அலட்சியம் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 6,483 
 

சுந்தரேசன் tvs50 யை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றார். இவருக்கு முன்னால் பத்து பேர். என்ன பெரியவரே இந்த வயசான காலத்துல நேர்ல வந்துதான் கரன்ட் பில் கட்டணுமா? EB க்குன்னு ஒரு App இருக்கு, அதுல கட்லாமில்ல எனக் கேட்டார் ஒரு இளைஞர்.

நானும் wife உம் தான். Pension credit ஆன உடனே வழக்கமா வந்து கட்டிட்டு போயிடுவேன். இப்பெல்லாம் எங்க போனாலும் digital payment தான். கைல பணம் கொண்டு போறதே இல்ல. ஈசியா இருக்கு தம்பி.. அவரது turn வந்தது.

யோவ் கார்டு குடுப்பா. இப்படித்தான் இவர்களது Behaviour சில சமயங்களில். ஓ.. பெருசா.. கார்டு குடு பெருசு.

சுந்தரேசன் கார்டையும். Debit card ஐயும் சேர்த்துக் கொடுக்க, பெருசு cash குடு. கார்டு வேலை செய்யல. Network இல்ல.

என்னங்க இப்பபோய் இப்பிடி சொல்ரீங்க? ஒருமணி நேரமா கியூவில நிக்கறேன். உள்ள போய் பாரு.. Next என்று அலட்சியமாக பதில் தந்தார் கேஷியர்.

பின்னால் இருந்த சிலர் பெரியவருக்காக ஆதரவாக பேசினர். ஏனெனில் அவர்களும் வெகுநேரமாக debit card மூலம் பணம் செலுத்த காத்திருந்தவர்கள். கூச்சல் அதிகமாகவே உள்ளே இருந்து A.E. வெளியே வந்தார்.

சார் இவ்ளோ நேரமா நிக்கறோம். Debit card மூலமா பணம் கட்றவங்க நிற்க வேண்டாம். Network இல்லேன்னு சொல்லிருந்தா எப்பவோ போயிருப்போம். கியூல one hour wait. பண்ணிட்டு கிட்ட வரும்போது தான் சொல்வீங்களா? Network இல்லேன்னு முன்னயே தெரியும்தானே?

கூட்டத்தில் இருந்தவர்களின் எரிச்சலையும், நிலைமையையும் உணர்ந்த AE, தப்பு தான்.. ஏம்ப்பா கேஷியர்… வெளியில வந்து card ல பணம் கட்றவங்க யாரும் நிக்காதீங்கன்னு சொல்லி இருக்கலாம் இல்ல என்று கடிந்து கொண்டார்.

EB என்று இல்லை, நாம் வங்கியில் pass book entryக்காக நின்றாலும், போஸ்ட் ஆஃபீஸில் பணம் கட்ட நின்றாலும் network இல்ல என்ற வார்த்தை சர்வ சாதாரணம்.

இதை கியூவில் நிற்பவர்களிடம் இவர்கள் இதை சொல்லுவது கூட இல்லை. என்ன மன நிலையோ??

இவ்வளவு பெரிய துறை, ஆள் அம்பு சேனை இருந்தும் network இல்லை என்ற நிலையை ஏன் மேம்படுத்த தவறுகிறார்கள்.

யாமறியோம் பராபரமே..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *