைத்தான்.

’என் கையில் எங்க இருக்கு, நீ தான் குடுக்க மாட்டேங்கிறியே’ என்று குப்புற படுத்து தலையணையில் முகம் புதைத்தான். கோவிந்தன் மேல் படர்ந்தான் ரமேஷ்.

31. அஸ்திர ப்ரயோகம்

சாப்பாட்டு மேசையின் மேல் வெட்டி வைக்கப் பட்ட பழங்கள். உயர்ரக தேயிலை கொண்டு தயாரிக்கப் பட்ட தேனீர். ரகு தேனீரை உறிஞ்சியபடி செய்தித்தாளில் மூழ்கியிருந்தான். சுதாவும் நாவலின் பக்கங்களில் மூழ்கியிருந்தாள். ரகுவும் சுதாவும் சாப்பாட்டு மேசையின் இரண்டு முனைகளில் துருவங்களைப் போல் உட்கார்ந்து பரிட்சைக்கு படிக்கும் பிள்ளைகளைப் போல் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ரகுவின் அம்மாவுக்கு தனது மகன் மற்றும் மருமகளின் பழகும் முறை புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. தினமும் காலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இப்படி துருவங்களாய் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் சாப்பிடும் போதும் பேசிக் கொள்வதில்லை. மாலையில் பிள்ளைகளுடன் பேசுகிறார்கள். சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியில் செய்தி. பின் வாசிப்பு தூக்கம். காலையில் வாக்கிங்கின் போதும் பேசிக் கொள்வது கிடையாது. ஒரு வேளை இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபடு இருக்குமோ என்று ரகுவின் அம்மாவுக்கு சந்தேகம். இதை இரண்டு பேரிடமும் கேட்டு விடலாம் என்று முடிவு செய்தாள்.

வழக்கம் போல் வாசிப்பில் மூழ்கியிருந்தவர்களை பெயரிட்டு அழைத்தாள். ‘ ரகு, உன் பொண்டாட்டிக்கும் உனக்கும் எதாவது பிரச்சனையா?’ என்றாள் அம்மா. அம்மாவின் இந்தக் கேள்வி ரகுவுக்கு வியப்பாக இருந்தது. செய்தித்தாளை மேசை மேல் வைத்து விட்டு. ‘ அப்படியொன்றுமில்லை’ என்று அம்மா பேசக் காத்திருந்தான். சுதாவும் கையில் வைத்திருந்த புத்தகத்தை வைத்து விட்டு தானும் பதிலளிக்க நேரிடலாம் என தயாராக இருந்தாள்.

‘ரகு, நான் இங்க வந்து அஞ்சு மாசமாச்சுடா, நீயுன் உன் மனைவியும் பேசிக் கிட்டத பார்க்கவே இல்ல, உங்களுக்குகுள்ள என்ன பிரச்சனை ? ரகுவும் சுதாவும் வாய்விட்டு சிரித்துக் கொண்டார்கள்.

‘ சுதா, உனக்கு எங்கிட்ட பேச எதாவது இருக்கா?’ என்றான் ரகு. ‘ இல்லை அப்படியொன்னும் இல்லை, இந்த மாசம் பில் எல்லாம் செட்டில் ஆயிட்டு, ம்ம்ம்ம் அப்புறம் ஒன்னுமில்லை, ஏன் உனக்கு எங்கிட்ட எதாவது பேசனுமா’ சுதா பதிலை முடித்தாள் கேள்வியுடன். ‘ ம்ம்ம் அப்படி ஒன்னுமில்லை’ என்று சுதாவுக்கு பதிளலித்து அம்மாவை நோக்கி ‘ அம்மா, அவளுக்கும் பேச எதுவுமில்லை, எனக்கும் எதுவுமில்லை, அப்புறம் என்ன பேச, எதாவது விஷயம் இல்லாம நாங்க எப்படி பேசிக்க முடியும்’ என்று முடித்த போது அறிவுச் சுடராய் மின்னினான் ரகு.

அம்மா அமைதியாக எழுந்து கோவிலுக்கு கிளம்பினாள். எப்பொழுதும் சொல்லிக் கொண்டு போகும் பழக்கமுள்ளவள் அன்று சொல்ல வில்லை. ரகுவோ, சுதாவோ ஏன் என்று கேட்டுக் கொள்ளவுமில்லை.

32. இரதப் பயிற்சி

’ ஹலோ பிரகாஷ்’ ’யெஸ், ஹேலோ நீங்க யாரு?’ ’ நான் மஞ்சு, மஞ்சுளா பேசுறேன்’ ‘ மஞ்சுளா… மஞ்சுளா…. எந்த மஞ்சுளா, ஞாபகம் வரலையே’ ‘ ஹாங் அதுக்குள்ள மறந்தாச்சா… மீரா ரோடு, காஷிமிரா… ஒல்லிப் பொண்ணு’’ ‘’ ஹேய் மஞ்சு, நீயா…’, வாவ் எவ்வளவு வருஷமாயிட்டுப்பா. எப்படி இருக்க? கல்யாணம் ஆயிட்டா? ‘ ம், உனக்கு?’ ‘ எனக்கும் ஆயிட்டுப்பா, என்னால நம்பவே முடியல, என் நம்பர் எப்படி கிடைச்சது? ‘ இப்ப, போரிவலி ஸ்டேஷன் பிரிட்ஜ்ல வைச்சு செல்வத்தைப் பார்த்தேன் அவன் தான் குடுத்தான்’

‘ வாவ், லைஃப் எப்படிப்பா போகுது, அம்மா உன்னப் பத்தி அடிக்கடி கேட்பாங்க, தேவதை மாதிரி இருக்கும் அந்தப் பொண்ணும்பாங்க?’ ‘ சும்மா சொல்ற, சரி உன் வைஃப் என்ன பண்றாங்க? ‘ அவ ஒரு பிரவேட் கன்சர்ன்ல புரடக்ட் மேனேஜரா இருக்கா. நான் விப்ரோல இருக்கேன் தெரியும்ல’ ‘ ஆங் தெரியும், செல்வம் சொன்னான்’ ‘ சாரிப்பா… ‘ ‘ எதுக்கு?’ ‘ம்ம் சும்மா, ஹேய் நாம மீட் பண்ணலாமா?’ ‘ வேண்டாம்’ ‘ ஏன்’ ‘’ வேண்டாம்’ ‘சரி போன் நம்பர் குடு’ ‘ நம்பர் இல்ல’ ‘ ஹேய், நான் தொல்லை பண்ண மாட்டேம்ப்பா’ ‘ அது தெரியும், பட்,, நம்பர் வேண்டாம்’ ‘ உன் ஹஸ்பண்ட் ரொம்ப ஸ்டிரிக்ட்டா’ ‘ அப்படியொன்னுமில்ல’ ‘ சரி நீயே போன் பண்ணு’ ‘ இல்ல இதுதான் லாஸ்ட் கால்’ ‘ என்னப்பா, இத்தனை வருஷம் கழிச்சு காண்டாக்ட் கிடைச்சிருக்கு, நீ இப்படி பேசுற’ ‘ உன்னோட பேசனுமுன்னு தோணுச்சு பேசிட்டேன், அவ்வளவுதான், இனிமே வேண்டாம்’ ‘ ஹேய் என் மேல இன்னும் கோபமா? ‘ நான் போன் வைக்கிறேன், பாய்’ ‘ ஹேய் இது எங்குள்ள நம்பர்? ‘ பிசிஒ, பாய், டேக் கேர்’ ‘ டேய்… டேய்’

33. கஜப் பரிட்சை

Naan unna hug pannittu thoonguren – sari- eppavum un feelinga irukku- oh! Sari thoongu- nee veenum- sari veetukku vaa- enakku oru maadriyaa irukku- thoonguda- unakku muththam- thank you, thoongu- neeyum vaa- sari, ippa thoongu- Gd Nt- call pannatta- vendam, thoongu- vaa- thoongu- GNt

34. அசுவப் பரிட்சை

’ ஹேய் ஹரி உன் மனைவி சூப்பரா சமைக்கிறாப்பா,. நீ ரொம்ப குடுத்து வைச்சவன்’ என்றபடி ராக்கேஷ் பரோட்டாவை இரண்டாய் மடித்து வாயுக்குள் திணித்தான். ‘ ஹரி உன் பொண்டாட்டி , சமையலைப் பத்தி அவகிட்ட எப்பவாவது சொல்லியிருக்கியா?’ ராக்கேஷ் பரோட்டாவை விழுங்கியபடி பேசினான். ‘ என்ன சொல்றது?’ ஹரி சாதாரணமாய் கேட்டான். ‘ இல்லப்பா, இந்த மாதிரி டேலண்ட்ட எல்லாம் அப்ரிஷியேட் பண்ணனும், இல்ல இப்ப வேற யாராவது வந்து உங்க சமையல் சூப்பர்ன்னு சொல்லிட்டா, உன் மனைவிக்கு அவங்கள பிடிக்க ஆரம்பிச்சிடும், சோ நீயே போதுங்கிற அளவுக்கு பாராட்டிடுறது நல்லது. ஏன்னா அவங்க நல்லா சசைக்கிறத நீ தடுக்க முடியாது இல்லையா, சோ டேக் கேர்’ என்று இன்னொரு பரோட்டாவையும் எடுத்து வாயில் திணித்துக் கொண்டான்.

ஹரிக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. திடீரென மனைவியைப் எப்படி புகழ்வது. எப்படித் துவங்குவது. அன்றுமுதல் அலுவலகத்தில் யாருடனும் சாப்பாட்டை பகிர்ந்து கொள்வதை நிறுத்தி விட்டான்.

35. இரத்தினப் பரிட்சை

சுமித்க்கு குழப்பம் அதிகமாகிக் கொண்டே போனது. இதுநாள்வரை பிரபா ராஜ்குமாரை அல்லவா விரட்டி துரத்திக் காதலித்துக் கொண்டிருந்தாள், இப்பொழுது என்னவாயிற்று. இப்பொழுது திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அபிஷேக் அத்தனை அழகில்லையே, அறிவு என்பது மருந்துக்கும் அவனிடம் கிடையாது. சுமித்தின் குழப்பம் வருத்தமாக மாறிக் கொண்டிருதது.

கையில் டீயுடன் வந்தான் சுபோத் ‘ என்னடா சுமித் புராஜெக்ட் முடிச்சிட்டியா?’ என்று உட்கார்ந்தான். ‘ டேய், நம்ம பிரபாவுக்கு மேரேஜ் அரேஞ் ஆயிருக்கு, மாப்பிள்ளை நம்ம ராஜ் இல்லடா, அந்த ஹோட்டல் ஓனர் பையன் அபிஷேக்’ என்று அதிர்ச்சி குறையாமல் சொல்லி முடித்தான்.

’ அதுக்கு என்னடா, நான் ஐயாயிரம் ரூவா கேரளா சில்க் சாரியோட தப்பிச்சேன், ராஜ் பாவம் அவளுக்காக லோன்ல வீடு கூட வாங்கினான், பையன் இப்ப படுறான். டேய் அவ நல்ல அல்வா பார்டிடா’ என்று டீயை கூலாக குடித்துக் கொண்டிருந்தான்.

தானும் ஆராயிரம் ரூபாய்க்கு ரே பான் கூலிங் கிளாஸ் வாங்கிக் கொடுத்திருப்பதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. தனக்குத்தானே சிரித்துக் கொண்டு. காபி இயந்திரத்தை நோக்கி நடந்தான்.

36. பூமிப் பரிட்சை

‘ …..அதுக்கு என்ன பண்றது, விட்டா கவுர்மெண்டு உத்யோகம் கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அப்பன் வேலை உங்க மூத்த பையனுக்கு போச்சு இப்ப மூத்தப் பையனும் தவறிட்டான், மருமகளுக்கு வேலைய கொடுக்கலாம், ஆனால் புள்ளைக்கு படிப்பறிவு கொஞ்சமும் இல்ல. இதுல பொண்ணுக்கு கர்பம் வேற. பேசாம, சின்னவனுக்கு இந்தப் புள்ளையக் கட்டிக் குடுத்துட்டு, வேலைய அவன் பேருக்கு எழுதி கொடுக்கச் சொல்லுங்க’ என்று ஷர்மாஜி தீர்வாகச் சொன்னார்.

’பையனுக்கு பத்தொன்பது வயசுதான் ஆவுது, மருமகளுக்கு ஒரு இருபத்தஞ்சு இருக்கும், வயசு பொறுந்துமான்னுதான், அதில்லாம தாயும் பிள்ளையுமா பழகிட்டுதுங்க பாவமில்லையா’ அம்மா தடுமாறிப் பேசினாள். ’அதெல்லாம் ஒன்னுமில்லைங்க, இன்னைக்கு எதுவுமே பாவமில்லை. இப்ப நீங்க வேலைய மட்டும் பிடிக்கப் பாருங்க. அப்புறம் மத்தத பார்த்துக்கலாம்’ என்று எழுந்து கொண்டார்.

குமட்டலை கட்டுப் படுத்த முடியாமல் வாசலில் உட்காந்து எச்சிலும் சோறுமாக வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

37. சங்கிராமவிலக்கணம்

’ஏட்டி சேதி கேட்டியா, இந்த செல்வி புள்ளைக்கு மடி அவுந்துட்டாமே, பாவம் பச்சபுள்ள, மொசல் குட்டி மாதிரி துள்ளிட்டு திரிஞ்சது சீக்கு கோழி மாதிரி முடங்கிட்டு’ என்று குத்தவைத்தாள் இசக்கி. ‘ அவளுக்கும் அவ புருஷனுக்கும் இருக்கிற ராங்கிக்கு அப்படித்தான் ஆவும்’ என்று தாடை இடித்து துவையல் அரைத்துக் கொண்டிருதாள் மங்கலம். ‘ சீ அப்படிச் சொல்லாத, என்னதான் இருந்தாலும் தலைபுள்ளைக்கு மடி நிறைச்சவ தவற விட்டுட்டா, பாவப் படுவியா பழி போடுற’ என்று அரைப்பதற்காக தட்டில் வைத்திருந்த பொட்டுக் கடலையில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். ‘ குறையா அள்ளுடி, நானே கடலை காணாதுன்னு இருக்கேன், இந்த செல்வி புள்ளையும் அவ புருஷனும் முந்தா நா, தோட்டத்து மரத்துல நின்னுகிட்டே.. சனியங்க’’ என்று உரலை இன்னும் வேகமாக சுற்றினாள்.

’ அட சின்னதுங்க, அப்படித்தான் இருக்கும், ஏன் கல்யாணம் ஆன புதுசுல நீ மச்சான் மேல ஏறி படுக்கலையா’ என்று கையில் மீதமிருந்த கடலையையும் வாயில் போட்டுக் கொண்டாள். ‘’ ஆமா, உன் மச்சான் பாயும் புலி, ஏதோ மழைக்கு ஒதுங்குனாப்புல ஒதுங்கி இதோ நோஞ்சான் மாதிரி ரெண்ட பெத்துக்கிட்டேன் வேற என்ன சொகத்த கண்டேன்’ என்று சுருதி குறைந்தாள் மங்கலம்.

‘ சரி, நான் வரேன்க்கா, அந்த செல்வி புள்ளைய ஒரு எட்டு பாத்துட்டு போயிடுறேன்’ என்று எழுந்தாள். ‘ இர்றேன், இத வழிசிட்டு நானும் வர்றேன்’ என்று மீண்டும் வேகம் கூட்டினாள் இசக்கி.

38. மல்யுத்தம்

’அந்த மூணாவது டேபிள்ல இருக்கிறவன் என்னையே பார்க்கிறான்’ என்று புன்னகைத்தாள் எஸ்தர். மெனுவைப் புரட்டிக் கொண்டிருந்த கிட்டு நிமிர்ந்தான். அவள் புன்னகை மாறாமல் எங்கெங்கோ தாவி அந்த மூணாவது டேபிளுக்குப் போய் சேர்ந்தாள்.

‘ அவன் உன்னையே பார்க்கிறாங்கிறது உனக்கு எப்படித் தெரியும், ஏன்ன நீயும் அவனையே பார்த்துக்கிட்டு இருக்க, சரியா?’ என்றான் கிட்டு மெனு கார்டை மூடியபடி.

எஸ்தருக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. ‘என்ன சாப்பிடுற?’ கிட்டு அவள் கைகளைப் பிடித்தான். ‘ப்ச்ச்’ என்று கைகளை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். ‘இப்ப என்னாவாயிட்டு இப்படி கோவிச்சுக்கிற?’ என்றான் கிட்டு அன்பாய். ‘ அவன் என்னைப் பார்க்கிறான்னு சொன்னேன் அதுக்கு நீ எப்படி பேசுற’ என்று முகத்தை இருக்கினாள்.

‘அத விடுப்பா, அவன் உன்னையே பார்க்கிறான்னு நீ சொல்ற, நீ அவனையே பார்க்குறதா அங்க அவன் சொல்லிட்டுயிருப்பான். விடு. நீ பார்க்கிறத விட்டா எல்லாம் சரியாயிடும்’ என்றபடி வெயிட்டரை அழைத்தான்.

39. ஆகரூடணம்

’ஏன் பாட்டி தாத்தாவ தவிர யாரையாவது காதலிச்சிருக்கியா?’ ஆரஞ்சு சுளைகளை உரித்தபடி கேட்டள் நித்தியா.

’காதல்ன்னு சொல்ல முடியாது, ஆனா ஒருத்தன் இருந்தான். நல்லா வாட்டசாட்டமா இருப்பான். என்னப் பார்க்காம இருக்க மாட்டான். நல்ல முரடன். எல்லா வேளையும் தெரியும் ஆனா ஒரு வேளைக்கும் போக மாட்டான். தேவைப்பட்டா ஒரு நாள் வேலை கால் நாள்ல முடிச்சிட்டு காசு வாங்கிட்டு கிளம்பிடுவான். அவன சுத்தி நிறையப் பொண்ணுங்கள் அலைஞ்சாலுவ. அவன் யாரையும் கண்டுக்க மாட்டான். ஆளு வாட்ட சாட்டமா இருப்பான்ல அதான் மவுசு. ஆனா அவனுக்கு நான்னா உசிரு. கல்யாணத்துக்கு முன்னாடி நான் சாயங்காலம் எங்க கிளம்பினாலும் வந்து புதருக்குள்ள தூக்கிட்டு போயிடுவான்.

என்னால தாங்க முடியாது. ரொம்ப வலிக்கும் ஆனா அவன் சந்தோஷமா இருக்கிறத பார்க்கிறப்ப எல்லாம் மறந்து போகும். இத்தனைக்கும் ஒரு வார்த்த பேசியிருக்க மாட்டோம். எதுவும் வேண்மான்னு அவனும் கேட்க மாட்டான் நானும் சொல்ல மாட்டேன்.

இது எங்கப்பனுக்கு தெரிஞ்சு உறவுக்காரங்க கல்யாணமுன்னு பக்கத்து ஊருக்கு கூட்டியாந்து எனக்கு ரவோட ராவா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. கல்யாணத்துக்கப்புறம் அவன் என்ன ஒரு தரம் பார்த்தான். அதுக்கப்புறம் இன்னும் பார்க்கல’ என்று பாட்டி ஆரஞ்சு சுளையை வாயில் போட்டாள். அது பல் இருக்கும் இடம் தேடி சவை பட்டது. பாட்டியின் மவுனம் அவள் எங்கோ கடந்து போய்விட்டதை உணர்த்தியது.

40. உச்சாடணம்

’பண்டாரவாடாவில நம்ம சைக்கிள் கடக்கார அண்ணாச்சி மவள காணலியாம்ல’ அம்மா கீரை ஆய்ந்து கொண்டு தகவல் சொன்னாள். மேலும் அவள் சொல்லும் பாவனையில் பாலுவுக்கு எதாவது தெரியுமா என்று கேட்பது போலவும் இருந்தது. ‘ தெரியலம்மா, அவ எம்பிஏ படிச்சிக்கிட்டிருந்தால்ல?’ என்று அம்மாவிடமிருந்து மேலும் தகவல் கிடைக்குமா என காத்திருந்தான்.

‘ ஆமா, நல்ல படிப்பா, முப்பது வயச தாண்டியும் கல்யாணாம் வேண்டாமுன்னு பிடிவாதமா இருந்தா, பாவி இப்படி பண்ணிட்டா’ என்று அம்மா வருத்தப் பட்டாள். ‘ அதுக்கென்ன, யாரையாவது பிடிச்சிருக்கும் கூட்டிட்டு ஓடியிருப்பா’ என்றான் பாலு.

‘ அது சரிதாம்ல, ஆம்பளைய கூட்டிட்டு போனா பரவாயில்லை, எதிர்த்த வீட்டுல தெரசான்னு ஒரு புள்ள, எப்பவும் இவ வீட்டுலதான் கிடப்பாளம், அவளுக்கு நாளான்னைக்கு கல்யாணம் வேற, அவளையும்ல கூட்டிட்டு போயிருக்கா, என்னா காலமோ தெரியல, எல்லாம் தப்பா பேசுறாங்க, எனக்கு ஒரு மண்ணும் புரியல, இவ மட்டும் போனா என்னா அந்தப் புள்ளையையும் கூட்டிட்டு போயிருக்கா பாரேன்’ என்று அம்மா பேசி முடித்தப் பின்னும் முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.

பாலுவுக்கு இந்த விஷயத்தை இன்னும் உறுதி செய்து கொள்வதோடு மேற்கொண்டு விபரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கிளம்பினான்.

41. வித்வேடணம்

ஏய், ராஜி, எப்படி இருக்க? நீ இந்திரா தான? எப்படி இளைச்சுப் போயிட்ட, ஊர்லயிருந்து எப்ப வந்த. நேத்துதான், பராவாயில்லையே கண்டு பிடிச்சுட்ட. வழியில உன் அம்மாவைப் பார்த்தேன் அவங்கதான் வீட்டுக்கு வழி சொன்னாங்க. உனக்கு எத்தனை பிள்ளைங்க. ரெண்டு. உனக்கு. ஒன்னுமில்ல. ஹே கல்யாணம் ஆகி பத்து வருஷம் இருக்குமா. இல்ல ஏழு வருஷமாச்சு. டாக்டர்கிட்ட போனீங்களா. ஆமா. மருந்து சாப்பிடுறோம். மணி எப்படி இருக்கான், அவன பாப்பியா? அஹா பரவாயில்லையே இன்னும் ஞாபகம் வச்சிருக்க. அவன பார்த்து ரொம்ப நாளாயிட்டு. ஆனா ஆளு நல்லா இருக்கான். கல்யாணம் பண்ணிக்கிட்டான. இல்ல. கேட்டா நாலுதடவ சிரிப்பான், அவ்வளவுதான். ஆனா நல்ல வேலையில இருக்கான். நீ எப்ப ஊருக்குப் போற? அடுத்த வாரம். அக்கா மகளுக்கு கல்யாணம் வச்சிருக்காங்க அதான் வந்தோம். ராஜி.. மணியைப் பார்த்தா நான் கேட்டதா சொல்லு. முடிஞ்சா ஒரு போட்டே வாங்கி அனுப்புதியா ?.

42. மோகன சாத்திரம்

’பிரமிளா, நான் பார்க்க ஓமகுச்சி மாதிரி இருக்கேன். பேசினா மூச்சு விடக் கூட நிறுத்தாத அளவுக்கு பேசுற கேரக்டர். நல்ல டிரெஸ் பண்ணத் தெரியாது. ஒரு ஸ்பெஷல் ஸ்கில்லும் இல்ல. ஏதோ படிச்சதுக்கு வேலை கிடைச்சது. எக்ஸ்பிரியன்ஸ்னால நல்ல சம்பளத்தோட காலம் தள்ள முடியுது. பட், நீ அப்படியில்ல, நல்ல அழகு. கலா ரசனையுள்ளவ. ரொம்ப டேலண்ட்டும் கூட. உனக்கு பிடிச்ச ஆண்பிள்ள யார் கூடவாவது ரிலேஷன் வச்சுக்கோயேன். பட் ஒன் திங், அது எனக்குத் தெரியாம பார்த்துக்கோ’ என்றான் தயா.தயாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் பிரமிளா.

43. வசீகரணம்

நாங்க தினமும் ஒரு தடவையாவது பேசிக்கிறோம். அப்படி பேசாம இருக்க முடியல. வாரம் ஒரு தடவ சந்திச்சுக்குறோம். இப்பவெல்லாம் பார்க்காம பேசாம இருக்க முடியுறதில்லை. இது காதலன்னு சொல்ல முடியாது. ம்ம்ம் நட்புன்னும் சொல்ல முடியாது. இதுவரைக்கும் சொல்லப் பட்ட உறவுகளுடைய எந்தப் பெயரையும் இதுக்கு எடுத்துக்கவும் முடியாது. இந்த உறவுல எந்த நிர்பந்தமும் கிடையாது. பார்க்காம பேசாம இருக்க முடியாதுன்னு சொல்றேன். ஆனா பார்க்காம பேசாம மாசக் கணக்கில இருந்திருக்கோம்.

உடல்ரீதியான தொடர்பும் இருக்கு. ஆனா அது புனிதமா இருக்கு. சந்திக்கும் போதெல்லாம் உறவு வச்சுக்கிடுறது இல்ல. உறவு வச்சிகிடுறதுக்காக சந்திச்சுகிட்டதும் இல்ல. ஆனால் அது ஒரு பருவமழை மாதிரி, காலம் நேரம் பார்க்காம நிகழுது. கண்டிப்பா எந்த குற்ற உணர்வும் இல்ல. இன்னைக்கு உடம்புன்னாலே அசிங்கமுன்னு நினைக்கிற உலகம் இது. ஆனா எல்லாரும் இந்த உடம்புக்காகத்தான் அலையுறாங்க.

நாங்க பிரிஞ்சுடலாம். ஆனாலும் ஒன்னாத்தான் இருப்போம். ஏனா எங்களை நாங்களே கூட பிரிச்சிட முடியாது. எங்களுக்கு தனித்தனியா காதல், கல்யாணமுன்னு கூட நடந்திடலாம். ஆனாலும் எங்களுக்குள்ள ஏற்பட்ட இந்த உறவு என்றைக்கும் நீடிக்கும்.

44. இரசவாதம்

’யப்பா அது யாரு சாமி பொண்டாட்டியா?’ என்று வாய் பிழந்து உட்கார்ந்திருந்தான் சண்முகம். ’ ஆமாண்டே, ஊருக்கு போய் கட்டிகிட்டு வந்திருக்காம். புள்ள பிளஸ் டூ படிச்சிருக்காளாம்’ கண்களை அகலமாக்கி உட்கார்ந்திருந்தான் மாரி.

’யப்பா, நம்ம இட்லிகடைக்காரி மக என்னமா இருக்கா பாத்தியா, தியா இருக்காடே’ என்றபடி கண்ணை மூடித் திறந்தான் சண்முகம். ‘அவள விடுவே நம்ம பெயிண்டர் தங்கச்சிய பார்த்தியா, அதான்வே அந்த தெலுங்குகாரன் கட்டையன் தங்கச்சி, அவளப் பார்த்தா பசிக்காது’ என்று மூச்சை ஆழமாக இழுத்து விட்டான் மாரி.

’பொன்னையா, ரெண்டாதாரமா கல்யாணம் பண்ணிருக்காரு பாத்தியா, புள்ள சும்மா சினிமா நடிகை மாதிரி இருப்பா. இவரு அவளுக்கு அப்பா ரேஞ்சுக்கு இருப்பாரு. சொட்டை வேற’ என்று சண்முகம் சிரித்தான். ‘ அதான் கதையா, ஏல அவரு காரு வாங்கினப்பவே சந்தேகப் பட்டேன். கருப்பு கண்ணாடிய ஏத்தி விட்டுல வெளியில கூட்டிட்டுப் பொறாரு, பார்க்கனுமேடே’ மாரி வழிந்தான். ‘ பொறுல, திருவிழாவுக்கு சாமி கும்பிட எப்படியும் வந்துதான ஆகனும், கோயிலுக்குள்ள காரு போரதில்ல’ என்று கொண்டாட்டமாக சிரித்தான்.

45. பைபீல வாதம்

’ டேய் அம்மாவும் அப்பாவும் அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க, சாயங்காலம் தான் வருவாங்க. நான் கோரேகான் வரைக்கும் ஒரு இண்டர்வியூ போயிட்டு வர்றேன். எப்படியும் செகண்ட் ரவுண்ட் முடிய நாலு மணியாயிடும். இப்ப மணி பத்தரை. இப்ப கிளம்பினாத்தான் சரியா இருக்கும். சாப்பாடு இருக்கு. பிரிட்ஜ்ல பால் இருக்கு. ஓகே. எஞ்சாய்’ என்று ராகேஷ் கிளம்பினான்.

கீதாவும் பிரவீனும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். கீதா குளியலரைக்கு தனது கைப்பயுடன் போனாள். ஜீன்சும் டாப்ஸும் மாட்டியிருந்தவள். ஜீன்சை கழற்றி விட்டு பாவாடைக்கு மாறியிருந்தாள். பிரவின் சட்டையைக் கழற்றி விட்டு பனியனுடன் இருந்தான்.

46. காந்தருவ வாதம்

’உன் குண்டி சைஸ்ல ஒருத்திக்கு இன்னைக்கு பார்த்தேன்டி’ ‘ ச்சீ சனியனே டிரெய்னிங்க்கு போனியா இல்ல இப்படி கண்டதையும் பார்த்துக்கிட்டு இருந்தியா?’ ‘ அதான் நீயே சொல்லிட்டியே கண்டதையுமுன்னு, அதா கண்ணுல பட்டுச்சு, நாங்க என்ன திட்டம் போட்ட பார்த்துட்டு வந்தோம்’ ‘ விடுடா, உன்ன பத்தி தெரியாதா, உனக்கு எப்பவும் அதே நினைப்புதான்’ ‘ ஹேய், என்னடி, கோவிச்சுக்கிட்டியா, ஹாங்க்கம்.. உனக்கு சின்னதா இருக்குன்னு சொல்லாம சொல்லிட்டேன்ல, அதான் எகிறுர’ ‘ டேய், போனை வைய், இடியட்’ ‘ கோபப் படாத டார்லிங், ஈவ்னிங் கால் பண்றேன், பாய்’ ‘ ஒன்னும் வேண்டாம், பாய்’ ‘ ஹேய்… யேய்..’

47. கவுத்துக வாதம்

இரவு, மணி 10.30.

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க ரவி. நான் ஊதாரியாத் திரிஞ்சேன். கிடைக்கிற பணத்தை எல்லாம் கன்னாபின்னானு செலவு பண்ணினேன்.. ஒண்ணும் சேர்த்து வைக்கலை. நல்ல துணிமணி கூட வாங்கிக்கல. ஆனா லட்சக்கணக்குல சம்பாதிக்கத்தான் செஞ்சேன். உங்க அண்ணிய கல்யாணம் பண்ணினேன். எல்லாம் மாறிப்போச்சு. இன்னைக்கு பாரு ரெண்டு காரு. டூ பெட்ரூம் பிளாட். ரெண்டு புள்ளைங்க. அது ரொம்ப பெரிய சந்தோஷம்ப்பா.. அதான் சொல்றேன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.

என்றபடி சதாசிவ் அண்ணன் வெளியேப்போனார். களைப்பு நீங்க வெண்ணீரில் குளித்து முடித்து பருப்பு கிச்சடி வாங்கி சாப்பிட்டு விட்டு படுக்கையில் கிடந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான். சதாசிவ் அண்ணன் மொபைலில் சத்தமாகப் பேசியபடி வந்தார். விஸ்கி வாடை அறையெங்கும் பரவியது. டாய்லெட்டுக்குள் போனார். அவருடைய சத்தம் கதவிடுக்கு வழியாய் கசிந்து கொண்டிருந்தது. பேச்சை பாதியிலேயே துண்டித்துக் கொண்டு வெளியே வந்தார். படுக்கையில் மொபைல் போனை வீசி எரிந்தார்.

இரவு, 11.30.

ரவி கல்யாணம் பண்ணிக்காத. இப்படியே இரு. சந்தோஷமா இரு. நிம்மதியா இரு.

சிகரெட் பற்ற வைத்தார். விஸ்கி ஊற்றிக் கொண்டார். படுக்கையில் அமைதியாக சாய்ந்து உட்கார்ந்தார். மூன்று ரவுண்ட்கள் வரை விஸ்கி ஊற்றுவதையும். ஐந்து முறை சிகரெட் பற்ற வைத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தார். இடையிடையே. கல்யாணம் பண்ணிக்காத என்று சொன்னபடி இருந்தார். ரவி தூங்கிப் போனான்.

48. தாதுவாதம்

பத்தாப்பு கடைசி பரிட்சை அன்னைக்கு பார்த்தது, ஒரு பத்து வருஷம் இருக்கும்ல?’ ‘ அதெல்லாம் ஞாபகம் இருக்கு ஆனா முக்கியமான விஷயம் மட்டும் மறந்துடுச்சு, அப்படித்தானே?’ ‘ முக்கியமான விஷயமா, என்னது?’ ‘ லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு நான் உனக்கு தில் குடுத்தேன்ல, ஞாபகம் இல்ல?’ ‘ தில்லா.. ஹோ ஹாங் பிளஸ்டிக்ல சிகப்பு கலர்ல இதயம் கொடுத்துயே’ ‘ அப்பா ஞாபகம் வச்சிருக்கியே, நீ பதிலே சொல்லல, நான் இரண்டு வருஷமா வெயிட் பண்ணினேன் தெரியுமா?’ ‘ அடிப்பாவி, வாயத் தொறந்து காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியது தானே, அது என்ன தில்லு கில்லுன்னுட்டு’ ‘நானும் எப்படி சொல்றதுன்னு தவிச்சிக்கிட்டிருந்தேன், போஸ்ட் கார்டு கூட போட்டேன் தெரியுமா?’ ’ஆமா.. போடா… எனக்கு இப்ப மேரேஜ் ஆயிட்டு தெரியுமா?’ ‘ ஹேய் என்ன சொல்ற..’ ‘ ஆமா, லிபர்டி கார்டன் பக்கத்தில் இட்லி கட வச்சிருக்காங்க, முருகன்னு பேரு, ஒன்னு தெரியுமா, எங்களுக்கு லவ் மேரேஜ், வரேன் சட்னி காலியாயிட்டுன்னு அவரு அப்பவே போன் பண்ணினாறு’ என்றபடி கையில் ஒரு ஸ்டீல் தூக்கு சட்டியை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தாள். அவளது ஒவ்வொரு அடியும் இதயத்தில் இறங்கியது போல் இருந்தது. மறைந்து போகும் முன் இரண்டு முறை திரும்பிப் பார்த்தாள் அந்த அழகு தேவதை. நட்டு வைத்த மெழுகாய் உருகிக் கொண்டிருந்தான் அவன்.

49. காருடம்

’சார், ரொம்ப சின்னப் பொண்ணு சார்’ ‘ அதுக்கென்னப்பா, நடிக்க வந்துட்டால, நாம் விட்ட வேற யாராவது ’ அதில்லாம, இந்தப் படத்துக்கு பத்துகோடி பட்ஜெட், பெரிய பெரிய ஆர்டிஸ்ட், உனக்கும் இது லைஃப் கொடுக்குற படம், அப்புறமென்ன, பேசி அனுப்பி வைய்யி’ ‘ இல்ல சார் எனக்கு பழக்கமான பேமிலி, அதான்’ ’ சரி நீ விடு, ராமையா கிட்டு சொல்லு அவர் பேசி அனுப்பி வைப்பார்’ ‘ஹோட்டல் தாஜ்ல, ரூம் நம்பர் 402, எட்டு மணிக்கு வரச்சொல்லு’ ‘ சார், இந்தப் பொண்ண விட்டுருங்க சார்’ ‘ ஏன்ப்பா, உனக்கு எதாவது லவ்வா, அப்படின்னாலும் கவலைப் படாத நான் பெரிசா ஒன்னும் பண்ணிற மாட்டேன், வயசாயிடுச்சில்ல’ ‘ அதில்ல சார்’ ‘ அட, என்னப்பா நொய் நொய்ன்னுகிட்டு, அவுட்டோர், ஃபாரின் அப்படி இப்படின்னு டைரைக்டர், ஹீரோன்னு ஆளாக்கு பார்த்துக்கிறீங்க, கோடி கோடியா பணத்த போட்டுட்டு, நான் கை சூப்பிக்கிட்டு போகவா’ ‘ நீ, போ, ராமையா வரச்சொல்லு, போ’’

50. நஷ்டம்

’உங்க ஓவியம் ஒன்றுக்கு ஒரு லட்சம் தர்றேன். உங்களுக்காக சகல வசதியுடன் ஏற்பாடு செஞ்சிருக்கிற ஸ்டுடியோ. உங்களால முடிஞ்ச அளவுக்கு பண்ணுங்க’ என்றாள் சோபனா. உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரெஹமானுக்கு இந்த வசதியும் ஒப்பந்தமும் பிடித்திருந்தது. ஆனாலும் அவருக்கு தயக்கமாகவே இருந்தது. ஓவியம் தீட்டுவது என்பது வெறுமனே கோடுகளை போடுவதும் வண்ணங்களை நிரப்புவதும் மட்டுமல்ல. அவரது ஓவியங்கள் அப்படித்தான் தெரியும். ஆனால் அவர் அவற்றை வரைந்த சூழ்நிலையும் மனநிலையும் கோடுகளுக்கும் வண்ணங்களுக்கும் அடியில் தடவப் பட்டிருந்தப்பதை பலர் கவனிப்பதில்லை.

மூன்று நாட்களாகியும் ரெஹமான் ஒரு புள்ளி கூட வைக்க வில்லை. சோபனாவுக்கு கவலையாக இருந்தது. எழுபது வயதுகளைத் தாண்டிய ரெஹமானின் மார்பில் வெள்ளிக் கம்பிகளாய் நின்ற மயிர்களை வருடி விட்டாள் சோபனா. உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொன்னதை மறந்து விட்டீர்களா என்று அவரை மார்போடு இழுத்துக் கொண்டாள்.

ரெஹமான் அந்த ஸ்டுடியோவில் இருந்த வெற்றிடம் முழுவதும் ஓவியங்களை தீட்டி முடித்தார்.

ஓவியங்கள் அத்தனையும் கொண்டு கண்காட்சி நடத்தினாள். ஒவ்வொரு ஓவியமும் ஐந்து லட்சங்களுக்கு வாங்கியதாகவும். தன்னால் எல்லாவற்றையும் பராமரிக்க முடியவில்லை என்பதால் விற்பனை செய்ய வந்துள்ளதாகவும். ஐந்து லட்சத்துக்கும் குறையாமல் கொடுப்பவர்கள் ஓவியங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தாள்.

கண்காட்சியில் வைக்கப் பட்டிருந்த சகல ஓவியங்களும் விற்றுத் தீர்ந்தது. ஓவியர் சிவராஜுடன் மிகத் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தாள் சோபனா. அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் சோபனாவின் கணவர்.

51 முஷ்டி

’பெரிய மயிராண்டி மாதிரி பேசுதா? உங்க வீட்டுல பொம்பளைய மனுஷி மாதிரியாடே நடத்துறீங்க? சொல்லு’ மாணிக்கம் மச்சானுக்கு வாயின் இரண்டு பக்கமும் மெல்லிய நுரை நிரம்பியிருந்தது. அவருக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே வருவதை பாண்டியால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனும் பாவம் என்ன செய்வான். கையில் வைத்திருந்த பஸ் டிக்கெட்டை ஆன மட்டும் துண்டு துண்டாக கிழித்துக் கொண்டிருந்தான். மாணிக்கம் மச்சான் கொதிக்கும் எண்ணெயில் கடலை மாவில் பிசைந்த வெங்காயத்தை போட்டு கொண்டிருந்தார்.

‘ போலீஸ்ல கம்பளைண்டு குடுத்தியா?’ ‘ ஆமா, இந்த லெட்சனத்த போலீஸ்ல வேற சொல்லனுமாக்கும்’ பாண்டிக்கு மூக்கு விடைத்தது. ‘ குடுக்காதான்னு தான் சொல்ல வந்தேன், உங்க அண்ணன் மயிரு , கல்யாணத்த பண்ணிட்டு ஊர் மேய போய்ட்டான், அவனுக்கு தம்பி நீ உனக்கு அவன விட நீளம், மயிரே போச்சுன்னு நீயும் கையில் புடிச்சிகிட்டு போயிடுற, ஏல ஒரு பொம்பள எத்தனை நாளைக்குத்தாம்ல பொறுப்பா, கூட்டிட்டுப் போயிருக்கானே அவன் சும்மா இல்ல, நாலு தோசை வண்டி நிக்கு, ஆறு கடலை பாக்டா, மாசத்துக்கு நாப்பது ஐம்பது கையில நிக்கு தெரியுமா, உன் பொண்டாட்டி படிப்புக்கும் அழகுக்கும் அவன் சரிதான். சரியாத்தான் அவளும் புடிச்சிருக்கா. போய் தொலையட்டும். ஏல இனிமே கல்யாணம் கில்யாணம் பண்ணாதீங்கடே, ஆமா சொல்லிட்டேன்’ பொன்னிறமான பஜ்ஜிகளை கரண்டியால் அள்ளிக் கொண்டிருந்தார்.

’ என்ன மச்சான், நீரும் இப்படி சொல்லுதியரு?’ பாண்டிக்கு அவமானமாகவும் கையாலாகத்தனுமாகவும் இருந்தது. ‘ அப்புறம் என்னல, இங்க பாரு உங்க அண்ணன் பொண்டாட்டி சாமர்த்தியசாலி, எப்படி இருக்கா பாரு, இத்தனைக்கும் உன் அண்ணன் ஒரு மயிரும் சம்பாதிக்கிறது இல்ல, நாளு பிள்ளைங்க இருக்கே ஒன்னாவது உங்க அண்ணனுக்கு பெத்திருக்காலா, ஏன் நீ கூட அவ கூட படுக்குறன்னு, பாலமணி கிழவி, சொன்னா, அந்தக் கிழவிக்கு கண்ணுதாம்ல தெரியாது காது கேட்கும், போடே போ.. போய் ஆகற வேலையப் பாரு… இங்கபாரு… போனவள திருப்பி கூட்டிட்டு வந்து மானபங்கப் படாத.. அவளாட்டும் நல்ல இருக்கட்டும்டே… போ’’ என்று பஜ்ஜி போடுவதில் மும்முரமானார். பாண்டி தலைக் கவிழ்ந்த படி ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

52. ஆகாய ப்ரவேசம்

’ஹலோ, யாரு?’ ’ம்ம்ம் யாருன்னு கண்டு பிடி பார்ப்போம்’ ‘ அய்யோ, யாருன்னு தெரியலையே, நம்பர் வேற புதுசா இருக்கு குரலும் தெரியலயே, ஆனா ஸ்வீட்டா இருக்கு’ ‘ ம்ம் இருக்கும் இருக்கும், முதல்ல யார்ன்னு கண்டு பிடி, தெரியலேயே? அதான் நான் பேசிக்கிட்டிருக்கேன்ல கண்டுபிடியேன்’ ‘ ம்ம்ம்ம் லட்சுமி குட்டியா’ ‘ ஹும்ம்ம்ம்ம்ம்.. நீ அவ நினைப்புலயே இருடா, நாயி, பன்னி, குரங்கு… ’ டொக்.

53. ஆகாய கமனம்

’என்னை மன்னிச்சிடு நிதின், எனக்கே தெரியல அது எப்படி நடந்ததுன்னு. பட் ஆயிட்டு’ என்று கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அழுகைச் சத்தத்தை அழுத்தினாள். நிதினுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான்கு ஆண்டுகளாய் நிதினும் ராதிகாவும் காதலித்து வருகிறார்கள். மாஸ்டர் டிகிரி வரை சேர்ந்தே படித்து முடித்த அவர்கள் அவரவர் தகுதிக்கு தக்கபடி நல்ல வேலையையும் வாங்கிக் கொண்டார்கள்.

ராதிகா அலுவலகப் பார்ட்டி அன்று இரவு சக ஊழியன் ஒருவனுடன் எதிர்பாராத விதமாக அது நடந்து விட்டது. அவள் முழுமையான சுய உணர்வில் இல்லை என்பது காரணமாகக் இருக்கலாம். ஆனாலும் ஒரு நிலைக்குப் பின் அவள் தடுக்கவும் விரும்பவில்லை.

கண்டிப்பாய் அவள் சந்தோஷமாகத்தான் இருந்தாள். அதனால் தான் அவளுக்கு அந்த குற்ற உணர்வு.

‘ சரி, பத்திரம்டா, நாம் கிளம்புறேன்’ என்று நிதின் அவள் கைகளை வருடினான். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து கொண்டு வந்தது. ‘ ஐ யம் சாரி, நிதின்.. ஐ யம் சாரி, நான் உன் லைஃப்ப ஸ்பாயில் பண்ணிட்டேன், சாரி… சாரி’. ராதிகா நிதினை கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தாள். பூங்காவின் பல மூலைகளைலிருந்து பார்வைகளை அவர்கள் மேல் பதிந்து விலகாமல் இருந்தன.

‘என்னை விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா?’ நிதின் குரல் தழுதழுத்தது. ‘ நோ, பேபி, ஐ வில் டை, நான் செத்தே போயிடுவேன் நிதின் செத்துப் போயிடுவேன்’ என்று அவனை இன்னும் இறுக்கிப் பிடித்தபடி அழுதாள். அவளது அழுகை மிகத் தூய்மையானதாக இருந்தது. அவள் பிடியில் தீராத காதல் இருந்தது.

‘ கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றான் நிதின். கண்கள் மற்றும் மூக்குத் துவாரங்களில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை காட்டி சிரிக்க முயன்றாள். அழுகையின் மீது சிரிப்பு படர்ந்து கொண்டிருந்தது.

54. பரகாய ப்ரவேசம்

‘நாம இப்ப இருக்கிற நிலைமையில குழந்தை வேணுமான்னு தான் கேட்டேன். களைச்சிடுன்னு அப்பட்டமா சொல்லலை’ கார்த்திக் தனது குரலைத் தாழ்த்தினான். பவித்ராவுக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் ஆறேழு மாதங்களாய் நண்பர்களின் வீட்டில் அங்கு இங்குமாய் டேரா போட்டவர்கள் லோன் போட்டு வீடு வாங்கிக் கொண்டார்கள். கடனுக்கு பொருட்களை வாங்கி மாதத் தவனைகளின் வசம் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டார்கள். இசையும் இலக்கியமும் திரைப்படமும் தான் அவர்களுக்கிடையே ஒத்த கருத்தாய் இருந்து காதலை உண்டாக்கியது. இன்று திரைப்படம் பார்க்க ஆகும் செலவை கணக்கிட்டு படம் பார்ப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

கார்த்திக் மாலையில் பகுதி நேரப் பணியொன்றிற்காய் விண்ணப்பித்து அதையும் செய்து வந்தான். வெளியிலும் வீட்டிலும் இரண்டு பேரும் ‘ பில்கள்- லோன்கள்- பில்கள்- லோன்கள், என்ற வார்த்தைகளைத் தவிர மற்ற வார்த்தைகளை மறந்து விட்டிருந்தார்கள்.

பவித்ராவு முடிவுக்கு வந்தாள். பிரசவ விடுமுறை அது இது என்று நிறைய லீவுகளைக் கூட சமாளித்து விடலாம், ஆனால் குழந்தைப் பராமரிப்புக்கு ஆகும் செலவை எண்ணி அதிகம் பயப் பட்டாள்.

செம்பூரில் அஞ்சலி கிளினிக்கில் காலையில் முதல் ஆளாய் உட்கார்ந்திருந்தாள் பவித்ரா.

55. அதிருசியம்

கோவிந்தா, கத தெரியும்ல, நம்ம தண்ணீக்காரன் சூசை இருக்காம்ல?. ஆமா. அவன் மூத்தப் பொண்ணு பேபின்னு ஒருத்தி இருந்தாலே. ஆமா. அவளுக்கு கொஞ்ச நாளாவே மனநிலை சரியில்லாம இருந்துச்சுல. ஆமா. ஆஸ்பத்திரிக்கு அங்க இங்கன்னு நிறைய அலைஞ்சு பாத்தான் ஒன்னும் முடியலல. ஆமா. பாவம் ஒரு வருஷம் சூசை பாடாய் பட்டான், அதுக்குள்ள அவன் இளை பொண்ணுங்க ரெண்டு பேரும் சமஞ்சிட்டாளுவல. ஆமா. நோய்க்கும் பார்க்கனும் பேய்க்கும் பார்க்கனுங்கிற கதைய அவன் நம்ம பழனிச்சாமி பயகிட்ட மந்திரிக்க வந்திருந்தாம்ல. ஆமா. பய ஒரே அமுக்கா அமுக்கிட்டான்ல. ஆமா. புள்ள வாந்தியெடுத்துட்டால. ஆமா. இப்ப காதும் காதும் வச்ச மாதிரி அவன் அந்தப் புள்ளையையே கல்யாணமும் பண்ணிக்கிட்டாம்ல. ஆமா. அட என்ன அப்பவே புடிச்சி ஆமா ஆமான்னுட்டு ராகம் பாடுற. ஹாஹா.. அவளுக்கு பைய்த்தியம் தெளிஞ்சு போச்சா? அப்படி கேளு நியாத்த, அவளுக்கு பைய்த்தியமும் இல்ல ஒன்னுமில்ல. எல்லாம் நடிப்பு. சரி இந்த பழனிச்சாமி பயலுகுத்தான் கல்யாணம் ஆயி போச்சுல. ஆமா. ரெண்டு புள்ளைங்க வேற இருக்கில்ல. ஆமா. நல்ல ஏமாத்துக்கார பசங்கதான். ஆமா ஆமா.

56. மகேந்திரஜாலம்

எவர்ஸைன் நகர் முழுக்க முழுக்க அடுக்குமாடி கட்டிடங்களால் ஆன பகுதி. ரயில்வே மற்றும் வங்கிகளின் ஊழியர்களுக்கு அலுவலகம் சார்பாக கொடுக்கப் படும் குடியிருப்புகளும் அங்கு அதிகம். அந்தப் பகுதியில் நுழைந்தவுடன் நகரத்தில் இருப்பது போன்றதொரு உணர்வு கங்காரு குட்டியாய் தொற்றிக் கொள்ளும்.

பாபுவுக்கும் கிருஷ்ணாவுக்கும் புத்தகம் படிப்பதில் அப்படியொரு ஆர்வம். உடைந்த ஆங்கிலத்தில் இருவரும் பேசிக் கொள்வார்கள். ஒரே ஆங்கிலப் புத்தகத்தைப் படித்து விட்டு இரண்டு விதமாக கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

எவர்ஸைன் நகரின் முகப்பில் பழைய பேப்பர் கடை வைத்திருந்தான் ஒரு உத்திரப் பிரதேசக்காரன். அவனது மனைவி நல்ல கொழுத்த பசுமாட்டைப் போல் இருப்பால். கொஞ்சம் அழகும் கூட. பேப்பர்கடைக்காரனுக்கு அவ்வளவாக விபரம் பத்தாது. அதனால் இவள் தான் வியாபாரத்தை கவனித்துக் கொள்வாள். அவளது கணவனும் மகனும் உதவியாக இருப்பார்கள்.

பழைய பேப்பருடன் வரும் புத்தகங்களை தனியாக பொறுக்கி ஒரு பலகையில் அடுக்கி பரப்பி வைத்திருப்பார்கள். புத்தகத்தின் கனத்துக்கு ஏற்ப காசு கேட்பாள் அவள். கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் திக்குவாய். அதிக உணர்ச்சிவசப் பட்ட நிலைகளில் பேச்சே வராது.

பேப்பர்க்காரியின் பேப்பர் கடையை கடக்கும்போதெல்லாம் கிருஷ்ணா அவளைப் பார்த்து மூச்சு விட்டுக் கொள்வான். நல்ல கட்டைடா என்று பாபுவுக்கு ஒரு குத்து விடுவான். அன்று கழிவுப் புத்தகங்களின் அடுக்கு கொஞ்சம் புதிதாய் தெரிந்தது. இரண்டு பேரும் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள்.

புத்தகங்களை மேலும் கீழுமாக, அங்கும் இங்குமாக புரட்டிக் கொண்டிருந்தது, பேப்பர்க்காரிக்கு பிடிக்கவில்லை. ‘ ஹேய், கோன்சா புக் மாங்காதாய், நாம் போலோ’ என்று கத்தினாள். மேலும் அருகே வந்து பாபுவின் கையிலிருந்த ஒரு புத்தகத்தை பிடுங்கி பலகையின் மேல் போட்டாள். கிருஷ்ணாவுக்கு கோபம் வந்து விட ‘’ முஜே ஷேக்ஸ்பியர் கா புக் மாங்த்தாய்’ என்று பதிலுக்கு கத்தினான்.

‘ அரே படுவா, கியா மாங்த்தாய் ரே… ‘ என்று கிருஷ்ணாவின் சட்டையைப் பிடித்து அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். இதற்குள் அவள் புருஷன் ஓடி வந்து என்னவென்று கேட்க, அவள் எதையோ சொல்ல, புருஷனும் கிருஷ்ணாவை துள்ளித் துள்ளி அடி கொடுத்தான்.

பாபுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்குள் பேப்பர்காரி தனது மகனை கூப்பிட்டு டேஞ்ஜிலை துப்பாக்கியுடன் கூட்டி வர உத்தரவிட்டாள். டேஞ்ஜில் அப்பகுதியில் துப்பாக்கியுடன் உலாவும் பெரிய தாதா. அவன் ஒரு கோவான்ஸ். அவன் பெயரைச் சொன்னால் அப்பகுதி முழுவதும் நடுங்கும். தாவூத்தின் கேங்கில் முக்கிய ஆள் வேறு.

பாபுவுக்கும் கிருஷ்ணாவுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிருஷ்ணா உணர்ச்சி மிகுதியால் பேச முடியாமல் தினறினான். சாலையைக் கடந்து ஒரு நான்கு பேர் வந்து என்ன வென்று விசாரித்தார்கள். ‘ இவங்களுக்கு செக்ஸ் புக் வேணுமாம், எங்கிட்ட வந்து கேக்குறானுங்க’ என்று காட்டு கத்தாய் கத்தினாள். ‘ அய்யோ செக்ஸ் புக் இல்ல ஷேக்ஸ்பியர், ஷேக்ஸ்பியர்..’ என்று பாபு கத்திக் கொண்டிருந்தான். கிருஷ்ணா கத்த முயன்று கொண்டிருந்தான். அங்கிருந்தவர்களுக்கு ஷேக்ஸ்பியரை விட செக்ஸ் என்ற வார்த்தை நன்றாக அறிமுகமாகி இருந்தது.

பாபுவின் முதுகிலும் கிருஷ்ணாவின் முதுகிலும் பலமாய் அடிகள் இறங்கியது. சின்ன பசங்க விட்டிருங்க. என்று யாரோ புண்ணியவான் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவன் பங்குக்கு அவனும் அடித்து முடித்திருந்ததை பாபு அறிவான்.

டேஞ்ஜில் துப்பாக்கியுடன் வரும் முன் தப்பிக்க திட்டமிட்டார்கள். எடுத்தார்கள் ஓட்டம். இரண்டு புத்தகங்கள் அவர்களைத் துரத்தியது. சில கற்கள் அவர்களைத் துரத்தியது. சில நாய்கள் அவர்களைத் துரத்தியது.

57. ஜல ஸ்தம்பனம்

மாலை நான்கு மணிக்கு பைகுல்லாவின் சாலையோரப் பிள்ளைகளுக்கும் பிச்சைக்கார பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் அற்புதமான சமூகப் பணிக்கு தன்னை அக்‌ஷரா அரசுசாரா தொண்டு நிறுவனத்தில் தொண்டனாக சேர்த்துக் கொண்டான் அந்தோணி. காலையில் பிஜ்ஜாஹட்டில் பிஜ்ஜா கொடுக்கும் பணி மாலையில் சமூகச் சேவை. காலம் கச்சிதமாய் கழிந்து கொண்டிருந்தது.

வேலைக்குப் போகத் தவறினாலும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போக தவறமாட்டான் அந்தோணி. இவர்களின் குழுவில் வந்து சேர்ந்தாள் திவ்யா பட்டேல். குறைந்த வார்த்தைகளில் சொன்னால் அவளொரு தேவதை. நல்ல வசதி படைத்தவள். பொழுது போக்கிற்காக மட்டுமல்ல முழுமையான ஈடுபாட்டுடனும் இந்த சேவையை செய்து வருவதாக சொல்லுவாள்.

ஐந்து பேர் கொண்ட அந்தக் குழுவில் அந்தோணி மட்டும் ஆண். திவ்யாவுக்கு அந்தோணியின் எளிமையும் எப்போதும் மாறப் புன்னகைத் தோற்றமும் பிடித்துப் போனது. விடுமுறை நாட்களில் கேன்வாஸ்களின் போது மதிய சாப்பாட்டைக் கொண்டு வந்து அந்தோணியுடன் பகிர்ந்து கொள்வாள். எபொழுதும் அந்தோணியுடன் இருக்க விரும்பினாள். அவனைத் தொட்டுப் பேசினாள். அவன் மீது சாய்ந்து கொள்வாள். அவளாகவே உரிமைகளை எடுத்துக் கொண்டாள்.

அந்தோணிக்கு அவளை நிரம்ப பிடித்திருந்தாலும், அவளுடைய வசதியும், மதமும் கண்டிப்பாய் இடையூறாக இருக்கும் என்று எண்ணி ஆழமாக பழக விரும்பாமல் விலகியே இருந்தான். மேலும் தனது சமூக சேவைப் பணியில் மட்டுமே முழு ஈடுபாட்டையும் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.

திரைப்படம் பார்க்க மொத்தக் குழுவும் போன போது திவ்யா அந்தோணிக்கு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தது மட்டுமல்லாமல் சமயம் பார்த்து முத்தமும் பதித்து விட்டாள். ஆனாலும் அந்தோணி கட்டுப் பாட்டில் தான் இருந்தான்.

அந்தோணியின் இந்த பாராமுகம் அவளுக்கு பிடித்திருந்த மாதிரி இருந்தது. அவன் விலக விலக அவள் நெருங்கி வந்தாள். ஒரு சனிக்கிழமையன்று, அவள் வழக்கமான நேரத்தைக் கடந்தும் வந்து சேரவில்லை. அந்தோணிக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. அவன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் கவனம் செலுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

அதோ திவ்யா வந்து சேர்ந்தாள். ஆனால் அவளுடன் யாரோ திரைப்பட நடிகனைப் போல் முகத்தை மழித்து பளபளவென வந்தான். ‘ மீட் மிஸ்டர் பிரசாத் பட்டேல், மை வுட் பி’ என்று அறிமுகப் படுத்தினாள். அந்தோணிக்கு தூக்கிவாறிப் போட்டது. திருமணம் நிச்சயமான விஷயம் ஏன் சொல்லவில்லை. என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு வெட்கமாயும் கவலையாயும் இருந்தது.

அன்றைக்குப் பின் அவன் அக் ஷராவில் பணியாற்றவும் இல்லை யாருக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.

58. அக்னி ஸ்தம்பனம்

அந்தோணி, நல்ல உடல்வாகும் குறும்புத்தனமும் கொண்டவன். அவனுடன் யாராவது பேசத் துவங்கினால் பேசிக் கொண்டே இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். நிறைய அறிவாற்றல் கொண்டவன். பிஜ்ஜா ஹட்டின் பணிக்குப் பின் அக்‌ஷரா தொண்டு நிறுவனத்தில் ஊழியம் பின் மாலை நேரக் கல்லூரிப் படிப்பு என பரபரப்பாய் இருந்தான்.

சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் பிஜ்ஜா ஹட்டில் கூட்டம் நிரம்பி வழியும். மேசைகளுக்கும் கிட்சனுக்கும் ஓட்டமாய் ஓடிக் கொண்டிருப்பார்கள். லவினாவும் அந்தோணியும் மாறி மாறி பரிமாறிக் கொண்டிருந்தார்கள். லவீனா நல்ல அழகி. மேலை நாட்டுப் பெண்களைப் போல் எப்பொழுதும் குட்டைப் பாவடையும் டாப்ஸ்சும் என நவீனமாய் இருப்பாள். பேசி சிரித்தால் என்றாள் அப்படியொரு வசீகரிப்பு.

அந்தோணியும் லவீனாவும் அங்கு இங்குமாக ஓடுகையில் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்வது. உரசிக் கொள்வது இயல்பாகவே நடந்தது. ஆனால் கடையிலிருந்த மற்றவர்களின் தூண்டுதலில் இருவருக்குள்ளும் காதல் பற்றிக் கொண்டது. அவர்களின் உபசரிப்பு இன்னும் வாடிக்கையாளர்களை குவித்துக் கொண்டிருப்பதாக நம்பிக்கை. அதனால் அவர்களின் நெருக்கத்தை மேனேஜர் முதற்கொண்டு கண்டு கொள்வதில்லை.

அந்தோணிக்கு பரிட்சையென்று இரண்டு நாட்கள் லீவு போட்டு விட்டான். மூன்றாவது நாள் பிஜ்ஜா ஹட்டில் நுழைகையில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதுநாள் வரை பர்கர், சாண்ட்விச் மற்றும் சாசேஜ் பாட்டில்கள் காணாமல் போனது கண்டு பிடிக்கப் பட்டு விட்டது. இன்று காலைப் பணியை முடித்துக் கிளம்புகையில் லவீனா மாட்டிக் கொண்டாள். ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அந்தோணி விஷயத்தை கேள்விப் பட்டதும். நொறுங்கிப் போனான். அந்தோணி ஆடை மாற்றிக் கொண்டு வேலையில் மூழ்கினான். பையை எடுத்துக் கொண்டு அந்தோணியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தோணி அவளை நிமிர்ந்துப் பார்க்கவில்லை. லவீனா மெதுவாக நகர்ந்தாள். அவள் போன பாதையேங்கும் கண்ணீர்த் துளிகள் கணமாய் விழுந்து கிடந்தது.

59. வாயு ஸ்தம்பனம்

என் இனிய ஜெஸிக்கு,

என்னை மன்னித்து விடு. உன் அழகும், அற்பணிப்பும் என்னை தடுமாறச் செய்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாய் நாம் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து விட்டிருக்கிறோம். ஆனால் இனியும் என்னால் இந்த உறவைத் தொடர முடியாது. என் குடும்பத்துக்கும் நான் விசுவாசமாயுள்ளேன்.

உறவா – துறவா? என்ற கேள்விக்கு முன்னால் நான் பலகீனமாகிப் போய் விடுகிறேன். எப்படி யோசித்தாலும் எனது தேர்வு துறவுதான். நீ எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறாய். கண்டிப்பாய் நான் அவற்றை மறக்க மாட்டேன்.

மீண்டும் என்னை மன்னித்து விடு.

நிறைய அன்புடன்,

ரெமிசன்

60. த்ருஷ்டி ஸ்தம்பனம்

வூடி ஆலன் அப்படின்னு ஒரு சினிமா டைரக்டரு இருக்காரு. அவரு இந்த உறவுகளிடையே இருக்கும் மெல்லிய விஷயங்களை படமாக்குறதுல வல்லவரு. ‘Everything You Always Wanted to Know about Sex* (*But Were Afraid to Ask) அப்படின்னு ஒரு படம் எடுத்திருகாரு. இதே பெயர்ல டாக்டர் டேவிட் ரோபென் எழுதிய புத்தகத்திலிருந்து சின்னச்சின்ன சம்பவங்களைத் தழுவி திரைக்கதை அமைத்து எடுத்தப் படம். இதுல ஒரு டாக்டர் தங்கிட்ட வர்ற ஒரு அமெரிக்க நோயாளியோட காதலி மேல மோகம் கொள்றதுதான். அந்த அமெரிக்க மனிதனுடைய காதலி ஒரு செம்மறியாடுங்கிறதுதான் முக்கியமான விஷயம். மனுஷன் காமெடி பண்ணுறதுல கில்லாடி. அந்தப் படத்துல ஒருத்தன் தன் பண்ணையில் இருக்கிற செம்மறி ஆட்டோட காதல் வயப்பட்டு காம வயப் பட்டு அந்த ஆட்டுக் குட்டியோட கசாமுசா பண்ணிடுறான். திடீர்ன்னு ஒரு நாள், அந்தக் ஆட்டுக் குட்டி எங்கிட்ட முன்ன மாதிரி நடந்துக்க மாட்டேங்கிறா, நீங்க புத்திமதி சொல்லுங்கன்னு டாக்டர் கிட்ட கூட்டி வர்றான். டாக்டர் அவன அடிக்காத குறையா, நான் மனுஷங்க டாக்டர் ஆடு மாடுகளுக்கு நான் வைத்தியம் பார்க்கிறதில்லைன்னு கத்துறார். ஆனா, அந்த ஆளு கேட்ட பாடில்ல.

செம்மறியாட்டுக் குட்டிய கொண்டு வந்து விடுறான். டாக்டருக்கு ஆட்டுக் குட்டிய பார்த்தும் சபலம். அவரு கொஞ்ச நாள் வைச்சு வைத்தியம் பார்க்கட்டுமான்னு கேட்காரு. ஆட்டுக்காரனும் சம்மதிக்கிறான்.

டாக்டரு ஆட்டுக் குட்டியோட பைவ்-ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு கும்மாளமடிக்காரு. டாக்டர் பொண்டாட்டிக்கு டாக்டர் மேல சந்தேகம் வர அவங்க கையும் களவுமா டாக்டர ஆட்டுக் குட்டியோட இருக்கிறத பிடிச்சிடுறாங்க. விவாகரத்தும் பண்ணிடுறாங்க.

ஆட்டுக் குட்டியோட தனிக் குடித்தனம் போறாரு டாக்டரு. அவருடைய லைசன்சும் தடை செய்யப் பட்டுருது. இந்த விஷயத்த கேள்வி பட்ட ஆட்டுக்காரான் டாக்டர் இல்லாத நேரம் பார்த்து ஆட்டுக் குட்டிய தூக்கிட்டுப் போயிடுறான். அப்புறமென்ன டாக்டர உலகே மாயம்… வாழ்வே மாயமுன்னு ரோட்டுல சாஞ்சு கிடக்காரு. பாட்டில் பாட்டிலா பால் குடிக்கிறாரு ( ஆட்டுப்பால்).

61. வாக்கு ஸ்தம்பனம்

வணக்கம் தோழா,

நமது இலட்சியப் பாதையில் இடையூறுகள் சகஜமான விஷயம்தான். ஆதனால் சோர்ந்து விட வேண்டாம். நீ அடிக்கடி காதல் வயப்படுவதும், தோல்வியடைவதும் வியப்பாக இருக்கிறது. அதுவும் லட்சுமி என்ற பெயரில் இரண்டு பெண்களை காதலித்து இரண்டு முறையும் ஏமார்ந்திருக்கிறாய்.

தோழா, லட்சுமிகள் நம் வாழ்க்கையில் வருவார்கள் போவார்கள், அவர்கள் வரட்டும் போகட்டும். கவலையில்லை ஆனால் இலட்சியம் நோக்கியப் பயணத்தை நிறுத்தாதே.

வெல்க தேசம்.

62. சுக்ல ஸ்தம்பனம்

’கிரிஜாவோட அப்பா வந்தாரு’ அம்மா சத்தமாக அறிவித்தாள். வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மாவின் இந்த சத்தம் கொஞ்சம் எரிச்சனை உண்டாக்கியது. ‘ என்னவாம்?’ என்றான் ராஜன். ‘ ஏன் உனக்குத் தெரியாதோ’ என்றாள் அம்மா சந்தேகப் பார்வையுடன். ‘ எனக்கு எப்படி தெரியும்’ என்றான் உக்கிரமாக. ‘ கிரிஜா நேத்து கடைசி பரிட்சைக்குப் போனவ இன்னும் வீடு வந்து சேரலையாம், தேடிக்கிட்டு இருக்காங்க, அதான் உங்கிட்ட கேட்க வந்தாங்க’ என்று அம்மா முடித்தாள். ‘அவ எங்க போனாளோ, எவன் கண்டான்’ என்றபடி ஆடை மாற்றினான்.

கிரிஜா ராஜனிடம் டியூஷன் படித்து வந்தாள். அதான் இந்த விசாரணை. ‘ அந்தப் புள்ள அவங்க வீட்டுலயே யாரோ ஒரு பையன் கூட ஓடி பெயிட்டாளாம்’ அம்மா மேலும் தகவல்களைக் கொடுத்தாள். ‘ யார் கூடயாம்? ராஜனும் ஆர்வம் காட்டினான். ‘ அவங்க வீட்டுல இருந்து எடுபிடி வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப் பையனாம். அவளுக்கு சித்தப்பா முறையாகுதாம், அவ அம்மா சொல்லிகிட்டு அழுதா.’ ‘அப்படியா?’ என்றான் ராஜன் ஆச்சரியத்தோடு.

’பத்தாங்கிளாஸ் முடிக்கும் முன்னே இந்த பிள்ளையளு தாலி கட்டி குடும்பம் நடத்த ஓடுதுங்க, பாவம்’ அம்மா பேசிக் கொண்டே நகர்ந்தாள்.

ராஜனுக்கு கடுமையான கோபம் வந்தது. இவன் டியூஷன் மாணவி ஓடி போய் விட்டதாக செய்தி பரவியதே தவிர இன்னாரின் மகள் ஓடி போய்ட்டாள் என்று யாரும் பேசிக் கொள்ள வில்லை.

63. கனன ஸ்தம்பனம்

தம்பி நீங்க எதாவது கேட்டு வாங்கனும் தம்பி அதுதான் மரியாதை. இல்லீங்க எனக்கு எதுவும் வேண்டாம். ஆனா நீங்களா விருப்பப் பட்டு பொண்ணுக்கு எதாவது செய்யனுமுன்னா செய்ங்க. நாங்க செய்வோம் தம்பி, ஆனா காலாணா காசன்னாலும் நீங்க கேட்டு வாங்கனும் அதான் மரியாதை. அட என்னங்க, நான் தான் வேண்டாம் வேண்டாமுன்னு சொல்றேன்ல விட்டுற வேண்டியது தான. அப்படி இல்லப்பா, இப்படி நீங்க எதுவும் கேட்டு வாங்காம கல்யாணம் முடிச்சிக்கிட்டா, பையன்கிட்டயோ இல்ல பையன் வீட்டுலயோ ஏதோ குத்தம் குறையிருக்குன்னு நினைக்கலாமில்லையா. அப்படின்னா, இப்படி கொடுப்பேன் கொடுப்பென்னு அடம் பிடிக்கிறீங்களே, அப்ப பொண்ணுகிட்டயோ இல்ல பொண்ணு வீட்டுலயோ எதாவது குத்தம் குறை இருக்குன்னு நான் நினைச்சா என்ன பண்றது.

ஏய் என்னப்பா, பொட்டபுள்ள மேல இப்படி பழியப் போடுற. நான் எங்க பழியப் போட்டேன். நீங்க சொன்னத நான் திருப்பி சொன்னேன். எழுந்திரிங்கப்பா. இது சரி பட்டு வராது. தம்பி நீங்க வேற இடம் பார்த்துக்காங்கோ.

கல்யாணத்துக்கு முன்னாடியே என் மேல சந்தேகப் படுறீங்களா. அட இல்லைப்பா, அவங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். நீயாவது புரிஞ்சுக்கோயேன். ஒன்னும் புரிஞ்சுக்க வேண்டாம், இனி எந்தப் பொண்ணு வாழ்க்கையிலயும் இப்படி விளையாடாதீங்க, பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. இப்படி தப்பா பேசாதீங்க. எனக்கு போன் பண்ண வேண்டாம், மெசேஜ் அனுப்ப வேண்டாம். குட் பாய்.

64. கட்க ஸ்தம்பனம்

வேலுமாமா எப்பொழுதும் பார்லேஜி பிஸ்கெட் வாங்கிக் கொடுப்பார் அல்லது காசு கொடுப்பார். வாசுவுக்கு வேலுமாமாவை ரொம்பப் பிடிக்கும். பள்ளிச் சீருடையாகட்டும், இதர செலவுகளாகட்டும் அம்மா எப்பொழுதுமே கணக்குப் பார்த்துக் கொண்டு அல்லது நமக்கு அது வேண்டாம் என்று எப்படியாவது பேசி செலவை தவிர்த்து விடுவாள். பள்ளிக்குப் போகும் போது வெறுங்கையோடு போகும் மாணவன் வாசுவாகத்தான் இருக்கும். எப்பொழுதாவது நண்பர்களின் எச்சில் சர்பத்தும் காக்காய் கடி சாக்லேட்களும் கிடைக்கும்.

ஆனால் வேலுமாமா இவனைக் காணும்போல்லாம் ஏதோ கடன்காரனைக் கண்டவனைப் போல் பைகளில் தேடி காசு எடுத்துக் கொடுபார். சில்லரை இல்லையென்றால் நோட்டாகக் கூட கொடுப்பார். ஆனால் அவ்வாறான ரூபாய் நோட்டுகள் அம்மாவால் பிடுங்கிக் கொள்ளப் படும். அதனால் பிஸ்கெட் பாக்கெட்டுகளையே வாசு பெரிதும் விரும்பினான்.

பள்ளித் தோழன் ஜேம்ஸ் ஒரு முறை, உனக்கு எப்பவும் காசு இல்லாட்டி பிஸ்கெட் வாங்கித் தராரே, அது உங்கப்பாவா? என்று கேட்டுவிட்டான். வாசுவுக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. ஜேம்ஸ்சுடன் சேர்வதையே நிறுத்திக் கொண்டான்.

வேலுமாமா மாதிரி தனக்கு அப்பா இருந்திருக்கலாம் என்று நினைத்திருக்கிறான். ஆனால் வேலுமாமாவை அப்பாவாக அவனால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அம்மா மிகவும் கஷ்டப் பட்டு வருவதும், வேலுமாமா ஒரு பாதுகாவலனைப் போல் இவர்களைப் பாதுகாப்பதும் அவனுக்கும் பிடித்திருந்தது.

அன்றைக்கு கன மழை. பள்ளியை பாதி நாளில் விடும் படி உத்தரவு வாசிக்கப் பட்டது. மழையில் நனைந்தபடியும் விதவிதமாய் குடைகளைத் தூக்கியபடியும் பிள்ளைகள் ஓடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லும் பிள்ளைகள் பள்ளி வகுப்பறைகளிலேயே காத்திருக்க அனுமதிக்கப் பட்டார்கள்.

பிளாஸ்டிக் பையில் புத்தகங்களை பத்திரமாய் பொதிந்து கொண்டான் வாசு. அந்தக் குடைக்கும் இந்தக் குடைக்கும் என தாவித் தாவி ஓடிக் கொண்டிருந்தான். புத்தகங்களை மட்டும் நனையாமல் பார்த்துக் கொண்டான். அவன் தொப்பளாய் நனைந்து விட்டான்.

வீடு வந்து சேர்ந்தது, கதவு உள்ளிருந்து தாளிடப் பட்டிருந்தது. ‘ யம்மோய்… யம்மா… யம்மாமாமாமா’ என்று கத்தினான். அவனுக்குப் பின்னால் சோவென மழை அடித்துக் கொண்டிருந்தது. அம்மா உடனடியாக கதவைத் திறக்காதது குறித்து அவனுக்கு கோபமாக வந்தது. சற்று நேரம் கழித்து அம்மா கதவைத் திறந்தாள். ‘அய்யோ என் புள்ள நனைஞ்சுட்டு வந்திருக்குப் பாரு’ என்று சேலை முந்தியால் தலையைத் துவட்டினாள். ’ என்னடா இன்னைக்கு சீக்கிரம் விட்டுட்டாங்களா, கொஞ்சம் நின்னுட்டுதான் வர்றது, இந்தா பிஸ்கெட் வாங்கிச் சாப்பிடு, மழையில் வெளியேப் போகாதடா’ என்று சட்டையில் இரண்டு பொத்தான்களை மாட்டிக் கொண்டு கிளம்பினார் வேலுமாமா. வாசுவின் கைகளில் இருபது ரூபாய் தாள் அவனது கையின் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. அம்மா துண்டால் அவனுக்கு தலை துவட்டிக் கொண்டிருந்தாள். அம்மா இன்று வழக்கத்தை விட அதிகம் அழகாய்த் தெரிந்தாள்.

பின் குறிப்பு: மேலுள்ளவைகளில், வாழ்ந்து முடித்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மற்றும் பிறக்கப் போவோர்கள் பற்றி குறிப்புகள் உள்ளதாக உறுதியாக சொல்ல முடியாது. இவைகளில் பயன்படுத்தப் பட்டிருக்கும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையானவை மட்டுமல்ல, பிறர் சொல்லக் கேட்டவை, படித்தவை, காப்பியடித்தவை, திருடியவை மற்றும் அனுபவித்தவை. ராமு, கிறிஸ்துராஜ், மொய்தீன், மேரி, கீதா, மோகன், செல்வி, கலா, உமா, கணேஷ், பிரபு, ரத்தினம், ஹெப்ஜிபா, இனாயத், டோமி, டைகர், ஷீலா, கட்டையன், எலும்பி, சாத்தான் மற்றும் சப்பச்சி ஆகிய பெயர்களை அவன் – அவள் என்று குறிக்கப் பட்டிருக்கும் இடங்களில் பொறுத்தமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள். கவனம் பெயர்களின் திணை மற்றும் பால்களை அறிந்து பயன் படுத்தவும். விபரீதங்களுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *